வியாழன், 18 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

சுலோகம் 9

त्रिवर्गपथवर्तिनां त्रिगुणलङ्घनोध्योगिनां
द्विषत्प्रमथनार्थिनां अपि च रङ्गदृस्योदया |
स्खलत्समयकातरीहरणजागरूका: प्रभो !
करग्रहणदीक्षिता: क इह ते न दिव्या गुणा: ||

 

த்ரிவர்க₃பத₂வர்த்திநாம் த்ரிகு₃ணலங்க₄நோத்₄யோகி₃நாம்
த்₃விஷத்ப்ரமத₂நார்த்தி₂நாம் அபி ச ரங்க₃த்₃ரு̆ஸ்யோத₃யா |
ஸ்க₂லத்ஸமயகாதரீஹரணஜாக₃ரூகா: ப்ரபோ₄ !
கரக்₃ரஹணதீ₃க்ஷிதா: க இஹ தே ந தி₃வ்யா கு₃ணா: ||

 

ப்ர‌போ -- என் ப்ர‌புவே!, த்ரிவ‌ர்க்க‌ப‌த‌வ‌ர்த்திநாம் -- த‌ர்ம‌ அர்த்த‌ காம‌ங்க‌ளைக் கோருகிற‌வ‌ருக்கும், த்ரிகுண‌ ல‌ங்க‌நோத்யோகிநாம் --- ப்ர‌கிருதி ம‌ண்ட‌ல‌த்தைத் தாண்ட‌ வேண்டுமென்ற‌ எண்ண‌த்துட‌ன் ப்ர‌ய‌த்த‌ன‌ப்ப‌ட்டு கைவ‌ல்ய‌த்தையும் மோக்ஷ‌த்தையும் கோருகிற‌வ‌ருக்கும், த்விஷ‌த் ப்ர‌ம‌த‌நார்த்திநாம் அபி -- (பெருமாளுடைய‌வோ அல்ல‌து த‌ன்னுடைய‌வோ) ச‌த்ருக்க‌ளின் நிர‌ஸ‌க‌த்தைக் கோருகிற‌வ‌ருக்கும், ர‌ங்க‌த்ருஶ்யோத‌யா -- அர‌ங்க‌த்தில் ப்ர‌த்ய‌க்ஷ‌மாக‌ அனுப‌வ‌த்திற்கு வ‌ரும‌வையும், ஸ்க‌ல‌த்ஸ‌ம‌ய‌ காத‌ரீ ஹ‌ர‌ண‌ ஜாக‌ரூக‌ -- த‌ட‌ங்க‌ல் வ‌ரும் கால‌த்தில் சேரும் ப‌ய‌த்தை வில‌க்குவ‌தில் தூங்காம‌ல் விழித்து ஜாக்கிர‌தையாய்க் காத்துக்கொண்டிருப்ப‌துமான‌, தே திவ்யா: குணா -- உம்முடைய‌ திவ்ய‌ குண‌ங்க‌ள், இஹ‌ -- இங்கே, க‌ -- எவை, க‌ர‌ க்ர‌ஹ‌ண‌ தீக்ஷிதா -- கை கொடுத்து ர‌க்ஷிப்ப‌தையே தீக்ஷையாக‌ (வ்ர‌த‌மாகக்) கொண்ட‌வைய‌ல்ல‌

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி

அறமுதலாம் மூன்றுதனில் அகம்படிந்து துணிவோர்க்கும்
அல்லல்மிகு வாழ்வென்னும் ஆழ்கடலைக் கடந்துசெலும்
பெருமுயற்சி செய்வோர்க்கும் பணிந்துன்னை வாழ்வார்தம்
பகைவர்கள் ஒழிந்திடவே மனம்கொண்ட அடியார்க்கும்
நெறிதவறும் சமயத்தில் நேருகின்ற அச்சத்தை
நீக்குவதில் கருத்துடனே நீள்கரத்தால் காத்திடவே
பெருநகராம் அரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமானுன்
பல்குணத்துள் எவையேதாம் விரதத்துடன் நிற்கவில்லை? 9.

அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார் ஸ்வாமி

ப‌ர‌மைகாந்தி ஒருவ‌ர் ஒருக்கால் வ‌ஸித்தால் ஏற்ப‌டும் ர‌க்ஷையைக் கூறினார். அந்த‌ ர‌க்ஷையும் ர‌ங்க‌த்தில் நித்ய‌வாஸ‌ம் செய்ய‌ விரும்பும் எம‌க்கே ர‌க்ஷை. எம்மைக்காத்து எம் இஷ்ட‌த்தைப் பூர்த்தி செய்ய‌ உம்முடைய‌ திவ்ய‌குண‌ங்க‌ளே போதும் என்கிறார்.

"ஆர்த்த‌ன், கைவ‌ல்ய‌த்தை விரும்பும‌வ‌ன், அர்த்தத்தை விரும்பும‌வ‌ன், மோக்ஷ‌த்தில் ஆசையுள்ள‌வ‌ன், என்ற‌ நால்வ‌ர் என்னைப் ப‌ஜிக்கிறார்க‌ள்" என்றார் கீதையில். இவ்்விட‌த்திற் கேற்ப‌ இங்கே ஒருவ‌கையான‌ விபாக‌ம். (1) த‌ர்மம் அர்த்த‌ம் காமம் மூன்றையும் விரும்புகிற‌வ‌ர்க‌ள் (2) ப்ர‌க்ருதியை வில‌க்கி (ஜ‌யித்து) கேவ‌லாத்மாநுப‌வ‌த்தை ஆசைப் ப‌டுகிற‌வ‌ர்க‌ள் (3) ப்ர‌க்ருதியைத் தாண்டி மோக்ஷ‌ம் செல்ல‌ இச்சிப்ப‌வ‌ர்க‌ள் (4) (பெருமாளுக்கு விரோதத்தைச் செய்வ‌தால்) ந‌ம‌க்கு விரோதியான‌வ‌ர்க‌ளை நிர‌ஸிக்கக் கோரும் நாம்.

பெருமாள் திருமேனிக்கு வ‌ரும் கெடுதியே ந‌ம‌க்கு ஆர்த்தி. அவ‌ர் திருமேனிக்குச் ச‌த்ருக்க‌ளே ந‌ம‌க்குச் ச‌த்ருக்க‌ள். அவ‌ர் திருமேனி தீங்கின்றி விள‌ங்குவ‌து ந‌ம் காமம். பிர‌கிருதி வியுக்த‌மாக‌ப் பிர‌கிருதி ஸ‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் கேவ‌லாத்மாநுப‌வ‌ம் இருப்ப‌தால், கைவ‌ல்யார்த்தி க‌ளையும் "ப்ர‌க்ருதில‌ங்க‌நார்த்திநாம்" என்ப‌தால் சேர்த்து ஸ‌ங்க்ர‌ஹிக்க‌லாம்.

நீர் தூங்குகிற‌துபோல் பாவ‌னை செய்தாலும், உம் குண‌ங்க‌ள் விழித்துக்கொண்டே இருந்து எங்க‌ளைக் கைதூக்கி ர‌க்ஷிக்கும். ர‌க்ஷ‌ணைக‌ தீக்ஷித‌ரான‌ பெருமாள்போல‌, அவ‌ர் திவ்ய‌ குண‌ங்க‌ள் க‌ர‌க்ர‌ஹ‌ண‌ தீக்ஷித‌ங்க‌ள். த‌ர்மார்த்த‌ காம‌ங்க‌ளும் கைவ‌ல்ய‌ யோக‌மும் மோக்ஷ‌த‌சையில் அங்குர‌மான‌ அனுப‌வ‌மும் இந்த‌ அர‌ங்க‌த்தில் உம்மை ப‌ஜிப்ப‌தால் உம் குண‌ங்க‌ள் கொடுக்கக் கிடைக்கின்ற‌ன‌. அப்ப‌டியே இத‌ற்கு விரோதிக‌ளை நிர‌ஸிக்க‌ வேண்டும் என்ற‌ எங்க‌ள் ம‌னோர‌த‌மும் உம் குண‌ங்க‌ளின் வ‌லிமையினால் நிறைவேறி, நீர் கோயிலில் நித்ய‌மாக‌ எழுந்த‌ருளியிருந்து ஸேவை ஸாதிக்க‌ வேண்டும் (9)

புதன், 17 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

அபீதிஸ்த‌வ‌ம்

சுலோக‌ம் 8


சுலோக‌ம் 8
कदाचिदपि रङ्गभूरसिक ! यत्र देशे वशी
       त्वदेकनियताशय: त्रिदशवन्दितो वर्तते |
ततक्षत तपोवनं तव च राजधानी स्थिरा
       सुखस्य सुखमास्पदं सुचरितस्य दुर्गं महत् ||
கதா₃சித₃பி ரங்க₃பூ₄ரஸிக ! யத்ர தே₃ஶே வஶீ
        
த்வதே₃கநியதாஶய: த்ரித₃ஶவந்தி₃தோ வர்த்ததே |
ததக்ஷத தபோவநம் தவ ச ராஜதா₄நீ ஸ்தி₂ரா
        
ஸுக₂ஸ்ய ஸுக₂மாஸ்பத₃ம் ஸுசரிதஸ்ய து₃ர்க₃ம் மஹத் ||

ர‌ங்க‌பூர‌ஸிக‌ --ஸ்ரீர‌ங்க‌த்தில் வ‌ஸிப்ப‌வ‌ரே!, வ‌ஶீ - இந்திரிய‌ங்க‌ளை வ‌ச‌ப்ப‌டுத்திய‌ வ‌ரும், த்வ‌தேக‌ -நிய‌த‌ - ஆஶ‌ய‌ -- (தொண்ட‌ர‌டிப்பொடிக‌ள்போல‌) உம்மிட‌த்திலேயே நிலைநிறுத்திய‌ ப‌க்தியை யுடைய‌வ‌ரும், த்ரித‌ஶ‌ வ‌ந்தித‌ -- தேவ‌ர்க‌ளால் ந‌ம‌ஸ்க‌ரிக்க‌ப் ப‌டுப‌வ‌ருமான‌ (பெரிய‌வ‌ர்), ய‌த்ர‌ தேஶே -- எந்த‌ தேச‌த்தில், க‌தாசித‌பி -- ஒரு பொழுதாவ‌து, வ‌ர்த்ததே -- இருக்கிறாரோ, தத் -- அது, அக்ஷ‌த‌ -- இடையூறில்லாத‌, த‌போவ‌ந‌ம் -- த‌போவ‌ந‌ம், த‌வ‌ ச‌ -- உம‌க்கும், ஸ்திரா -- ஸ்திர‌மான‌, ராஜ‌தாநீ -- ந‌க‌ர‌ம், ஸுக‌ஸ்ய‌ (ச‌) -- ஸுக‌த்திற்கும், ஸுக‌ம் -- ஸுக‌மான‌, ஆஸ்ப‌த‌ம் -- இட‌ம், ஸுச‌ரித‌ஸ்ய‌ -- ந‌ல்லொழுக்க‌த்திற்கும், ம‌ஹ‌த் -- பெரிய‌, துர்க‌ம் -- அர‌ண் (கோட்டை)
அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி
அரங்கத்தில் அன்புடனே அணைந்துறையும் பெருமானே!
அலைபாயும் புலன்களினை அடக்கியாளும் திறமுடைத்துன்
ஒருவனையே மனம்வைத்து ஒழுகுவதால் தேவர்களும்
ஒன்றுகூடி போற்றுகிற உத்தமமாம் உயர்வுடையோன்
ஒருபொழுதே வாழ்ந்திட்ட ஓரிடமே தடையின்றி
உயர்தவத்தைப் புரிவதற்கு உறுமிடமாம்! உன்னுடைய
உறுதியான தலைநகராம்! ஒப்பற்ற சுகத்தலமாம்!
உற்றபெரும் நல்வினைக்கோர் உரியபெரும் அரணாமே! 8.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

         ய‌ம‌வ‌ச்ய‌தையில்லாம‌லே ந‌ர‌காநுப‌வ‌ம் வ‌ருகிற‌தே என்று காட்டி, நீர் இப்ப‌டி சாஸ்த்ர‌ ம‌ரியாதையைக் குலைக்க‌லாமோ என்று த்வ‌னிக்கும்ப‌டி முன் சுலோக‌த்தில் பேசினார். உம்மிட‌ம் பார‌மைகாந்த்ய‌முடைய‌ ஒரு ப‌க்த‌ர் ஏதோ ஒரு கால‌த்தில் ஒரு தேச‌த்திலிருந்தால் அந்த‌ தேச‌ம் ப‌க‌வானுக்கு ஸ்திர‌மான‌ ராஜ‌தானியாகும். த‌வ‌ம் செய்வ‌த‌ற்கு இடையூறில்லாத‌ த‌போவ‌ன‌மாகும். ந‌ல்லொழுக்க‌த்திற்கு அழிவ‌ற்ற‌ கோட்டையாகும் என்ப‌ரே. தொண்ட‌ர‌டிப் பொடிக‌ளிலும் உம்மிட‌ம் பார‌மைகாந்த்ய‌ முடைய‌வ‌ருண்டோ? अत्रैव श्रीरङ्गे सुखमास्स्व (அத்ரைவ‌ ஸ்ரீர‌ங்கே ஸுக‌ம் ஆஸ்ஸ்வ‌) என்ற‌ல்ல‌வோ இத்த‌கைய‌ வ‌டியார்க‌ளுக்கு உம்முடைய‌ ஆக்ஞை! "அச்சுவை பெறினும் வேண்டேன் அர‌ங்க‌மாந‌க‌ருளானே" என்று ப‌ர‌மப‌தத்து வைகுண்ட‌நாத‌னையும் ஒதுக்கி உம்மிட‌ம் நிய‌தாஶ‌ய‌ராய் இருந்த‌ன‌ர். "இங்கே ஸ்ரீர‌ங்க‌த்தில் ஸுக‌மாயிரு" என்று எங்க‌ளுக்குக் க‌ட்ட‌ளையிட்டுவிட்டு, நீர் இவ்விட‌மிருந்து வெளியேறுவ‌து த‌குதியோ? பெரிய‌ பெருமாள் ஓரிட‌மும் நீர் ஓரிட‌முமானால், எங்க‌ளுக்கு ஸ்ரீர‌ங்க‌த்தில் ஸுக‌மான‌ இருப்பு எப்ப‌டி ஏற்ப‌டும்?
         ர‌ங்க‌பூ ர‌ஸிக‌ -- பாற்க‌ட‌ல், ஸூர்ய‌ ம‌ண்ட‌ல‌ம், வைகுண்ட‌ம் எல்லாவ‌ற்றைக் காட்டிலும் உம‌க்கு ஸ்ரீர‌ங்க‌த்திலே (ர‌தி) இன்ப‌ம் இருக்கிற‌து. रतिं गतो यतस्तस्मात् "ர‌திம் க‌தோ ய‌த‌ஸ்த‌ஸ்மாத்" என்று ரிஷிக‌ள் பொருள் கூறினார்க‌ள். அர‌ங்க‌த்தில் அர‌ங்க‌னாகிய‌ நீர் ஸ‌பாநாய‌க‌ராக‌ வீற்றிருந்து காவ்ய‌ங்க‌ளை ர‌ஸித்து அர‌ங்கேற்றுவ‌து, रङ्गास्थाने रसिकमहिते रञ्ज्चिताशेषचित्ते (ர‌ங்காஸ்தாநே ர‌ஸிக‌ம‌ஹிதே ர‌ஞ்ஜிதாஶேஷ‌சித்தே).
         ர‌ங்க‌பூர‌ஸிக‌ -- ர‌ங்க‌பூமிக்கும் ர‌ங்க‌ந‌க‌ர‌வாஸிக‌ளுக்கும் உம்மிட‌ம் ர‌ஸ‌மிருப்ப‌து போல‌, உம‌க்கும் அவ‌ர்க‌ளிட‌ம் ர‌ஸ‌ம். இப்ப‌டிப் ப‌ர‌ஸ்ப‌ர‌ ர‌ஸ‌மிருப்ப‌தால் ர‌ஸ‌பூர்த்தி. ப்ர‌ஹ்மா வினால் ஸ‌த்ய‌ லோக‌த்தில் சில‌கால‌ம் ஆராதிக்க‌ப்ப‌ட்டு, அதை விட்டு அயோத்தி வ‌ந்தீர். அங்கு நீண்ட‌ கால‌மிருந்து அதை விட்டு ஸ்ரீர‌ங்க‌த்திற்கு எழுந்த‌ருளினீர். இனி ஓரிட‌மும் போக‌மாட்டீராத‌லால் இங்கே உம‌க்கு நிர‌திச‌ய‌ப்ரீதி என்று பாதுகா ஸ‌ஹ‌ஸ்ர‌த்தில் உம் பாதுகை என்னையிட்டுப் பாடுவித்தது. सत्याल्लोकात् परममहितात् स्थानतो वा रघूणां -- ஸ‌த்யால்லோகாத் ப‌ர‌மம‌ஹிதாத் ஸ்தாநதோ வா ர‌கூணாம் -- என்று கூறின‌து பொய்யாக‌லாமோ?
         ய‌த்ர‌ தேஶே -- எந்த‌ தேச‌த்தில், "ய‌த்ர‌" என்று ம‌ட்டும் ப்ர‌யோகித்தார். "ய‌த்ரைகாந்த்ய‌" என்ற‌ ஸ்தாந‌ விசேஷாதிகார‌ சுலோக‌த்தில்.
         வ‌ஶீ -- "இந்த்ரிய‌ங்க‌ளை எல்லாம் அட‌க்கின‌வ‌ர் எங்கே எங்கே வ‌ஸிக்கிறாரோ, அங்க‌ங்கே குருக்ஷேத்ர‌மும் நைமிச‌மும் புஷ்க‌ர‌முமுள‌" என்ற‌ சுலோக‌ம் ஸ்தாந‌ விசேஷாதி கார‌த்தில் எடுத்துக் காட்ட‌ப்ப‌ட்ட‌து.
         த்வ‌த‌தேக‌நிய‌தாஶ‌ய‌ -- ऐकान्त्यव्यवसितधिय -- ஐகாந்த்ய‌ வ்ய‌வ‌ஸித‌ திய‌ -- என்று அதிகார‌ ச்லோக‌ம்.
         க‌தாசித‌பி -- यस्य कस्यापि लाभ -- ய‌ஸ்ய‌ க‌ஸ்யாபி லாப‌ -- என்று அங்கு இர‌ண்டிட‌த்திலும் இர‌ண்டையும் अपि   அபி என்ப‌தைக் கொண்டு சேர்த்துக் கொள்ள‌ வேணும்.
         த்ரித‌ஶ‌வ‌ந்திதோ வ‌ர்த்ததே -- தேவ‌ர்க‌ள் இவ‌ருக்குப் ப‌லி ஸ‌ம‌ர்ப்பித்துப் பூஜிக்கிறார்க‌ள். तस्मै देवा बलिमावहन्ति த‌ஸ்மை தேவா ப‌லிமா வ‌ஹ‌ந்தி . "நித்ய‌ஸூரிக‌ளும் கோயிலில் வாஸ‌த்தைத் தேடி ம‌னுஷ்ய‌ர்க‌ளோடும் திர்ய‌க்குக‌ளோடும் சேர்ந்து தொழுகிறார்க‌ள்" என்று ப‌ட்ட‌ர் ஸாதித்தார். ப‌ர‌மைகாந்திக‌ளும், அவ‌ர்க‌ளைப் பூஜிக்க‌வும் உம்மை ஸேவிக்க‌வும் வ‌ரும் நித்ய‌ஸூரிக‌ளும் ஏமாறும்ப‌டி செய்ய‌லாமோ? "த்ரித‌ச‌வ‌ந்தித‌ராக‌ இருக்கிறார் " என்ப‌தால் அவ‌ர்க‌ளோடு தேவ‌ர்க‌ளும் வ‌ஸிக்கிறார்க‌ள் என்று காட்ட‌ப்ப‌டுகிற‌து. "த‌ஸ்மை தேவா ப‌லிமாவ‌ஹ‌ந்தி" பெருமாளை அவ‌ர்க‌ள் ஸேவிக்க‌ வ‌ருவ‌து ராக‌ப்ராப்த‌ம். இவ‌ர்க‌ளை வ‌ந்த‌ன‌ம் செய்து ப‌லி ஸ‌ம‌ர்ப்பிப்ப‌து வைத‌ம், சுருதி விதித்த‌ ஆக்ஞா கைங்க‌ர்ய‌ம்.
         ஸா ச‌ ராஜ‌தாநீ ஸ்திரா -- விதேய‌ம் முக்கிய‌மான‌தால் அதை அநுஸ‌ரித்து "ஸா" என்று ஸ்திரீலிங்க‌ம் உப‌யோகிக்க‌ப் ப‌டுகிற‌து. ராஜ‌தானிக்கே ஆப‌த்துக்க‌ள் அதிக‌ம். ச‌த்ருக்க‌ள் ப‌ல‌ர் இருப்பார்க‌ள். யுத்த‌மும் முற்றுகையும் வ‌ந்து கொண்டேயிருக்கும். ப‌ர‌மைகாந்தி வ‌ஸித்த‌ அல்ல‌து வ‌ஸிக்கும் ர‌ங்க‌ராஜ‌தாநீ ஸ்திர‌மாயிருக்க‌ வேண்டும். ராஜா வ‌ஸிக்கும் இட‌ம் ராஜ‌தாநியாகையால், ந‌ம்பெருமாள் வேறொரிட‌த்தில் இருந்தால் அதுவும் ராஜ‌தாநியாகிலும், அது ர‌ங்க‌ராஜ‌தானி யாகாத‌ல்ல‌வா?
         ஸுக‌ஸ்ய‌ ஸுக‌மாஸ்ப‌த‌ம் -- ஸுக‌மென்ப‌த‌ற்கே இது ஸுக‌மான‌ இருப்பிட‌ம். ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் ஸுக‌மும் இத்த‌னை ஸுக‌மாக‌ இருக்காது.
         ஸுச‌ரித‌ஸ்ய‌ துர்க‌ம் ம‌ஹ‌த் -- த‌ர்மம் உல‌க‌த்தைக் காக்கும் என்ப‌ர். த‌ர்ம‌த்திற்குப் ப‌ர‌மைகாந்தி வ‌ஸிக்கும் க்ஷேத்ர‌ம்தான் பெரிய‌ அர‌ண். இத்த‌னைக்கும் ஹாநி வ‌ர‌லாமோ? (8) 

சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்

08-08-2016 அன்று ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி நிக‌ழ்த்திய‌ 48வ‌து (சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்) டெலி உப‌ந்யாஸ‌ம்

பாதுகா ப‌ட்டாபிஷேக‌ம்
http://www.mediafire.com/download/1b6n8e64sgwz7zu/048_SSR_(08-08-2016).mp3

15-08-2016 அன்று ம‌ங்க‌ள‌மாக‌ முடிந்த‌ அயோத்யா காண்ட‌ம் டெலி உப‌ந்யாஸ‌ம்

http://www.mediafire.com/download/azbgfbb5gym57oa/049_SSR_(15-08-2016).mp3

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

அபீதி ஸ்த‌வ‌ம் 

சுலோக‌ம் 7

रमादयित ! रङ्गभूरमण ! कृष्ण ! विष्णो ! हरे !
      
त्रिविक्रम ! जनार्दन ! त्रियुग ! नाथ ! नारायण! |
इतीव शुभदानि य: पठति नामदेयानि ते
      
न तस्य यमवश्यता नरकपातभीति: कुत: || 7
ரமாத₃யித ! ரங்க₃பூ₄ரமண ! க்ரு̆ஷ்ண ! விஷ்ணோ ! ஹரே !
      
த்ரிவிக்ரம ! ஜநார்த₃ந ! த்ரியுக₃ ! நாத₂ ! நாராயண! |
இதீவ ஶுப₄தா₃நி ய: பட₂தி நாமதே₃யாநி தே
      
ந தஸ்ய யமவஶ்யதா நரகபாதபீ₄தி: குத: || 7
ய‌: எவ‌ன், ர‌மாத‌யித‌ -- ல‌க்ஷ்மீகாந்த‌! , ர‌ங்க‌பூர‌ம‌ண‌ --ஸ்ரீர‌ங்க‌த்தில் ர‌மிப்ப‌வ‌னே!, க்ருஷ்ண‌ -- க‌ண்ணா ! (பூர்ணாநந்த‌ பூமியே!,), விஷ்ணோ -- எங்கும் நிறைந்த‌வ‌னே!, ஹ‌ரே -- ஹ‌ரியே (ஆப‌த்தை ஹ‌ரிப்ப‌வ‌னே, சிங்க‌மே ), த்ரிவிக்ர‌ம‌ -- மூவுல‌க‌ள‌ந்த‌ சேவ‌டியோனே!, ஜ‌நார்த்த‌ன‌ -- ஜ‌னார்த்த‌னனே!, த்ரியுக‌ -- ஆறுகுண‌த்தோனே!, நாத‌ -- நாத‌னே!, நாராய‌ண‌ -- நாராய‌ண‌னே!!, இதீவ‌ -- இதுவும், இதுபோலுள்ள‌வுமான‌, ஶுப‌தாநி -- க்ஷேம‌த்தை அளிக்கும், தே -- உம்முடைய‌, நாம‌தேயாநி -- திருநாம‌ங்க‌ளை , ப‌ட‌தி -- உச்ச‌ரிக்கிறானோ, த‌ஸ்ய‌ -- அவ‌னுக்கு, ய‌ம‌வ‌ஶ்ய‌தா -- கால‌னுக்கு வ‌ச‌மாவ‌தென்ப‌து, ந‌: -- கிடையாது, ந‌ர‌க‌ - பாத‌ - பீதி -- ந‌ர‌க‌த்தில் வீழ்வ‌தென்னும் ப‌ய‌ம், குத‌: -- எங்கிருந்து வ‌ரும்.
ஸ்ரீ அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி
பூமகளின் நற்துணைவா! பொழிலரங்கக் காதலனே!
முகில்வண்ண கண்ணாவே! மறைந்தெங்கும் நிற்பவனே!
தீமைகளை ஒழிப்பவனே! திருவடியால் உலகளந்த
திரிவிக்ரமாஸ்ரீ ஜநார்தனா! திருவாறு குணமுடையோய்!
நாம்வணங்கும் பெருந்தலைவா! நாராயணா! என்றென்று
நலமெல்லாம் தருமுன்றன் நாமங்களைப் பயில்வோனை
நமன்தனக்கு வயமாக்கும் நிலையென்றும் ஏற்படாதே!
நரகத்தில் வீழ்கின்ற நடுக்கம்தான் உண்டோதான்? 7.
ஸ்ரீ அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார் ஸ்வாமி

       முன் சுலோக‌த்தில் "துப்புடையாரை" நினைத்தார். அத்திருமொழியில் மேல்பாசுர‌ங்க‌ளில் "என்னை அநேக‌ த‌ண்ட‌ம் செய்வ‌தா நிற்ப‌ர் ந‌ம‌ன்த‌ம‌ர்க‌ள்", "ந‌ம‌ன் த‌ர‌ம் ப‌ற்றும்போது", "ந‌ம‌ன்த‌ம‌ர் ப‌ற்ற‌லுற்ற‌ அன்றைக்கு" என்று ய‌ம‌வ‌ச்ய‌தா ப‌ய‌மில்லாம‌ல் காப்ப‌வ‌ராக‌ அர‌ங்க‌த் த‌ர‌வ‌ணைப் ப‌ள்ளியானைத் துதிக்கிறார்.
     ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் சேர்ந்து ஸ்வாமி நெஞ்சில் ஓட‌ இங்கே இந்த‌ சுலோக‌ம் அமைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. ந‌ம்பெருமாள் திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் கோவிலை விட்டு வெளியே எழுந்த‌ருளியிருந்த‌ ஸ‌ம‌ய‌ம், ஸ்ரீர‌ங்க‌நாய்ச்சியாரை விட்டுப் பிரிவு நேர்ந்திருந்தது. ஸ்ரீர‌ங்க‌ பூமியை விட்டுப் பிரிவு, ஸ்ரீர‌ங்க‌ பூமியிலுள்ள‌ ம‌னுஜ‌ திர்ய‌காதி விஷ‌ய‌ வாஸிக‌ளை விட்டுப் பிரிவு, ஸ்வாமியைப்போல் ததேக‌நிய‌தாச‌ய‌ராய் ஸ்ரீர‌ங்க‌நாத‌னையே த்யான‌ம் செய்து ர‌மிப்ப‌வ‌ரோடும் பிரிவு. "உம்மோடு கூட‌ இருப்ப‌தே ஸ்வ‌ர்க்க‌ம். உம்மை விட்டுப் பிரிவே ந‌ர‌க‌ம்" என்று ஸ்வ‌ர்க்க‌ ந‌ர‌க‌ ல‌க்ஷ‌ண‌ம் சீதை ல‌க்ஷ்ம‌ண‌ன் போன்ற‌ சேஷ‌ ஜ‌ன‌ங்க‌ளுக்கு. ந‌ம் பெருமாளைவிட்டுப் பிரிவு ந‌ர‌க‌பாத‌ துல்ய‌ம். "விஷ்ணு ப‌க்த‌ருக்கு, வைஷ்ண‌வ‌ருக்கு, ந‌ம‌ன் த‌ம‌ர் ப‌ய‌மில்லை. ந‌ம‌னுக்கு வ‌ச‌மாவ‌தில்லை. அவ‌ர்க‌ள் இவ‌ர்க‌ளைக் க‌ண்டு ப‌ய‌ந்து ஓடுவார்க‌ள்" என்று விஷ்ணு புராண‌த்தில் பீஷ்ம‌ர் ந‌குல‌னிட‌ம் ய‌ம‌னுக்கும் அவ‌ன் ப‌ட‌ர்க‌ளுக்கும் ந‌ட‌ந்த‌ ஸ‌ம்வாதத்தை வ‌ர்ணித்தார். அவ‌ர்க‌ள் ஸ‌ம்வாதத்தை ந‌ர‌க‌த்தில் அப்போது அவ‌ஸ்தைப்ப‌ட்டுக்கொண்டிருந்த‌ காளிங்க‌ர் நேரில் கேட்டார். அவ‌ர் ஜாதிஸ்ம‌ரர். அதாவ‌து ஒரு ச‌க்தி விசேஷ‌த்தால் பூர்வ‌ ஜ‌ன்ம‌ங்க‌ளில் தாம் அனுப‌வித்ததை யெல்லாம் ஸ்ம‌ரிப்ப‌வ‌ர். பூர்வ‌ ஜ‌ன்ம‌த்தில் தாம் ந‌ர‌க‌த்தில் கூட‌ இருந்து கேட்ட‌ பேச்சை அப்ப‌டியே அவ‌ர் த‌ம்முடைய‌ பிராம‌ண‌ ஜ‌ன்ம‌த்தில் பீஷ்ம‌ருக்கு வ‌ர்ணித்தார். பீஷ்ம‌ர் ந‌குல‌னுக்கு வ‌ர்ணித்ததைப் ப‌ராச‌ரர்வ‌ர்ணித்தார். இந்த‌ ஸ‌ம்வாதத்தில் ஸ்ரீச‌ங்க‌ரர் முத‌லிய‌ அத்வைத‌ப் பெரியார்க‌ளுக்கு விசேஷ‌ ஈடுபாடு. ய‌ம‌ன் பாடினான் என்று "ஹ‌ரிகுருவ‌ஶ‌கோऽஸ்மி ந‌ ஸ்வ‌த‌ந்த்ர‌: ப்ர‌ப‌வ‌தி ஸ‌ம்ய‌ம‌தே மமாபி விஷ்ணு:" (हरिगुरुवशगोऽस्मि न स्वतन्त्र: प्र्भवति संयमते ममापि विष्णु:) என்ற‌ சுலோக‌த்தை ப‌ர‌ம‌தீ க்ர‌ந்த‌ம் உதாஹ‌ரித்தது. "ம‌து ஸூத‌ன‌ ப்ர‌ப‌ந்ந‌ரைப் ப‌ரிஹ‌ரிப்பாயாக‌. வைஷ்ண‌வ‌ர்க‌ள் பேரில் என‌க்கு அதிகார‌மில்லை. வைஷ்ண‌வ‌ர்க‌ள‌ல்லா தாருக்கே நான் ப்ர‌பு" என்ற‌ சுலோக‌த்தை ம‌துஸூத‌ன‌ர் த‌ம் அழ‌கான‌ கீதா வ்யாக்யான‌த்தில் உதாஹ‌ரித்தார். ஹ‌ரி, விஷ்ணு, ஜ‌நார்த்த‌னன், ம‌துஸூத‌னன், வாஸுதேவ‌ன் முத‌லிய‌ திருநாம‌ங்க‌ளை த‌ர்ம‌ராஜ‌ர் அங்கே அடிக்க‌டி கீர்த்த‌ன‌ம் செய்கிறார். இந்தத் திருநாம‌ங்க‌ளை உச்ச‌ரிப்ப‌வ‌ர்க‌ளைக் க‌ண்டு ய‌மப‌ட‌ர்க‌ள் ந‌டுங்க‌ வேண்டும்.
     "ந‌ம‌ன்த‌ம‌ர் த‌லைக‌ள் மீதே ………….. நின் நாமம் க‌ற்ற‌ ஆவ‌லிப்புடைமை க‌ண்டாய் அர‌ங்க‌மா ந‌க‌ருளானே" என்று அர‌ங்க‌னையே அத்ய‌ந்த‌ம் ஐகாந்த்ய‌த்தோடு ப‌ற்றிய‌ (ததேக‌ நிய‌தாஶ‌ய‌ரான‌) தொண்ட‌ரடிப்பொடிக‌ளும் ய‌ம‌னுடைய‌ கான‌த்தை அநுகான‌ம் ப‌ண்ணினார். காதோடு ர‌ஹ‌ஸ்ய‌மாக‌ச் சொல்லுகிறேன் என்று தொட‌ங்கிய‌ ய‌ம‌ன் போக‌ப்போக‌ ஸ‌ந்தோஷ‌ பார‌வ‌ச்ய‌த்தால் மெய் ம‌ற‌ந்து உர‌க்க‌ப் பாடினான் என்னும் ர‌ஸ‌த்தை பாம‌தி அநுப‌வித்தது. பீஷ்ம‌ரும் ப‌ராச‌ரரும் அநுப‌வித்தார்க‌ள். छिन्धि भिन्धि (சிந்தி, பிந்தி) (கிழி, பிள‌) என்று கொடுமையே பேசுப‌வ‌ர் பாடினார் என்றும் ர‌ஸ‌ம். गीतं वैवस्वतेन यत् (கீத‌ம் வைவ‌ஸ்வ‌தேந‌ ய‌த்) என்று க‌டைசியில் ய‌ம‌ன் இப்ப‌டிப் பாடினான் என்று பீஷ்ம‌ ப‌ராச‌ரர்க‌ள் ர‌ஸித்தார்க‌ள். ய‌ம‌ன் பாட்டுக்க‌ளில் க‌டைசிப் பாட்டு
कमलनयन वासुदेव विष्णो धरणिधराच्युत शङ्खचक्रपाणे |
भव शरणमितीरयन्ति ये वै त्यज भट दूरतरेण तानपापान् ||
க‌ம‌ல‌ந‌ய‌ந‌ வாஸுதேவ‌ விஷ்ணோ த‌ர‌ணித‌ர‌ அச்யுத‌ ச‌ங்க‌ச‌க்ர‌பாணே |
பவ ஶ‌ர‌ண‌ம் இதீர‌ய‌ந்தி யே வை த்வ‌ஜ‌ ப‌ட‌ தூர‌த‌ரேண‌ தாந் அபாபாந் ||
என்ப‌து. "இந்தத் திருநாம‌ங்க‌ளைச் சொல்லி நீயே அடைக்க‌ல‌ம் என்று பேசுப‌வ‌ரிட‌மிருந்து, அதி தூர‌ம் வில‌கிச் செல்லுங்க‌ள்" முன் "வில‌கு" "தூர‌ வில‌கு" என்று பாடிற்று. இங்கு திருநாம‌த்தைச் சொல்லி "அடைக்க‌லம்" என்று பேசுப‌வ‌ர் விஷ‌ய‌த்தில் "தூர‌த‌ர‌ம் வில‌கு" என்று பாட‌ப்ப‌ட்ட‌து.
     முன் பாதியில் திருநாம‌ங்க‌ள் அடுக்காக‌ப் ப‌டிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ சுலோக‌த்திலும் அதே ரீதியாக‌ முன்பாதியில் திருநாம‌ங்க‌ளை ம‌ட்டும் அடுக்கி அமைத்து :"இதி ஈர‌ய‌ந்தி" என்ற‌துபோல் "இதீவ‌ ப‌ட‌தி நாம‌தேயாநி தே" என்று இங்கும் பின்பாதியின் அமைப்பு. "இதீவ‌" "இதுபோன்ற‌ நாம‌தேய‌ங்க‌ளை". ய‌ம‌னுடைய‌ சுலோக‌த்திலும் அதே நாம‌ங்க‌ளையோ ம‌ற்ற‌ நாம‌ங்க‌ளையோ என்று தாத்ப‌ர்ய‌ம் என்ப‌தை ஸ்வாமி "இவ‌" என்று காட்டிய‌ருளுகிறார். ய‌ம‌ன் பாடின‌ப‌டியும் தொண்ட‌ர‌டிப்பொடிக‌ள் பாடின‌ப‌டியும் உம் திருநாம‌ங்க‌ளைச் சொல்லி நீரே ச‌ர‌ண‌ம் என்று வாயாலேயாவ‌து சொல்லும் எம்போல்வார்க்கு ய‌ம‌வ‌ஶ்ய‌தை என்ப‌தே ஸ‌ம்ப‌விக்க‌ மாட்டாது. "த்வ‌யா விநா" உம்மைவிட்டுப் பிரிவினால் நாங்க‌ள் ந‌ர‌க‌த்தையே அனுப‌விக்கிறோம். ய‌ம‌வ‌ஶ்ய‌தை இல்லாதார்க்கு ந‌ர‌காநுப‌வ‌ம் வ‌ர‌ ந்யாய‌மில்லை. உம் பிரிவால் ரௌர‌வாதி ஸ‌ப்த‌ ந‌ர‌க‌ங்க‌ளை நாங்க‌ள் இப்போது அனுப‌விப்ப‌து உண்மை. எங்க‌ளுக்கோ ய‌ம‌வ‌ஶ்ய‌தை கிடையாது என்ப‌து திண்ண‌ம். ய‌ம‌வ‌ஶ்ய‌தை ந‌ர‌காநுப‌வ‌த்திற்குக் கார‌ண‌ம். கார‌ண‌மில்லாம‌ல் காரிய‌ம் உண்டாகிற‌தே, இது என்ன‌ அந்யாய‌ம் என்று க‌டைசிப் பாதத்தில் கைமுத்ய‌த்தால் விள‌க்கும் அழ‌கு ர‌ஸிக்க‌த் த‌க்க‌து.
     ஸ்வாமி திருவுள்ள‌ப்ப‌டி ஒவ்வொரு ப‌தத்தின் ர‌ஸ‌த்தைக் கொஞ்ச‌ம் காட்டுவோம்.
         ர‌மாத‌யித‌ -- தேவ‌ரீர் செஞ்சிக்கோட்டையிலும், ஸ்ரீர‌ங்க‌நாச்சியார் கோயிலிலுமாக‌ இருப்ப‌து ந்யாய‌மோ? "நிர‌யோ ய‌ஸ்-த்வ‌யாவிநா" "விஷ்ணோ: ஸ்ரீ: அந‌பாயிநீ" "அக‌ல‌கில்லேன் இறையும்" என்னும் உம் பிரிய‌ காந்தைக்காக‌வாவ‌து நீர் கோயிலுக்குத் திரும்பி எழுந்த‌ருள‌ வேண்டாமோ? निवर्त्य राजा दयितां दयालु (நிவ‌ர்த்ய‌ ராஜா த‌யிதாம் த‌யாளு) என்று ர‌குவ‌ம்ச‌ம். த‌யிதை விஷ‌ய‌த்திலும் த‌யாளுவ‌ல்ல‌வோ ?
       ர‌ங்க‌பூர‌ம‌ண‌ -- பிராட்டி விபுவாக‌ ந‌ம்மோடு எங்கும் எப்போதும் गाढोपगूढ (காடோப‌கூட‌)மாய் அணைந்தே இருப்ப‌வ‌ள். அவ‌ளை விட்டுப் பிரிவு என்ப‌தே இல்லை என்பீரோ, ர‌ங்க‌பூ என்னும் அர‌ங்க‌ந‌க‌ர் (அயோத்யை) நோவு ப‌டுகிற‌தே. அத‌ற்கு நீர்தானே ர‌ம‌ண‌ன். அத‌ற்குப் பொறுக்காத‌ அர‌தி. அதில் வ‌ஸிக்கும் ம‌நுஜ‌ - திர்ய‌க் - ஸ்தாவ‌ர‌மெல்லாம் ராம‌ விர‌ஹ‌த்தில் அயோத்தியில் ச‌ராச‌ர‌ம்போல‌க் க‌த‌றுகின்ற‌ன‌வே. ர‌ம‌ண‌னில்லாம‌ல் ர‌ங்க‌பூமி நாய‌க‌ன‌ற்ற‌ ஸ்திரீபோல் துக்க‌ப்ப‌டுகிற‌தே. "ர‌ங்க‌ம்" என்னும் ந‌க‌ர், "பூ" என்னும் பூமிதேவி, இருவ‌ருக்கும் "ர‌ம‌ண‌" என்றும் கொள்ள‌லாம். ர‌ங்க‌ம் பூமியிலே ஏக‌தேச‌மானாலும், ர‌ங்க‌த்தை ம‌ட்டும் த‌னித்து எடுத்துப் பேசுவ‌து ர‌ஸ‌ம். அர‌ங்க‌மும் க‌த‌றுகிற‌து. பூமிப் பிராட்டியும் க‌த‌றுகிறாள்.  अश्रुमुखी खिन्ना- क्रन्दन्ति करुणं (அஶ்ருமுகீ₂ கி₂ந்நா- க்ரந்த₃ந்தி க‌ருண‌ம்) உப‌ய‌நாச்சிமாரும் அவ‌ர்க‌ளிருக்கும் ந‌க‌ர‌மான‌ ர‌ங்க‌மும் க‌த‌றுகிறார்க‌ள் என்ப‌தைக் காட்ட‌, "ர‌ங்க‌" என்ப‌தை இர‌ண்டு நாச்சிமாருக்கும் ந‌டுவில் வைத்தார். தாய்க‌ளும் ப்ர‌ஜைக‌ளும் நோவுப‌டுகின்ற‌ன‌ என்ற‌ப‌டி. அடைக்க‌ல‌ம் கொள்ளுவ‌த‌ற்கு இந்தத் திருநாம‌ங்க‌ள் ஸ‌ப்ர‌யோஜ‌ன‌ம்.
         க்ருஷ்ண‌ -  "ஹா க்ருஷ்ணா" என்று த்ரௌப‌தி கூப்பிட்ட‌ திருநாமம். ப‌த்தொன்ப‌தாவ‌து சுலோக‌த்தில் அவ‌ள் வ்ருத்தாந்தத்தைப் பேச‌ப் போகிறார். "க்ருஷ்ண‌" என்ப‌த‌ற்கு "ஆன‌ந்தத் தின் எல்லை பூமி" என்று பொருள். "க்ருஷி" என்று பூமிக்குப் பெய‌ர். "ர‌ங்க‌பூ" என்று பேசிய‌தும் "பெருமாளே நிர்வ்ருதிபூமி" "ஆன‌ந்தத்திற்கு எல்லைபூமி" என்று ர‌ஸ‌மாய்ச் சேர்க்கிறார். ர‌ங்க‌பூமியில் நிர்வ்ருதிபூமியான‌ நீர் சேர்ந்திருந்தால் ப‌ர‌ஸ்ப‌ர‌ ர‌ஸ‌ம். "ர‌ங்க‌ம்" என்ப‌த‌ற்கு "ர‌திம் க‌த‌:" "ர‌தியை அடைந்தார்" என்று பொருள். அதிலிருப்ப‌தால் ர‌தி அடைய‌ப் ப‌டுகிற‌து. रति गतो यतस्तस्मात् रङ्गमित्यभिधीयते  (ர‌திம் க‌தோ ய‌த‌ஸ் த‌ஸ்மாத் ர‌ங்க‌ம் இதி அபிதீய‌தே)
         விஷ்ணோ! ஹ‌ரே ! -- ய‌ம‌ன் பாடிய‌ திருநாம‌ங்க‌ள். ய‌மப‌ட‌ருக்கு ப‌ய‌முண்டாக்குப‌வை. "रकारादीनि नामानि, अकारादीनि नामानि"  (ர‌காராதீநி நாமாநி, அகாராதீநி நாமாநி) உல‌க‌த்தின் ஆப‌த்தை யெல்லாம் ஹ‌ரிப்ப‌வ‌ராயிற்றே. ப்ர‌ண‌தார்த்தி ஹ‌ர‌ன‌ல்ல‌வோ?   
         த்ரிவிக்ர‌ம‌ --  लोकविक्रान्तचरणौ शरणं तेऽव्रजं प्रभो (லோக விக்ராந்த‌ ச‌ர‌ணௌ ஶ‌ர‌ண‌ம் தே அவ்ர‌ஜ‌ம் ப்ர‌பு ) -- உல‌க‌ள‌ந்த‌ உம் சேவ‌டிக‌ளைச் ச‌ர‌ண‌ம் புகுந்தேன் என்று ச‌ர‌ண் புகும் வ‌கை. विष्णुं क्रान्तं वासुदेवं विजानन् ( விஷ்ணும் க்ராந்த‌ம் வாஸுதேவ‌ம் விஜாநந்) என்ற‌ப‌டி.
         ஜ‌நார்த்த‌ன‌ -- இதுவும் ய‌ம‌ன் பாட‌ல்க‌ளிலுள்ள‌து.
     த்ரியுக‌ -- மூவிர‌ண்டான‌ ஆறு குண‌ங்க‌ளை உடைய‌வ‌ரே ! முத‌ல் மூன்று யுக‌ங்க‌ளில் ம‌ட்டும் ம‌த்தியில் அவ‌தார‌ம் செய்ப‌வ‌ர். க‌லியில் அத‌ன் முடிவில்தான். விப‌வாவ‌தார‌ம் க‌லி ம‌த்தியில் கூடாதென்று இருக்கிறீரோ?
         நாத‌ -- "ர‌ங்க‌நாத‌" என்று கூப்பிட‌க் கூடாம‌லிருக்கிற‌தே, இத‌னிலும் எங்க‌ளுக்குக் க‌ஷ்ட‌முண்டோ?
         நாராய‌ண‌ -- இட‌ராயின‌வெல்லாம் நில‌ம்த‌ர‌ம் செய்யும் நாமம் பெருமாள் ச‌க்ர‌பாணியாய் ஆகாச‌த்தில் எழுந்த‌ருளி த‌ன்னைக் காட்ட‌க் க‌ண்ட‌போது, "நாராய‌ண‌! அகில‌குரோ! ப‌க‌வ‌ந் ! ந‌ம‌ஸ்தே " என்று க‌ஜேந்த்ராழ்வார் முத‌லில் கூப்பிட்ட‌ நாமம். திருவ‌ஷ்டாக்ஷ‌ர‌த்திலும் த்வ‌ய‌த்திலும் விள‌ங்கும் திருநாமம்.
         இதீவ‌ -- இப்ப‌டி, இதுபோன்ற‌. இவ‌ என்ப‌தால் முழுவ‌தும் ச‌ரியாக‌ச் சொல்லாவிடினும், சொல்லுவ‌துபோலிருந்தாலும் போதும்.
         ப‌ட‌தி இவ‌ -- வேறு ஏதோ ப்ர‌ஸ்தாவ‌த்தில் இந்த‌ ஸ‌ப்தத்தை ம‌ட்டும் உச்ச‌ரித்தாலும். "நாராய‌ண‌" என்னும் திருநாம‌த்தால் அஜாமிள‌ன் க‌தையை நினைத்து, "ப‌ட‌தீவ‌" -- பாட‌ம் ப‌டிக்கிற‌து போலிருந்தாலும் என்று க‌ருத்து.  आक्रुश्य पुत्रमघवान् यदजामिलोऽपि म्रियमाण अवाप मुक्तिम् (ஆக்ருஶ்ய‌ புத்ர‌ம் அக‌வாந் ய‌த‌ஜாமிளோபி நாராய‌ண‌ இதி ம்ரிய‌மாண‌ அவாப‌ முக்திம்) இந்த‌ நாம‌த்தின் ப்ர‌பாவ‌த்தை ர‌ஸித்த‌ ஸ்ரீவித்யார‌ண்ய‌ ஸ்வாமி ப‌ஞ்ச‌த‌சியில் இந்த‌ சுலோக‌த்தை உதாஹ‌ரித்தார்.
         நாம‌தேயாநி -- திருநாம‌ ச‌ப்தத்தை ம‌ட்டும்.  அர்த்த‌ம்கூட‌ வேண்டிய‌தில்லை. வாச்ய‌னான‌ உம்முடைய‌ நினைப்பில்லாம‌ல், உம் பேராயிருப்ப‌து மாத்ர‌மே போதும். "ப‌வ‌ ஶ‌ர‌ண‌ம்" என்று பேசுவார் என்றான் ய‌ம‌ன். "இதி ஈர‌ய‌ந்த‌" शरणगतिश्ब्दभाज" (ஶ‌ர‌ணாக‌தி ஶ‌ப்த‌பாஜ‌) என்று ஆழ்வான் "ஸ்வார்த்தே தேய‌ட் ப்ர‌த்யய‌ம்" என்ப‌ர்.
         தே -- உம் திருநாமமாத‌லால் ச‌ப்தத்தின் ப‌ட‌ந‌மாத்ர‌த்திற்கு இத்த‌னை ப்ர‌பாவ‌ம்.
      ந‌ த‌ஸ்ய‌ ய‌ம‌வ‌ஶ்ய‌தா -- அவ‌ர்க‌ள் விஷ‌ய‌த்தில் த‌ன‌க்கும் த‌ன் ப‌ட‌ர்க‌ளுக்கும் அதிகார‌மில்லை என்று அதிகாரி புருஷ‌னான‌ த‌ர்ம‌ராஜ‌னே சொல்லி இருப்ப‌தால், அதில் ஸ‌ந்தேஹ‌மில்லை. இதைக் காட்ட‌வே அந்த‌ சுலோக‌த்தின் ரீதி இங்கே அனுஸ‌ரிக்க‌ப் ப‌ட்ட‌து. ய‌ம‌வ‌ஶ்ய‌தை வ‌ராம‌ல் ந‌ர‌க‌பாத‌ம் ஸ‌ம்ப‌விக்க‌ ந்யாய‌மில்லையே. ஸ‌ப்த‌ ந‌ர‌க‌ங்க‌ளிலும் ய‌ம‌னுடைய‌ அதிகார‌ம் (வ்யாபார‌ம்) தான் என்று ஸூத்ர‌காரர் "अपि सप्त", "तत्रापि च तद्वयापारादविरोध: " என்று தீர்மானித்தார். ஸூத்ர‌ப் பிர‌ஸித்தியைக் கொண்டு இங்கே கைமுதிக‌ ந்யாய‌த்தை வைக்கிறார். ந‌ர‌காநுப‌வ‌த்திற்குக் கார‌ண‌மான‌ ய‌ம‌வ‌ஶ்ய‌தை இல்லாம‌லே நாங்க‌ள் ந‌ர‌க‌துல்ய‌மான‌ யாத‌னைக‌ளை உம் பிரிவினால் அனுப‌விக்கிறோம். இதையெல்லாம் உட‌னே நிவ‌ர்த்திக்க‌ வேணும். ஸ்ரீர‌ங்க‌ நாச்சியார், அர‌ங்க‌ம், பூதேவி, அர‌ங்க‌வாஸிக‌ள் எல்லோரும் நாத‌னுட‌ன் கூடியிருக்க‌ வேணும். நாத‌னோரிட‌ம், அர‌ங்க‌மோரிட‌மாக‌ இருக்க‌லாகாது என்கிறார்.  (7)