ஞாயிறு, 10 மே, 2020

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம் நாமம் 62

62.

सम्यक्ज्ञाताङ्ग – पञ्चकः

सम्यक् (= स्वरूपतः प्रमाणत: उपयोगतो हेतुतश्च), ज्ञातं आनुकूल्य-संकल्पादि अङ्गपञ्चकं येन सः सम्यक्- ज्ञाताङ्ग- पञ्चकः । यथोदाहृतं निक्षेपरक्षायां -

'आनुकूल्यमिति प्रोक्तं सर्वभूतानुकूलता'
'तथैव प्रातिकूल्यं च भूतेषु परिवर्जयेत्'
'त्यागो गर्वस्य कार्पण्यं श्रुतशीलादि-जन्मनः ।
'रक्षिष्यत्यनुकूलान्न इति या सुदृढा मतिः ।
स विश्वासो भवेच्छक सर्व-दुष्कृत-नाशनः ।।
'अप्रार्थितो न गोपायेदिति तत्प्रार्थनामतिः ।
गोपायिता भवेत्येवं गोप्तृत्व-वरणं स्मृतम् ।।

एतेषां उपयोगोऽप्युक्त: -

'आनुकूल्येतराभ्यां तु विनिवृत्तिरपायतः ।
कार्पण्येनाप्युपायानां विनिवृत्तिरिहोदिता ।। (i)
रक्षिष्यतीति विश्वासात् अभीष्टोपायकल्पनम् ।।
गोप्तृत्व-वरणं नाम स्वाभिप्राय-निवेदनम् ' इति । (ii)

प्रमाणन्तु -

'आनुकूल्यस्य संकल्पः प्रातिकूल्यस्य वर्जनम् ।
रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्व-वरणं तथा ।
आत्मनिक्षेप-कार्पण्ये षड्विधा शरणागति:'
'न्यासः पञ्चाङ्गसंयुतः
'प्रपत्तिं तां प्रयुञ्जीत स्वाङ्गैः पञ्चभिरावृताम् ‘ इति ।

हेतुस्तु, आनुकूल्यसंकल्प-प्रातिकूल्यवर्जनसंकल्पयोः शास्त्रवशंवदं मनः करणम् । शास्त्रेण ईश्वरो रक्षिष्यतीति अनुभूतस्य अनुष्ठानकाले स्मृतिरूपो विश्वास: संस्कार-सहकृत मन: करणकः । प्रार्थनारूप गोप्तृत्व-वरणस्य प्रबलगुणवत् दर्शन-सहकृतं मनः करणम् । आत्मनिक्षेपस्य चोदना-सहकृतं मनः करणम्। गत्यन्तराभावरूपस्य कार्पण्यस्य योग्यानुपलंभ-सहकृतं मनःकरणमिति । ननु – 'प्रपत्तेः क्वचिदप्येवं परापेक्षा न विद्यते। इति वचनात् प्रपत्तेः अङ्गापेक्षा नास्तीति चेत्, न; आनकल्यादि अङ्गानामपि विहितत्वेन तस्य वचनस्य कर्माद्यपेक्षाभावमात्रपरत्वात् अङ्गमात्रानपेक्षत्वे करणत्वानुपपत्तेः । तदुक्तं -

'न हि तत् करणं लोके वेदे वा किंचिदीदृशम् ।
इति कर्तव्यता साध्यो यस्य नानुग्राहोत्थिते।।'  इति ।

அவதாரிகை மேலிரண்டு திருநாமங்களால் த்வயத்தின் பூர்வகண்டத்தில் சொன்ன அங்கங்களோடு கூடிய ப்ரபத்தியின் ஸ்வரூபாதிகளை நன்றாக உணர்ந்தவரென்கிறது. இதில் முதல் திருநாமத்தால் அங்கங்களைத் தெளிவாக உணர்ந்தவர் என்கிறது.

62. ஸம்யக் ஜ்ஞாதாங்கபஞ்சக:-
       ஸம்யக் = நன்றாக, ஜ்ஞாத = அறியப்பட்ட, அங்கபஞ்சக: = ஐந்து அங்கங்களையுடையவர்.

இப்பிரபத்தியின் ஐந்து அங்கங்களாவன - (i) ஆநுகூல்ய ஸங்கல்பம், (ii) ப்ராதிகூல்ய வர்ஜனம், (iii) கார்ப்பண்யம், (iv) மஹா விச்வாசம், (v) கோப்த்ருத்வ வரணம்.

ஆநுகூல்ய ஸங்கல்பமாவது, பகவானிடத்தில் அல்லது ஸர்வபூதங்களிடத் தில் அநுகூலனாய் வர்த்திக்கக்கடவேன் எனப்படுமது. ப்ராதிகூல்யவர்ஜந மாவது, முன்சொன்ன இரண்டிலும் விரோதமான செய்கையைப் பண்ணக் கடவேனல்லேன் எனப்படுமது. கார்ப்பண்யமாவது, என் கையிலொரு கைமுதலில்லை என்று கொண்டு வேறு உபாயத்திலே நசையற்று அதடியாக வந்ததும், பகவத் க்ருபையை உண்டுபண்ணத் தக்கதுமான கர்வஹாநி என்னப்படுமது. மஹா விச்வாசமாவது, ஈச்வரன் ரக்ஷிப்பன் என்கிற உறுதி. கோப்த்ருத்வ வரணமாவது, நாம் வேண்டாவிடில் ரக்ஷிக்க மாட்டானென்று கொண்டு ரக்ஷிக்கவேணுமென்று வேண்டுகை.

இங்கு சிலர் (i) இவ்வுபாயத்துக்கு அங்கங்கள் வேணுமோ, (i) வேணுமானால், இவ்வுபாயத்துக்கு ஒன்றும் வேண்டாமென்கிறது விரோதி யாதோ, (iii) அது வேறு அங்கங்கள் வேண்டாதென்றபடியென்னில்; வேணுமானாலும் அவச்யமாக வேண்டுவதில்லை, இருந்தாலுமிருக்கலா மென்னில்; (iv) அங்கமில்லாவிடில் அங்கி நிறைவேறாதென்னில்; (v) ஆனால் ஐந்தும் வேணுமோ, சிலது போதாதோ, வரிசைக்ரமமும் வேணுமோ என்றும் - இது முதலிய சங்கைகள் வர, அவைகளை சுருதி, ஸ்மிருதி, ஆசாரங்களைக்கொண்டு ஸ்ரீரஹஸ்யத்ரயஸாராதிகளில் நிவர்த்தி செய்து அங்கங்களையும், அதன் ப்ரயோஜநங்களையும் நன்றாக உணர்ந்து அருளிச் செய்தாரென்றபடி

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம் நாமம் 62

62.

सम्यक्ज्ञाताङ्ग – पञ्चकः

सम्यक् (= स्वरूपतः प्रमाणत: उपयोगतो हेतुतश्च), ज्ञातं आनुकूल्य-संकल्पादि अङ्गपञ्चकं येन सः सम्यक्- ज्ञाताङ्ग- पञ्चकः । यथोदाहृतं निक्षेपरक्षायां -

'आनुकूल्यमिति प्रोक्तं सर्वभूतानुकूलता'
'तथैव प्रातिकूल्यं च भूतेषु परिवर्जयेत्'
'त्यागो गर्वस्य कार्पण्यं श्रुतशीलादि-जन्मनः ।
'रक्षिष्यत्यनुकूलान्न इति या सुदृढा मतिः ।
स विश्वासो भवेच्छक सर्व-दुष्कृत-नाशनः ।।
'अप्रार्थितो न गोपायेदिति तत्प्रार्थनामतिः ।
गोपायिता भवेत्येवं गोप्तृत्व-वरणं स्मृतम् ।।

एतेषां उपयोगोऽप्युक्त: -

'आनुकूल्येतराभ्यां तु विनिवृत्तिरपायतः ।
कार्पण्येनाप्युपायानां विनिवृत्तिरिहोदिता ।। (i)
रक्षिष्यतीति विश्वासात् अभीष्टोपायकल्पनम् ।।
गोप्तृत्व-वरणं नाम स्वाभिप्राय-निवेदनम् ' इति । (ii)

प्रमाणन्तु -

'आनुकूल्यस्य संकल्पः प्रातिकूल्यस्य वर्जनम् ।
रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्व-वरणं तथा ।
आत्मनिक्षेप-कार्पण्ये षड्विधा शरणागति:'
'न्यासः पञ्चाङ्गसंयुतः
'प्रपत्तिं तां प्रयुञ्जीत स्वाङ्गैः पञ्चभिरावृताम् ‘ इति ।

हेतुस्तु, आनुकूल्यसंकल्प-प्रातिकूल्यवर्जनसंकल्पयोः शास्त्रवशंवदं मनः करणम् । शास्त्रेण ईश्वरो रक्षिष्यतीति अनुभूतस्य अनुष्ठानकाले स्मृतिरूपो विश्वास: संस्कार-सहकृत मन: करणकः । प्रार्थनारूप गोप्तृत्व-वरणस्य प्रबलगुणवत् दर्शन-सहकृतं मनः करणम् । आत्मनिक्षेपस्य चोदना-सहकृतं मनः करणम्। गत्यन्तराभावरूपस्य कार्पण्यस्य योग्यानुपलंभ-सहकृतं मनःकरणमिति । ननु – 'प्रपत्तेः क्वचिदप्येवं परापेक्षा न विद्यते। इति वचनात् प्रपत्तेः अङ्गापेक्षा नास्तीति चेत्, न; आनकल्यादि अङ्गानामपि विहितत्वेन तस्य वचनस्य कर्माद्यपेक्षाभावमात्रपरत्वात् अङ्गमात्रानपेक्षत्वे करणत्वानुपपत्तेः । तदुक्तं -

'न हि तत् करणं लोके वेदे वा किंचिदीदृशम् ।
इति कर्तव्यता साध्यो यस्य नानुग्राहोत्थिते।।'  इति ।

அவதாரிகை மேலிரண்டு திருநாமங்களால் த்வயத்தின் பூர்வகண்டத்தில் சொன்ன அங்கங்களோடு கூடிய ப்ரபத்தியின் ஸ்வரூபாதிகளை நன்றாக உணர்ந்தவரென்கிறது. இதில் முதல் திருநாமத்தால் அங்கங்களைத் தெளிவாக உணர்ந்தவர் என்கிறது.

62. ஸம்யக் ஜ்ஞாதாங்கபஞ்சக:-
       ஸம்யக் = நன்றாக, ஜ்ஞாத = அறியப்பட்ட, அங்கபஞ்சக: = ஐந்து அங்கங்களையுடையவர்.

இப்பிரபத்தியின் ஐந்து அங்கங்களாவன - (i) ஆநுகூல்ய ஸங்கல்பம், (ii) ப்ராதிகூல்ய வர்ஜனம், (iii) கார்ப்பண்யம், (iv) மஹா விச்வாசம், (v) கோப்த்ருத்வ வரணம்.

ஆநுகூல்ய ஸங்கல்பமாவது, பகவானிடத்தில் அல்லது ஸர்வபூதங்களிடத் தில் அநுகூலனாய் வர்த்திக்கக்கடவேன் எனப்படுமது. ப்ராதிகூல்யவர்ஜந மாவது, முன்சொன்ன இரண்டிலும் விரோதமான செய்கையைப் பண்ணக் கடவேனல்லேன் எனப்படுமது. கார்ப்பண்யமாவது, என் கையிலொரு கைமுதலில்லை என்று கொண்டு வேறு உபாயத்திலே நசையற்று அதடியாக வந்ததும், பகவத் க்ருபையை உண்டுபண்ணத் தக்கதுமான கர்வஹாநி என்னப்படுமது. மஹா விச்வாசமாவது, ஈச்வரன் ரக்ஷிப்பன் என்கிற உறுதி. கோப்த்ருத்வ வரணமாவது, நாம் வேண்டாவிடில் ரக்ஷிக்க மாட்டானென்று கொண்டு ரக்ஷிக்கவேணுமென்று வேண்டுகை.

இங்கு சிலர் (i) இவ்வுபாயத்துக்கு அங்கங்கள் வேணுமோ, (i) வேணுமானால், இவ்வுபாயத்துக்கு ஒன்றும் வேண்டாமென்கிறது விரோதி யாதோ, (iii) அது வேறு அங்கங்கள் வேண்டாதென்றபடியென்னில்; வேணுமானாலும் அவச்யமாக வேண்டுவதில்லை, இருந்தாலுமிருக்கலா மென்னில்; (iv) அங்கமில்லாவிடில் அங்கி நிறைவேறாதென்னில்; (v) ஆனால் ஐந்தும் வேணுமோ, சிலது போதாதோ, வரிசைக்ரமமும் வேணுமோ என்றும் - இது முதலிய சங்கைகள் வர, அவைகளை சுருதி, ஸ்மிருதி, ஆசாரங்களைக்கொண்டு ஸ்ரீரஹஸ்யத்ரயஸாராதிகளில் நிவர்த்தி செய்து அங்கங்களையும், அதன் ப்ரயோஜநங்களையும் நன்றாக உணர்ந்து அருளிச் செய்தாரென்றபடி

வியாழன், 7 மே, 2020

அமலனாதிபிரான் அனுபவங்கள் பாசுரம் 6

துண்டவெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூழ் அரங்கநகர் மேயவப்பன்
அண்டரண்ட பகிரண்டத்தொருமா நில மெழுமால்வரை முற்றும்
உண்ட கண்டங்கண்டீ ரடியேனை யுய்யக் கொண்டதே.    (6)

துண்டம் -- ஒரு துண்டாயிருக்கிற (கலாமாத்ரமான): வெண் பிறையன் --வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய: துயர்--(பிச்சை எடுத்துத் திரிந்த) பாதகத்தை: தீர்த்த‌வ‌ன் – போக்கினவனும்: அம் சிறைய வண்டு .... அழகிய சிறகையுடைய வண்டுகள்: வாழ் – வாழ்தற்கிடமான பொழில் சூழ் -- சோலைகள் சூழப் பெற்ற: அரங்கம் நகர்—திருவரங்கப் பெரு நகரிலே: மேய .. பொருந்தியிரா நின்ற: அப்பன் .... ஸ்வாமியுமான ஸ்ரீரங்க நாதனுடைய்.: அண்டர் –அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும் அண்டம் ... அண்டங்களையும் ப‌கிர‌ண்டம் –அண்டாவர‌ண‌ங்களையும்: ஒரு மாநிலம் -- ஒப்பற்ற மஹாப்ருதிவியையும்: ஏழுமால் வரை ...... எழு குலபர்வதங்களையும்: முற்றும் -- சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவ‌ற்றை யும்: உண்ட – அமுதுசெய்த‌:கண்டம் கண்டீர் – திருக்கழுத்துக்கிடீர்: அடியேனை -- தாஸனான என்னை: உய்யக் கொண்டது....... உஜ்ஜீவிப்பித்தது.-

துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் :- (1) இங்கே கண்டத்தின் அநுபவம். நீலகண்டருடைய கண்டம் உயர்ந்ததென்பர். ஜ‌நங்களை நாசம், செய்யவந்த கால கோடி விஷத்தைப் பாநம் செய்து உலகத்தைக் காப்பாற்றித் தம் கண்டத்திற்குள் விஷத்தையடக்கியதால் பொன் வர்ணமாயிருந்த கண்டம் நீலமாய்க் கறுத்ததென்பர். அவர் பெருமைக்கும் மேற்பட்ட பெருமையைக் காட்டுகிறார். அவருக்கேற்பட்ட குருபாதகத்தைத் தீர்த்தவரென்கிறார். பாதகம் விஷத்திலும் கொடியவிஷம்.

(2) காலகோடி விஷத்தையுண்டதால் நீலகண்டர் கண்டம் பெருமை பெற்றது. அவர் கண்டத்தையும், அவரையும், உலகத்திலுள்ள ஸகல விஷங்களையும் அண்ட பஹிரண்டத்து ஒருமாநில மெழுமால்வரையும் முற்று முண்டகண்டம் எத்தனை பெருமையுடயதென்று நீரே காண்பீரென்கிறார். 3) விஷத்தால் கண்டம் நீலமாயிற்று. இவர் திருமேனி முழுவதும் ஸ்வபாவ மாகவே நீலம். 'முடிவில்லதோ ரெழில் நீலமேனி ஐயோ ' என்று மேலே பாடுகிறார்.

(4) பாரமாய என்பழவினையறுப்பவர் மட்டுமல்ல. நீல‌கண்டருக்கும் வினைத் துயர் தீர்த்தவரென்கிறார்.

5) அயனைப் படைத்ததோரெழில் என்று உந்தியை வர்ணித்து அயனிலும் பெரியார் என்றார். இங்கு துண்ட வெண்பிறையாரிலும் பெரியாரென்கிறார்.

(6) சந்த்ரன் பகவானுடைய மனத்திலுதித்தவர். பிறையைச் சூடுவதால், பகவானுடைய மனத்தில் உதிக்கும் திருவுள்ளத்தைத் தலையால் தாங்குகிறார் என்றும் த்வநிக்கிறது. தலையில் வெண் சந்த்ரன், அக்நி வர்ணமான செஞ்சடை, கங்கை நீர்ச்சுழல், கண்டம் நீலம், பொன்னார் திருமேனி என்றிப்படிப் பலவர்ணங்கள். பெருமாள். திருமேனி முழுதும் கருமேக வண்ணம், அதிலும் கேசம் மைவண்ணம்.

7) ' பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே, கபாலனன் மோக்கத்துக்கண்டு கொண்மிண்' என்ற திருவாய் மொழியில் பரத்வநிர்ணய ப்ரகரணத்தில் அநுபவம். .

அஞ்சிறையவண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர்மேய அப்பன்:-

(1) அவன் கருமைபோல் அவனைப் பாடும் வண்டுகளும் கரிய; அப்பெருமாள் பாடகரும் பெருமாள் போன்ற வண்ணத்தவர்.

(2) அரங்கநகரில் பாடும் வண்டுகள் வாழ்வண்டுகள்; வாழாட்பட்டு நின்றவை.

(3) மதுகரர் ஸந்யாஸிகள்; திருவடித்தாமரைத் தேனைப் பருகி இன்புறுமவர்; ஞாந கர்மங்களாகிய இரண்டு சிறகுகளை உடையவர். सारंगानां पदाम्बुजम् (ஸாரங்காநாம் பதாம்புஜம்) என்று திருவவடித்தாமரைத் தேனையருந்தி இன்புறுவர் பக்தரென்றார் சுகப்ரஹ்மரிஷி (பாக‌வ‌த‌ம்1,11,26) ' ஸாரங்கம் ' என்று வண்டுக்குப் பெயர் ; ஸார ப்ரஹ்மத்தைப் பாடும் பக்தருக்கும் அப் பெயரென்றார் ஸ்ரீதரஸ்வாமி. 'सारं गायन्तीति सारंगा: ' (ஸாரம் காயந்தீதி ஸாரங்கா

அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை முற்று முண்ட கண்டம் - எழுமால்வரையில் கிரீசர் வஸிக்கும் வெள்ளி மலையும் அடங்கியது. நீலகண்டருடைய கண்டத்தினும் மஹத்தான கண்டம்.

கண்டீர் - நீங்களே பாருங்கள்.

அடியேனைஉய்யக்கொண்டதே- அஹமந்நம் அஹமந்தம் அஹமந்தம்' என்ற படி என்னை அவருண்டு அவருக்கு நான் போக்கியனாகிறேன். - அண்டரண்ட பஹிரண்டங்களை உண்டதிலும் திருப்தியடையாமல், மலைகளை (குல பர்வதங்களை) யுண்டும் திருப்தியடையாமல், அணுவாகிய என்னை ஆசை யுடன் உண்கிறான்; நீங்களே பாருங்கள். உண்ணப்படும் வஸ்து ஜீர்ணமாகி விடும் என்பர். உண்ணப்படும் நான் அதனாலேயே உஜ்ஜீவித்து இன்புறுகிறே னென்னும் விந்தையையும் பாருங்கள். இந்த அற்புதக்காட்சியை நீங்களே கண்கூடாகக் காணுங்கள்.

ப்ரஹ்மஹத்யா என்பது பெரும் பாதகம். ப்ராஹ்மண ஜாதி ஸாமாந்யரின் ஹத்தியையே பாதகமென்பர். ப்ரஹ்மாவின் தலையையே கிள்ளியெறிந்தது பெரும் பாதகம் , குருபாதகம். கிள்ளின கையிலேயே அந்தப் பாதகம் ஒட்டிக்கொண்டது. எந்த அவயவம் பாபம் செய்ததோ அங்கே அது கெட்டி யாய் ஒட்டிக்கொண்டுவிட்டது. இதனால்,ஈச்வரனாயினும் ஒரு பாபம் செய்தால் அது கழற்ற முடியாமல் அவரிடம் ஒட்டிக் கொண்டு அவரையே பாதிக்கும் என்று ருஜுவாகிறது. ஈச்வரன் வலிமையினும் பாபத்தின் வலிமை அதிகம். இந்த உண்மை ஸர்வலோக ஸாக்ஷிகமாக இந்தச் சரித்ரத்தால் விளக்கப் பட்டது. தலையில் பிறை சூடி என்ன? கையில் கபாலம் விடாமல் ஒட்டிக் கொண்டுவிட்டதே! உலகத்திற்கெல்லாம் க்ஷேமம் செய்யும் சங்கரராயினும், ஈச்வரனென்று ஐச்வர்யம் பெற்றவராயினும், பாபம் செய்தால் அது விடாமல் ஒட்டிக்கொள்ளும். ஸர்வேச்வரன் க்ருபையால்தான் அது கழியுமென்று இந்த விருத்தாந்தம் உலகமறியக் காட்டுவது. 'மாநுஷ ஜந்மம் பெற்றும், ஊமையும் செவிடுமில்லாமலிருந்தும், வாயிலிருந்தும், நமோ நாரணாவென்றோவாது

உரைக்கும் உரையிருந்தும், பகவந்நாமத்தைச் செவியுறக் காதிருந்தும், எவன் ஸம்ஸாரத்தைக்கடப்பதற்கு சுலபமான வழிகளைத் தேடுகிறதில்லையோ அவன் ப்ரஹ்மஹத்யைக்காரன்' என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. ப்ரஹ்ம மாசைப் பட்டு ஸம்ஸாரத்தைக் கடப்பதற்கென்று கொடுத்த மநுஷ்ய ஜந்மத்தை வீணாக்குகிறவன் ப்ரஹ்மத்தை பக்னாசமாக்கிக் கொலை செய்தவன் போலாகிறான். எல்லாவித ப்ரஹ்மாக்களையும் அபஹதபாப்மர்களாக்குவது ப்ரஹ்மம். மாத்ஸ்ய வசநத்தை நாயனார் உதாஹரித்தார். 'तत्र नारायणः श्रीमान् मया भिक्षां प्रयाचित: (தத்ர நாராயண : ஸ்ரீமான் மயா பிக்ஷாம் ப்ரயாசித:) என்றார் சங்கரர். முன் பாட்டில் திருவாரமார்பை ஸேவித்ததும், ஸ்ரீமானான நாராயண னுடைய ஸர்வேச்வரத்வத்தையும், எல்லையற்ற கருணையையும் இங்கே பாடுகிறார். கபாலம் ஆயிரம் துண்டமாய் உடைந்தது. வெண்பிறைச் சந்த்ரனுக்கும் ராஜயக்ஷ்மாவான பாபரோகம் போக்கப்பட்டதையும் பிள்ளை உரைத்தார். 'உண்ட கண்டம் अत्ता चराचरग्रहाणात् (அத்தா சராசர க்ரஹாணாத்) என்று ஸூத்ரத்தை நாயனார் உதாஹரித்தார். கண்டம் யாவற்றையும் உண்டு வயிற்றில் சேர்த்தது “ஆதி” என்பதும், கண்டத்திலொட்டுமென்று ரஸம். “ஆதி”, “அத்தா” என்று உபநிஷத் பாஷ்யம்.

திங்கள், 20 ஏப்ரல், 2020

ஸ்ரீ தேசிக அஷ்டோத்ரம் உத்தர பஞ்சாஸத் நாமம் 61

61. चतुश्लोक्यर्थ-सारज्ञः

चतुश्लोक्याः अर्थसारं (=श्रियः उभयविभूतिशेषित्व पुरुषकारत्व पुरुषार्थप्रदत्व उभयेच्छासिद्ध-पारतन्त्र्यरूपं सारार्थं) जानाति इति चतुश्लोक्यर्थसारज्ञः ।

    अत्रायं चतुश्लोकी-भाष्यसङ्ग्रहः । भगवतः सर्वप्रकार-अभिमत-अनुरूपसहधर्म चारिणी विशिष्टतयापि सर्वाधिकत्वं वक्तुं श्रियो विभूतिद्वय-शेषित्वादिकं आह ‘कान्तस्ते' इति प्रथम श्लोके । प्रतिपिपादयिषितानां शेषित्वादीनां स्थापकं समाख्यारूप-प्रमाणं "श्रीरित्येव च नाम ते भगवति' इत्युक्तं भगवत इव श्रियोऽपि पतिदासानां पत्नीदासत्वन्यायेन। 'मकारस्तु तयोर्दासः, 'अस्येशाना जगत' इति श्रुत्या च सिद्धम् । ब्रह्मादि समस्त शेषित्वं त्वद्दासदासीगणः'  इति अनेनोक्तं, ये तु; सत्तादि-विशिष्टो भगवानेव श्रीरिति वा, श्रीरूप नित्यविग्रहान्तर-विशिष्टः स एव अयं इति वा, दैत्य-मोहनभूमिका-परिग्रह-न्यायेन स्वयमेवभोगार्थं परिगृहीत कादाचित्क कान्ताविग्रहः स एव श्रीरिति वा स्वरूपैकदेशः पृथगहन्तया परिगृहीत स्त्रीरूपः श्रीरित्यादयः पक्षाः, तेऽपि, 'ह्रीश्च ते लक्ष्मीश्च पत्न्यौ इति श्रुतिमूलकेन ‘कान्तस्ते' इति व्यधिकरण-निर्देशेन निरवयवत्व-श्रुत्या च निराकृताः। ये पुनः भगवतः सत्ताहन्ता प्रभाव शक्ति विद्येच्छा भोक्तृतादिरूपा श्रीः इति विश्वप्रकृतिरिति च वदन्ति; तेऽपि 'ते' इति युष्मच्छब्देन, 'भगवति' इति संबोधनेन, ‘ते यवनिका' इति व्यधिकरण निर्देशेन, तन्मूलभूत श्रुत्यादिषु चेतन्त्व व्यपदेशेन च निराकृताः ।

द्वितीयेन श्लोकेन निरतिशय माहात्म्य-दया-सौलभ्य-पुरुषकारत्वादि गुणा उपपादिताः । तत्रायं आचार्यैः उक्तस्सङ्ग्रहः,

'अस्ति कहि फलदे पत्यौ कृत्य - द्वयं श्रियः ।
निग्रहाद्वारणं काले सन्धुक्षणमनुग्रहे ।। इति ।

तृतीयेन मोकेन श्रियः सकल पुरुषार्थप्रदत्वादयो गुणा उच्यते । ननु सात्वते, भगवतो मोक्षप्रदत्वं, श्रियः ऐश्वर्य-प्रदत्वं च विभज्य उक्तं; तदत्र संसात्यक्षर-वैष्णवाध्वसु इति । विशेष वचनं प्रशंसामात्रपरं स्यात्; मैवं, तत्र एव

'यामालंब्य सुखेनेमं दुस्तरं हि गुणोदधिम् ।
निस्तरन्त्यचिरेणैव व्यक्त-ध्यानपरायणाः ।।

इति । स्वायम्भुवे 'संसारार्णव तारिणी' इति ब्राह्मपुराणे, लक्ष्मीनामसहस्रे 'सकृतिभाता सर्वार्तिसमुद्र-परिशोषिणी', 'भवभङ्गापहारिणी', 'परनिर्वाणदायिनी', 'ज्योतिष्मत्यमृतावहा' इत्यादि, वैष्णवे 'विमुक्तिफलदायिनी' इत्यादिभिः मोक्षप्रदत्वस्यापि उक्तत्वात् इति ।

तुरीयेन श्लोकेना भगवतः स्वरूप-विग्रह-अवतारेषु अयोगव्यवच्छेदमुखेन तद्वत् सर्वाकार- प्रधान - प्राप्यत्व - विभुत्वादयो गुणा उच्यन्ते ।

(i) अत्र केचिदाहुः - गद्ये श्रियोऽपि, नारशब्दान्तर्गतत्व-उक्तया जीवकोटित्वात् अणुत्वे सिद्धे सर्वगत्वादिगिरः प्रशंसामात्रपरा: मुक्तवत् ज्ञानानन्त्यपरा वेति न विभुत्वसिद्धिः इति ।

(ii) अन्ये तु; अस्या जीवत्वेऽपि विभुत्वं न विरुध्यते । 'एषोऽणुरात्मा' इत्यादि जीवविषयाणुत्व श्रुतेः प्रकरण - सन्निहित - बद्धविषयत्वात्, नित्यानां तु जीवत्व सामान्यात् अवगत-अणुत्वस्य बाधकाभावात् अणुत्वमेव, निर्विकारश्रुत्यनुरोधात् धर्मभूतज्ञानद्वारा मुक्तानन्त्यं, लक्ष्म्यास्तु 'यथा सर्वगतो विष्णुः तथैवेयं द्विजोत्तम', 'सर्वभूत स्थिता द्विज' इत्यादिभिः विभुत्व-अवगमात्, बाधकाभावाच्च विभुत्वे सिद्धे

'व्यापिनी सर्वगेत्याद्यास्सुसूक्ष्मेत्यादयस्तथा ।
श्री समाख्या-मिथो वैरं जह्युः तात्पर्यभेदतः ।।
शक्ति कालवशादस्या विभुत्वाद्युपपादकाः ।
प्रच्छन्न-स्पष्ट-जैनाध्व-निरोधात् अगतीकृताः ।।

इति । एवं च परतन्त्र-चेतनत्वरूप-जीवलक्षणयोगात् जीवान्तर्भाव इति आहुः ।

(iii) अपरे तु – लक्ष्म्याः चेतनत्वात् अचिदन्यत्वं, विभुत्वात् जीवादन्यत्वं, पारतन्त्र्यात् ईश्वरादन्यत्वं, न च सदसद्विलक्षणत्वादिष्विव अत्र विरोधः; द्विधात्म विभाग-वचनेषु अस्या अनुक्ति अविवक्षामात्रात्, वस्तुतः पतिपुत्र-व्यावृत्तपत्नी नयेन लक्ष्याः कोट्यन्तरत्वमेव युक्तं इति आहुः ।

(iv) इतरे तु - अस्तु जीवात् अन्यत्वं, तथापि सेयं ईश्वरकोटिः, विभूतिद्वय - शेषित्वादि - मात्रेण तल्लक्षण सिद्धेः, अत्र सर्वशेषित्वादिकं भगवतः, अस्यास्तु तदितर सर्वशेषित्वादिकं इति विभागः, जगत्कारणत्वादि मात्रेण ब्रह्मलक्षणं तु पतिमात्र गोचरं, 'नर संबन्धिनो नाराः। इति नारान्तः प्रवेशो भगवदिच्छामात्रसिद्ध-पतिपारतन्त्र्याभिप्रायेण इति आहुः ।

(v) वस्तुतस्तु; भवतु विभुत्वं ईश्वरत्वं पारतन्त्र्यं च, तञ्च पारतन्त्र्यं न भगवदिच्छामात्र सिद्धं, अपि तु सर्वभूतेश्वरत्वादि वचन साम्यात् उभयेच्छा सिद्ध सर्वमिति संप्रदाय इति आचार्याः प्राहुः ।

'अन्योन्येच्छा विघातादि निवृत्तौ तत्परत्वतः ।
ऐककण्ठ्यमशेषाणां आगमानां भवत्विति ।।
पञ्चस्वेतेषु पक्षेषु कश्चिदेकः प्रमाणवान् ।
स लक्ष्मीकस्य साम्राज्यं सर्वथा संप्रतिष्ठितम् ।।
इहैवं क्वचिदंशे तु संशयेऽपि विपश्चिताम् ।
उपयुक्तांश वैशद्यात् उपाय-फल-संभवः ।।

उक्तेषु पञ्चसु पक्षेषु अन्तिमः पक्ष एव प्रमाणवान्, पक्षान्तरेषु अपि लक्ष्मीकस्यैव नारायणस्य सांराज्यं सुप्रतिष्ठितं, उक्त रीत्या पञ्चमपक्ष एव प्रमाणवान् इति निर्णयाक्षमाणां अणुत्व-विभुत्व-जीवत्वेश्वरत्वोभय-इच्छासिद्ध-पारतन्त्र्यादौ संशयेऽपि पुरुषकारत्वादि वैशद्यात् उपायानुष्ठानादि संभव इति । अनेन नाम्ना मन्त्ररत्नगत श्रीशब्दार्थाभिज्ञत्वं उक्तम् ।

61. சதுச்ச்லோக்யர்த ஸாரஜ்ஞ: = சதுச்லோகியினுடைய ஸாரார்த்தத்தை அறிந்தவர். சதுச்லோகி என்பது ஸ்ரீ விஷயமாக நான்கு ச்லோகங்களாலே ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்த ஸ்துதி. அதினுடைய தாத்பர்யத்தை அறிந்தவரென்றபடி. அதாவது -

ஸ்ரீ அணுஸ்வரூபை என்றும், எம்பெருமானுக்கு ஜீவர்கள் போலே பரதந்த்ரை என்றும், புருஷகாரமாத்திரம் பண்ணுமவள் என்றும், உபாயத்தில் ஸம்பந்தமில்லை என்றும், மோக்ஷம் தவிர மற்ற புருஷார்த்தங்களைக் கொடுப்பவளென்றும், பகவானுடைய மோஹினீ ரூபம் போலே ஸ்ரீயும் ஒருரூபமே தவிர பகவானைக்காட்டிலும் வேறுபட்டவளன்று என்றும் - இப்படி பலர் பலவகையாக ஸ்ரீயினுடைய ஸ்வரூபாதிகளை குலையாநிற்க;

ஸ்ரீஆளவந்தார் சதுச்லோகியில் - ஸ்ரீயானவள் பகவானைப்போலே வேறு தத்வமே என்றும், விபுஸ்வரூபை என்றும், ரூபபேதமும் குணபேதங்களும் பெருமாளும் பிராட்டியுமாகப் பிரிவினை செய்துகொள்ளப்பட்டவைகள் என்றும், ஸ்ரீக்கு ஸ்த்ரீத்வமும் - பகவத்பாரதந்த்ர்யமும் - புருஷகாரத்வாதிகளும் பெருமாளுக்கு பும்ஸ்த்வம் – கோபித்துக் கொள்ளுதல் - சிக்ஷை செய்தல் முதலானதுகளும் விபாகத்தால் வந்தவைகள் என்று அருளிச்செய்தார் என்று உணர்ந்தவர். இந்த விபாகம் ஒருநாளும் மாறாதபடி நித்யேச்சாஸித்தம். ஸ்ருஷ்டி முதலானதுகள் எம்பெருமானுக்கும், புருஷகாரத்வாதிகள் பிராட்டிக்கும் 1கூறாக விபஜித்த வ்யாபாரங்கள். ஆகையால் எப்பொழுதும் பிரியாதபடி பிராட்டியோடு கூடியே உபாயாதிகள் அனுஷ்டிக்க வேணுமென்னும் சுருதி, ஸ்மிருதி, பகவத்சாஸ்திரம், இதிஹாஸம், புராணம், ஸம்ப்ரதாயங்கள் இதுகளுக்கு இணங்க சதுச் ச்லோகிக்கு பாஷ்யம் அருளிச்செய்தருளினாரென்றபடி.

1  கூறாக விபஜித்த = தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட


சனி, 18 ஏப்ரல், 2020

ஸ்ரீதேசிக‌ அஷ்டோத்ர‌ம் உத்த‌ர‌பாக‌ம் நாமாவ‌ளி 60



60. विभक्ताधिकृति-त्रयः


अधिकृति: (= अधिकारः) विभक्तं प्रपत्ति विशेषाधिकार-त्रयं येन सः
विभक्ताधिकृतित्रयः । मन्त्ररत्न-प्रतिपाद्य - प्रपत्ति - तत्प्रकार - तदुपयोगज्ञान
वैशिष्ट्यं स्वकर्तृक-विशद-प्रपत्तावधिकारः । आनुकूल्यादि अङ्गाङ्गिस्वरूप
सामान्यज्ञानं

'येन केनापि प्रकारेण द्वयवक्ता त्वं',
'पापीयसोऽपि शरणागति-शब्दभाजः',
'शरणवरणवागियं मयोदिता',
'प्रपत्तिवाचैव निरीक्षितुं वृणे',
'शरणमित्यपि वाचं उदैरिरं
इत्यादि प्रमाणसिद्ध-आचार्योपदिष्ट-सामान्यज्ञानपूर्वक-द्वयोच्चारणरूप उक्तत्युपाये
अधिकारः । सामान्य ज्ञानस्य अपि अभावः -
'पुत्त्रः प्रेष्यस्तथा शिष्य इत्येवं च निवेदयेत्”,


पशर्मनुष्यः पक्षी वा ये च वैष्णव-संश्रयाः ।।
तेनैव ते प्रयास्यन्ति तद्विष्णोः परमं पदम् ।।",
न संशयोऽत्र तत्भक्त-परिचर्या-रतात्मनाम् '२,
'तब भरोऽहमकारिषि धार्मिकैः
'त्यय्याचार्यविनिहितभरा:",
'अन्धोऽनन्ध-ग्रहणवशग-
उत्यादि प्रमाण-संप्रदायसिद्ध-आचार्यसंश्रयरूप आचार्यनिष्ठायां अधिकारः ।

उक्तं च शरणागति-दीपिकायां, 'भक्तिः प्रपत्तिरथ वा भगवंस्तदुक्तिः

तन्निष्टसंश्रय इतीव विकल्प्यमानम् । यं कंचिदेकमुपपादयता त्वयैव

त्रातास्तरन्त्यवसरे भविनो भवाब्धिम् ।।'' इति ।

यद्यपि भक्त्यादौ शक्तयभावः एकोऽधिकारः, तत्प्रमितिरहितता द्वितीयः, शास्त्रतः पर्युदासस्तृतीयः, कालक्षेपाक्षमत्वं तुरीयः, तथा भक्त्यादौ शक्त्यभावः प्रमिति-रहितता च पञ्चमः, शास्त्रत: पर्युदासः कालक्षेपाक्षमत्वं च षष्ठः, भक्त्यादौ शक्तयभावः शास्त्रत: पर्युदासश्च सप्तमः, प्रमिति-रहितता कालक्षेपाक्षमत्वं च अष्टमः, भक्तयादौ शक्तयभावः कालक्षेपाक्षमत्वन्तु नवमः, प्रमिति-रहितता शास्त्रतः पर्युदासश्च दशमः, भक्त्यादौ शक्त्यभावः प्रमिति-रहितता शास्त्रतः पर्युदासश्च एकादशः, प्रमितिरहितता शास्त्रतः पर्युदासः कालक्षेपाक्षमत्वञ्च द्वादशः, भक्तयादौ शक्तयभावः शास्त्रतः पर्युदासः कालक्षेपाक्षमत्वन्तु त्रयोदशः, भक्त्यादौ शक्त्यभावः प्रमिति-रहितता कालक्षेपाक्षमत्वन्तु चतुर्दशः, चतुर्णा योगः पञ्चदश इति पञ्चदश प्रपत्यधिकाराः प्रतिपादिताः । तथापि एतेषां प्रपत्ति-सामान्याधिकारत्वात् अत्र प्रपत्तिविशेषाणां मुक्त्यादि रूपाणां अधिकारस्य त्रिधा विभागः कृत इति न विरोध इति ।


விபக்தாதிக்ருதித்ரய:-

விபக்த = பிரிக்கப்பட்ட அதிக்ருதி = அதிகாரத்தினுடைய (இங்கு ப்ரபத்தியின் அதிகாரத்தினுடைய என்றபடி), த்ரய: = மூன்றையுடையவர். ஸ்வநிஷ்டை உக்திநிஷ்டை, ஆசார்ய நிஷ்டை இப்படிப் பிரித்து அருளினவரென்றபடி.

i) இங்கு ஸ்வநிஷ்டாதிகாரிகளாவார் - குருமுகமாக த்வயத்தின் அர்த்தத்தையும், அதின் விசேஷங்களையும் ப்ரபத்தியினுடைய அங்கங்க ளென்ன, அங்கியென்ன, இதுகளுடைய ஸ்வரூபமென்ன, உபயோக மென்ன, இது முதலாக மற்றும் ப்ரபத்திக்கு வேண்டுவனகளையும் நன்றாக உணர்ந்து ப்ரபத்தியை அநுஷ்டிக்குமவர்கள்

(1) உக்திநிஷ்டராவார் - இவ்வர்த்தங்களில் தெளிவில்லாதவராய் அவனை யொழிய போக்கற்று நிற்கிற அதிகாரமும், இரட்சிக்குமென்கிற விச்வாசமு முடையராய், சரண்யனறிய ஆசார்யராலே பூர்ணப்ரபத்தி கர்பமாக உபதிஷ்டவாக்யத்தைச் சொல்லி “என்னுடைய ரக்ஷை உனக்கே பரமாக ஏறிட்டுக்கொள்ளவேணும்' என்றிப்படி அநுஷ்டிக்குமவர்கள். இப்படிப்பட்ட அதிகாரிக்கு இவ்வுக்தி மாத்திரமும் அமையும். இங்கு 'யேந கேநாபி' , 'வாசமுதைரிரம்'  இதுமுதலான ப்ரமாண ஸம்ப்ரதாயங்களை அநுஸந்திப்பது.

(ii) ஆசார்யநிஷ்டராவார் - இப்படி, ஸாமாந்ய ஞானமுமில்லாதவராய்; 'புத்ர ப்ரேஷ்ய ' இது முதலான ப்ரமாண ஸம்ப்ரதாயப்படி ஓர் ஆசார்யனை அடைந்து அவனுடைய ஆத்மாத்மீய பரஸமர்ப்பணத்தில் தாமும் அந்தர்ப்பூதராமவர். இந்த ஆசார்யநிஷ்டை ஞானசூந்யனுக்கு மாத்திரமன்று, ஸர்வக்ஞனுக்கும் இதுவே ச்ரேஷ்டம். இப்படி ஸாரஸாரம் என்கிற ரஹஸ்யத்தில் அருளிச்செய்தார். ஆனால் அக்ஞனுகென்றது - ஸர்வக்ஞனை நீக்கவந்ததன்றோவென்னில், அப்படிக்கில்லை; அக்ஞனுக் குமுண்டென்கைக்காகச் சொன்னபடி

இப்படி அதிகாரிகளுடைய பிரிவை சரணாகதிதீபிகையில் 'பக்தி: ப்ரபத்திரதவா'  என்கிற ச்லோகத்திலும் அருளிச் செய்தார். ஆனால், ப்ரபத்தியோக்யாதிகாரத்தில் அதிகாரிகளை பதினைந்தாகப் பிரித்து இருக்கிறதே என்னில், அது ஸாமாந்யாதிகாரம். இது விசேஷாதிகாரம். இப்படி பேதங்கண்டுகொள்வது