60. विभक्ताधिकृति-त्रयः
अधिकृति: (= अधिकारः) विभक्तं प्रपत्ति विशेषाधिकार-त्रयं येन सः
विभक्ताधिकृतित्रयः । मन्त्ररत्न-प्रतिपाद्य - प्रपत्ति - तत्प्रकार - तदुपयोगज्ञान
वैशिष्ट्यं स्वकर्तृक-विशद-प्रपत्तावधिकारः । आनुकूल्यादि अङ्गाङ्गिस्वरूप
सामान्यज्ञानं
'येन केनापि प्रकारेण द्वयवक्ता त्वं',
'पापीयसोऽपि शरणागति-शब्दभाजः',
'शरणवरणवागियं मयोदिता',
'प्रपत्तिवाचैव निरीक्षितुं वृणे',
'शरणमित्यपि वाचं उदैरिरं
इत्यादि प्रमाणसिद्ध-आचार्योपदिष्ट-सामान्यज्ञानपूर्वक-द्वयोच्चारणरूप उक्तत्युपाये
अधिकारः । सामान्य ज्ञानस्य अपि अभावः -
'पुत्त्रः प्रेष्यस्तथा शिष्य इत्येवं च निवेदयेत्”,
पशर्मनुष्यः पक्षी वा ये च वैष्णव-संश्रयाः ।।
तेनैव ते प्रयास्यन्ति तद्विष्णोः परमं पदम् ।।",
न संशयोऽत्र तत्भक्त-परिचर्या-रतात्मनाम् '२,
'तब भरोऽहमकारिषि धार्मिकैः
'त्यय्याचार्यविनिहितभरा:",
'अन्धोऽनन्ध-ग्रहणवशग-
उत्यादि प्रमाण-संप्रदायसिद्ध-आचार्यसंश्रयरूप आचार्यनिष्ठायां अधिकारः ।
उक्तं च शरणागति-दीपिकायां, 'भक्तिः प्रपत्तिरथ वा भगवंस्तदुक्तिः
तन्निष्टसंश्रय इतीव विकल्प्यमानम् । यं कंचिदेकमुपपादयता त्वयैव
त्रातास्तरन्त्यवसरे भविनो भवाब्धिम् ।।'' इति ।
यद्यपि भक्त्यादौ शक्तयभावः एकोऽधिकारः, तत्प्रमितिरहितता द्वितीयः, शास्त्रतः पर्युदासस्तृतीयः, कालक्षेपाक्षमत्वं तुरीयः, तथा भक्त्यादौ शक्त्यभावः प्रमिति-रहितता च पञ्चमः, शास्त्रत: पर्युदासः कालक्षेपाक्षमत्वं च षष्ठः, भक्त्यादौ शक्तयभावः शास्त्रत: पर्युदासश्च सप्तमः, प्रमिति-रहितता कालक्षेपाक्षमत्वं च अष्टमः, भक्तयादौ शक्तयभावः कालक्षेपाक्षमत्वन्तु नवमः, प्रमिति-रहितता शास्त्रतः पर्युदासश्च दशमः, भक्त्यादौ शक्त्यभावः प्रमिति-रहितता शास्त्रतः पर्युदासश्च एकादशः, प्रमितिरहितता शास्त्रतः पर्युदासः कालक्षेपाक्षमत्वञ्च द्वादशः, भक्तयादौ शक्तयभावः शास्त्रतः पर्युदासः कालक्षेपाक्षमत्वन्तु त्रयोदशः, भक्त्यादौ शक्त्यभावः प्रमिति-रहितता कालक्षेपाक्षमत्वन्तु चतुर्दशः, चतुर्णा योगः पञ्चदश इति पञ्चदश प्रपत्यधिकाराः प्रतिपादिताः । तथापि एतेषां प्रपत्ति-सामान्याधिकारत्वात् अत्र प्रपत्तिविशेषाणां मुक्त्यादि रूपाणां अधिकारस्य त्रिधा विभागः कृत इति न विरोध इति ।
விபக்தாதிக்ருதித்ரய:-
விபக்த = பிரிக்கப்பட்ட அதிக்ருதி = அதிகாரத்தினுடைய (இங்கு ப்ரபத்தியின் அதிகாரத்தினுடைய என்றபடி), த்ரய: = மூன்றையுடையவர். ஸ்வநிஷ்டை உக்திநிஷ்டை, ஆசார்ய நிஷ்டை இப்படிப் பிரித்து அருளினவரென்றபடி.
i) இங்கு ஸ்வநிஷ்டாதிகாரிகளாவார் - குருமுகமாக த்வயத்தின் அர்த்தத்தையும், அதின் விசேஷங்களையும் ப்ரபத்தியினுடைய அங்கங்க ளென்ன, அங்கியென்ன, இதுகளுடைய ஸ்வரூபமென்ன, உபயோக மென்ன, இது முதலாக மற்றும் ப்ரபத்திக்கு வேண்டுவனகளையும் நன்றாக உணர்ந்து ப்ரபத்தியை அநுஷ்டிக்குமவர்கள்
(1) உக்திநிஷ்டராவார் - இவ்வர்த்தங்களில் தெளிவில்லாதவராய் அவனை யொழிய போக்கற்று நிற்கிற அதிகாரமும், இரட்சிக்குமென்கிற விச்வாசமு முடையராய், சரண்யனறிய ஆசார்யராலே பூர்ணப்ரபத்தி கர்பமாக உபதிஷ்டவாக்யத்தைச் சொல்லி “என்னுடைய ரக்ஷை உனக்கே பரமாக ஏறிட்டுக்கொள்ளவேணும்' என்றிப்படி அநுஷ்டிக்குமவர்கள். இப்படிப்பட்ட அதிகாரிக்கு இவ்வுக்தி மாத்திரமும் அமையும். இங்கு 'யேந கேநாபி' , 'வாசமுதைரிரம்' இதுமுதலான ப்ரமாண ஸம்ப்ரதாயங்களை அநுஸந்திப்பது.
(ii) ஆசார்யநிஷ்டராவார் - இப்படி, ஸாமாந்ய ஞானமுமில்லாதவராய்; 'புத்ர ப்ரேஷ்ய ' இது முதலான ப்ரமாண ஸம்ப்ரதாயப்படி ஓர் ஆசார்யனை அடைந்து அவனுடைய ஆத்மாத்மீய பரஸமர்ப்பணத்தில் தாமும் அந்தர்ப்பூதராமவர். இந்த ஆசார்யநிஷ்டை ஞானசூந்யனுக்கு மாத்திரமன்று, ஸர்வக்ஞனுக்கும் இதுவே ச்ரேஷ்டம். இப்படி ஸாரஸாரம் என்கிற ரஹஸ்யத்தில் அருளிச்செய்தார். ஆனால் அக்ஞனுகென்றது - ஸர்வக்ஞனை நீக்கவந்ததன்றோவென்னில், அப்படிக்கில்லை; அக்ஞனுக் குமுண்டென்கைக்காகச் சொன்னபடி
இப்படி அதிகாரிகளுடைய பிரிவை சரணாகதிதீபிகையில் 'பக்தி: ப்ரபத்திரதவா' என்கிற ச்லோகத்திலும் அருளிச் செய்தார். ஆனால், ப்ரபத்தியோக்யாதிகாரத்தில் அதிகாரிகளை பதினைந்தாகப் பிரித்து இருக்கிறதே என்னில், அது ஸாமாந்யாதிகாரம். இது விசேஷாதிகாரம். இப்படி பேதங்கண்டுகொள்வது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக