வெள்ளி, 2 பிப்ரவரி, 2007

தினமும் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்

வர்ணஸ்தோமைர்வகுளஸுமநோவாஸமுத்வஹந்தீம்
ஆம்நாயாநாம் ப்ரக்ருதிமபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்டவந்தம்
பாதே நித்யப்ரணிஹிததியம் பாதுகே ரங்கபர்த்து
த்வந்நாமாநம் முநிமிஹ பஜே த்வாமஹம் ஸ்தோதுகாம:

நம்மாண்டவன் திருவாய்மொழி என்பது தமிழ் வேதம். எப்பொழுதும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியையே நினைத்துக்கொண்டிருந்த நம்மாழ்வார் அந்த வேதத்தைக் கண்டுபிடித்தார். ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகையென்று சொல்லப்படுகிற அவரை இந்த ஸ்தோத்ரம் விக்னமில்லாமல் முடிவதற்காக முதலில் தியானிக்கின்றேன்.

A.லக்ஷ்மிநரசிம்மன் பாதுகையே!உன்னை ஸ்தோத்ரம் பண்ண ஆசையுடைய நான் திருவாய்மொழி ஸாரத்தைக் கண்டவரும், அரங்கனுடைய திருவடிகளிலே எப்போதும் இருப்பவருமான "சடாரி"யை (நம்மாழ்வாருக்கு சடாரி, சடகோபன் என்றும் பெயர்கள்) முதலில் ஸேவிக்கின்றேன்

தினம் ஒரு பாதுகா ஸஹஸ்ரம்

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை
ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம் I
யதுபஞ்சமசேஷத: ப்ருதிவ்யாம்
ப்ரதிதோ ராகவபாதுகாப்ரபாவ: II

ராகவனுடைய பாதுகைகளின் ப்ரபாவம் ப்ரஸித்தமானதற்குக் காரணம் பரதனேயன்றோ! அந்த பரதனை நான் வணங்குகின்றேன்.

நம்மாண்டவன் ஸாதித்தது: ஸ்ரீபரதாழ்வானால்தான் ஸ்ரீராமனுடைய பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிறதென்பது எல்லாவுலகுக்கும் தெரிந்தது. ஆகையால் ஸ்ரீபாதுகைகளிடத்தில் மஹாபக்தரான ஸ்ரீபரதாழ்வாரைத்தான் ஸேவிக்கின்றேன். ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் முதல் அங்கத்தில் 25வது ச்லோகத்தில் அருளிச் செய்தபடி "பரத" என்பது நாதமுனிகளைச் சொல்லுகிறது. அதனால், ஸ்ரீநம்மாழ்வாருடைய பெருமை ஸ்ரீநாதமுனிகளால் தான் உலகத்திற்குத் தெரிந்தது. "பரத" என்பதால் தெரியப்படுத்தப்பட்டதில், பாவ, ராக, தாள என்கிற மூன்று ஸங்கதிகளிலேயும் மஹாபண்டிதரான நாதமுனிகளை ஸேவிக்கின்றேன்.

ஞாயிறு, 21 ஜனவரி, 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் வைபவப் ப்ரகாசிகைக் கீர்த்தனை

தரு – இராகம் – பைரவி – தாளம் --ஆதி.
பல்லவி
எம்பெருமானார் சம்பிரதாயந்தனை
இன்னதென்றுரை செய்வாய்மனனே .
அனுபல்லவி
அம்புவிமீதினி லணிபெரும்பூதுரி
லவதரித்தருளிமா தவனடியிணை கண்ட (எம்)
சரணங்கள்
யாதவப்ரகாசரிடஞ் சாஸ்திரங்கள்படித்தாரே
அறிந்துபெரியநம்பி திருவடியைப்பிடித்தாரே
மேதினிமேலாளவந்தார் சம்பிரதாயந்தடித்தாரே
விதங்களெல்லாமறிந்து மாயிகளையடித்தாரே.
சாதகமாகவே திருக்கோட்டியூர்நம்பி
சந்நிதிதனிற்சென்று காத்துமிகவுநம்பி
நீதிசரமசுலோகந் திருமந்திரம்விளம்பி
நிலைகள்சொல்ல அறிந்து நின்றாரின்னந்திரும்பி (எம்)
திருவரங்கப்பெருமாளரையர் சந்நிதியடுத்தாரே
திருவாய்மொழியையோதித்தோத்ராதிகளையெடுத்தாரே
திருமலையாண்டான் சந்நிதிதன்னிலன்புதொடுத்தாரே
திருவாய்மொழிக்குப்பொருள் விண்டுகவலைவிடுத்தாரே
திருமலைநம்பிசந் நிதியில் இராமாயணம்
தெளிந்துவரவரவே சாந்தமீறவுங்குணம்
திருமலைகோயில்பெரு மாள்கோயினாராயணம்
திவ்யதெசங்களெல்லாந் திருத்தினாரேபூஷணம் (எம்)
திக்குவிசயஞ்செலுத்திச் செயவிருதுமீறினாரே
சிறந்துதான்சரஸ்வதி பீடமதிலேயேறினாரே
மிக்கவேபோதாயநவி ருத்தியைக்கண்டுகூறினாரே
விளங்கும் ஸ்ரீபாஷ்யமதை விரிவுசெய்து தேறினாரே
தக்கசரஸ்வதியுஞ் சிரசில்வகித்துநல்ல
தகுமான கிரந்தமென்ற பாஷியமதுவேசெல்ல
இக்குவலயங்களிற் சகலகலையும்வல்ல
ரிவரேமீண்டுங்கோயி லேறவெழுந்தார்சொல்ல.
இதுவுமது விருத்தம்
கோயிலதிலெழுந்தருளித்தமதுசீடர்
கூரத்தாழ்வான்முதலியாண்டான்கல்வி
ஆயுமறிவேமிகுந்த நடாதூராழ்வா
னருளாளப்பெருமா ளெம்பெருமானாராம்
சே யெனவேஞானபுத்ரராகிவந்த
திருக்குருகைப்பிரான்புள்ளான்கிடாம்பியாச்சான்
ஆயவர்க்குப்பாஷியமுமாழ்வாராய்ந்த
அருங்கலைஇன்ரகசியமுமளித்திட்டாரே.
இதுவுமது விருத்தம்
அதிகபத்தியாயெதிகளேழுநூற்றா
ராலேசஞ் சேவிதராயவனியெல்லாம்
துதிசெய்யவெழுபத்துநாலுபீடந்
துலங்கவதிற்சம்மதராயிருந்துஞான
நிதியென்றேபரமவைதிக ரநேகர்
நிலைகொண்டுதுதித்திடவேயரங்கமீதி
லெதிசார்வபூமரெனவனுசந்திக்க
இருந்திட்டார்தரிசனமும்புரிந்திட்டாரே.


அடுத்த கீர்த்தனை “தரிசனபரம்பரைகளின்னந்
தெரியச்சொல்கிறேன்”

ஞாயிறு, 7 ஜனவரி, 2007

தினம் ஒரு பாதுகாஸஹஸ்ரம்

 

ஸந்த: ஸ்ரீரங்கப்ருத்வீச்சரணத்ராணசேகரா: I
ஜயந்தி புவனத்ராணபதபங்கஜரேணவ: II

ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளைக் காப்பாற்றும் 
பாதுகைகளைச் சிரஸில் வைத்துக்கொள்ளும் 
பெரியோர்களின் திருவடித்துகள் எல்லா 
உலகையும் காப்பாற்றும். 

வெள்ளி, 5 ஜனவரி, 2007