ஞாயிறு, 30 நவம்பர், 2008

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவ பிரகாசிகை கீர்த்தனைகள்

தரு இராகம் உசேனி தாளம் ஆதி
பல்லவி
மங்களாசாசனமும் ரங்கநாயகர்க்கேசெய்
யுங்கண்டாகிருதிவாதிசிங்கரே.
அனுபல்லவி
பொங்குகாவிரிநடுப் பங்கசாசனன்தொழு
மங்கனாமணியாம்ஸ்ரீ ரங்கநாயகியுடன். (மங்க)
சரணங்கள்
ஆர்த்திநீர்ப்பெருமாளையுஞ் சேர்த்தியிலெழுந்தருளச்
சேர்த்தகோபணாரியன்றன் கீர்த்தியேவளர்கவென்று (மங்க)
ஆனியாநீலமென்றுந் தானந்தக்கோபணாரிய
னானவன்மீதுசுலோகம் மானுபாவர்சொன்னாரே, (மங்க)
தினவரிசையோடாரா தனவரிசையுச்சவக்
கனவரிசையுந்தான்னிய தனவரிசையும்மிஞ்ச (மங்க)
பாங்குகோயிற்றிருமலை யாங்குளபெருமாள்கோயி
லோங்குநாராயணமுதற் றீங்குவராதபடிக்கு (மங்க)
வகையாம்பாஷியஞ்சுருதப்பிரகா சிகைமுதலாங்கிரந்தங்களைச்
சகமதிற்பிரவர்த்திசெய்ததே சிகன்திருவுள்ளமகிழ்ந்து (மங்க)
அண்டர்நாயகனேயென்றுங் கொண்டல்மேனியனேயென்றும்
மண்டலமெங்குங்கொண்டாடுந் தொண்டர்களுடனேகூடி (மங்க)
விருத்தம்
சீரிலங்குமுபயகாவேரிரங்கர்
திருவடிக்கேயுபயகவிசிறந்துநாளும்
பேரிலங்குமுபயவேதாந்தாசார்யார்
ப்ரபலராம்வாதிசிங்கரெனவேவந்த
காரிலங்குமேனிவேங்கடேசனென்னுங்
கண்டாவதாரரிவர்தேவிகூடப்
பாரில்வந்துதிவ்யதம்பதிசங்கற்பம்
பலிக்கின்றார்கீர்த்திகொண்டுசொலிக்கின்றாரே.
தரு இராகம் மோகனம் தாளம் ஆதி
பல்லவி
வேங்கடநாதார்யரிருந்தாரே -- தென்னரங்கத்தில்
வேங்கடநாதார்யரிருந்தாரே.
அனுபல்லவி
பாங்காவரங்கப் பதிமிகவிளங்கப்
பரிந்துதரிசனப் ப்ரவர்த்தகமிலங்க (வேங்க)
சரணங்கள்
தெரிசனர்கூடித் திருவடிநாடி
ஸ்ரீவைட்ணவர்கோனே தேவரீரெனத்தானே (வேங்க)
வருகவிவாதி வணங்கிடவோதி
மண்டலமெங்குங்கீர்த்தி வஹித்ததேசிகமூர்த்தி (வேங்க)
அதிகாரப்பட்ட மவரிடுஞ்சட்டம்
ஆரும்பூசித்துப்போற்ற அநந்தகவியுமேத்த (வேங்க)
தெம்பதிவிரதர் செல்வரும்வரதர்
சீஷரெல்லாரும்வேண்டத் தெரிசனத்தையேயாண்ட (வேங்க)
விருத்தம்
கவிவாதிசிங்கர்தாந்திவ்ய
கண்டாவதாரரிவரரங்கங்கந் தன்னிற்
செவையாகத்தரிசனத்தைநடத்திவந்தார்
தெளிந்தவிவர்பின்வரதநைனார்தாமும்
புவியெங்கும்வாதியரைவென்றடக்கிப்
பொருந்தியவித்தரிசனத்தைவாண்டாரித்தைச்
செவிகொள்வோர்வேண்டியதைப்பெற்றுவாழ்வார்
சித்தந்தானென்பதும்ப்ரசித்தந்தானே.
ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேசிகாய நம:
ஸ்ரீவேதாந்ததேசிகவைபவப்பிரகாசிகைக்கீர்த்தனை
முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக