இராகம் - கேதாரகவுளம் -தாளம் - சம்பை
கண்ணிகள்
1. சருவதந்திரசுவதந்திரர்திரு - வரங்கமதிற்றரிசனமே
தழைக்கவளர்நாளதனி னேரே
உரிமைகொண்டுமிவர்தந் திருவடியில்விசேஷக்கியரெல்லா
முண்மையாகவந்தாசிரயித்தாரே.
2. அவர்களிற்பேரருளாள --ரெனுமொருவர்குணசீல
ரதிகமேதாவியதினாலே
குவலயதிற்கீர்த்திபெறு - மெதிராசார்க்கந்தரங்கர்
கூரத்தாழ்வானவரைப்போலே
3. பரிந்திவர்க்குமந்தரங்கர் -- பேரருளாளருமாகிப்
பஞ்சசமுஸ்காரமுதல் வாய்ந்த
விரிந்துபயவேதாந்த - சகலசாஸ்திரங்களையு
மிகவுமதிகரித்ததில்வேதாந்த
4. பூர்ணராயிருக்கையினால் -- பிரமதந்திரசுதந்திரரென்று
புகழ்ந்துதிருப்பேருங் கொடுத்தாரே
காரணப்பேர்கொண்டவர்நல் -- விரத்தியாற்சன்னியசித்துக்
கார்த்திருக்கவந்து தொடுத்தாரே
5. பிரமதந்திரசுவதந்திரசீயர் -- பிரபாகரசீயரெனும்
பிரபலராம்வெண்ணெய்க்கூத்த சீயர்
தரணிதனிலெங்கும்புகழ் -- வீசும்பூரிராமாநு
சாசாரியராகிவந்த தூயர்
6. ஒப்பிதஞ்செய்திவர்கண்முத -- லானோர்க்கும்ஸ்ரீபாஷ்ய
முடையவர்பிரபந்தங்களி னீதி
அப்புள்ளார்தமக்குமுன்சொல் -- திருக்குருகைப்பிரான்புள்ளா
னாராயிரப்படியு மோதி
7. மற்றுமின்னஞ்சாரார்த்த -- சதுஷ்டயமும்ரகசியார்த்த
வரிசைகளெல்லாமருளிச் செய்தே
தத்துவடீகைமுதலான -- சமஸ்கிருதங்களும்ரகஸ்ய
சாலங்கள்செய்ததுமப் போதே
8. தானிதெல்லாமிங்கிவர்க -- ளானசிஷியர்களுக்கேபிர
சாதித்திருக்கிறநாளி லங்கே
ஞானபத்தியுடனேவை -- ராக்கியசம்பத்தையுமாசா
ரவிருத்திகளையுங்கண்டு மிங்கே
9. நடக்குமிவர்பாஷ்யகார -- ரவதாரமென்றிவர்சன்
னிதிகண்டேபத்திகொண்ட வாயர்
வடக்குத்திருவீதிப்பிள்ளை -- யென்னுமவர்தந்திருகு
மாரராம்பிள்ளைலோகா சார்யர்
10. உண்மையாம்ஸ்ரீபாஷ்யந் -- தேசிகனையாசிரயித்து
உபதேசமாகவுங் கொண்டாரே
வண்மையாமெதிராசர் -- பிரபந்தமேகாலக்ஷேப
மாயிருக்கயாவருங் கண்டாரே
11. பிரபலமாய்முப்பத்தொரு -- பாஷ்யம்வேதாந்தகுரு
பிரசாத்திதருளின வராமே
வருதிரும்சத் துவாரஞ்சிரா -- விதசாரீகபாஷ்யவகையை
யருளினவரிவர் தாமே.
தரிசனத்தார் அசூயை கொள்ளல்.
கட்டளைக்கலித்துறை
கவிவாதிசிங்கமென வேதிருவரங்கத்திலிருந்
துவியாக்கியானம்பயில்கின்றநாளிலசூயையினாற்
செவையாகமுன்வந்தழைத்தார்கள்வாதிற்றெரிசனத்தா
ரிவர்தாம்பொறுமையிற்பூமியென்றேசொல்லுமெங்கணுமே.
தரு -இராகம் - மாஞ்சி - தாளம் -- சாப்பு
பல்லவி
பொறுமைக்குள்நிகமாந்ததேசிகனே-- இந்தப்
பூமண்டலத்திலெங்கும் --பூசிகனே.
அனுபல்லவி
வறுமைதவிர்க்குங்கச்சிவரதரேகுலதெய்வ
முறுதியென்றுபணிந்து உலகம்புகழவந்தார்.
சரணங்கள்
வாதத்துக்கழைத்தார்கள் தரிசனத்தர் -- பாக
வதபசாரமிதென்றே தெரிமனத்தர்
ஆதலால்வாராதுகண்டசாமர்த்யரிவரென்று
பாதரக்ஷைவாசற்படிமுன்கட்டக்கண்டாரே. (பொ)
ஞானத்தைப்பிடிப்பார்கள் சிலபேர்கள் - கர்ம
நடத்தைகைப்பிடிப்பார்கள் சிலபேர்கள்
ஆனத்தினாலேநாங்களரிதாசர்பாதுகையைத்
தானத்தைச்சிரமேல்வைத்தானந்தம்பெற்றோமென்றார் (பொ)
அவர்களெல்லாருமிவர் மகிமைகண்டார் - வந்து
அபசாரக்ஷாபணங்கள்செய்துகொண்டார்
அவதாரபுருஷர்வேதாந்தாசாரியரென்று
இவரேவைராக்கியநிதியிவரேகலியாணகுணர் (பொ)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக