புதன், 7 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 3

॥द्वैतसिद्धान्तप्रकरणम्॥

த்வைத-ஸித்தாந்த-ப்ரகரணம்.


இந்த ஸித்தாந்த-ப்ரவர்த்தகர்

ஸ்ரீ ஆநந்த-தீர்த்தர்.

श्रीमन्मध्वमते हरिः परतरः सत्यं जगत्तत्वतो

भिन्ना जीवगणा हरेरनुचरा नीचोच्चभावं गताः ।

मुक्तिर्नैजसुखानुभूतिरमला भक्तिश्च तत्साधनं

ह्यक्षादित्रितयं प्रमाणमखिलाम्नायैकवेद्यो हरिः ।।


ஸ்ரீமந்- மத்வ - மதே ஹரி: பரதர: ஸத்யம் ஜகத் தத்வதோ

பிந்நா ஜீவகணா ஹரோநுசரா நீசோச்சபாவம் கதா: |

முக்திர் - நைஜ-ஸுகாநுபூதி: அமலா பக்திச்ச தத் –– ஸாதனம்

ஹ்யக்ஷாதி - த்ரிதயம் ப்ரமாணமகில- ஆம்நாயைகவேத்யோ ஹரி: II


இந்த சலோகத்தின் தாத்பர்யத்தை விவரிக்கிறோம். ஸ்ரீ மஹாவிஷ்ணு எல்லாவற்றைக் காட்டிலும் மேற்பட்டவன். இவனிடத்தில் எல்லா குணங்களும் நிறைந்திருக்கின்றன; அஜ்ஞானம் முதலிய ஒருவித தோஷமும் கிடையாது. ஆகையால் இவனுக்கு ஸர்வோத்தமத்வம் ஏற்பட்டிருக்கிறது. இவன் தான் ஜகதீச்வரன்; இவன்தான் பர-ப்ரஹ்மம். இவன் ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி முதலான எட்டுக் காரியங்களைச் செய்கிறான். அவையாவன-ஸ்ருஷ்டி, ஸ்திதி, ம்ஹாரம், நியமனம், ஞானம், பந்தம், மோக்ஷம், இவன் ஸர்வஜ்ன், ஜகத்திலுள்ள ஸர்வ பதார்த்தங்களைச் சொல்ஓம் சப்தங்களால் மஹாயோக-வ்ருத்தியைக் கொண்டு அவனே சொல்லப்படுகிறான். மஹாயோக-வருத்தியாவது-சப்தத்தின் பூர்ணமான அவயவ-சக்தி-விசேஷம்.


    இவனுக்கு அப்ராக்ருதமாய் நித்யமான ஒரு சரீரமுண்டு. இந்த சரீரத்தில் பாதம் முதல் தலை யளவான ஸர்வாவயவங்களும் ஞானாநந்தாத்மகமாயிருக்கிறது. 'இதில் கண், காது முதலான எல்லா இந்திரியங்களும் நித்யமாயுண்டு, ஒவ்வொரு இந்திரியமும் தனித்தனியே ரூபம் ரஸம் முதலிய எல்லாவற்றையும் க்ரஹிக்க ஸாமர்த்தியமுள்ளது. இந்த விக்ரஹமும், இதன் அவயவங்களும் இவன் ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவை யன்று. இவன் ஒருவன் தான் 'ஸர்வத்திலும் ஸ்வதந்த்ரன்.


    இவன் வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்றும், மத்ஸ்யம், கூர்மம் முதலானதும், கேசவன் முதலானதுமான அநேக ரூபங்களுள்ளவன். எல்லா ரூபங்களும் ஞான-ஆநந்தாதி-குணங்களால் நிறைந்தவைகள். அளவிடமுடியாதவைகள். இவனிடத்தி லிருக்கும் ஞான-ஆநந்தாதி குணங்கள், க்ரியைகள், ரூபரஸாதிகள் எல்லாம் 'ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவையன்று.


இவனுக்கு லக்ஷ்மி என்று ஒரு பத்னியுண்டு. இவள் பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவள். இவனொருவனுக்கு மாத்ரம் ஆதீனப்பட்டவள். இவனைக் காட்டிலும் ஞான-ஆநந்தாதிகளால் குறைந்தவள். இவள் தான் பகவானுக்கு அடுத்தவள். ஜீவாத்மாக்களெல்லாம் இவளுக்குத் தாழ்ந்தவர்கள். பரமாத்மாவுக்குப் போலவே இவளுக்கும் ஞான-ஆனந்த-ரூபமாய் அப்ராக்ருதமான சரீரமுண்டு. அநேக ரூபங்களுமுண்டு. அஜ்ஞானாதி தோஷங்கள் கிடையாது. இவளும் பரமாத்மாவைப் போலவே மஹா-யோக வ்ருத்தியால் எல்லா-சப்தங்களாலும் சொல்லப்படுகிறாள். இவளும் ஸர்வதேசத்திலும் வ்யாபித்திருக்கிறாள்.


இவர்களிருவர்தான் நித்ய-முக்தர். ஜீவாத்மாக்களில் நித்ய-முக்தர் கிடையாது; எல்லோருமே ஸம்ஸாரத்திலிருந்து முக்தி அடைகிறவர்கள். இந்த ச்லோகத்தில் "ஹரி:" *பரதர: (परः – உயர்ந்தவன். परतरः –– அதற்கும் உயர்ந்தவன்) என்கிற வித்தால் எல்லா ஜீவர்களைக் காட்டிலும் லக்ஷ்மி மேற்பட்டவள் என்றும் இவளைக் காட்டிலும் விஷ்ணு மேற்பட்டவன் என்றும் ஸூசிப்பிக்கப் படுகிறது. சராசர ரூபமான ஸ்கல ப்ரபஞ்சமும் உண்மையாயுள்ளது; அஸத்யமன்று. ஜீவாத்மாக்கள் பரமாத்மாவைக்காட்டிலும் ஒருவருக்கொருவரும் வேறுபட்டவர் கள். இவர்கள் ஸ்த்ரீ-ஜாதி, பும்.ஜாதி என்று இருவகைப்பட்டவர்கள். புருஷ ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஸம்ஸார-தசையில் கர்மத்தால் ஸ்த்ரீ-சரீரத்தை யடைந்தாலும் மோக்ஷத்தில் புருஷ-ஜாதீயராகவே இருப்பார்கள்.. ஸ்த்ரீ-ஜாதியர் ஸம்ஸார-தசையிலும் மோக்ஷ-தசை யிலும் ஸ்த்ரீ-ஜாதியராகவே இருப்பார்கள்.


    இஜ்ஜீவர்கள் முக்தியோக்யர், நித்யஸம்ஸாரிகள், தமோயோக்யர் என்று மூன்று வகைப் பட்டிருப்பார்கள். இவர்களில் முக்தியோக்யர் தேவ-கணம், ரிஷி கணம், பித்ரு -கணம், சக்ரவர்த்தி-கணம், மனுஷ்யோத்தமகணம் என்று ஐந்து வகையினர். அந்தந்த கணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த ஸ்தானத்தை அடைய யோக்யதை யுண்டு. ப்ரஹ்மா, வாயு முதலானவர் தேவ- கணங்கள் ; நாரதர் முதலியவர் ரிஷி-கணங்கள்; சிராதிகள் பித்ரு-கணங்கள்; ரகு அம்பரீஷன் முதலியோர் சக்ரவர்த்தி-கணங்கள்.

(தொடரும்) 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக