புதன், 7 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 2

॥श्रिः॥ 

श्रिनिवासपरब्रह्मणे नमः 

॥श्रिसिद्धान्तत्रयसंग्रहः॥  

 आत्मीयनित्यनिरवद्य नितान्तहृद्य-
     विद्योतमानवपुरुत्थमहः प्ररोहै । 
मेघङ्करं वृषगिरेः शिखरं वितन्वन् 
    देवो दयाजलनिधिर्दिशतु श्रियं नः ॥ 

ஆத்மீய நித்ய நிரவத்ய நிதாந்த ஹ்ருத்ய 
    வித்யோதமான வபுருத்த மஹ: ப்ரரோஹை: 
மேகங்கரம் வ்ருஷகிரே: சிகரம் விதந்வந் 
    தேவோ தயா ஜலநிதிர் திசது ஸ்ரீயம் ந: 

 

இதன் அர்த்தம் -

     தன்னுடையதாய், எப்பொழுதும் தோஷலேசமில்லாததாய், மிகவும் அழகானதாய், விசேஷித்துப் ப்ரகாசித்துக்கொண்டிருக்கும் திருமேனியி னின்றும் உண்டாகியிருக்கிற காந்தியின் முளைக்குறுத்துகளால் திருமலை யினுடைய சிகரத்தை, மேகத்தை உண்டாக்குவதாகச் செய்துகொண்டிருக்கிற வனாயும், கருணைக்கடலாயுமிருக்கிற ஶ்ரீநிவாஸன் நமக்கு ஞானஸம்பத்தை கொடுப்பானாக. 

 தாத்பர்யம்:- அனுபவிக்க அநுபவிக்க திருப்தியில்லாதபடி மேல் மேல் அநுபவத்தில் ஆசையையுண்டாக்கும் அழகையுடைய, நீர் கொண்ட மேகம் போன்ற தம்முடைய திருமேனி காந்திகளால் திருமலையின் சிகரத்தை மேகத்தால் வ்யாபிக்கப்பட்டது போல் செய்து கொண்டிருக்கும் ஸ்ரீநிவாஸன் நமக்கு ஜ்ஞான ஸம்பத்தைக் கொடுப்பானாக. லோகோஜ்ஜீவனார்த்தமாக ஸர்வேச்வரன் ப்ரவர்த்திப்பித்த உபநிஷத்துக்களின் ஸித்தாந்தமாக அவ்வோ வாதிகள் நிர்ணயித்த ஸித்தாந்தங்கள் பல உண்டு. அவைகளில் த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று சொல்லப்படுகிற இம்மூன்று ஸித்தாந்தங்களின் ஸ்வரூபம் இங்கு ஸங்க்ரஹமாக நிரூபிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக