வினா 132.- யக்ஷன் கேட்ட சில கேள்விகளும் அதற்குத் தர்மபுத்திரர் கொடுத்த விடைகளும் எவை?
யக்ஷன்:- எதனால் ஒருவன் படித்தவனாகிறான்?
தர்மபுத்திரர்:- வேதங்களைப் படித்தலால்.
யக்ஷன்:- எதனால் ஒருவன் மேன்மையை அடைகிறான்?
தர்மபுத்திரர்:- ஸந்நியாஸத்தால்.
யக்ஷன்:- எதனால் ஒருவன் புத்திமானாகிறான்?
தர்மபுத்திரர்:- பெரியோருக்குப் பணிவிடை செய்தலால்.
யக்ஷன்:- பிராமணர்களுக்கு என்ன கெட்டகுணம் இருக்கும்?
தர்மபுத்திரர்:- பரநிந்தை.
யக்ஷன்:- வாயுவைவிட வேகமானது எது?
தர்மபுத்திரர்:- மனஸ்.
யக்ஷன்:- இறப்பவர்களுக்குத் தகுந்த ஸ்நேகிதர் யார்?
தர்மபுத்திரர்:- அவர்கள் செய்த தர்மமே.
யக்ஷன்:- மதங்களின் முடிவான பயன் என்ன?
தர்மபுத்திரர்:- மனோ விசாலம்.
யக்ஷன்:- கீர்த்தியைத் தாங்கி நிற்பவை எவை?
தர்மபுத்திரர்:- தானமும் தர்மமும்.
யக்ஷன்:- ஸுகம் எதனால் உண்டாகும்?
தர்மபுத்திரர்:- நன்னடக்கையால்.
யக்ஷன்:- சிரேஷ்டமான தனம் யாது?
தர்மபுத்திரர்:- அறிவு.
யக்ஷன்:- சிரேஷ்டமான ஸுகம் யாது ?
தர்மபுத்திரர்:- கிடைத்தவரையில் திருப்தி அடைவதே.
யக்ஷன்:- சிறந்த தர்மம் எது?
தர்மபுத்திரர்:- அஹிம்ஸை.
யக்ஷன்:- ஸுகம் கொடுக்கும் நிரோதம் யாது?
தர்மபுத்திரர்:- மனோ நிரோதம்.
யக்ஷன்:- ஒருநாளும் நீங்காத ஸங்கம் யாது?
தர்மபுத்திரர்:- ஸத்ஸங்கம்.
யக்ஷன்:- எதை விட்டால் நம்மை எல்லாரும் விரும்புவார்கள்?
தர்மபுத்திரர்:- கர்வத்தை.
யக்ஷன்:- எதை விட்டால் துக்க நிவர்த்தி?
தர்மபுத்திரர்:- கோபத்தை.
யக்ஷன்:- எதை விட்டால் ஒருவன் தனவானாவான்?
தர்மபுத்திரர்:- ஆசையை.
யக்ஷன்:- எதை விட்டால் ஸுகமுண்டு?
தர்மபுத்திரர்:- பணத்தாசையை.
யக்ஷன்:- எதனால் ஸ்நேகிதர்கள் விரோதிகளாவார்கள்?
தர்மபுத்திரர்:- பணத்தாசையால்.
யக்ஷன்:- ஒருவன் எதன்படி நடக்கவேண்டும்?
தர்மபுத்திரர்:- சிஷ்டாசாரப்படி.
யக்ஷன்:- ஸந்யாஸத்தின் லக்ஷணம் என்ன?
தர்மபுத்திரர்:- ஸ்வதர்மாசரணம்.
யக்ஷன்:- மனோநிரோதத்தின் லக்ஷணம் என்ன?
தர்மபுத்திரர்:- அகக்கரண புரக்கரணத் தண்டம்.
யக்ஷன்:- தித்க்ஷையின் லக்ஷணம் என்ன?
தர்மபுத்திரர்:- விரோதிகளிடத்திலும் துவேஷமின்மை.
யக்ஷன்:- வெட்கத்தின் லக்ஷணமென்ன?
தர்மபுத்திரர்:- கெட்டகாரியத்தை மறுபடியும் செய்யாமை.
யக்ஷன்:- அறிவு என்றால் என்ன?
தர்மபுத்திரர்:- பரம்பொருளை அறிதல்.
யக்ஷன்:- சாந்தம் என்றால் என்ன?
தர்மபுத்திரர்:- சித்த ஸமாதானம்.
யக்ஷன்:- தயை என்றால் என்ன?
தர்மபுத்திரர்:- பிராணிகளுக்கு நன்மை செய்ய எண்ணுதல்.
யக்ஷன்:- கபடமற்றதென்றால் என்ன?
தர்மபுத்திரர்:- மனம் சலியாதிருத்தல்.
யக்ஷன்:- ஜயிக்க முடியாத விரோதி யார்?
தர்மபுத்திரர்:- கோபம்.
யக்ஷன்:- ஸ்திரமான வியாதி எது
தர்மபுத்திரர்:- பிறர் பொருளை விரும்பல்.
யக்ஷன்:- யார் நேர்மையானவர்கள்? யார் திருடர்கள்!
தர்மபுத்திரர்:- முறையே, பூத தயை உடையோர்; பிராணிகளை வருத்துவோர்.
யக்ஷன்:- அஞ்ஞானமென்றால் என்ன?
தர்மபுத்திரர்:- சாஸ்திர ஞானமின்மை.
யக்ஷன்:- சோம்பல் என்றால் என்ன?
தர்மபுத்திரர்:- சாஸ்திரவிஷயத்தில் மனம் செல்லாமை.
யக்ஷன்:- துக்கம் என்றால் என்ன?
தர்மபுத்திரர்:- அஞ்ஞானம்.
யக்ஷன்:- பொறுமை என்றால் என்ன?
தர்மபுத்திரர்:- காமக்ரோதாதிகளை அடக்கல்.
யக்ஷன்:- உண்மையான கர்மானுஷ்டானம் எது?
தர்மபுத்திரர்:- சித்தசுத்தி,
யக்ஷன்:- பிறப்பு, படிப்பு, நன்னடக்கை, வேதாத்தியயனம் இவைகளுள் எது பிராம்மணனுக்கு முக்கியமானது?
தர்மபுத்திரர்:- நன்னடக்கை.
யக்ஷன்:- எது ஆச்சரியகரமானது?
தர்மபுத்திரர்:- உலகில் ஒவ்வொருநாளும் ஜனங்கள் இறந்துபோய்க்கொண்டே இருக்கிறார்கள். உயிரோடிருக்கிறவர் இதைப்பார்த்துக் கொண்டிருந்தும் தாம் மாத்திரம் இறவாது இருக்கவேண்டும் என்றும் எண்ணுகிறார்கள். இதுதான் மிகவும் ஆச்சரியமானது.
யக்ஷன்:- எது மோக்ஷத்திற்கு வழி?
தர்மபுத்திரர்:- வேதங்கள் பலவாறாய் இருக்கின்றன. தர்க்கத்தால் பயனில்லை. ரிஷிகளது அபிப்பிராயங்கள் பேதப்பட்டிருக்கின்றன. மதவிஷய உண்மைகளோ இரகஸியமாக இருக்கின்றன. ஆகையால் சிஷ்டாசாரமே மோக்ஷமார்க்கம்.
யக்ஷன்:- எது விசேஷமான சங்கதி?
தர்மபுத்திரர்:- அக்ஞானாந்தகாரம் நிறைந்த உலகமாகிய கொப்பரையில், ஸூர்யன் என்கிற நெருப்பை இராப்பகலாகிய விறகுகளால் மூட்டி, மாஸங்கள், ருதுக்களாம் கரண்டிகளால், காலன் என்ற சமயற்காரன் பிராணிகளைச் சமைத்துக்கொண்டே இருக்கிறான். இதுதான் விசேஷமான ஸங்கதி.
வினா 133- இவ்வாறு தர்மபுத்திரர் யக்ஷனது கேள்விகளுக்.கெல்லாம் பதில் சொன்னதும், யக்ஷன் என்ன செய்தான்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக