வெள்ளி, 13 மார்ச், 2020

ஶ்ரீதேசிக அஷ்டோத்ரம்–உத்தர பஞ்சாசத் திருநாமம் 58 &59

அவதாரிகை

                  மேல்18 திருநாமங்களால் ப்ரபத்தி ஸ்வரூபத்தை விளக்காநின்று கொண்டும் , ஒன்று முதல் மேன்மேலாக அநந்தமென்னுமளவாக எண்களை ஸூசிப்பியா நின்று கொண்டும் சொல்லப்படுகிறது.

58. ज्ञातैक-सारः

ज्ञात: एकसारः (= मुख्यसारः) येन सः ज्ञातैकसारः । 'भजेत् सारत

इत्युक्त सारतम रहस्यत्रयवेदी इत्यर्थः । अत्रेकत्वाविवक्षायां अपि तद्वाचक

शक्तियोगात संख्यावाचक-पदवत्वं इति अविरोधः । एवं सप्ततन्तु-स्थल

इत्यादौ द्रष्टव्यम् ।

58. ஜ்ஞாதைகஸார: -- ஜ்ஞாத -- அறியப்பட்ட, ஏக -- முக்கியமான, ஸார: -- தேர்ந்த பதப் பொருளை உடையவர்.

வேதவிருத்தம் அஸாரமென்றும், வேதத்திலும் இம்மைப் பயனைக் கூறுமிடம் அற்பஸாரமென்றும், அங்கும் மறுமைப் பயனைக் கூறுமிடம் சிலருக்கு ஸாரமென்றும், ஆத்மமாத்ராநுபவமாகிற கைவல்யத்தைக் கூறுமிடம் ஸாரதரமென்றும், பரமாத்மப்ராப்தியைச் சொல்லுமிடம் ஸாரதமமென்றும், அவ்வம்சத்திலும் ப்ரதாந ப்ரதிதந்த்ரமாக தத்வஹித ஸங்கிரஹமான ரஹஸ்யத்ரயமே மிகவும் ஸாரதமமென்றும், இப்படி இவைகளின் ஸாரா ஸாரங்களை அறிந்து 'அஸாரம் அல்பஸாரம் ச'  என்கிற ச்லோகத்தாலே அருளிச்செய்தாரென்றபடி.

59. द्वय-वित्

सारतम-रहस्यत्रयान्तर्भूत द्वयाख्य मन्त्ररत्नं सर्वानिष्टनिवर्तनक्षमत्वेन

सर्वाभीष्टप्रदत्वेन च सर्वदा वर्तनीयं वेत्ति इति द्वयवित् । 'न द्वय-वचनतः

क्षेमकरण', 'सकलं कालं द्वयेन क्षिपन्'(122) इति हि उक्तम् ।।

59. த்வயவித் = த்வயத்தை அறிந்தவர். த்வயம் என்பது ஓர் ரஹஸ்யம். உபாயத்தையும், உபேயத்தையும் அடைவே ப்ரகாசிப்பிக்கையாலே த்வயமென்று பேர்பெற்றது. இது திருமந்திரம், சரமச்லோகம் என்ற ரஹஸ்யங்களின் நடுவே பேசப்பட்டது. எல்லா அநிஷ்டங்களையும் போக்குமது; இஷ்டங்களெல்லாவற்றையும் கொடுக்குமது. உபாயத்துக் காக ஒருதரம் சொன்னால் போதுமானது. பிறகு போக்யமாக எப்பொழுதும் சொல்லலாமானது. ரஹஸ்ய த்ரயத்திலும் ஸாரமானது. இப்படிகளால் இதன் மஹிமையை நன்றாக உணர்ந்தவரென்றபடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக