மேல் ஐந்து திருநாமங்களாலே स्वमतस्थापकत्वம் சொல்லப்படுகிறது.
संरक्षितागम:
காப்பாத்தப்பட்ட ஆகமத்தை உடையவர்.
ஆகமம் என்பது ஶைவாகமம் என்றும் வைஷ்ணவாகமமென்றும் இரண்டு. அதில் இங்கு வைஷ்ணவ
ஆகமமான ஸ்ரீபாஞ்சராத்ரத்தைச் சொன்னபடி. அதுக்கு என்ன தீங்கு வந்து அதைக்
காப்பாற்றினா ரென்னில், --- வைதிகன் தந்த்ரத்தில் சொன்னவைகளை அனுஷ்டானம் பண்ணக்
கூடாது என்று ஆக்ஷேபம் வந்தது. அதற்கு சமாதானம் பண்ணினார். எங்ஙனே
யென்னில், வேதவிருத்தமான அர்த்தத்தைச் சொல்லுகிற தந்த்ரம் கூடாதுதான், பாஞ்ச
ராத்ரம் அப்படி வேதவிருத்தமன்று என்றுமவைகளை பரமதபங்கத்தில் भगवच्छास्त्र विरोधभङ्गाधिकारத்திலும் ஸ்ரீபாஞ்சராத்ரரக்ஷையிலும்
, ஸச்சரித்ரரக்ஷையிலும் இச் சாஸ்த்ரம் வேதத்துக்கு அவிருத்தமான அனுஷ்டானத்தை
ப்ரதிபாதிக்கிறதென்றும், சிலவிடங்களில் அனுஷ்டான விரோதஞ்சொன்னதுவும் संहितान्तर प्रविष्ट விஷய மென்னும் ஸ்ம்ருதிகார ஸம்மதமாகையாலும், மஹாபாரதத்தில் பஹுஸ்தலங்களிலே
கொண்டாடப்பட்டிருப்பதாலும்,, ப்ரம்ம ஸூத்ரத்தில் விசேஷித்திருப்பதாலும்,
வேறு தந்த்ரங்களைப்போலே சிலவிடங்களில்தான் ப்ரமாணமின்றிக்கே எல்லா சாஸ்த்ரமும்
ப்ரமாணமென்று ஸ்தாபித்தாரென்றபடி..
संखचक्र
धारण रक्षिता:
தப்தசங்கசக்ரதாரணத்தை ரக்ஷித்தவர். அதுக்கு என்ன ஆக்ஷேபம் வந்து
பரிஹரித்தாரென்னில்:-- வைதிகப்ராம்மண சரீரத்தில் புண்ணுண்டாக்கக்கூடாதென்று
சுருதி ஸம்ருதிகளு சொல்லுகிறபடியால் தப்தமுத்ரை கூடாதென்று பூர்வபக்ஷம்.
புண்ணுண்டாக்கக் கூடாதென்றது வீணாகப் பண்ணிக்கொள்ளுகிற வ்ரணத்தைச் சொன்னபடி.
இந்த தப்தமுத்ரா தாரணம் பண்ணிக்கொள்ளும்படி ஆதர்வண மஹோபநிஷத்தில் ப்ரம்மஸூத்ரத்தில்
விதியிருப்பதாலும், செய்துகொள்ளாவிடில் தோஷம் சொல்லியிருப்பதாலும் இப்படி
சாண்டில்ய ஸ்ம்ருதி, மஹாபாரத, ஹரிவம்ச, ஸ்ரீவிஷ்ணுபுராண, பாகவதம் முதலிய
புராணங்கள் கோஷியாநின்றனவென்று ஸ்தாபித்தாரென்றபடி..
ऊर्ध्वपुण्ट्रांकनत्राता
ஊர்த்வபுண்ட்ரதாரணம்
பண்ணக்கூடாதென்று சோத்யம் வர, அது பஸ்மோர்த்வ புண்ட்ரதாரண விஷயம்
என்றும், சைவாகமத்தில் ப்ரவிஷ்டனுக்கு நிஷேத விஷயம் என்றும் வ்யவஸ்தை பண்ணப்பட்டது.
ஊர்த்வ புண்ட்ரதாரணம் பண்ணிக்கொள்ள வேணுமென்று யஜுஸ்ஸில் கடசாகையிலும்,
ஆதர்வணத்திலும், போதாயன வாக்கியத்திலும், நாரதீயத்திலும் விதிக்கப்பட்டது.
विभूतिயால் குறுக்காக த்ரிபுண்ட்ர தாரணம் ப்ராம்மண விஷயமன்று. வைஷ்ணவனல்லாத
சூத்ர விஷயம். ஊர்த்வ புண்ட்ரம் வெளுப்பு மண்ணினாலே தரிக்கவேணும்.
அதுவும் 𑌸𑍍सच्छिद्रமாய் ஹரிபாதாகாரமாய் தரிக்கவேணும். வேறு த்ரவ்யங்கூடாது. நடுவில் ஹரித்ராசூர்ண
யுக்தமாய் இருக்கவேணும் என்று ஸ்தாபித்தாரென்றபடி. .
सुद्धसत्वमयाकृतिः
சுத்த ஸத்வப்ரகாரமான
திருமேனியுடையவர். பகவந்நிவேதிதஸாத்விகா ஹாரம் முதலானதுகளாலே சுத்தஸத்வமய
சரீரரென்னுமாம். பகவந்நிவேதித்ததையே புஜிக்கவேணும். அது பாவனதமம். வேறு
தேவதைகளுக்கு நிவேதிதமானது நிர்மால்லியம். அது புஜிக்கக்கூடாது. புஜித்தால்
பாவம் வரும் என்கிறவைகள், பகவச்சாஸ்த்ரம், ஸித்தாந்தாசார பத்ததி, மஹோபநிஷத்
முதலியவைகளிலே விதிக்கப்பட்டதென்று ஸச்சரித்ரரக்ஷையில் அருளிச் செய்தார்.
যত্যাচারপ্রতিষ্ঠাতা
யதிகளுடைய ஆசாரத்தை ஸ்தாபித்தவர்.
யதிகள் நால்வர். குடீசகர், பஹூதகர், ஹம்ஸர், பரமஹம்ஸரென்று. இவர்களுள்
குடீசகர் பஹூதகர்களுக்கு வர்ணாச்ரம தர்மம் வேணும், ஹம்ஸனுக்கும், பரமஹம்ஸனுக்கும்
வேண்டுவதில்லை. இவர்கள் शिखायज्ञोपवीत वस्त्रादिகளாய் সর্ৱত্রভিক্ষাচারিகளாய்
இருப்பார்கள். இவ்விருவரில் ज्न्नानापेक्षी, तद्रहितरॆऩ्ऱुতரென்று பேதமுண்டு. ज्न्नानापेक्षि யாகில் வஸ்த்ராதிகளையும் ஏகதண்டத்தையும்
தரித்து குருகுலம் போய் ब्रह्मज्न्नान वेदांतश्रவணம் பண்ணுபவன். ज्न्नानापेक्षिக்கு ஒன்றும் வேண்டுவதில்லை. त्यादि चोद्यं வந்தது. அதுக்குத்தரம், பரமஹம்ஸ லக்ஷணமதன்று, शिखोपवीतत्रिदण्डकमण्डलु काषायधारिகளாய் वेदान्त विषय कालक्षेपपराযণராய், नियतभैक्षனாயிருக்குமதென்று सोपपत्तिकமாய் सप्रमाণ மாய் சததூஷணியிலே ஸ்தாபித்தாரென்றபடி.
सर्वत्ंत्रस्वतंत्रधीः
उक्तानुक्तங்களான व्याकरणज्योतिषगौतमीयायुर्वेदादिகளான ஸர்வ தந்த்ரங்களிலும் निरंकुशமான
புத்தியையுடையவர். “ सर्वेषु तंत्रेषु --- शिद्धांतेषु – न्याय वैशेशिक पूर्वोत्तर मीमांसासांख्ययोगशैववैष्णवातिषु, स्वतंत्रस्य == स्वेच्छयाहंचिदर्थं स्थापयितुं दूषयितुम्वाशक्तस्य” என்று
அப்பய்ய தீக்ஷிதராலே யாதவாப்யுதய வ்யாக்யானத்தில் அர்த்தம் பண்ணப்பட்ட
படியாகவுமாம். இத்திருநாமம் பரபக்ஷநிராகரண ஸ்வபக்ஷ ஸ்தாபகங் களினாலே
ப்ரீதையான ஸ்ரீரங்கநாச்சியாராலே அருளப்பட்டது. இவ் வர்த்தத்தை
“सर्वतंत्र संकटप्रशमन विशङ्गटमतिः”என்று ஸங்கல்ப
ஸூர்யோதயத்தில் தாமே அருளிச் செய்தார். “तद्वल्लभा कृपासंप्राप्त सर्वतंत्र स्वतन्त्र ताबिरुद” என்று गद्यத்திலும் ஸப்ததிரத்னமாலிகையிலும் ப்ரபஞ்சித்தார்கள்.
இப்படி ஐம்பது திருநாமங்களை அருளிச் செய்து பூர்வ பஞ்சாசத்தை நிகமித்து
ग्रन्धपाटच्चराग्रहणार्थं स्वकर्तृகமென்றருளிச்
செய்கிறார். (इतिश्रीशैलेत्यादिயால்). श्रीशैले என்றது ஸ்ரீசைலபூர்ணரென்ற படி. नामैकदेशेनामग्रहणं, அல்லது
அவருக்கே ஸ்ரீசைலரென்று திருநாம மாகவுமாம். ஆகவித்தால் பெரிய திருமலை நம்பியைச்
சொன்னபடி. அவருடைய (कुल)வம்சத்துக்கு, (तिलकः) அலங்காரபூதரென்றபடி.
सर्वभूषणभूषिதமானாலும் முகம்
திலகத்தாலே சோபிக்குமன்றோ! (चतुर्वेद चतक्रतु) நான்கு
வேதத்தையுமோதி நூறு யாகங்களையும் பண்ணி அத்தால் अन्वर्थமான திருநாமத்தையுடைய (ताताचार्य)திருமலை நம்பிக்கு திருவேங்கடமுடையானால் அளிக்கப்பட்டும், तद्वंश्यர் களுக்கே அஸாதாரணமுமான தாத என்கிற ஆசார்யருக்கு (नन्दन) अन्वर्थமாக आनन्दिப்பியா நின்றுள்ள புத்திரனாயும், ஸ்ரீபாஷ்யகார ருடைய ஸித்தாந்தத்தை
நிலைநிறுத்தினராகவும், सर्वतंत्र स्वतंत्रரான வேதாந்த
தேசிகனுக்கு दासानुदासனும், வேங்கடாசார்ய ரென்று
அப்பெயரையே உடையவனுமான (आचार्य) குருபூதனான வருடைய (कृतिषु) அருளிச் செயல்களில்
(आचार्यगुणदर्शे) आचार्य – தேசிகனுடைய, गुणशान्त्याद्यगुণங்களென்ன, कांत्यादिशरीरगुণங்க ளென்ன , இதுகளுக்கு आदर्शे = கண்ணாடிபோல் நன்றாக ப்ரகாசமான கிரந்தத்தில் (पूर्व पञ्चाशत्) முன் ஐம்பது
திருநாமங்களைச் சொல்லும் பாகம் ஸம்பூர்ணம்.
உத்தர பாகம் இருக்கிறது.
அதைக் கூடிய விரைவில் பகிர்வேன்.