திங்கள், 30 டிசம்பர், 2019

ஸ்ரீ தேசிக‌ அஷ்டோத்ர‌ம்


सप्तभंगी विलोपनः
ஜைனர் ஸப்தபங்கீயென்று ஏற்பாடு செய்கிறார்கள். அதை லோபனம் பண்ணினவர். ஸப்தபங்கியாவது :-- स्यादस्ति, स्यान्नास्ति, स्यादस्तिच नास्तिच, स्यादवक्तव्यं, स्यादस्तिचावक्तव्यं, स्यान्नास्तिचावक्तव्यं, स्यादस्तिनास्तिचावक्तव्यं  இப்படி ஏழுவிதம். த்வயங்களுக்கும் பர்யாயங்களுக்கும் பேதாபேதங் கொண்டு, இருப்பதாகவேணும், இல்லாததாகவேணும், இருப்பதாகவும் இல்லாததாகவுமாக வேணும், சொல்லத்தக்கதன்று, உண்டென்று சொல்லத்தக்கதன்று, இல்லையென்று சொல்லத்தக்கதன்று, உண்டில்லையென்று சொல்லத்தக்கதன்று என்று இப்படிச் சொல்லுவார்கள். ஹிம்ஸை செய்யக்கூடாதென்பார்கள். தலைமயிர் பறிப்பதே தபஸ்ஸென் பார்கள். பூமி விழுந்து கொண்டே இருக்குமென்பார்கள். இதுகளுக்கு யுக்திகளையும் சில சொல்லுவார்கள். இவை அனுபபந்நமென்கிறார். இதில் முதலில் சொன்னவைந்து பங்கியையும் மாத்யமிகனிசைந்து மற்றவையை தூஷித்தான். ஆகையாலவர்களே பரஸ்பரம் தூஷித்துக் கொள்ளுகையால் நாம் சொல்லவேண்டுவதொன்றும் இல்லை. ஏழுபங்கி கட்டினதுபோல் ஸத்கோடி, அஸத்கோடி, ஸதஸத்கோடி, என்றிப்படியும் மூன்று கோடி சேர்த்து பத்து கோடி கட்டலாம். இதெல்லாம் யுக்தியாபாஸங்கள். ஒன்றுக்கொன்று விருத்தமாகையால் அநுபாதேயங்கள். அஹிம்சை பரமதர்மமென்கிறவர் கள் அந்யமத தூஷணம் பண்ணுவது கூடாது. வேதனை செய்யக்கூடாது. அவர்கள் தலைமயிர் பறிப்பதாலுண்டான வேதனையை ஸஹிப்பதும் விருத்தம். பூமி விழுந்துகொண்டேயிருந்தால், ஒரு உலோஷ்டத்தை உயரவெறிந்தால் அது பூமியில் விழாமலிருக்க வேணும். கனமான வஸ்து வேகமாய் விழுமன்றோ! லோஷ்டம் இலகு வானதன்றோ. ஆகையால் அதுவும் அஸங்கதம். இப்படி இம்மதத்தை நிரஸித்தார் என்றபடி. இவ்விடத்தி லுள்ள விசேஷங்களை பரமதபங்கத்தில் மாத்யமிக‌வாத கண்டனத்திலும், ஜைன வாத கண்டனத்திலும் ஸ்ரீபாஷ்யத்திலுங் கண்டு கொள்வது.
            இப்படி ஜைனமத நிரஸனத்தைச் சொல்லி, பாஸ்கரமத நிரஸனம் பண்ணினதைச் சொல்லுகிறார்.
भेदाभेद मतच्छेत्ता
          ஜீவனுக்கும் ப்ரம்மத்துக்கும் அல்லது உபாதிக்கும் ப்ரம்மத்திற்கும் பேதமுண்டு என்றும், அபேதமுண்டென்றுஞ் சொல்லுவார்கள். எங்ஙனே என்னில் “ப்ரம்மத்தையறிந்தவன் ப்ரம்மமாகவாகிறான்” என்று அபேதத்தையும், “அறிந்தவனொருவன், அறியாதவனொருவ னென்கையால் பேதத்தையும் சுருதிகள் சொல்லுகின்றனவென்று சொல்லுவார்கள். இது ஸர்வசுருதிகளுக்கும் ஐககண்ட்யம் பண்ணத் தெரியாமை யால் வந்த சோத்யம், ப்ரம்மமாகவே ஆகிறானென்பதற்கு ப்ரம்மத்துக்கொப்பானவனாக ஆகிறான் என்று அர்த்தம். இவ்வர்த்தத்துக்கு श्रुतिस्मृति भगवत् गीता ब्रह्मसूत्रादि களுமநுகுணங்கள் அபேதந்தோற்றினவிடங்களை பேத சுருதிக்கு விரோதமில்லாமல் அர்த்தம் கண்டு கொள்வது. ராமஸுக்ரீவர்களுக்கு ஐக்கியம்போலே. இப்படிச் சொல்லாவிடில் ஜீவகத தோஷங்களும், உபாதிகத தோஷங்களும் ப்ரஹ்மத்திலேறும். இப்படிகளால் நிரஸித்தாரென்றபடி. அன்றிக்கே, குணகுணிகளுக்கு பேதாபேதஞ்சொல்லுகிற ஆனந்ததீர்த்தீய மதத்தைச் சொன்னதாகவுமாம்.
धूतयादव कल्पनः
         ந்மாத்திர ப்ரம்மமே போக்தாவாகவும், போக்யமாகவும், நியந்தாவாக வும் பரிணமிக்கிறது யாதவமத கல்பனம். அதை நிரஸித்தவர். ப்ரம்மத்துக்கு விகாரஞ் சொல்லில் நிர்விகாரத்தைச் சொல்லுகிற சுருதிகள் பாதிக்குமென்று முதலானதுகளாலே கண்டித்தவரென்றபடி.
अनीशवाद दंभोळि
          நிரீச்வரவாதிகளான கபந்தமீமாம்ஸகர்களுக்கு இடி போல்வர். உலகில் மீமாம்ஸா சாஸ்த்ரம் கர்ம மீமாம்ஸையென்றும், ப்ரம்ம மீமாம்ஸையென்றும் இரண்டுள்ளது. இவற்றில் கர்ம மீமாம்ஸை யாகாதிகளை விதிக்கிறது. ப்ரம்ம மீமாம்ஸை ப்ரம்மோபாஸனத்தை விதிக்கிறது. இரண்டுமே சாஸ்த்ரமாயிருக்க இரண்டுக்கும் ஒரே அர்த்தஞ்சொல்லாமல் வெவ்வேறாக அர்த்தஞ்சொல்லுமவர்கள் மீமாம்ஸகர்கள். கர்மகாண்டமாகிறவுடலைத் தள்ளி ப்ரம்மகாண்டமாகிற சிரஸ்ஸை க்ரஹிக்குமவர்கள் ராஹுமீமாம்ஸகர்கள். ப்ரம்மகாண்டத்தைத் தள்ளி கர்மகாண்டத்தை க்ரஹிக்குமவர்கள் கபந்த மீமாம்ஸகர்கள். இவர்கள் ஈச்வரனில்லை கர்மமே பலப்ரதமென்பர்கள். அது ஸகல சுருதிவிருத்தமாகையாலே அஸங்கதமென்று ப்ரமாணபூர்வகமாக நிரஸித்தாரென்றபடி. இவற்றின் விரிவுகளை பரமதபங்கத்தில் நிரீச்வர மீமாம்ஸக நிராகரணாதிகாரத்திலும், சததூஷணீ முதலானதுகளிலேயுங் கண்டு கொள்வது.
 पाषाण्डमत खण्डनः
            பாஷாண்டறாகிறார் காபாலிகர், காளாமுகர், சைவர், பாசுபதர் முதலானவர்கள், அவர்கள் மதம் சிவனே எல்லாவற்றிற்கும் மேலானவர், அவரே உபாஸ்யர், அவரே பலப்ரதர், இப்படி சுருதிகள் சொல்லுகிறதென்று சொல்லி, சிவனுடைய உபாஸனத்துக்காகக் கபாலம் முதலானதுகளைத் தரித்துக் கொண்டுமிருப்பவர்கள். அவைகள் ப்ரம்மமூலங்கள். எங்ஙனேயென் னில் :-- அசுரமோஹனத்துக்காக மோஹன சாஸ்த்ரத்தைப் பண்ணு என்று புருஷோத்தமனாலே ஏவப்பட்டவரான சிவனாலே சொல்லப்பட்டமையால் அதுகளை ஸாதுக்கள் க்ரஹிக்கக் கூடாது. இவ்விஷயத்தில் சொல்லவேண்டு மவைகள் கீழே “பரதேவதா பாரமார்த்யவித்” என்கிற திருநாமவிளக்கத்தில் சொல்லப்பட்டன. பரமதபங்கம் முதலானதுகளிலும் கண்டுகொள்வது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக