வியாழன், 11 அக்டோபர், 2018

இராமாய‌ண‌ த‌ருமம்

4.

ஸ்ரீம‌த் ராமாய‌ண‌த்தில்
வ‌ர்ணிக்க‌ப்ப‌ட்டிருக்கும்
த‌ரும‌ங்க‌ள்

முத‌லாவ‌து குரு சிஷ்ய‌ த‌ருமம்.

1. குரு சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

த‌ப‌:ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம் த‌ப‌ஸ்வீ வாக்விதாம் வ‌ர‌ம்|
நார‌த‌ம் ப‌ரிபப்ர‌ச்ச‌ வால்மீகி முநிபுங்க‌வ‌ம்||" (வா.ரா. பா.கா. ச‌ரு 1 சுலோ 1)

த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும், முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

இது இராமாய‌ண‌த்தின் முத‌ல் சுலோக‌ம். இத‌னால் குரு சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.
எவ்வித‌மெனில் –

ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்


(1) த‌போநிர‌த‌ம் :-- த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும். ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
"வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌
மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி
னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு" (திருக்குற‌ள்)
என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:-- வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால் நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :-- உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும், வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனிபுங்க‌வ‌ம்:-- முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும், ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:-- நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும், நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால், மூன்றுலோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம். ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும், வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும், ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப் ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும் எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

"குஶ‌ப்த‌ஸ்த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பிதீய‌தே||”

கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால் ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.”

என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்


1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும், ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும், ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு" (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து, உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும், ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.” என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாதுஸேவீ ஸ‌முசித‌ச‌ரித‌ஸ் தத்வ‌போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ்த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணிப‌த‌ந‌ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌கால‌ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோதாந்தோ ந‌ஸூயுஸ்ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌ப‌ரீக்ஷாங் க்ருத‌வித‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌                                                                                                              
ந‌ற்புத்தியுட‌ன் ஸாதுஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில் அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும், சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌திய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்" என்ப‌து நோக்க‌த்த‌க்க‌து.

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளிவ‌ந்ததினால் வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு "ப்ராசேத‌ஸ‌ர்" (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக