சனி, 24 டிசம்பர், 2016

கோதா ஸ்துதி

 

கோதா ஸ்துதி

ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.

த‌மிழாக்க‌ம்
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)

சுலோக‌ம் 6

சோணாத‌ரேZபி குச‌யோர‌பி துங்க‌ப‌த்ரா
வாசாம் ப்ர‌வாஹ‌விப‌வேZபி ஸ‌ர‌ஸ்வ‌தி த்வ‌ம்|
அப்ராக்ருதைர‌பி ர‌ஸைர் விர‌ஜாஸ் ஸ்வ‌பாவாத்
கோதாபி தேவி க‌மிதுர் நநு ந‌ர்ம‌தாஸி|| .6.

சுத்த‌வித‌ழ்ச் சோணையினாற் றொய்யிற் ற‌ன‌த்துங்க‌
ப‌த்திரையாய் வாணிநிறை பாணியாய் -- முத்தி
விர‌சையாய்க் கோதையாய் விண்டுவுக்கே யானாய்
ச‌ர‌ச‌முறு ந‌ர்ம‌தையாய்ச் சார்ந்து. .6.

ப‌த‌வுரை

த்வ‌ம் -- நீ, அத‌ரே -- திருவ‌த‌ர‌த்தில், ஶோணா அபி -- சோணாநதியாக‌வும், (சோணையாயிருந்தாலும்), (சோணாநதியோ), குச‌யோ -- ஸ்த‌ன‌ங்க‌ளில், துங்க‌ப‌த்ரா அபி -- துங்க‌ப‌த்ரா நதியாக‌வும், (துங்க‌ப‌த்ரையாயிருந்தாலும்), (துங்க‌ப‌த்ரா நதியோ) வாசாம் பிர‌வாஹ‌விப‌வே -- வாக்குக‌ள் ப்ர‌வ‌ஹித்து ஓடி வ‌ரும் பெருமையில், ஸ‌ர‌ஸ்வ‌தி அபி -- ஸ‌ர‌ஸ்வ‌தியாக‌வும், (ஸ‌ர‌ஸ்வ‌தியாயிருந்தாலும்), (ஸ‌ர‌ஸ்வ‌தியோ), அப்ராக்ருதை: ர‌ஸை: -- ப்ர‌க்ருதி ஸ‌ம்ப‌ந்த‌மே யில்லாத‌ திவ்ய‌ர‌ஸ‌ங்க‌ளால், விர‌ஜா அபி -- விர‌ஜாநதியாக‌வும், (விர‌ஜையாயிருந்தாலும்),(விர‌ஜா நதியோ), ஸ்வ‌ப‌வாத் -- உன் த‌ன்மையால், (உன் ஸ்வ‌பாவ‌த்தாலே), கோதா அபி -- கோதாவ‌ரியாக‌வும், (கோதாவ‌ரியாயிருந்தாலும்), (கோதாவ‌ரியோ), தேவி -- திவ்ய‌ம‌ஹிஷியே, (விளையாடும் த‌ன்மை உடைய‌வ‌ளே), கமிது: -- ஆசைப்படும் நாயகனுக்கு, நநு நர்மதா அஸி -- நீ நர்மதை தானம்மா. நீ நர்மதையோ, நர்ம பரிஹாஸப் பேச்சுக்களைப் பேசி ரமிப்பிக்கிறாய்.

(1) பாசுரங்களைப் பாடும் உன் திருப்பவழத்தைப் பார்க்கையில் (சிவப்பினால்) நீ சோணா நதியோ என்றும், பாடுங்கால் உயர்ந்ததும் ஜகன்மங்களமுமான ஸ்தனங்களைக் கொண்டு துங்கபத்ரா நதியோ என்றும், உன் வாக்குகளின் ப்ரவாஹப் பெருமையைப் பார்த்தால், நீ ஸரஸ்வதியோ என்றும், ப்ரக்ருதி ஸம்பந்தமேயில்லாத திவ்யரஸங்களால் நீ விரஜையோ என்றும், உன்னுடைய ஸ்வந்தத்தன்மையாலே கோதாவரியோ என்றும் உல்லேஹிக்கப்படுகிறாய். உன்னுடைய காந்தனுக்கோ என்றால் நிச்சயமாய் நீ (மனதை ஹரிக்கும் நர்மஹாவசனங்களைக் கொடுப்பதால்) நர்மதா நதியாகவே இருக்கிறாய்.

(2) அல்லது, திருப்பவழத்தில் சோணையாயிருந்தாலும், தனங்களில் துங்கபத்ரையாயிருந்தாலும், வாக்ப்ரவாஹ மஹிமையில் ஸரஸ்வதியாக இருந்தாலும், அப்ராக்ரத ரஸங்களாலே விரஜையாயிருந்தாலும், ஸ்வயமாக நீ கோதை (கோதாவரியாக) இருந்தாலும், உன் காந்தனுக்கு நீ நர்மதைதான்.

(3) அல்லது, ஓரோர் காரணத்தால் சோணையாகவும், துங்கபத்ரையாயும், ஸரஸ்வதியாயும், விரஜையாயும், கோதாவரியாயும் இருக்கும் நீ உன் காந்தனுக்கு நர்மதையாகவே இருக்கிறாய். எல்லாப் புண்ய நதிகளின் சுத்தியும், மஹிமையும் உன் ஸரஸ்வதி வெள்ளத்தில் சேர்ந்துளது.

அவதாரிகை

(1) என் வாக்கை ஸரஸ்வதி என்றீர், நான் வாக்தேவியாகேனோ? என்னை ஸரஸ்வதியாக வர்ணித்து என்னை உபாஸிக்கவேண்டாவோ? அம்மா, நீ ஸரஸ்வதிதான். 'ஸரஸ்வதீ த்வம்'

(2) நதிகள் ப்ராயேண ப்ராசீமுகமாகப் போகும். என் ஸரஸ்வதியும் அப்படித்தானோ? ப்ரத்யக்முகமாக (ஆத்மா என்னும் ப்ரத்யக் வஸ்துவைக் குறித்ததாய் அத்யாத்மமாய்) இருக்குமோ? அம்மா, உன் வாக்குகள் சோணாநதி, அது மேற்கு முகமாக ஓடும் நதி. உன் வாக்கும் ப்ரத்யங்முகம். அது சோணை போன்றது.

(3) அரங்கனுக்கு இனிப்பான வாக்கு வேணுமென்கிறீர். அரங்கத்தில் என்ன ரஸம்? மிக்க விநோதம் விளைவிக்கும் ஹாஸ்யரஸம் வேண்டுமே? அம்மா, உன் வாக்கு நர்ம பரிஹாஸங்களமைந்துளது. அது அரங்கனுக்கு மிக்க இனிப்பை உண்டாக்கும்.

அபி என்பதற்கு மூன்று விதப் பொருள்கள் கொள்ளலாம். (1) அந்த நதியோ, இந்த நதியோ என்று உல்லேஹிக்கும்படி யிருப்பது ஓர் பொருள். (2) ஓர் நதியாயிருந்தும் மற்றோர் நதியுமாவாய் என்று விரோதிஸமுச்சயம். வேறுவேறான பல நதிகளாயிருந்தும், விரோதமில்லாமல் உன்னிடத்தில் ஒன்றாகச் சேர்ந்திருக்கின்றன. (3) இந்த நதியும் அந்த நதியுமாகப் பல புண்ய நதிகளும் உன்னிடமும் சேர்ந்துள என்பது கூட்டுப் பொருள். முதல் பொருளில் ரஸமதிகம்.

அதரே -- வாக்கை உச்சரிக்கும் திருப்பவழத்தில். உன் நாயகன் உன் வாக்குகளால் கட்டுப்படுவதற்கு இதெல்லாம் ஓர் ஓர் விசித்ர நிமித்தம். பேசும் திருப்பவழத்தைப் பார்க்கையில் அவன் என் செய்வான், எப்படித் தப்பிப்பான்!

அபி ஶோணா -- (ஶோணாபி) சோணாநதியோ. சோணா என்பது சிவப்பு நிறத்தைச் சொல்லும். ஒருவளே எப்படிப் பல நதிகளாவது? ஓர் ஓர் அவயவத்தால் ஓரோர் குணத்தால், ஓர்ஓர் நதியாகிறாள். சோணை மேற்குமுகமாக (ப்ரத்யங்முகமாக) ஓடும் நதி. உன் வாக்கு சோணாநதியைப்போல் ப்ரத்யங்முகம் (அத்யாத்மம்) ஸ்வாபதேசம் கனத்தது. அத்யாத்மப் பொருளிலேயே முக்கிய நோக்கம் உள்ளதென்பதைக் காட்ட உபக்ரமத்திலேயே சோணையாக நிரூபித்தது. இதனால் சொல்லப்படும் அத்யாத்ம நோக்குக்கு அநுகுணமாகவே மற்ற குணங்களும் உல்லேகங்களும் பொருந்தும். ஸ்ரீஹர்ஷ சரித்திரத்தில் பாணபட்டர் என்னும் கவி ஸரஸ்வதிதேவி பூலோகத்தில் ஓர் சாபவசத்தினால் ஓர் பெண்ணாக அவதரிக்கையில், சோணா நதிக்கரையில் இறங்கியதாகச் சொல்லி, அந்த நதியை அழகாக வர்ணித்திருக்கிறார். அதுவும் ஸ்வாமி திருவுள்ளத்திலுள்ளது. மேற்கு முகமாகப் போகும் ஆற்றை நதமென்று புமானாகச் சொல்லுவர். இங்கே கவி பெண்ணானதால் சோணத்தை சோணா என்கிறார். ஹர்ஷ சரித்திரத்தில் "ப்ரஹ்மாவின் பிள்ளையாகிற ஹிரண்யவாஹரென்ற பெயரையுடைய மஹாநதம், எதை ஜனங்கள் சோண: என்று வழங்குகிறார்களோ" என்பது ஸரஸ்வதி பேச்சு. "மதுரமான மயில் த்வனிகளோடும், பரிமளத்தால் மதங்கொண்ட வண்டுகளின் தொடர்ந்த வரிசைகளான வீணைக்கரும்கம்பிகளின் ரீங்கார கானங்களோடும் ரமணீயமும், மந்தாகினியின் பெருமையை மந்தமாகச் செய்வதாயுமுள்ள இம்மஹாநதத்தின் அருகேயுள்ள ப்ரதேசங்கள் என் மனதை ரமிப்பிக்கின்றன" என்பது அடுத்த வாக்யம். 'மந்தாகினியை மந்தப்படுத்தும் வாக் ப்ரவாஹங்கள்' என்று ஸ்வாமி வர்ணிப்பது பாணகவி வர்ணனத்தை அநுசரிப்பது ஸ்பஷ்டம்.

குசயோ: அபி துங்கபத்ரா -- இரு ஸ்தனங்களும் உந்நதம். பேசுகையில் இன்னும் உயரும். துங்கத்தின்பேரில் துங்கமாகும். சைதந்யஸ்தந்யத்தைக் கொடுக்கும். ஜகன்மங்களமான (பத்ரமான) ஸ்தனங்கள். ஸ்தனங்கள் ஓர் திருமேனியில் இரட்டையாக அமைந்திருப்பதைப்போல், இயற்கையாய் துங்கா பத்ரா என்று இரண்டு சேர்ந்த துங்கபத்ரையை எடுத்தது அழகு. நீ பாடும்போது உயர்ந்து அமரும் உன் பத்ர ஸ்தனங்களைப் பார்த்து அவன் எப்படி வ்யாமோஹ பரவசனாகாமல் தப்புவான்?

வாசாம் ப்ரவாஹவிபவே -- பாஹ்யமான திருப்பவழத்தின் அழகாலும், ஸ்தனங்களின் அழகினாலும் மட்டுமா நீ பாடும் பாசுரங்களுக்குக் கௌரவம்? லாவண்யமுடைய யுவதி பாடுகிறாள் என்பதாலா உன் பாசுரங்களுக்குக் கௌரவம்? உன் வாக்குகளின் ப்ரவாஹம் ஸ்வயம் ஸரஸ்வதீப்ரவாஹம். பாடும் உன்னுடைய அழகால் ஆரோபிதமான பெருமையன்று. ஸ்வயம் அந்தர்வாஹினியான ஸரஸ்வதி யாகும். அரும்பெரும் கருத்துக்கள் உள்ளே ஆழ்ந்து கிடக்கும். உள்ளேயிருந்து கந்தம் வீசும். அந்த ஸ்திர பரிமளம் உன் ஸரஸ்வதி. மறையேயம்மா, மறையிலும் மறை. பொருள்கள் உள்ளே மறைந்திருந்தாலும், உள்ளே அவிச்சின்ன ப்ரவாஹமாக ஓடிக்கொண்டேயிருக்கும். நீ பூமிதேவியானதால் உன் ஸரஸ்வதி பூமிக்குள் மறைந்து ஓடுகிறதோ? உம்மை ஒரு க்ஷணமேனும் த்யானிப்பவர் அநிவாரிதமான வாக்குகளின் ப்ரவாஹங்களால், மந்தாகினியையும் மந்தமாகச் செய்கிற சக்தியை உடையவராவார் என்று உன் நாயகன் ஹயக்ரீவரைத் துதிக்கையில் கங்காப்ரவாஹத்தை அதிசயிப்பதைப் பேசினேன். கங்கை அந்தர்வாஹினி யன்று. இங்கே அந்தர்வாஹினியான ஸரஸ்வதி நீ என்று வ்யதிரேகம் (உயர்வு).

அப்ராக்ருதை: ரஸை: -- கவிஸிம்ஹமே, என் ப்ரபந்தங்களில் என்ன ரஸங்கள்? ப்ரக்ருதரஸங்களா? அலௌகிக திவ்யரஸங்களா? அதிலுள்ள ச்ருங்கார ரஸத்திற்கு என்ன ஸ்தாயீபாவம்? ப்ரக்ருதி மண்டலத்தில் பூமியிலோடும் (இந்த மானவாவர்த்தத்தில் ஓடும்) நதிகளாக என்னை வர்ணிப்பது உசிதமா? அம்மா, கவிமுறையில் பலபலவிதமாய் உல்லேகாலங்காரமாகப் பேசினேன். தேவதைகளான புண்ய நதிகளாகப் பேசினேன். உன் ஸ்வபாவத்திற்குத் தக்கபடி உள்ளபடி பேசினால் உன் கவி ரஸங்களெல்லாம் திவ்யரஸமாயிருப்பதால் நீ விரஜையம்மா. 'ஸ்வபாவாத்' என்பதை இங்கேயுமொட்டலாம். பின்பும் ஒட்டலாம். அது 'மத்யமணி'. வாக்ப்ரவாஹத்தை வர்ணித்தீரே! ப்ரவாஹமானால் ரஜஸ் இல்லாமல் இருக்குமோ? இல்லையம்மா! உன் வாக்ப்ரவாஹம் ஸ்வத்ஸித்தம். நித்யமாயுளது. புதிதாக உற்பத்தியாகி ஓடிவருவதன்று. ஸ்வபாவாத் -- ஸ்வாபாவிகம் -- நித்யம். ஆகையால் ரஜஸ்ஸுக்கிடமில்லை. ச்ருங்கார ரஸத்திற்கு ரதிதான் ஸ்தாயீபாவம். ஆனால் இது ஆத்மாதி, ப்ராக்ருதியன்று. அலௌகிகாதி,ப்ரத்யங்முகமான ரதி. 'அத்யாத்ம ஜ்ஞானத்ருப்தத்வம்'

ஸ்வபாவாத் விரஜா அஸி -- எங்கள் ரஜஸ் தமஸ்ஸுகளை எல்லாம் போக்கி திவ்யவிபூதியை உடனே அடையச் செய்யும் உன் வாக் ப்ரவாஹத்தில் ரஜஸ்ஸுக்கு ப்ரஸக்தியேது?

ஸ்வபாவாஅபி கோதா -- கோதா என்னும் சப்தம் கோதாவரி நதியையும், ஸ்ரீவிஷ்ணுசித்தர் பெண்ணையும் சொல்லும் என்று நிகண்டு. நீ ஸ்வயம் கோதாவரியாவாய். நீ கோதாவரி என்பதற்கு ஓர் குணவிசேஷத்தைக் கொண்டு ஆரோபிக்க வேண்டியதில்லை. நீ கோதாவரி என்பதில் ஆரோபமுமில்லை. யமுனை கண்ணன் யௌவன விஹாரங்களுக்கு சாக்ஷி. பஞ்சவடியில் சிரகாலம் ராமவைதேஹீ விஹாரங்களுக்கு கோதாவரி சாக்ஷியாவாள். ஜனகராஜன் புத்திரியாகிய ஜானகி நீராடினதால், புண்யமான நீர்களையுடையதாக, கோதாவரி தீர்த்தத்தைக் காளிதாஸர் மேகஸந்தேச ஆரம்பத்தில் வர்ணித்தார். உத்தமராமசரிதத்தில் பவபூதியின் வர்ணனங்களையும் நினைக்கவேணும்.

கமிது: நநு நர்மதா அஸி -- இத்தனை நதிகளாக இருக்கையிலும், உன் நாயகனுக்கு நீ நர்ம பரிஹாஸவார்த்தைகளைப் பேசுவதில் உள்ள விநோதம் எல்லையற்றது. ராமாயண ரஸங்களைப் பேசுகையில், ஆதிகவி "ஹாஸ்யச்ருங்காரபீபத்ஸ" என்று ஹாஸ்யரஸத்தை முதலில் பேசினார். எங்கள் அநாதிகாலமான கொடிய அந்த அபராதங்களினால் உள்ள சீற்றத்தை மாற்ற ஹாஸ்ய ரஸம்தான் சிறந்த உபாயம். அந்த நதியோ, இந்த நதியோ என்று ஓரோர் காரணத்தையிட்டு உல்லேகம். உன் காந்தனுக்கு நீ நர்மதை என்பதுதான் தத்துவம். நர்மதா த்வம் அஸி, ஸா த்வமஸி! (6)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக