கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த தேசிக ஸ்ரீஸூக்தி சம்ரக்ஷணீ
இதழில் எழுதியது.
தமிழாக்கம்
சென்னை திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கம்
வெளியீடு 11 (27-7-1941)
சுலோகம் 5
அஸ்மாத்ருஶாம் அபக்ருதௌ சிரதீக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதெ யதஸௌ முகுந்த: |
தந் நிஶ்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரீநிநாதமதுரைஶ்ச கிராம் நிகும்பை:||
நாறுமலர்க் கோதாயு னாதனெனைப் போலறத்தி
னாறறியா வாதர்க் கருள் புரிதல் -- தேறு நின்பா
மாலையினும் வண்குழல்சேர் வாடற் பழஞ்சருகு
மாலையினுங் கொண்ட மயக்கு.
பதவுரை
தேவி -- தேவி கோதாய்! அபக்ருதௌ -- அபராதம் செய்வதில், சிரதீக்ஷிதாநாம் -- வெகுகாலமாய் தீக்ஷையாய்க் கொண்டிருக்கும், அஸ்மத்ருஶாம் -- என் போன்றவரிடம், அஹ்நாய -- உடனே, அஸௌ முகுந்த -- இந்த முகுந்தன், தயதே இதியத் -- தயவு பண்ணுகிறான் என்பது யாதொன்று உண்டோ, தத் -- அதானது, தவ -- உன்னுடைய, மௌளிதாம்நாம் -- சிரோமாலையின் நாரினாலும், தந்த்ரீநிநாதமதுரைஶ்ச -- வீணைக்கம்பிகளின் நாதத்தைப்போல் மதுரமான, தவ -- உன்னுடைய, கிராம் நிகும்பை: -- நூல்களாலும், நியமித: -- நியமிக்கப்பட்டான், நிஶ்சிதம் -- நிச்சயமாய்.
தேவி கோதாய்! அபராதங்களைச் செய்வதையே தீக்ஷையாக (வ்ரதமாக) வெகுகாலமாகக் கொண்டிருக்கும் என்போன்றவரிடமும், உடனே (விரைவில், அன்றே) மோக்ஷம் கொடுப்பதாக முகுந்தன் தயவு பண்ணுகிறான் என்பது நிச்சயமாய் உன்னுடைய சிரோமாலையின் நாரினாலும், வீணைக்கம்பிகளின் நாதத்தைப்போல் மதுரமான உன்னுடைய நூல்களாலும் கட்டுப்பட்டுத்தான். அதனாலேதான் அப்படி அவன் உடனே தயவு செய்து முக்தி அளிப்பது.
அவதாரிகை
(1) என் வாக்கில் முறைப்படி ஈடுபட்டு ரஸிப்பவர் இனிய கவிகளாகித் தேன்மொழி செவிகளாரப் பொழிகிறாரென்றீர். என் ப்ரபந்தங்கள் எப்படி இனியதோ? கவிஸிம்ஹமே! உம் வாயால் கேட்கவேணும். அரங்கன் புகழ்வது போதாது. என்னது என்று பக்ஷபாதத்தால் புகழ்வர்.
(2) யஜ்ஞங்களால் (தீர்த்தங்களால்) சுத்தியடைந்து என் வாக்கை அறிய விரும்புகிறார்கள் என்று யஜ்ஞாதி சுருதியைப் பேசினீர். உம்முடைய தகப்பனார் , பாட்டனார் யாகதீக்ஷிதர்கள். நீரும் தீக்ஷிதரோ?
(3) விபஞ்சீஸ்வரமதுரம் வைதர்ப்பரீதியென்பரே! என் வாக்கு அந்த லக்ஷணத்திற்கு ஏற்றதோ?
தேவி -- கோதா தேவியே! மோக்ஷப்ராப்தியையும், மோக்ஷப்ராபணத்தையும் பேசுகிறபடியால் இங்கே தேவி என்று கூப்பிடுகிறார்.
அபக்ருதௌசிரதீக்ஷிதாநாம் -- ஒரு விதத்தில் நானும் தீக்ஷிதன்தான். யாகதீக்ஷிதர்கள் யாகமென்னும் "க்ருதி"யில் தீக்ஷிதர். நாங்கள் "அபக்ருதி"யில் தீக்ஷிதரென்று வேடிக்கையாகக் காட்டுகிறார். வெகுகாலமாய் நாங்கள் இப்படி அநாதி தீர்க்கஸத்ரத்தில் தீக்ஷிதர்கள்.
அஸ்மாத்ருஶாம் -- என் போன்றவர்களுக்கு, பகவத்த்ருஶேப்ய: என்பதுபோல, அஸௌ -- உன் துதியைக் கேட்க இதோ நிற்கிறாரே, "அஸ்மாத்ருஶாம்" என்பது பரிஹாஸ வர்ணனம்.
முகுந்த: -- மோக்ஷத்தையளிக்கும் முகுந்தன். இதனால் செய்யும் தயவு மோக்ஷமளிப்பதென்பது ஸூசிக்கப் படுகிறது.
அஹ்நாய -- தாமதியாமல், உடனே, அன்று தினமே. நாங்கள் சிர(चिर)காலம் அபராத தீக்ஷிதர்கள். "ஸுசிரேண" விளம்பமில்லாமல் உன் நாயகன் அன்றே மோக்ஷமளிக்கிறான். மோக்ஷமளிக்க அவர் வெகுகால தீக்ஷை!
தயதே யதஸௌ -- அவன் தயவு செய்வது என்பது எதுவோ
தத் -- அது, நிஶ்சிதம் -- கட்டாயமாக. தவ மௌளிதாம்நா -- உன் கூந்தலில் சூடிக்கொடுத்த மாலைக் கயிற்றாலும்
தந்த்ரீநிநாதமதுரைஶ்ச --வீணையின் நாதத்தைப் போல் இனிமையான. (தவ) கிராம் நிகும்பை: -- அழகாகக் கோர்த்துள்ள உன்னுடைய வாக்குகளால் (பாமாலைநார்களால்). இரண்டுவித மாலைகளும் அவனைக் கட்டியிழுத்துச் சொன்னபடி கேட்கவைக்க உபயோகப்படுகிறது. குடுமியைக் கொடுத்துவிடுகிறார். உன் பாமாலைக்கு த்ருஷ்டாந்தமான வீணையிலும் தந்திக் கம்பிகளிருக்கின்றன என்று தந்த்ரீ என்னும் பதத்தால் வேடிக்கையாகக் காட்டுகிறார்.
நியமித -- கட்டுப்படுகிறதனால்தான். வீணைக்கம்பியின் நிநாதம் வாக்குகளின் நிகும்பங்கள், எல்லாம் நியமனத்திற்கு உபயோகப்படுகின்றன. "அளகநிதமிதாபி:" என்று முடிவிலும் சாதிக்கப் போகிறார். "நிஶ்சிதம்", "நியமிதம்" என்னும் பதங்களின் சேர்த்தியுமழகு. முன் ச்லோகத்தில் "அநு"வைக் கார்யகாரணங்களில் கோர்த்தது. இங்கே "நிதராம்" என்னும் பொருளுடைய "நி" என்பதைக்கொண்டு கோர்வை. பூமாலை கோர்ப்பது போல. இத்தனை காலம் பலம் கைகூடாமல் தாமதித்தது (சிரம் चिरं) நிச்சயமாய் எங்களது. இப்பொழுது தாமதமே யில்லாமல் வெகு சீக்கிரத்தில் பலம் ஸித்திப்பது (தவ) உன் பெருமை. (5)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக