புதன், 22 ஜூலை, 2015

ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்


ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்ரீவரதராஜ பஞ்சாசத்தினை 1918ல் பிள்ளைப்பாக்கம் இளையவில்லி ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மாசாரியார் தமிழாக்கி, சிறு குறிப்புடன் வெளியிட்ட நூல் வெகு நாள்களாகக் கையில் இருந்தது. டெலிகிராம், வாட்ஸ்ஆப் இரண்டிலும் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம சிஷ்யர்கள் குழு ஒன்று இயங்கி வருகின்றது. அதில், ஸ்ரீமத் ஆண்டவன் இந்த வருடம் சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சிபுரத்தில் மேற்கொள்வதை ஒட்டி, வரதன் விஷயமான இந்த பஞ்சாசத்தைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். நேற்று இங்கு வந்த ஒரு அன்பர், வழக்கம்போல் பிளாகிலும் பகிர்ந்து கொண்டால் குழுவில் இல்லாத பலரும் அனுபவிக்கலாமே என்று சொன்னது சரி எனப்பட்டது. தினமும் ஐந்து ச்லோகங்களாகப் பகிர்ந்து கொள்வேன். பிள்ளைப்பாக்கம் ஸ்வாமியின் தமிழாக்கத்துடன், பாண்டிச்சேரியிலிருந்து வெளிவரும் "ஸ்ரீதேசிக தர்சனம்" மாத இதழின் ஆசிரியரும், பணி ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஸ்ரீ ராமபத்ர தாதம் ஸ்வாமி (பா.ரா.தா.)யால் அற்புதமாக தமிழாக்கப் பட்டுள்ளதும் சேர்ந்து வரும்.


|ஸ்ரீ:||
வரதராஜ பஞ்சாஶத்
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேஸரீ:|
வேதாந்தாசார்யவர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி;||

த்விரத ஶிகரி ஸீம்நா ஸத்மவாந் பத்ம யோநே:
துரம ஸவந வேத்யாம் ஶ்யாமளோ ஹவ்யவாஹ:|
கலஶ ஜலதி கந்யா வல்லரீ கல்பஶாகீ
கலயது குஶலம் ந:கோபி காருண்ய ராஶி:|| (1)


கரிகிரியின்முடி மிசையிலகும் மொரு
கவினுறு மாளிகை யுற்றவன் காண்
மரைமலர் யோனியின் மாமக வேதியி
னுட்புகுநீல நிறத்தழல் காண்
திருமகளாங் கலசக்கடல் வல்லி
திகழ்ந்திணை யத்தகு கற்பகங்காண்
அருமையினக் கருணாநிதி நம்மனை
வர்க்கு மளிக்குக மங்களமே.. (1)

பாண்டிச்சேரி ராமபத்ர தாதம் ஸ்வாமியின் தமிழாக்கம்
(இனி வரும் பாடல்களில் சுருக்கமாக (பா.ரா.தா.)


அயனெடுத்த அருவேள்விச் சுடரொளியின் கருமணியே
கோல்தேடும் கொடியேபோல் மால்தேடி வந்துதித்த
கடலமுதாம் திருமகளைத் திருமார்பில் கொண்டவனே
கருணைபொழி கற்பகமாய் கச்சிதனில் உறைகின்றாய்
அருள்பொழிந்து எமைக்காப்பாய் அருள்வரதப் பெருமாளே. (1)

ஸ்ரீஹஸ்திகிரியின் சிகரத்தில் திவ்யமான ஒரு திருமாளிகையைப் பெற்றவனும், பிரமனார் புரிந்த அசுவமேதத்தின் உத்தரவேதியுட் புகுந்து அதிலிட்ட ஹவிஸ்ஸை பரிக்ரஹித்த நீலவர்ணமான அக்நி போன்றவனும் (கடையுங்காலத்து) ஒரு கலசம் போன்றதான திருப்பாற்கடலின் திருமகளான பெரிய பிராட்டியாகின்ற கற்பகவல்லி (கொடி) சேர்வதற்குத் தகுந்த ஒரு கற்பக விருக்ஷம் போன்றவனும், கருணாநிதியுமான எம்பெருமான் அடியோங்கள் அனைவர்க்கும் மங்களத்தைக் கொடுக்கட்டும்.


யஸ்யாநுபாவ மதிகந்து மஶக்நுவந்தோ
முஹ்யந்த்யபங்குரதியோ முநி ஸார்வபௌமா:|
தஸ்யைவ தே ஸ்துதிஷு ஸாஹஸமஶ்நுவாந:
க்ஷந்தவ்ய ஏஷ பவதா கரி ஶைல நாத:||           (2)


அன்று மாமுனிவ ரறிவ தற்குமுடி
யாத மேன்மையுறு நின்னெதிர்
நின்று நோக்கதனி லாழந்து மோகமுறு
நீரின் மௌனநிலை யுற்றனர்
ஒன்று நாகமலை நாத வத்தகைய
வுன்னையும் பிரம முற்றலா
லின்று போற்றுதலின் சாக சத்தையடை
யேழை யேன்பிழை பொறுத்திடாய்.               (2)


(பா.ரா.தா.)
தெள்ளிய அறிவுடன் தெளிந்தநல் ஞானமும்
உள்ளிய முனிகளும் உணர்ந்திடா நாயக!
துள்ளிடும் துணிவுடன் அடியனும் போற்றுவன்
எல்லையில் கருணை வரதனே காத்தருள்!             (2)


ஏ ஹஸ்திகிரீச! பூர்வத்தில் (மயர்வறுமதியுட னவதரித்திருந்த நம்மாழ்வார் முதலான) முனிசிரேஷ்டர்கள் உன் மஹாத்மியத்தை யறிவதற்குக்கூட சக்தியில்லாதவர்களாய் உன்னெதிரில் நின்று உன் திவ்யமங்கள விக்ரகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே மோகித்தவர்களாய் மௌனமாய் நின்றுவிட்டனர். அத்தன்மைத்தான வுன்னை நான் இன்று (பிரமித்து) ஸ்தோத்ரம் பண்ண எத்தனித்தல் மஹா ஸாஹஸம். இதற்காக என்னை க்ஷமித்தருள வேணும்.
(குணங்களை முன்பு அறிந்தன்றோ பிறகு ஸ்துதிக்க வேண்டும்! முனீந்திரர்களே உன் ஒரு குணத்தை யேனும் செம்மையி லறியாதிருப்ப நான் ஸ்துதிக்கத் தொடங்கியது ஸாஹஸம் என்கிறார்.)

जानन्न नादि विहितान् अपराध वर्गान्
स्वामिन् भयात् किमपि वक्तुमहं न शक्त: |
अव्याज वत्सल तथापि निरङ्कुशं मां
वात्सल्यमॆव भवतो मुखरी करोति ||

ஜாநந்ந நாதி விஹிதாந் அபராத வர்காந்
ஸ்வாமிந் பயாத் கிமபி வக்துமஹம் ந ஶக்த: |
அவ்யாஜ வத்ஸல ததாபி நிரங்குஶம் மாம்
வாத்ஸல்யமேவ பவதோ முகரீ கரோதி || (3)

ஆதி யற்றவப ராத வர்க்கமடி
யேனிழைத்தவை யறிந்ததால்
நாத வஞ்சியொரு வாச கந்தனையு
நவிலுஞ் சக்தியில னேனுமு
னேது வொன்றுமில தாநின் வாற்சலிய
மேயெனக் கொரிணை யாயமைந்
தோது விக்குமொரு தடையு மின்றியெனை
யுன்று திக்குரிய னாக்கியே. (3)


(பா.ரா.தா.)

பழவினை நுகர்வினை வருவினை என்றே
தொடர்சுமைப் புதையினில் அழுந்திய என்னை
வரந்தரு வரதனின் வழுவிலா அன்பு
சுரந்திட பரந்தினி துதித்திடச் செய்க! (3)

ஏ! ஸர்வலோகநாத! அனாதியாய் அபராத வர்க்கங்களைத் திரள் திரளாக நான் பண்ணியிருப்பதை தெரிந்துள்ளே னாகையால் பயந்து ஒரு வார்த்தைகூட சொல்வதற்கு சக்தி யற்றவனாக இருக்கின்றேன். இப்படி இருந்தபோதிலும், உன் நிர்ஹேதுவான வாற்சல்ய குணமானது, ஸ்துதி பண்ணுவதற்கு என்னை அருகனாக்கி யாதொரு தடையுமில்லாமல் உன்னை ஸ்தோத்ரம் பண்ணும்படி செய்கிறது.


किं व्याहरामि वरद स्तुतये कथं वा
खद्योतवत् प्रलघु सङ्कुचित प्रकाश: |
तन्मे समर्पय मतिं च सरस्वतीं च
त्वामञ्जसा स्तुति पदैर्यदहं धिनोमि || (4)

கிம் வ்யாஹராமி வரத ஸ்துதயே கதம் வா
கத்யோதவத் ப்ரலகு ஸங்குசித ப்ரகாஶ: |
தந்மே ஸமர்பய மதிம் ச ஸரஸ்வதீம் ச
த்வாமஞ்ஜஸா ஸ்துதி பதைர்யதஹம் திநோமி || (4)


நினது திக்கடிய னாவனோ நிலையி
னின்றி டாதவென திறைமதி
மின்மி னிப்புழுவை யொத்த தால்வாத
வித்தை யோடிவரு புத்தியு
மன்பு கூர்ந்தருளு வாயெ னெக்கருளி
லற்பு தப்பொரு ளடக்கியே
யின்பு றுஞ்சுவைய நற்ப தங்களுட
னேத்தி நிற்குவகை யூட்டுவேன். (4)


(பா.ரா.தா.)

பகலவன் படரொளி மின்மினி மறைக்குமோ
பரமநின் புகழினை சொல்லிடத் தகுவனோ
வருந்திடும் அடியனை நின்னருள் அளித்தே
வரந்தரு வரதனே வல்லமை தருகவே (4)


ஏ! வரத! மின்மினிப் பூச்சியி னொளிபோல் மிகவும் அற்பமாயும் சுருங்கியதுமான புத்தியை யுடைய நான் உன்னை ஸ்துதிக்கத் தக்கவனோ? அல்லேனாதலால் உன் ஸ்தோத்ரம் செய்வதற்கு வேண்டிய வித்தையையும் புத்தியையும் எனக்கு கிருபை பண்ண வேண்டும். அப்படி கிருபை பண்ணினதும் அவைகளைக் கொண்டு சொற்சுவை பொருட்சுவைகளடங்கிய இனிய பாசுரங்களினால் உன்னை ஸ்துதித்து உனக்கு உவப்பை உண்டு பண்ணுகின்றேன்.


मच्छक्ति मात्र गणने किमिहास्ति शक्यं
शक्येन वा तव करीश किमस्ति साद्यम् |
यद्यस्ति साधय मया तदपि त्वया वा
किं वा भवति किञ्चिदनीहमाने ||

மச்சக்தி மாத்ர கணநே கிமிஹாஸ்தி ஶக்யம்
ஶக்யேந வா தவ கரீஶ கிமஸ்தி ஸாத்யம் |
யத்யஸ்தி ஸாதய மயா ததபி த்வயா வா
கிம் வா பவேத் பவதி கிஞ்சிதநீஹமாநே (5)


நீயி லாவ தென்ன வென்சக்தி
யொன்றை யேயுன்னி நின்றிடி
லாயி னுன்சக்தி யாலு னக்கில்லை
யாவ தாமொன்று முள்ளதேல்
நீயெ னைக்கொண்டு சாதி யென்மூல
மாகும் யாவுநின் னாலதாம்
மாய மாவீச நீம னத்திச்சை
வைத்தி லேலொன்று மில்லையே. (5)


(பா.ரா.தா)

அத்திகிரி அருளாளன் சீரறியும் வகைதனிலே
எத்திறமும் எனதில்லை யானறியும் வழிகளிலே
அத்துனையும் உனதன்றோ நீயின்றி செயத்தகுமோ!
நின்திறத்தின் செயலன்றோ யானுன்னைப் புகழ்வதுமே!! (5)


ஏ! கரீச! நீயில்லாமல் என் சக்தியை மாத்திரமே கொண்டு நின்றால் இப்பிரபஞ்சத்தில் எதுதான் சாத்தியமாகும்? உன் சக்தியினால் சாத்தியமாயின் அப்படி முடித்து அதனால் சாதிக்க வேண்டியது உனக்கு ஒன்றுமில்லை. அப்படி ஏதாவது இருக்குமாயின் நீயே என் மூலமாக அதை சாதித்துக்கொள். அப்படி சாதிக்கப்படுவதும் உன்னால்தான். ஏ! மாய! நீ உன் மனதில் இச்சை கொள்ளாவிடில் இப்பிரபஞ்சத்தில் ஒன்றுமேயில்லை.












































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக