ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 15

38. ராமாநுஜ என்கிற பதம் நடாதூர் அம்மாளைக் குறிக்கிறது.

श्रीमद्भयां स्यादसावित्यनुपधि वरदाचार्य रामानुजाभ्यां ஸ்ரீமத்பயாம் ஸ்யாதஸாவித்யநுபதி வரதாசார்ய ராமாநுஜாப்யாம் (அதிகரண ஸாராவளி)

व्यातानीत्  वेङ्कटेशो वरदगुरुं कृपा लम्भितोद्दाम् भूमा வ்யாதாநீத்  வேங்கடேசோ வரதகுரும் க்ருபா லம்பிதோத்தாம் பூமா (ஸ்ரீ தத்வமுக்தாகலாபம்)

प्रणम्य वरदाचार्य  ப்ரணம்ய வரதாசார்ய (ஸ்ரீதத்வடீகை)

அம்மாள் அருளிச் செய்த சுருக்கு (ஸாங்கப்ரபதநம்), வாதிஹம்ஸாம்புத வரதாசார்யர்கள் (ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும், “தத்வஸாரம்” முதலிய க்ரந்தங்களிலும் உதாஹரித்துள்ளார்.

39. ராமாநுஜ என்கிற பதம் வஸிஷ்டரையும், ஸாந்திபிநி ரிஷியையும் குறிக்கிறது.

पत्यु: सम्यमिनां प्रणम्य चरणौ तत्पादकोटीरयो: सम्बन्धेन समिध्यमान विभवान् धन्यांस्तथान्यान् गुरून्  பத்யு: ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாதகோடீரயோ: ஸம்பந்தேந ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ்ததாந்யாந் குரூந்  (ந்யாயபரிஶுத்தி) என்றும், மேலும் பெரிய நம்பிகளையும், ஸாக்ஷாத் ஆசார்யனான கிடாம்பி ராமாநுஜ அப்புள்ளாரையும் குறிக்கிறது.  இவருடைய பெருமையை அப்புள்ளார் அருளிச் செய்த விரகு, கிடாம்பி அப்புள்ளார் அருளிச்செய்தார், கிடாம்பி அப்புள்ளார் அடியேனைக் கிளியைப் பழக்குவிக்குமாய்ப் போலே பழக்குவிக்க, அப்புள்ளார் அருளிச் செய்யும் பாசுரம் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்),  श्रुत्वा रामानुजार्यात् सदसदपि तत: ஶ்ருத்வா ராமாநுஜார்யாத் ஸதஸதபி தத(ஸ்ரீதத்வமுக்தாகலாபம்)  श्रीमद्भयांरामानुजाभ्या ஸ்ரீமத்பயாம்ராமாநுஜாப்யா (அதிகரணசாராவளி) अश्रौषं  शेषकलपादहमपि वीदुषो वादिहंसाम्बुवाहात அஶ்ரௌஷம்  சேஷகலபாதஹமபி வீதுஷோ வாதிஹம்ஸாம்புவாஹாத (அதிகரணஸாராவளி) नमो रामानुजार्याय वेदान्तार्थप्रदायिने நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்தப்ரதாயிநே (வாழித்திருநாமம்) वन्दे आत्रेय रामानुज गुरुमनघं वादिहंसाम्बुवाहं வந்தே ஆத்ரேய ராமாநுஜ குருமநகம் வாதிஹம்ஸாம்புவாஹம் (அப்புள்ளார் தனியன்) तदूक्ता ..... मम गुरुभि: वादिहंसाम्बुवाहै: ததூக்தா ..... மம குருபி: வாதிஹம்ஸாம்புவாஹை: (அதிகரண ஸாராவளி) என்றும் தன்னுடைய க்ரந்தங்களில் உதாஹரித்துள்ளார்.

40. ராமாநுஜ என்கிற பதம் எம்பெருமானாருக்கு திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த வேதாந்தோயநர் என்ற கிடாம்பி ஆச்சானைக் குறிக்கிறது. இவர் வழியில் வந்தவர் எல்லோருக்கும் பயன்பெறுமாறு முப்பத்து நான்கு ரஹஸ்யங்களாக அருளிச் செய்துள்ளார் என்றபடி “ஆச்சான் பக்கலிலே கேட்டு” (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம்” (ஸ்ரீபரமபதஸோபாநம்) इति यतिराजमहानस परिमळपरिवाह वासितां पिबत இதி யதிராஜமஹாநஸ பரிமளபரிவாஹ வாஸிதாம் பிபத (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) मान्यं यतीश्वर महानस संप्रदायम्  மாந்யம் யதீச்வர மஹாநஸ ஸம்ப்ரதாயம் (ஸ்ரீஶரணாகதி தீபிகை) यो महानसिको महान् यतिपते नीतश्च तत्पौत्रजान् आचार्यान्  யோ மஹாநஸிகோ மஹாந் யதிபதே நீதச்ச தத்பௌத்ரஜாந் ஆசார்யாந் (ஸ்ரீந்யாஸதிலகம்)

41. ராமாநுஜ என்கிற பதம் திருமலையாண்டானைக் குறிக்கிறது. திருமலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார்  (ரஹஸ்யத்ரயஸாரம்) என்று அருளிச் செய்துள்ளார்.

         மேலும் ஆசார்ய பரம்பரையில் எம்பெருமானாருக்கு ரஹஸ்யார்த்தங்கள் உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பிகளும் ராமாயணார்த்த விசேஷங்களை உபதேசித்த பெரியதிருமலை நம்பிகளும் இவர்களுடைய ப்ரபாவத்தை ஸ்ரீகுருபரம்பராஸாரம், ஸ்ரீமத்ரஹஸ்யஸாரம், ஸ்ரீஸம்ப்ரதாய பரிஶுத்தி முதலியவற்றில் நிரூபித்திருப்பதால் அவர்களுடைய தயைக்குப் பாத்ரமானார் ஸ்வாமி என்றபடி.

 [இத்துடன் ஆசார்யனின் தனியனில் ராமாநுஜ என்ற பதத்திற்கு அர்த்தங்களை நிறைவு செய்த ஸ்ரீ சேட்டலூர் ஸ்வாமி தயாபாத்ரம் என்ற பதத்திற்கும் மிகவும் விரிவாகவும் அழகாகவும் அர்த்தங்களை விவரித்துள்ளார். அதையும் ஜ்ஞானவைராக்ய பூஷணம் இவைகளுக்கு அர்த்தங்களையும் முழுவதும் படித்து இன்புற நூலை வெளியிட்ட ஸ்ரீசாமம் பார்த்சாரதி அய்யங்கார் ஸ்வாமியிடம் (12, வடக்குச் சித்திரை வீதி, ஸ்ரீரங்கம் 620006 தொலைபேசி 0431-2433941 அலைபேசி 9840572451) தொடர்பு கொண்டு, நூலை சிறிய சம்பாவனை அளித்துப் பெற்று இன்புற வேண்டுகிறேன். இப்பகுதியை இங்கு பகிர்ந்துகொள்ள அனுமதி அளித்தமைக்கு அவருக்கு அடியேனது க்ருதஜ்ஞைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக