சனி, 23 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 14

35. ராமாநுஜ என்கிற பதம் தர்ஶந ஸ்தாபகரான எம்பெருமானாரைக் குறிக்கிறது.  श्रीभाष्यकार पन्थानं आत्मना दर्शितम्: पुत: ஸ்ரீபாஷ்யகார பந்தாநம் ஆத்மநா தர்ஶிதம் புத: (ஸ்ரீதேஶிக மங்களம்) என்றபடி, அவர் இயற்றிய க்ரந்தங்களுக்கு வ்யாக்யாநம் செய்து அவர் பெருமையை உலகிற்குக் காட்டியருளியுள்ளார் ஸ்வாமி. எம்பெருமானார் கூறிய கருத்தை, அதாவது உபாய விரோதியை ப்ரபத்தியினாலும்,உபாயாந்தர அநுஷ்டானத்தினாலும் கழிக்கலாம் என்பதை,

          இதில் சொன்ன உபாயம் ஸர்வாநிஷ்டங்களையும் கழிக்கவற்றாகையாலே உபாய விரோதியைக் கழிக்கும்படியை ஸ்ரீமத் கீதாபாஷ்யத்திலும், ப்ராப்தி விரோதியைக் கழிக்கும்படியைக் கத்யத்திலும் உதாஹரித்தருளினார். (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)

        எம்பெருமானார் திருநாடு அலங்கரிக்கும்போது அங்குள்ள முதலிகளைப் பார்த்து ப்ரபந்நர்கள் அநுஷ்டிக்க வேண்டிய உத்தரகைங்கர்யத்தின் ப்ரகாரத்தை உபதேஶ பரம்பரையாக அது எல்லோருக்கும் பயன் பெறும் வகையில் உபதேஶித்துள்ளார். அதை ஸ்வாமி இவர் அருளிச் செய்தருளின வார்த்தை (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) என்று ஆரம்பித்து அருளிச் செய்துள்ளார்.

       ‘ஒரு மலையில் நின்றும் ஒரு மலையிலே தாவும் ஸிம்ம ஶரீரத்தில் ஜந்துக்களைப்போல பாஷ்யகாரர் ஸம்ஸார லங்கநம் பண்ண அவரோடுண்டான குடல் துவக்கத்தாலே நாம் உத்தீர்ணராவுதோம்’ (ரஹஸ்யத்ரயஸாரம்) என்ற முதலியாண்டான் பாசுரத்திற்கு தாத்பர்யத்தை அறியாமல் எம்பெருமானார் அனுஷ்டித்த ஶரணாகதியே போதும், வேறொரு உபாயம் வேண்டாம் என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக ஆழ்வான் அந்திம தஶையிலே விடாயிலே நாக்கொட்டி எம்பெருமானார் திருவடிகளைப் பிடிக்க, இவர் அப்போது ஆழ்வான் செவியிலே த்வயத்தை அருளிச் செய்ய, இப்பேறு நமக்கு வருகை அரிது, நாம் என்ன செய்யக்கடவோம், என்று அப்போது ஸேவித்திருந்த முதலிகள் கலங்க, இவர்கள் அபிப்பிராயத்தைத் திருவுள்ளம் பற்றி ஆழ்வான் ப்ரக்ருதி அறியீர்களோ, இவ்வவஸ்தையில் இவருக்கு இது கர்ப்பூரத்தையும் கண்ட சர்க்கரையையும் இட்ட மாத்திரமன்றோ, நாம் உபாயத்திற்குப் பரிகரமாகச் செய்தோமல்லோம் என்றருளிச்செய்ய, முதலிகள் தெளிந்து நிர்ப்பரரானார்கள்” என்று ஆழ்வான் பாசுரத்திற்கு தாத்பர்யத்தை வெளியிட்டருளினார். எம்பெருமானார் அனுஷ்டித்துக் காட்டிய உபாயம் எல்லாம் மோக்ஷத்திற்கு ஸாதகமாகாது என்று சிலர் கூற அதற்கு பெரியோர்களின் வார்த்தைகளே நமக்கு ப்ரமாணம் அனுஷ்டித்த சிற்சில பாகங்கள் ப்ரமாணமாகும் ईश्वराणां वचस्सत्यं ஈஶ்வராணாம் வசஸ்ஸத்யம் (ஸ்ரீமத் பாகவதம்) என்றபடி அவர்களுடைய வர்ணாஶ்ரம பேதமில்லாமல் (விரோதமில்லாமல்) உள்ள அம்ஶங்களே ப்ரமாணமாகும். அநுஷ்டானமும் ஶாஸ்த்ர விரோதமாக இருக்கவில்லை என்பதை திருவுள்ளம் கொண்டு கர்மாநுஷ்டானத்தில் மிகவும் விழிப்புடன் இருந்தார் என்பதை ‘பாஷ்யகாரர் அந்திம தசையிலும் வருந்தி எழுந்திருந்து ஸந்த்யாகாலத்திலே ஜலாஞ்ஜலி ப்ரக்ஷேபம் பண்ணியருளினார்’ ‘எம்பெருமானுள்ளிட்ட பரமாசார்யர்களுடைய அந்திம திவஸாவதியான அநுஷ்டானங்களை (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்)   என்று அருளிச் செய்துள்ளார். மேலும் ஸ்ரீபரமபத ஸோபானத்தில் எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே என்றும் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில் इति यतिराजमहानसपरिमळ परिवाह वासितां இதி யதிராஜமஹாநஸபரிமள பரிவாஹ வாஸிதாம் என்றும் அருளிச் செய்துள்ளார்.

36. ராமாநுஜ என்கிற பதம் திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் குறிக்கிறது. இவர் ஸ்ரீபாஷ்யகாரருடைய ஜ்ஞாநபுத்ரர் என்று வடுக நம்பியால் கொண்டாடப்பட்டவர். இவர் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி என்ற வ்யாக்யானம் செய்தருளியுள்ளார். இதற்கு நிகமபரிமளம் எனப்பட்ட எழுபத்துநாலாயிரப்படி வ்யாக்யாநமும் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியிலும், ஸாரத்திலும் ஸங்க்ரஹித்து நிரூபித்தருளியுள்ளார் ஸ்வாமி. தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே, ஈஶ்வரனால் வரும் நன்மை முலைப்பால் போலே (ரஹஸ்யத்ரயஸாரம்) பகவானுடைய அநுக்ரஹம் தாயின் பாலைப்போன்றது, நம்மால் செய்யப்படும் உபாயாநுஷ்டாநம் விலைக்கு வாங்கும் பாலைப்போன்றது என்று அர்த்தம். ஆகையால் நாம் உபாயாநுஷ்டாநம் செய்யவேண்டியதில்லை என்று அர்த்தம் சொல்வதற்கு ஸமாதாநமாக  பக்தி ப்ரபத்தியாதிகள் எல்லாம் அவனாலே வருகிறதென்று நினைக்கவேணுமென்று தன்னுடைய பராதீன கர்த்ருத்வத்திலே தாத்பர்யம்  எல்லாச் செயல்களும் பகவானுடைய ஸங்கல்பத்தால் உண்டாவதுதான், ஆனால் நாம் செய்கிறோம் என்று உபாயாநுஷ்டாநத்தைச் செய்யக்கூடாது. “ஸ்ரீவிரோத பரிஹார”த்தில் முக்தன் சரீரத்துடனும், சரீரமில்லாமலும் கைங்கர்யம் செய்யமுடியுமா? என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக இப்படியே किङ्करत्वं तु शेषस्य स्वामि कैङ्कर्य निष्टता கிங்கரத்வம் து ஶேஷஸ்ய ஸ்வாமி கைங்கர்ய நிஷ்டதா என்று பிள்ளான் அருளிச் செய்தது.

37. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீவிஷ்ணுசித்தர் என்கிற திருநாமமுடைய எங்களாழ்வானைக் குறிக்கிறது. இவர் வேதார்த்த ஸங்க்ரஹத்திற்கு வ்யாக்யாநமிட்டுள்ளார். இதை ஸ்ரீந்யாயபரிசுத்தி முதலிய க்ரந்தங்களில் நிரூபித்துள்ளார் . ஸ்ரீபாஷ்யகாரர் ஏற்றுக்கொண்டதாக சில அபார்த்தங்களை சிலர் வெளியிட, அவை சரியல்ல என்று கண்டித்தவர் இவர் என்பதை  तत्तु श्रीविष्णुचित्ताद्यै: निर्मूलमिति दर्शितम् தத்து ஸ்ரீவிஷ்ணுசித்தாத்யை: நிர்மூலமிதி தர்சிதம் (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும், இவர் கூறிய அர்த்தங்கள் எல்லாம் பூர்வாசார்யர்களின் ஸூக்திகளை அநுஸரித்தது என்பதை ஸ்ரீவிஷ்ணுசித்த வாதிஹம்ஸாம்புத வரதாசார்யர்கள் ஸங்க்ரஹித்தார்கள் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)  उक्तं च श्रिविष्णुचित्तै: श्येन कपोतीय कपोतोपाख्यान काकविभीषण क्षत्रबन्धुमुचुकुन्द गजेन्द्रद्रौपदी तक्षक शतमखादिषु मोक्षार्थतया क्षणकालनिर्वर्त्य प्रपदनार्थ दर्शनात् अबधिराणां तत्र मुख्यत्वं इति  உக்தம் ச ஸ்ரீவிஷ்ணுசித்தை: ச்யேந கபோதீய கபோதோபாக்யாந காகவிபீஷண க்ஷத்ரபந்துமுசுகுந்த கஜேந்த்ரத்ரௌபதீ தக்ஷக சதமகாதிஷு மோக்ஷார்ததயா க்ஷணகாலநிர்வர்த்ய ப்ரபதநார்த தர்சநாத் அபதிராணாம் தத்ர முக்யத்வம் இதி (ஸ்ரீநிக்ஷேபரக்ஷை), இவருடைய கத்ய வ்யாக்யாநத்தை ஸ்ரீரஹஸ்யரக்ஷையிலும் विष्णुचित्तैर्विवव्रे விஷ்ணுசித்தைர்விவவ்ரே (அதிகரணஸாராவளி)யிலும் உதாஹரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக