||ஸ்ரீ:||
திருவாமாத்தூர்
ஸ்ரீ திருவேங்கடநாதர் இயற்றிய
கீதா சாரத் தாலாட்டு
ஸ்ரீ கண்ணபிரான் துதி
ஐவகைப் பொருளும் நான்கு
கரணமும் குணங்கள் மூன்றும்
செய்வினை இரண்டும் ஒன்றி
யாவரும் திகைப்ப நின்ற
பொய்யிருள் அகல ஞாநப்
பொருட்கதிர் விரித்த புத்தேள்
கைவளர் ஆழிச் செங்கண்
கண்ணனைக் கருத்துள் வைப்பாம்.
ஆக்கியோன் பெயரும்,
முதனூற் பெயரும், நூற்பெயரும்
மாதையர்கோன் வேதநவில்வாய்வேங் கடநாதன்
காதையுறப் பார்த்தனுக்குக்
கண்ணனருள் – கீதைக்
கருத்துயர்தா லாட்டாகக்
கட்டுரைத்தான் யாரும்
கருத்துயர்தீர்ந் தெய்தக் கதி
நூல்
சீராரும் பரமார்த்த தெரிசநத்தை அருள்செய்யப்
பேராரும் தேசிகராய்ப்
பெருமானே வந்தவரோ. .1.
திருத்தேரில் சாரதியாய்ச்
சேர்ந்திருந்தும் கீதையினால்
அருச்சுதற்கு மெய்ஞ்ஞானம்
அனைத்தும்உரை செய்தவரோ. .2.
செஞ்சமரில் பந்துசநம்
சேதமுறும் என்றிரங்கி
அஞ்சினவன் பயம்தீர்த்தே
அமர்செய்யச் சொன்னவரோ .3.
சுற்றம்அறில் சோகம்எனச்
சொல்லினைசற்று அறிந்தவன்போல்
கற்றுணர்ந்த பேர்அதனால்
கலங்கார்காண் என்றவரோ. .4.
கலங்காரோ இறப்புவரில்
கற்றுணர்ந்த பேரேனும்
மலங்காமல் நான்இருக்கும்
வகைஉரையும் எனவினவ .5.
நீயும்நா னும்புவிமேல்
நிருபர்களும் மெய்யுணர்வால்
ஆயுங்கால் பிறந்திறப்பது
ஆர்க்கும்இலை என்றவரோ .6.
ஈங்குஎவர்க்கும் பிறந்திறப்பது
இல்லைஎன்றீர் இவ்வுலகில்
நீங்குபவம் யார்க்குஇதனை
நிச்சயமாய்ச் சொல்லுமென .7.
இத்தரையில் பிறந்திறப்பது
எடுத்தஉடற்கு அடுத்தபொறி
நித்தியமா கியஆந்மா
நின்சொரூபம் என்றவரோ .8.
அங்கம்உயர் இந்தியம்நான்
அன்றிவேறு எனைக்காணேன்
இங்குயான் வேறுண்டேல்
எனக்குஅறியப் புகலும்என .9.
மெய்உயிர்இந் தியங்கள்அல்லால்
வேறுஅறியேன் என்றவனைப்
பைய!அவை யால்அறியப்
படானும்நீ என்றவரோ .10.
தேகம்வேறு ஆகில்அதைச்
சேர்ந்ததுஇவண் ஏதுஎனவே
சோகமே வினைகருமத்
தொடர்ச்சியினால் என்றவரோ .11.
தேகம்எடா முன்கருமச்
செயல்வரும்ஆறு ஏதுஎனவே
ஏகமாம் மரமும்வித்தும்
எனும்முறைபோல் என்றவரோ .12.
இப்படித் தொடர்கிறது இந்தத் தாலாட்டு. மொத்தம் 103 கண்ணிகளால் அமைந்திருக்கும் இது சங்கிலிபோல் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் அமைந்திருப்பதால் முழுமையாக ஒரு சிறு மின் நூலாக இங்கு நாளை இடுவேன்.
நேற்று ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் டெலி உபந்யாஸத்தை இங்கு கேட்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக