ஞாயிறு, 19 ஜூன், 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் டிப்பணி 3


இது  அடியேன் குறிப்பு:--  தற்போது  நாம்  குறிஞ்சி என்றே எழுதுகிறோம். ஆனால்  நூலில்  குரிஞ்சி  என்றே  உள்ளதால்  அப்படியே இட்டிருக்கிறேன். அதேபோல ஶுத்தாந்த  ஸித்தாந்தி  என்பதும்.  க்ரந்தாக்ஷரங்களுக்கு  தமிழ் லிபி  அடியேன்  கைங்கர்யம்.  க்ரந்தம்  படிக்க  முடியாதவர்களுக்கு  உதவி  என்று  நினைக்கக் கூடாது. அடியேன்  செய்யும்  பிழைகளைச்  சுட்டிக் காட்டித்  திருத்துவதற்காக  என நினைத்து    பிழைகள்  தென்படும்போது  அடியில்  இருக்கும்  comment என்பதை க்ளிக்  செய்து  தெரிவித்து    உதவ வேணும்.

          தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன்  வாழியே  என்றது  ப்ரபன்னர்களுக்குத் தஞ்சமான  ஸ்ரீ பரம பத ஸோபானத்தை அருளிச் செய்யுமவர் என்றபடி. ’கலியனுரை’ என்கிற இடத்தில் திருமொழியில் குடி கொண்ட நெஞ்சினர்  என்று சொல்லி  இங்கு தஞ்சப்பரகதியை  ந்யாஸ வித்தையாக்கி  அத்தை ஸ்தாபித்தருளுமவர்  என்னவுமாம்.
সঞ্জীৱনায সর্ৱেষা০  যেন ন্যাস: প্রকাসিত:প্রপদন কলাজন্মজলধি: (ஸஞ்ஜீவநாய ஸர்வேஷாம்  யேந ந்யாஸ: ப்ரகாஸித:ப்ரபந கலாஜன்மஜலதி:) என்னக் கடவ திறே. செந்தமிழ் செய் தூப்புல்  திருவேங்கடவன்  என்றது ஆழ்வார்களுடைய திவ்ய ஸூக்திகளைக் காட்டிலும்  ஸ்பஷ்டமாக ரஹஸ்ய த்ரயார்த்தங்களையும் , ஸ்ரீ பாஷ்ய கீதா பாஷ்யாதிகளின்  அர்த்தங்களையும்  எளிதாகத் தெரிவிக்கும்  திருமந்திரச் சுருக்கு  முதலிய க்ரந்தங்களை அருளிச்செய்தவரான , அன்றிக்கே பூர்வாசார்ய திவ்ய ஸூக்திகளிலும் எளிதாகத் தெளிவிப்பிக்குமதான  செந்தமிழ் ஶப்தத்தால் உபலக்ஷித  ரஹஸ்யாதி க்ரந்தங்களைச் செய்தருளின  தூப்புல்  குலமுடைய  ஸ்ரீ வேங்கட நாதன்  என்கிற நம்  தேஶிகன் ஜயஶீலராகக் கடவது என்றபடி. வாக்யங்கள் தோறும்   வாழி ஶப்தத்தைக்    கூட்டுகிறது , இத்தூப்புல் குலத்துக்கு,
অন্যেন্দ্রকভুৱনমন্যদনিন্দ্রক০ ৱা কর্তু০ ক্ষমে কৱিরভূদযমন্ৱৱাযে (அந்யேந்த்ரகம் புவநமந்யதனிந்த்ரகம் வா கர்தும் க்ஷமே கவிரபூயமந்வவாயே) என்றிறே ஏற்றம் இருப்பது  

      நாநிலமும் தான் வாழ  என்றது  (மருதம்,முல்லை, குரிஞ்சி,பாலை எனப்படும்) சதுர்வித ப்ரதேஶஸ்தர்களும்  வாழும்படியாக  என்றபடி.  நான்மறைகள் தாம்  வாழ  என்றது பகவத் பாகவதாதிஷ்டிதங்களான  திவ்ய தேஶங்கள் தோறும்  நாலாயிர ப்ரபந்தங்கள் வாழும்படியாக என்றபடி. ஞானியர்கள் சென்னி அணி சேர்    தூப்புல் வேதாந்த தேஸிகனே  என்றது கோதற்ற ஸ்வரூபோபாய புருஷார்த்த  ஜ்ஞானமுடைய ஶுத்தாந்த ஸித்தாந்திகள் திருமுடிக்கு அலங்காரமாகச்  சேர்ந்திருக்கிற  தூப்புல்  குலமுடைய ஸ்ரீமத் வேதாந்த தேஶிகனே என்றபடி. இன்னமொரு  நூற்றாண்டிரும்  என்றது அத்விதீயமான நூறு அஸங்க்யாதமாய் இன்னம் கால தத்வம் உள்ளதனையும் உள்ள அனேகம் வர்ஷங்களிலும் பாங்காக  எழுந்தருளியிருக்க வேண்டும் என்றபடி. இத்தால் நம் தேஶிகன்  திருவவதார ப்ரயோஜனம் திவ்ய தம்பதிகளினுடைய விபுத்வ உபாயத்வாதி ஸமஸ்த கல்யாண குண ப்ரகாஶக திருமந்திரார்த்தமான உபய வேதாந்தங்களுடைய ஸ்தாபனம் என்றும், இது நித்யமாகச் செல்லுகைக்காக அத்தலைக்கு மங்களா ஶாஸனமாய்ப் பல்லாண்டு பாட வேணுமென்றும் சொல்லிற்றாய்த்து.  ஸர்வதேஶ இத்யாதியாய் இவ்வளவும் மங்களா ஶாஸன மாகையினால்  இத்தை  வாழித்திருநாமம்  என்று  நைனாராசார்யர்  நியமித்தருளினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக