ஒரு வாரமாக ஊரில் இல்லை! இன்று வந்து சிறிது இணையத்தில் ஏதும் புதிதாகக் கிடைக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். www.4shared.com என்று ஒரு தளம் . அதில் சும்மா sanskrit என்று தேடினேன். அனேகமாக வைணவர்களுக்குத் தேவையான அனைத்து ஸ்லோகங்களும் எம்.பி 3 வடிவில் இலவசமாகக் கிடைக்கின்றன.ஸ்லோகங்கள் என்றில்லை. ஸமஸ்க்ருதம் கற்றுக் கொள்ள ஏராளமான பாடங்கள் pdf வடிவில் உள்ளன. அகராதி கூட இருக்கிறது. download செய்து சேமித்துக் கொள்ள வேண்டியதுதான். அதேபோல் tamil devotional என்று தேடினேன். அங்கும் எக்கச்சக்கமாக தேவையான பாடல்கள் கிடைக்கின்றன. இவற்றையெல்லாம் அங்கு சேமித்து வைத்து அடுத்தவருக்குப் பயன்படச் செய்துள்ள பலருக்கும் நன்றி!
மாதிரிக்கு இங்கு இரண்டு ஸ்லோகங்கள்நவந்ருஸிம்ஹ மங்களாசாஸனம்
|
2. திருக்குடந்தை ஆராவமுதன் மங்களாசாஸனம்
|
அப்புறம் மாணவர்களுக்குப் பொதுவாக கணக்கு என்றாலே வேப்பங்காயாய்க் கசக்கும் இல்லையா? இந்த பிஸிக்ஸ் ரொம்ப dry என அலுத்துக் கொண்டே படிப்பவர்களில் பலரைக் காண முடியும். ஆனால் ஒரு மாதத்தில் 200,000 மாணவர்கள் இவற்றிற்கான யூட்யூப் விடியோக்களை ஆர்வமாகப் பார்க்கிறார்களாம். வெகு எளிதாகக் கற்றுக் கொள்கிறார்களாம். அப்படி ஒரு மந்திரத்தை இந்த சல்மான்கான் (ஹிந்தி நடிகரா என திகைக்க வேண்டாம். இவர் வேறு) செய்கிறார் என்று இணையம் சொல்கிறது. சல்மான்கான் , தான் படிக்கும்போது தனது ஆசிரியர்கள் எப்படியெல்லாம் பாடம் நடத்தியிருந்தால் கற்பது இனிமையான அனுபவமாக இருந்திருக்குமோ என்று தான் ஏங்கியதை நடைமுறைப் படுத்தியதால் இது சாத்தியமாயிற்று என்று கூறுகிறார். வீடியோக்களைப் பார்த்தால் அது வாஸ்தவம்தான் என்று ஏற்பதோடு, அடியேனுக்கும் அப்படி ஆசிரியர்கள் வாய்த்திருந்தால் ஏதோ கொஞ்சமாவது படித்திருக்கலாம் இப்படிப் பாமரனாக இருந்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.
இது அவர் சொல்லித் தரும் பாடங்கள்
Algebra 1 | Algebra | California Standards Test: Algebra I | California Standards Test: Algebra II | Arithmetic | Pre-algebra | Geometry | California Standards Test: Geometry | Chemistry | Brain Teasers | Current Economics | Banking and Money | Venture Capital and Capital Markets | Finance | Valuation and Investing | Credit Crisis | Geithner Plan | Paulson Bailout | Biology | Trigonometry | Precalculus | Statistics | Probability | Calculus | Differential Equations | History | Linear Algebra | Physics | இங்கு மாதிரிக்கு ஒரு வீடியோ. Please click here. |
நமக்கு சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு மின் அஞ்சல் இருந்தா சுட்டியை கொடுத்து உதவலாம்.:-)
பதிலளிநீக்கு