இந்திய தொலைபேசி வரலாற்றில் முதல் முறையாக வினாடிகளில் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கத் தொடங்கி ஒரு பெரிய தாக்கத்தை டோகோமோ நிறுவனம் உருவாக்கியது. மற்ற நெட்வோர்க்குகளிலிருந்து டோகோமோ பயன்படுத்துவோரை எளிதில் அழைக்க முடியாத நிலை உள்ளதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் இதுநாள் வரை தூங்கிக் கொண்டிருந்த பி எஸ் என் எல்லும் போட்டிகளை சந்தித்து இழந்து வரும் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும், தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பேசுகிற வினாடிகளுக்கு மட்டும் வினாடிக்கு ஒரு பைசா என்று கணக்கிடுவதை அறிமுகப் படுத்தியுள்ளது. இதற்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 45 ரூபாய் வவுச்சரை வாடிக்கையாளர் தங்கள் கணக்கில் ஏற்றிக் கொள்ள வேண்டும். முழு விவரம் அறிய http://tamilnadu.bsnl.co.in/Content-Launching%20of%20boosters-151009.pdf
ஆனால் என்ன செய்து என்ன பெரும்பாலான ஊர்களில், குறிப்பாகச் சென்னையில் வீதியில் நின்றால் மட்டுமே கிடைக்கும், வீட்டிற்குள் சிக்னல் கிடைக்காது என்ற நிலை இருக்கும்வரை வாடிக்கையாளர்களை எப்படி பி எஸ் என் எல் கவரப் போகிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக