புதன், 28 அக்டோபர், 2009

இன்று வந்த புத்தகங்கள்

இன்று காலையில் டெல்லி அன்பில் ஸ்வாமி அனுப்பி வைத்திருந்த புத்தகங்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன். வீடு திரும்பியதும் முதல் வேலையாக அந்த மூடையைப் பிரித்து புத்தகங்களை ரகவாரியாக, பொருள்வாரியாகப் பிரித்து அடுக்கியபின் மேலோட்டமாக ஒரு முறை படித்ததில் (அதாவது நூல் தலைப்புகள், பொருள், பதிப்பித்த ஆண்டு இவற்றை மட்டும் பார்த்ததில்) சற்று ஏமாற்றமே ஏற்பட்டது. ஏமாற்றம் நூல்களினால் அல்ல! அனேகமாக எல்லாமே படித்து அனுபவித்து மகிழக் கூடியவைதாம். (ஒரு சில மட்டும் சஹஸ்ரநாமத்தின் பல்வேறு பதிப்புகள்) ஆனால் பெரும்பான்மை ஸ்ரீஸேவா ஸ்வாமியால் பதிப்பிக்கப் பட்டவை.  ஸ்ரீ தேசிக ஸேவா அலுவலகத்தில் கிடைக்கக் கூடியவை. வேறு பலவோ ஒரு 20/30 ஆண்டுகளுக்குள்ளாகப் பதிப்பிக்கப் பட்டு காபிரைட் உரிமையுடன் உள்ளவை. இந்த காபிரைட் விஷயம் ஏற்கனவே ஒரு முறை அடியேனைப் பாடாய்ப் படுத்திய ஒன்று. அதன் காரணமாகவே எழுதிப் பதிப்பித்தவரின் வாரிசுகளிடம் அந்த அருமையான நூல் இல்லாவிட்டாலும்கூட, இன்னும் சொல்லப் போனால், அவர்கள் அந்நூலைப் பற்றி முதன் முறையாக அடியேனிடமிருந்தே தெரிந்து கொண்டாலும்கூட, அதை எவ்விதத்திலும் வெளியிடக் கூடாது என்று தடை விதிக்கப் பட்டு இன்றளவும் அடியேனின் புத்தக அலமாரியில் அது உள்ளது.  ஆகவே அவற்றையும், ஸ்ரீஸேவா ஸ்வாமிகள் எழுதிய நூல்களையும் இப்போதைக்கு அடியேன் மட்டுமே படித்து திருப்தி அடைய வேண்டியதுதான்.  அவை போக பகிர்ந்து கொள்ளக் கூடியவையாக 1970ல் திரு V.S. Mudaliar எழுதியுள்ள Kamba Ramayanam – A condensed version in English verse and prose , 1907ல் வெளியிடப் பட்டுள்ள Divine Wisdom of Dravidian Saints (author name not known) “The Mukundamala or The Lord’s Wreath” written by Sri Srinivasa varadachariar and published in1926, “Grains of Gold” (from the Vaishnava Mystics) written by Sri R.C.desikan and sri B.L.Ranganathan and published in 1934, “ஸ்ரீ குலசேக ராழ்வார் அருளிச் செய்த முகுந்தமாலை , டி.ஸீ. பார்த்தசாரதி அய்யங்கார் விருத்தியுரையுடன் “ (1937), 1893ல் திருக்குடந்தை தட்டை கிருஷ்ணமாச்சாரியார் பிரதிக்கிணங்க அனந்தாச்சாரியாரால் வெளியிடப் பட்டிருக்கும் ஸ்ரீ தேசிகப் பிரபந்தம், 1979ல் தமிழாக்கப் பட்டிருக்கும் ஸ்ரீ வைராக்ய பஞ்சகம், என்பவை இருக்கின்றன. மேலும் இரு நூல்கள், 1911ல் காஞ்சிபுரம் ஸ்ரீசைல தாத்தாசாரியரால் பதிப்பிக்கப் பெற்றிருக்கும் கிரந்தமும், தமிழும் கலந்து விரவிய சந்த்யாவந்தன பாஷ்யம், 1915ல் வேலாமூர் ஸ்ரீநிவாஸராகவாச்சாரியரால்  ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் தொடங்கி சில தேசிக ஸ்தோத்ரங்களுக்கு முழுவதும் கிரந்தத்தில் வ்யாக்யானங்கள் (கூகுள் குரூப்ஸில் கிரந்தம் குரூப்பில் சேர்ந்து எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்திருப்பதால் இது தெரிந்தது) மிக நேர்த்தியாக கட்டியிருப்பதால் (bound ) அவற்றை ஸ்கான் செய்து கூடப் பகிர முடியாது. ஆக, தேறுகின்ற 7 நூல்களையும் முடியும்போது வலையேற்றுகிறேன்.

     இந்த 7ல் ஒன்றாகிய தேசிகப் பிரபந்தத்தின் முன்னுரையை மட்டும் படித்துப் பார்த்தேன். ஸ்வாமி அருளிய நூல்களையெல்லாம் பட்டியலிடும்போதும், அதில் லுப்தமானவைகளைப் பற்றிச் சொல்லும்போதும், ஸ்வாமியின் “ நிகம பரிமளம்” பற்றிக் குறிப்பிடவில்லை. அது ஏனோ தெரியவில்லை. 

இப்போதைக்கு அந்த நூல்களின் இடையே இருந்த இரண்டு தனித் தாள்களிலிருந்து ஒரு pdf இங்கே !

dasavathar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக