தமிழில் பாதுகாசஹஸ்ரம்
சில தினங்களுக்குமுன் திருப்புல்லாணி வந்த பங்களூர் ஸ்ரீ ரங்கராஜன் ஸ்வாமி இன்று அடியேனுக்கு ஒரு அற்புதமான பரிசை அனுப்பியுள்ளார். ஸ்வாமி தேசிக னின் பாதுகாசஹஸ்ரத்தின் தமிழாக்கம் அது. ஆக்கூர் ஆண்டவனின் திருவடி ஆத்தூர் வீரவல்லி சந்தானம் ஐயங்கார் இயற்றியுள்ள அந்நூல் மிகவும் அருமை யாக உள்ளது. அவரே மிக எளிமையான விளக்கவுரையும் எழுதியுள்ளார். ஸ்ரீ கேசவ அய்யங்காரின் திருப்பாதுகமாலை கங்கை இது காவிரி. மாதிரிக்கு ஒரு வெண்பா கொடுத்துள்ளேன். இந்த நூல் ஸ்ரீ பகவன் நாம பப்ளிகேஷன்ஸ், “ராம மந்திரம்”, 2, வினாயகம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600033 என்ற விலாசத்தில் கிடைக்கும். விலை 60 ரூபாய்.
சீரங்கர் சேவடியை சென்னிமிசை வைத்தேத்தும்
பாரங்கர் பாதம் படிவதால் - பாரெங்கும்
ஏதமிலா சேமமே எய்தும் அவர்தம்நல்
பாதம் பணிவாம் பரிந்து.
சிந்தித்துச் சிந்தித்துச் செந்தா மரையடியை
வந்தித்து வந்தித்து வாயார -- பந்தித்து
செம்மனத்தே வைத்துச் சிறையிட்ட சீரியரை
நம்மனத்தே வைத்தல் நலம்.
Repected Sriman Raguveerdayal Swamin
பதிலளிநீக்குYour web pages are a amudhak kadal for bhakthas.
Adiyen
Srivilliputtur Govindakrishnan Alagar
அடியேன் பாக்யம் தேவரீரைப் போன்ற சான்றோரிடமிருந்து ஆசிகள் கிடைப்பது. ஆனால் அடியேன் பணி அச்சாபீஸில் அச்சுக்கோர்ப்பவரையொத்ததே. ஞான சூன்யம். நிரக்ஷர குக்ஷி என்ற சொற்களுக்கு முழு உதாரணம் அடியேன்.
பதிலளிநீக்கு