ஞாயிறு, 29 ஜூலை, 2007

புல்லாணி மாலை

 

திருப்புல்லாணி
பத்மாசனித் தாயார்

பாவை யர்க்கர சான பழம்பொருள்

தேவை யற்புத மாலைத் தினம்புணர்

பூவையைத் திருப் புல்லையிற் பொன்னியைச்

சேவை பெற்றிடத் தீவினை இல்லையே.

இல்லை இல் லையெனாம லிகபரத்
தொல்லை நீக்கித் துணை செய்குவா டிருப்
புல்லை நாயகி பூவடி போற்றினால்
தொல்லை யாளவுஞ் செய்வள் கதிக்கவே.

கதித்தன மேவு கடற் கரைப் புல்லையம்
பதித்த லம்புகல் பன்மணிக் கோயிலை
மதித்த லம்புயத் தாளை வணங்குதல்
துதித்த லம்புவித் தூயவர் செய்கையே.

செய்கை யாலுந் திறங்களி னாலின
வைகை பாயும் வளமுள சக்கரப்
பொய்கை சூழ்திருப் புல்லையி னாயகி
கைகை மேற்பலன் காட்டித் தருவளே.

திருவ னந்தனை யாள்வர் கடண்மலர்
மருவ னந்தனை யூர்மன்ன னாகிய
பருவ னந்தனைச் சேர்புல்லைப் பைங்கிளி
திருவ னந்தனைச் சேவித்த பேர்களே.

பேரி லங்கும் பெரியவள் புல்லைமால்
மாரி யங்கும் பருமுலைச் சிற்றிடைத்
தூரி யங்கொண் டெழுதவொண் ணாத்துய்ய
நாரி யெங்கள் நயனத் திருப்பளே.

திருப்புல் லாணித் திருமகள் சீரடி
விருப்பு ளோர்கள் வினைதவிர்ந் தேயன
நெருப்பு னீர் விண்ணின் மாருதத்தால் வருங்
கருப்பு காமற் கதிகொடுத் தாள்வளே.

ஆள வந்தவள் புல்லையி னாயகி
தாள லர்ந்த சரோருகத் தன்னிலெந்
நாள டங்கலும் நண்ணித் தொழாய்நெஞ்சே
கோளடங்கும் வெங்கூற்று  மடங்குமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக