புதன், 13 மே, 2009
சேதுக்கரையில் தீர்த்தவாரி
திங்கள், 11 மே, 2009
11th day (Vidayaatri) at Thiruppullani
மாலையில் சாத்துமுறைக்காக காத்திருந்த சமயத்தில், அங்கு கூடியிருந்த பெண்களிடம் பாலிகையைச் சுற்றி கும்மி அடிக்க கோவில் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அவர்களோ … தயங்கினார்கள் எனக்குத் தெரியாது உனக்குத் தெரியாது என ஒதுங்கினார்கள். கோவிலாரோ விடுவதாயில்லை. ஒருவழியாக ஆரம்பித்தாலும், தட்டுத் தடுமாறி என்ன பாடுவது எப்படி கும்மி அடிப்பது என்று புரியாமல் திகைத்த வேளையில் “கல்கி” கதை ஆழ்வார்க்கடியான் போல் ஒருவர் திடீரென்று பெண்கள் நடுவில் நுழைந்து ஆண்டாள் குறவஞ்சியைப் பாடிக்கொண்டு கும்மி அடிக்க ஆரம்பித்தார் அதன்பின் அவரைப் பார்த்து எங்களூர்ப் பெண்களும் ஒருவழியாக கும்மி அடித்து முடித்தார்கள்.
இதில் வேதனை பெண்கள் அனைவருமே கோவில் கைங்கர்ய பரர்கள் குடும்பத்தினர் என்பதும் வந்தவர் திருக்குறுங்குடி நாராயண பாகவதர் என்ற அபிராமணர் என்பதும்தான்.
,
அந்த வீடியோ காட்சியைக் காணுங்கள். முதலில் பெண்கள் திகைப்பதையும், நடுவில் பாகவதர் நுழைந்து தூள் கிளப்புவதையும் கவனியுங்கள்.
கும்மி ஒலியில் பாடல் தெளிவாகக் கேட்கவில்லை. என்னிடம் இருப்பதோ ஸ்டில் காமரா. ஆண்டாள் குறவஞ்சி கேட்க விரும்புபவர்களுக்காக அவரை மீண்டும் பாடச் சொல்லி பதிவு செய்துள்ளேன். அதை இங்கிருந்து கேட்கலாம் தரவிறக்கிக் கொள்ளலாம்.
வெள்ளி, 8 மே, 2009

தேர் இழுக்கப் போப்போறேன்

வடம் பிடிக்கலாமா !

திவான் மரியாதையை ஏற்றுக் கொண்டு வடம் பிடிக்கப் போகிறார்.

தேரை நிலைக்கு கொண்டு வந்து சேர்த்துட்டோம்!
பெருமாள் தீர்த்தம் தெளியுங்க சாமி!!

திருத் தேரில் சீதா லக்ஷ்மணருடன் இராமன்
திருப்புல்லாணியில் இன்று திருத்தேர்.
ஒருகாலத்தில்
" ஊரெலாம் வாசல்தோறும் வெண்ணீறு தீட்டியே
யுவந்து சந்தனக் கோலமிட்
டுறுமலர்க்காவணத் தோரணப் பந்தரி
லும்பருட னம்புவியன் மறை
கூறுமாதவரையந் தணரை யாதுலந்தழைக்
குணமாயழைத் துவந்து
தோதற்ற கருணைதீம் பாலடிசில் நறியநெய்
கொழுங்கனிகளுடன ருத்தி
வாரேறு கும்பமுலை மாதர் பூரணகும்ப
வாழை கன்னல் நிரைப்ப
வானவர்கள் தானவர்கள் மலரயன் சிவன்
முதல் வணங்கியே வடம்பிடிப்பத்
தேரேறி வீதிவலம் வந்து ........"
என ஆரவாரமாக கொண்டாடப் பட்டிருக்கிறது. இதில் இப்போது நடப்பது மறை
கூறுமாதவரையந் தணரை யாதுலந்தழைக்
குணமாயழைத் துவந்து
தோதற்ற கருணைதீம் பாலடிசில் நறியநெய்
கொழுங்கனிகளுடன ருத்தி
அதாவது ததியாராதனை மட்டுமே. பெருங்காயச் செப்பாக உத்ஸவங்கள் இங்கு நடந்தாலும், பக்கத்து கிராம மக்கள் எவ்வளவு உற்சாகமாக வந்து தேர் இழுக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ காட்டும். அங்கங்கே வரும் "பறைக் கொட்டை" யும் ரசியுங்கள். மேள வாத்தியங்கள் இருந்தாலும், இந்த பறைக்கொட்டு வந்தால்தான் தேர் நிலை விட்டு நகரும். சமுதாயத்தின் அனைத்து மக்களையும் அணைத்துச் சென்ற பண்டைய நாள் ஏற்பாடு.
சுட்டெரிக்கும் வெய்யிலை "கோவிந்தா" கோஷங்களுடன் சமாளித்து தேரை இரண்டு மணி நேரத்துக்குள் நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்த அந்த எளிய மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தங்கள் மீது பெருமாள் தீர்த்தம் தெளிக்கப் படவேண்டும் என்பது மட்டுமே! வீடியோவில் அதையும் கவனியுங்கள்.
வியாழன், 7 மே, 2009
திருப்புல்லாணி குதிரை வாகனப் புறப்பாடு.
திருப்புல்லாணி சித்திரை ஸ்ரீ இராமன் ப்ரும்மோத்ஸவத்தில் 8ம் நாள் இரவு குதிரை வாகன புறப்பாட்டில் சில காட்சிகள். சென்னை திருவல்லிக்கேணியை ஞாபகப்படுத்தும் அளவு வாணவேடிக்கைகளுடன் நடந்த திருவீதிப் புறப்பாட்டின்போது திருமங்கை ஆழ்வாரை ஆட்கொள்வதும் இங்கே காணலாம்..
அழகன் ஆராவமுதன்
கோவில் குடவரை வாயிலில்
திருவீதிப் புறப்பாடு துவக்கம்
திருமங்கை என்னும் கள்வனைத் தேடுகிறார்கள்
கள்வனைப் பிடித்தாயிற்று!
கள்வனுக்கு மரியாதை!!
கட்டுப் பட்டயம் (கணக்கு) வாசிக்கிறார்.
ஆழ்வாருக்கு அனுக்ரஹம்.
தேர் கடாக்ஷம்.
திருப்புல்லாணி – சித்திரை 8ம் நாள்
திருப்புல்லாணி திருப்புல்லாணி சித்திரைத் திருநாளின்8ம்நாளாகிய
இன்று மாலை ஸ்ரீராமன் வேட்டைக்கு எழுந்தருளிய காட்சிகள் இங்கு உள்ளன.
ஒரு பாக்யசாலிக் குடும்பம்
அந்த நாளில் மன்னராட்சி காலத்தில் கிராமங்களில் முனுசுப் பிள்ளை என அழைக்கப்பட்ட கிராம ஹெட்மேன்களுக்கு மன்னருக்கு அடுத்தபடியாக எல்லா அதிகாரங்களும் இருந்து வந்தன. திருப்புல்லாணியில் இருந்த முனுசுப் பிள்ளையை கௌரவிக்க அந்த நாளில் செய்த ஏற்பாடு இன்றுமுனுசுகள் இல்லாவிட்டாலும் தொடர்வது அந்தக் குடும்பத்தார் செய்த பெரும் பாக்யம். மற்ற நாட்களில் எல்லாம் வீதிப் புறப்பாட்டின் போது அவரவர்கள் வீட்டு வாயிலில் ஓரிரு நிமிடங்கள் நின்று உபகாரங்களை ஏற்கு
ம் பெருமாளும், இராமனும் 8ம் திருநாள் வேட்டைக்கு ஏளும்போது வேட்டையாடிய பிறகு வழக்கமான பெரிய திருவீதிப் புறப்பாடு தவிர்த்து மாட வீதிக்குள் நுழைந்து அங்கு முதலில் இருக்கும் முனுசுப் பிள்ளை வீட்டு வாயிலில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்து அங்கு திருக்கண் கண்டருளி அனுக்ரஹம் செய்யும் அந்த மரியாதை இன்றும் பதவிகள் எதுவும் இல்லையாயினும் அவர்கள் வம்சத்தவருக்கு அளிக்கப் பட்டு வருகிறது. இங்கு அந்தக் காட்சிகள் சில உள்ளன.



