வெள்ளி, 8 மே, 2009



தேர் இழுக்கப் போப்போறேன்


வடம் பிடிக்கலாமா !



திவான் மரியாதையை ஏற்றுக் கொண்டு வடம் பிடிக்கப் போகிறார்.






தேரை நிலைக்கு கொண்டு வந்து சேர்த்துட்டோம்!
பெருமாள் தீர்த்தம் தெளியுங்க சாமி!!





திருத் தேரில் சீதா லக்ஷ்மணருடன் இராமன்


திருப்புல்லா
ணியில் இன்று திருத்தேர்.

ஒருகாலத்தில்

" ஊரெலாம் வாசல்தோறும் வெண்ணீறு தீட்டியே
யுவந்து சந்தனக் கோலமிட்
டுறுமலர்க்காவணத் தோரணப் பந்தரி
லும்பருட னம்புவியன் மறை
கூறுமாதவரையந் தணரை யாதுலந்தழைக்
குணமாயழைத் துவந்து
தோதற்ற கருணைதீம் பாலடிசில் நறியநெய்
கொழுங்கனிகளுடன ருத்தி
வாரேறு கும்பமுலை மாதர் பூரணகும்ப
வாழை கன்னல் நிரைப்ப
வானவர்கள் தானவர்கள் மலரயன் சிவன்
முதல் வணங்கியே வடம்பிடிப்பத்
தேரேறி வீதிவலம் வந்து ........"


என ஆரவாரமாக
கொண்டாடப் பட்டிருக்கிறது. இதில் இப்போது நடப்பது மறை
கூறுமாதவரையந் தணரை யாதுலந்தழைக்
குணமாயழைத் துவந்து
தோதற்ற கருணைதீம் பாலடிசில் நறியநெய்
கொழுங்கனிகளுடன ருத்தி

அதாவது
ததியாராதனை மட்டுமே. பெருங்காயச் செப்பாக உத்ஸவங்கள் இங்கு நடந்தாலும், பக்கத்து கிராம மக்கள் எவ்வளவு உற்சாகமாக வந்து தேர் இழுக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ காட்டும். அங்கங்கே வரும் "பறைக் கொட்டை" யும் ரசியுங்கள். மேள வாத்தியங்கள் இருந்தாலும், இந்த பறைக்கொட்டு வந்தால்தான் தேர் நிலை விட்டு நகரும். சமுதாயத்தின் அனைத்து மக்களையும் அணைத்துச் சென்ற பண்டைய நாள் ஏற்பாடு.
சுட்டெரிக்கும் வெய்யிலை "கோவிந்தா" கோஷங்களுடன் சமாளித்து தேரை இரண்டு மணி நேரத்துக்குள் நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்த அந்த எளிய மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தங்கள் மீது பெருமாள் தீர்த்தம் தெளிக்கப் படவேண்டும் என்பது மட்டுமே! வீடியோவில் அதையும் கவனியுங்கள்.


வியாழன், 7 மே, 2009

திருப்புல்லாணி குதிரை வாகனப் புறப்பாடு.

திருப்புல்லாணி  சித்திரை ஸ்ரீ இராமன் ப்ரும்மோத்ஸவத்தில்  8ம் நாள் இரவு குதிரை வாகன  புறப்பாட்டில் சில காட்சிகள்.  சென்னை திருவல்லிக்கேணியை ஞாபகப்படுத்தும்  அளவு  வாணவேடிக்கைகளுடன் நடந்த  திருவீதிப் புறப்பாட்டின்போது திருமங்கை ஆழ்வாரை ஆட்கொள்வதும்  இங்கே காணலாம்..

ragu 021

குதிரை  வாகனத்தில்  கிளம்ப தயார்!

ragu 022

அழகன்  ஆராவமுதன் 

ragu 027

கோவில்  குடவரை வாயிலில்

ragu 028

திருவீதிப் புறப்பாடு  துவக்கம்

ragu 030

திருமங்கை என்னும் கள்வனைத் தேடுகிறார்கள்

ragu 031

கள்வனைப் பிடித்தாயிற்று!

ragu 033

கள்வனுக்கு  மரியாதை!!

ragu 035

கட்டுப் பட்டயம்  (கணக்கு)  வாசிக்கிறார்.

ragu 038

ஆழ்வாருக்கு அனுக்ரஹம்.

ragu 041

தேர் கடாக்ஷம்.

ragu 043

தேரடிக் கருப்பருக்கு  மரியாதை!!

திருப்புல்லாணி – சித்திரை 8ம் நாள்

ragu 001

திருப்புல்லாணி திருப்புல்லாணி சித்திரைத் திருநாளின்8ம்நாளாகிய

இன்று மாலை ஸ்ரீராமன் வேட்டைக்கு எழுந்தருளிய காட்சிகள் இங்கு உள்ளன.






ஒரு பாக்யசாலிக் குடும்பம்

அந்த நாளில் மன்னராட்சி காலத்தில் கிராமங்களில் முனுசுப் பிள்ளை என அழைக்கப்பட்ட கிராம ஹெட்மேன்களுக்கு மன்னருக்கு அடுத்தபடியாக எல்லா அதிகாரங்களும் இருந்து வந்தன. திருப்புல்லாணியில் இருந்த முனுசுப் பிள்ளையை கௌரவிக்க அந்த நாளில் செய்த ஏற்பாடு இன்றுமுனுசுகள் இல்லாவிட்டாலும் தொடர்வது அந்தக் குடும்பத்தார் செய்த பெரும் பாக்யம். மற்ற நாட்களில் எல்லாம் வீதிப் புறப்பாட்டின் போது அவரவர்கள் வீட்டு வாயிலில் ஓரிரு நிமிடங்கள் நின்று உபகாரங்களை ஏற்கு

ம் பெருமாளும், இராமனும் 8ம் திருநாள் வேட்டைக்கு ஏளும்போது வேட்டையாடிய பிறகு வழக்கமான பெரிய திருவீதிப் புறப்பாடு தவிர்த்து மாட வீதிக்குள் நுழைந்து அங்கு முதலில் இருக்கும் முனுசுப் பிள்ளை வீட்டு வாயிலில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்து அங்கு திருக்கண் கண்டருளி அனுக்ரஹம் செய்யும் அந்த மரியாதை இன்றும் பதவிகள் எதுவும் இல்லையாயினும் அவர்கள் வம்சத்தவருக்கு அளிக்கப் பட்டு வருகிறது. இங்கு அந்தக் காட்சிகள் சில உள்ளன.



திருப்புல்லாணி வாகனமாலையிலிருந்து

திருப்புல்லாணியில் சித்திரை 7ம் நாள் உத்ஸவம்.

சூர்ணோத்ஸவத்துக்கு சீதை, லக்ஷ்மணனுடன் புறப்படும் ஸ்ரீராமன்.



திருமஞ்சனம் ஆரம்பிக்கப் போகிறது.



திருமஞ்சனம் -- பால்




மதுவர்க்கம் --