ஞாயிறு, 2 டிசம்பர், 2007

இன்று முதல்....



இன்றுமுதல் பக்கத்திலே இருக்கிற labels போய் உங்களுக்கு விருப்ப மானதைப் படிக்க வேண்டுகின்றேன்.அனேகமாக ஒரு நாளில் ஓரிரு மணி அளவிலேயே கரண்ட் இருப்பதால், தினமும் update செய்ய முடியவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

திருப்பாதுகமாலை

5.பதிற்பயணப்பத்ததி

121.   அரியி ரண்டடி தம்மிலு மண்டினோர்க்
           கருணி றைந்திறை யாற்றல லர்ந்தசீர்த்
           திருவி ரண்டுதி ரண்டதெ னத்திகழ்
           பரிவு மன்னிரு பாதுக மெண்ணுவாம்.

122.    சரணம்புகு மனுசன்னிர வவனத்தொரு வனமே
            பெரிதென்றக லலகில்லிறை நிறைதாளிணை யணவா
            தொருதாயென வுருகிப்புர வுயிர்நோக்கிட வருமத்
            திரிவையக லருளினிறை யரிபாதுகை தெரிவன்.

123.    பிழையய்யிரு தலையன்னிலை குலையுந்திரு விதயத்
            தெழுமய்யன துரைமெய்யுற விரைதண்டக நடையே
            பழியஞ்சிய பரதன்புரி விரதத்திறை பிறழா
            தொழுகும்பரி தரநீபுரி வரவோங்கினை நடையில்.

124.     இணையில்லரி யிறையங்கிரி விரியும்பரி நிறைவிற்
             பணையன்னவ னிடுமேவலி னிலையேபணி யதுவென்
             றிணையத்திற பரதந்திர விரதந்தெரி நிலையில்
            திணியப்பணி துணிசீதையை மணிபாதுகை !மிகுவாய்.

125.    திருமன்னுர னிருவர்கணை விழையுந்நில மகளா
            ருரமன்னவ னுரையில்விழ வுறுமன்னடி நிலையே !
            வருநின்னிறை மனனில்லது தருநின்னரு ணிகழச்
            சரணத்திரு வணவப்பெறு சதிரன்றவன் பெறுவன்.

126.    தெளிமந்திர கலசப்பனி யலசாநல வமலத்
            தொளிசெய்திட லறுமத்திற வொளிமின்னெடு முடிகொண்
            டளிவிஞ்சிட மணிபாதுனை யரியேவலி னடைகொள்
            ளொளிநல்லா சகிலங்கொள நடைகொண்டன னனுசன்.

127.    மறையாதிய னிலையங்கிரி மலரங்குறு பிரிவிற்
           பொறைமாநல நிலைநோக்கிய பொறைநின் றுயர் தவமே
           நிறைநீபத நிலை ! சீதையு மரசும்நெடு சிறையும்
           முறையேகொள வெதுதானும துறவிற்செய லரிதே?

128.  உடனாடிய பரதன்பணி முடியேறிய பதமாண்
          பொடுதாவிய கடகுஞ்சர முயர்மஞ்சணி யணைமீ
          திடுமாசன மணிபாதுன திருபாரிச மணிமின்
          னிடுகூந்தலி னெடுசாமரை யென வீசினை யொளியே.

129.  விளையத்துணை முதுநல்வினை யிணைமத்தக மிசையே
          றொளிகொள்ளணி மணிபாதுகை ! யுனையேந்திய வளவில்
          வளநன்மண ரகுநாயக வயமாமத வமுதின்
          வெனநின்மல மலிசாந்தென வெழில்பூசின ணிலையே.

130.   தெரிதற்செய றருநற்சர விருதில்வர வொருநீ
           யரியங்கிரி நிலை!யாசைக ணிறைகோசல வமலப்
           புரமங்கையர் நயனாம்புத முமிழும்மழை யொழியும்
           பரியொன்றளி யொளியோங்கிய படிபூத்தனை நொடியில்.
      
                

சனி, 1 டிசம்பர், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

பாம்பாட்டியின் கருவமழித்தல்

                  விருத்தம்

தாம்பாண்டிநாடுமலைநாடுஞ்சோழ
         தரணியிலுளமுளதிவியதேசமேயெல்
லாம்பாண்டித்தியஞ்சிறந்தபிள்ளைதாமுல்
         லாசமதாய்த்தொழுதுகொண்டுகாஞ்சிசேர்ந்தார்
வீம்பாண்டிறமைசொல்லும்வாதிமாரை
         வென்றடக்கிவேதாந்தம்விளக்குநாளில்
பாம்பாண்டியொருவன்வந்துவாதுசொல்லப்
         பார்க்கின்றார்ஜயவிருதையேற்கின்றாரே.

தரு- இராகம்- புன்னாகவராளி- தாளம்-ஆதி
                       பல்லவி

வேண்டிமந்திரம்கற்றாரே - வாதியானபாம்
பாண்டிதனைச்            செயித்தாரே.

                  அனுபல்லவி

பாண்டவர்க்குத்தூதாகத் தாண்டிநடந்த பாத
நீண்டவரதரருள் பூண்டவேதாந்த குரு.              (வே)

                   சரணங்கள்

          சோளிகை  நரேந்திரனே - இவர்தந்திரு
           மாளிகைவாசன்முனே

நாளொன்றுபவாசத்தால் மீளுங்கோபத்தாற்சொல்வான்
கேளுமென்னைச்செயித்தானீளுங்கீர்த்தியென்றானே.(வே)

            சர்வதந்த்ர   சுவதந்த்ரம் -- விருதுபெற்ற
            நிர்வாகர்பாம்பு   மந்திரம்
அறிவிராகிற்பிடாரன்நெறிகண்டுநாகங்களைக்
குறிகண்டுதடைகட்டிமறியும் பார்ப்போமென்றானே.  (வே)

        இவனோடென்ன    விவாத -- மென்றிருந்தாலும்
        அவனோபுசியான்           சாதம்.
எவர்தாமாகிலும்வந்தொ ருவர்வாசல்காத்திருந்தாற்
கவலையைவிசாரிப்பார் குவலயத்தில்வழக்கம்.            (வே)

         பார்த்துவாவென்று  கூறிக் -- கோயின்முன்னெழு
         கீற்றையிவர்தாங்        கீறி
ஏற்றவுன்னிடத்திலே வாய்த்தபாம்புகளெல்லாஞ்
சேர்த்துவிடுவாயென்றே சாற்றினாரெங்கள்குரு.          (வே)

          மிடுக்குடன்பாம்    பாட்டி -- மாநாகங்கள்
          விடுக்குந்திறமை           காட்டித்
தொடுக்குந்தருணங்கீற்றைக் கடக்கமாட்டாததுகள்
முடக்கங்கொடுத்ததுகண் டெடுக்குங்கோபமிஞ்சவே.

           வாசுகிதட்சக        சமான - நாகங்களை
           வீசியேவவு        மங்கான
பேசியொன்றிரண்டான ராசிரேகையிற்சென்று
கூசிநின்றதுகண்டு    மேசிவப்பானான்கண்கள்.        (வே)

         அங்குரேகையைத் தாவச் -- சர்வபூத
         சங்குபாவனை      யேவப்
புங்கமாயேழுகீற்றை  யுங்கடந்ததுமிவ
ரங்கந்தொடவரக்கண்டுங்  கருடனையெண்ண           (வே)

            இவ்விதங்கருடன்      வந்தே -- சங்கபாலனைக்
            கவ்விக்கொண்டு     பறந்தே
செவ்வையெழுந்தருள  அவ்விஷவயித்ய
னெவ்வயணமறிவான் றிவ்யபாதந்தொண்டென்றான்.(வே)

           உந்தமதடிமை    காணுன்ஞ் -- சங்கபாலனைத்
           தந்துரக்ஷிக்க       வேணும்
எந்தங்குருவேயென்று  வந்தான்கருடதண்ட
கந்தன்னாற்சங்கபால னும்திரும்பிடத்தந்தார்.          (வே)

                      விருத்தம்

புண்ணியகோடிகட்கெல்லாமிடமாங்காஞ்சி
        புரந்தனிலே சிலகாலமிருந்துபின்னு
மெண்ணியதெல்லாங்கொடுக்கும்வேங்கடத்தி
        லேகியேமங்களாசாசனந்தான்
நண்ணியபின்றிருவரங்கப்பதியைநெஞ்சி
          னாடியேயெழுந்தருளிவந்தாரெங்கள்
பண்ணியமிக்கானதபோபலன்கைவந்த
          பலத்தினார் தூப்புலென்னுந்தலத்தினாரே.

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

தரு-இராகம்-சவுராஷ்ட்ரம்-தாளம்-- ஆதி

பல்லவி

பிள்ளையென்றாலிவரே       பிள்ளை
ப்ரபலங்கொண்டதூப்புற்     பிள்ளை                 (பிள்)

அநுபல்லவி

வெள்ளைப்பரிமுகங்    கொண்டார்
  மிகுந்துலாலாமுத      முண்டார்                         (பிள்)

சரணங்கள்

ஏற்குங்கோயிலுக்கே      நண்ண
   எழுந்தருளியோர்நா     ளுண்ண
மார்க்கத்திற்றளிகை       பண்ண
    வாய்க்காமலரியை     யெண்ண

வழியிலங்கடியிலுள்ள   அவரைது
   வரைகோதுமைகொள்ளுமுதலாகியவற்றைப்
பழுதில்லாதவேதம்பரவுமெங்கள்வெள்ளைப்
   பரிமுகரமுதுசெய்திடவைத்தாரே.                       (பிள்)

கோமுட்டிகள்கண்டு       வெள்ளைக்
    குதிரையாரதிந்தக்      கொள்ளை
தாமிட்டுத்தின்பதும்         சள்ளை
   தானென்றோட்டிவிடப்  பிள்ளை
திரைவர்ணிகராகும்வைஷ்ணவர்க்ருஹத்தில்
   தங்கவங்கணுமப்படிக்கேசெய்தருள
இவ்வண்ணஞ்செய்ததிதாரதெனவேவேங்க
  டேசதேசிகரதென்றறியவைத்த                              (பிள்)

இம்மஹிமையுள்ள               வரிங்
   கிவரைவந்தேயெல்லாந்    தெரி
யும்முடையவெள்ளைப்        பரி
   யோங்கியெங்கடலைப்    பொரி
உள்ளவையெல்லாந்தின்றதிருகால்முக்கால்நாற்கா
    லோட்டிவிடப்போகவில்லைநீர்கட்டுமென்றார்
பிள்ளைவெள்ளைப்பரிமுகரேபட்டினி
   பொறாதமுதுசெய்தகிருபையறிந்தனரே                  (பிள்)

பரமாத்துமசமாரா          தனம்
  பண்ணாதிருந்தவ        யனம்
தெரிவார்பாலமுத          சனஞ்
  செய்யும்விதிகண்ட       தினந்
திருக்கண்வளரப்பிள்ளையக்ரீவருஞ்
     சிறந்துபூரணராயெழுந்தருளினாரே
பெருக்கமிகுமிதைத்திரைவர்ணிகர்கண்டு
     பிரபலவதிசயந்தனைக்கொண்டாடினாரே              (பிள்)

விருத்தம்

வித்தியாவைபவரானவிவர்தாமுஞ்சீர்
      வெள்ளறைப்பங்கயச்செல்விபுருஷகார
சத்தியானுசரிதமாய்க்கொண்டுமேசெந்
      தாமரைக்கண்ணரைத்தொழுதுதிருக்காவேரி
மத்தியராமரங்கரடிபணிவாரங்கே
      வந்துதொண்டுசெய்தவைஷ்ணவர்க்காக
நித்தியானுஸந்தேயரகஸ்யார்த்தங்கள்
     நிலையிட்டார்மகிமையுள்ளகலையிட்டாரே.
 

வியாழன், 22 நவம்பர், 2007

திருப்பாதுகமாலை

4. பணயப்பத்ததி

101. எவையு முய்யவெ னய்யன யோத்திமீண்
       டவனி யாண்டருள் செய்பய ணத்துமுன்
       னவணி நன்றத னுப்பலெ னத்தரும்
       சுவண மன்னிரு பாதுகை யுன்னுவாம்.

102. நீடுகுல மேறுதிரு நீதியர சோடும்
        நாடுகுடி யன்புநெடு நாடுடனு யிர்த்தோர்
        காடுதனி யேகியிறை  யாடிரகு வீரன்
        ஈடெனநி னைத்துனைநி லைத்துணைவ லித்தான்.

103.  நாடலற நாதனெடு காடுபுகு காலில்
         நாடிமன மீளவவ னைவளமொ லித்து
         வாடுமிள மெல்லிதய வஞ்சியென விஞ்சிக்
         கூடியடி கெஞ்சியருள் கொஞ்சினைம ராடீ !

104.  அச்சுதன கன்றரகு மன்னகரை நம்பி
         துச்சமென வெண்ணியவ னுச்சியிலு னைக்கொண்
         டுச்சினிய வந்திதுரை மோதயம யோத்தி
          யுச்சமவை பாது !நின தென்றுமதி பூத்தான்.
105.   தஞ்சமென வோங்குலகு தாங்கிரகு வீரக்
         கஞ்சவிழி யஞ்சனவ ணப்பானை யாங்கும்
         மஞ்சுமுடி தாங்குவலி கண்டிளையன் பாதூ !
         கொஞ்சுல ளித்தரசு கொள்ளுனையி ரந்தான்.

106.    அய்யனடி நின்றிளவ லன்பிலுனை வேண்டல்
          துய்யமணி பாது !தனி நிற்கவுனை வைய
          முய்யவரு மாதியென மூதறிஞர் காண
           மெய்யறையு மாமுனிவ சிட்டனுள மென்னோ?

107.  மூதரசு துஞ்சவிறை முன்னடவி யேகச்
        சாதுவொரு தம்பிபரி வாதமொழி யஞ்சச்
        சீதையென சாகசநீ செய்தனையெ னிற்பொற்
         பாதநிலை! கோசலரை யாற்றுநல ராரோ?

108. ஆமுயிரெ வைக்குமிறை யென்றறைம றைச்சீ
        ராமனதி னின்னிருமை மாணுமணி பாதூ!
        ஆமவனை யேபெறவ ரும்பரத னுக்கே
        மாமுதனி திப்பணய மாயினைம தித்தே.

109. முன்னமளி மன்னபய முன்னொளிதெ ளிக்கப்
        பின்னிளவ லண்ணநகர் பின்னடிபி டிக்க
       நின்னடையி லக்கடல்க டந்தடிநி லாயவ்
       வன்னிருதர் மன்னகரி றுத்தொளிப லித்தான்

110. அத்திறநெ டுஞ்செடிக ளத்தனையு மேநீ
       யொத்திபொறை மேனிகமை கொள்ளுமணி பாதுன்
       தொத்தறலி லத்தனொரு வீரனென மூரி
       யுத்தநிலை யெற்றுமுடி பத்துடனு திர்த்தான்.

111. செப்பமுற வப்பனுரை செய்துமிகு மன்னைச்
        செப்பலுநி ரப்புதன தின்னுளந லத்தோ
        வொப்பருதி ருப்பொலிய மோலிமணி யெம்பிக்
        கப்பனணி பாது!நினை யம்முடிக வித்தான்.

112. அய்யனரு ளங்கிரிசு ரத்தலிலு னைத்தான்
       செய்யதுற வொண்சடையி னம்பிநனி யேந்தி
        மெய்யனணி பாதநதி பாது!முடி மேவுந்
       துய்யபவ னத்தனிம மித்தவனு மொத்தான்.

113. மெய்யனிறை தேறுமடி சேருமணி பாதூ!
       உய்யவுல கேழுமர சாளுரிமை கொள்ளப்
       பொய்யலையு மோலியறு பொன்முடியி லுன்னைத்
       துய்யதுற வொன்றுதிரு நின்றவன்சு மந்தான்.

114. நன்றகில நோக்குமளி நாறுமணி பாதூ !
       ஒன்றுனையு ணர்ந்தனுச னுத்தமனை வேண்டத்
       தன்றிரும திச்சரண கச்சவியி லன்னான்
       நின்றருளி னிற்குமுடி யாட்டினனி வந்தே.

115. காதலினி தேறுனது மாலடிக லக்கும்
       நீதியிறை யந்தவிதி நந்தனனி யம்பப்
       பாதுனையி ராமகிரி மாதவர்ப ணிந்தெப்
       போதுநிறை யோதுவர்க ளோம்பனல றைக்கண்.

116. உன்னியன டைத்திடனெ னத்தனிவ னத்துத்
       துன்னொளிய ழைக்குமுறை யுன்னியிறை நின்மேல்
       தன்னடியை யொற்றிநடை யாடுவலி யுற்றே
       மன்னுகடு கற்கணெடு தண்டகா டந்தான்.

117. நாதனடி நின்றுமணி யாசனம மர்த்தி
       நீதியுல காளவொரு காளைமுடி யேறிப்
       பாது !வர வீதுபுர வாசிபெறு பேறென்
       றோதுனல வாசியிசை பாடிமகிழ் கூர்ந்தார்.

118. ஏறுநடை யண்ணனிறை யேவலுரு நின்னை
        நாறுமுடி மீதுமணி பாதுகை! தரித்தே
        வீறணிம திப்பரத னின்னரசு தன்னில்
        வேறரச றத்தரைநி றுத்தினன னைத்தும்.

119. இன்புறவை யகமகில மளித்துக்காக்கும்
               பீடுடைமெய் யோகியர்கண் கண்டுபாட
        நம்பிதிருப் பரதனொரு தம்பியென்றே
               நடையிரகு நாயகனா மரங்க நாதன்
        அன்பிலனு தினமுநெடி தவன்வ ணங்கத்
                தனதுபத விலையெனமெய் யுறுதி சாற்றி
        அம்பலநின் றன்றவனுக் களித்த வந்நல்
                லடிநிலையென் சிறுமையறப் போக்கி நோக்கும்.

120.  கட்டுதி ருப்பர தன்முடி போலென்
         மட்டப வாதம கற்றிம ராம !
         கிட்டியெ னுச்சியி னிச்சலுங் கோயில்
         நட்டலி னீபரி வட்டமெ னக்கொள்.