செவ்வாய், 9 அக்டோபர், 2018

இராமாய‌ண‌ த‌ருமம்

-- 3--

இராமாயண தருமம்
இராமாவதார காலம்.
(1) வால்மீகி இராமாயணம்-பாலகாண்டம் சரு. 15. சுலோ. 28, 29.
"பயம் த்யஜ் த பத்ர‌ம் வோ ஹிதார்த்தம் யுதிராவணம் |
ஸுபுத்ர பௌத்ரம் ஸாமாத்யம் ஸமித்ரஜ்ஞாதிபாந்தவம் ||
'' ஹத்வா க்ரூர‌ம் துராத்மானம் தேவரிஷீணாம் பயாவஹம் |
தச வருஷ ஸஹஸ்ராணி தசவருஷ சதா நிச |
வத்ஸயாமி மா நுஷே லோகே பாலயன் ப்ருத்வீமிமாம் |.''
(இத‌ன் பொருள்)(இனி இ-ள்) ''ஓ தேவர்களே! இனி அச்சம் என்பதை விட்டு விடுங்கள்; உங்களுக்கெல்லாம் நன்மையே உண்டாகும். அந்தத் துராத்மாவான இராவணனை அவனுடைய பரிவாரங்களோடு சங்கரித்துப் பூலோக பரிபாலனஞ் செய்துகொண்டு பதினோராயிரம் வருடமிருப்பேன் ” என்று தன்னைச் சரணமடைந்த தேவர்களை நோக்கி ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் அருளிச்செய்தனர்."
2. வால்மீ- இரா. உத்-கா. சரு. 37-க்குப்பின் ப்ரக்ஷிப்தசரு. சுலோ. 18,19.
ஸனத்குமார முனிவர் இராவணனை நோக்கி:'
'க்ருதே யுகே வ்யதீதேவை முகே த்ரேதாயுகஸ்யது |
ஹிதார்த்தம் தேவமர்த்யானாம் பவிதாந்ருபவிக்ரஹ: ||
இக்ஷுவாகூணாம் ச யோராஜாபாவ்யோ தசர‌தோபுவி !
தஸ்ய ஸூநுர்மஹாதேஜா ராமோநாமபவிஷ்யதி. || ''
(இ-ள்) "க்ருதயுகம் கழிந்தபின்னர் த்ரேதாயுகத்தின் துவக்கத்தில் தேவர்களுக்கும் மனுஷியர்களுக்கு மிதமியற்றுமாறு இஷ்வாகு குலத்திலே தசர‌தனென ஒரு ராஜன் ஜனிப்பான்; அந்தத் தசரத மஹாராஜனுக்குப் புதல்வனாய் ஸ்ரீராமனென்னும் ஒரு மஹாநுபாவன் அவதரிக்கப் போகின்றனன் ” என உரைத்தனர்.
3. அத்யாத்ம ரா. பாலகாண்டம் சரு. 7. சுலோ. 25, 26.
" த்ரேதாமுகே தாசரதிர் பூத்வா ராமோஹம் அவ்யய: |
உத்பத்ஸ்யே பரயா சக்த்யா ததாத்ரஷ்யஸிமாம் தத: | ''
(இ-ள்) "' அழிவற்ற நான் த்ரேதாயுகத்தில் தசரத சக்ரவர்த்திக்குக் குமாரனாக அவதாரஞ் செய்யப்போகிறேன். அப்போது மறுபடியும் நீ என்னைப் பார்க்கப்போகிறாய்” என்பதாக ஸ்ரீமஹாவிஷ்ணு தனக்கு வரமருளியிருப்பதாக பரசுராமர் ஸ்ரீ ராமபிரானிடம் விண்ணப்பஞ் செய்தனர்.
4. அத்யாத்ம ரா. ஆரண்யகாண்டம் சரு. 9. சுலோ. 19. :
த்ரேதாயுகே தாசர‌திர்பூத்வா நாராயண: ஸ்வயம் |
ஆகமிஷ்யதி தேபாஹுச் சித்யேதே யோஜனாய தெளதேனசாபாத் வினிர்முக்தோ பவிஷ்யஸி யதாபுரா! '

(
இ -ள்) " ஸ்ரீமந் நாராயணமூர்த்தி த்ரேதாயுகத்தில் தசரத குமாரனாக பூமியில் அவதாரமெடுத்து, ஸ்ரீ ராமனென்னும் திருநாமத்துடன் வரப்போகிறார். அவர் திருக்கரத்தால் உன் கரங்கள் சோதிக்கப்படுங்காலம், உன் சாபவிமோசன காலமாகும்.'' என்பதாக அஷ்டவக்ரமுனிவர் தனக்கு உரைத்திருப்பதாய் கபந்தாசுரன் ஸ்ரீ ராமபிரானை நோக்கிக் கூறினன்.
5. அத்யாத்ம ரா. சுந்தரகாண்டம் சரு. 1. சுலோ. 48.
'புராஹம் ப்ரஹ்மணா ப்ரோக்தா ஹ்யஷ்டாவிம்சதிபர்யயே|
த்ரேதாயுகே தாசரதீராமோ நாராயணோ அவ்ய‌ய: || ''
(இ-ள்) “இருபத்தெட்டாவது பரிவிருத்தியில் த்ரேதாயுகத்தில் சாக்ஷாத் நாராயணன் தசரத குமாரனாகிய ஸ்ரீராமனாக அவ‌தரிக்கப்போவதாய் ப்ரஹ்மதேவர் என்னிடம் அருளிச் செய்திருக்கிறார்'' என்பதாக இலங்கணி என்பவள் திருவடி (ஆஞ்சநேயர் ) உரைத்தனள்.
6. விவஸ்வான் = சூரியன்
அவருடைய புத்ரர் = மனு (வைவஸ்வத மனு) அவருடைய புத்ரர் = இஷ்வாகு .
இஷ்வாகு பரம்பரையில் தசரத சக்ரவர்த்திக்கு ஸ்ரீராமபிரான் அவதாரம்.
7. வால்மீ - ரா. பால கா. சரு. 18 சுலோகம் 9, 10, 11.
''ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமி கெதிதெள !
நக்ஷத்ரெ அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ் தேஷு பஞ்சஸு|
க்ரஹேஷ- கர்க்கடெலக்நே வாக்பதாவிந்து நாஸஹ
ப்ரோத்யமாநெ ஜகன்னாதம் ஸர்வலோக நமஸ்கிருதம்|
கௌஸல்யாஜநயத்ராமம் ஸர்வலக்ஷண ஸம்யுதம்
விஷ்ணொரர்த்தம் மஹாபாகம் புத்ரமைக்ஷவாக வர்த்தந‌ம்|| ''
(இ-ள்) " பின்பு பன்னிரண்டாவது மாஸமான சித்திரை மாஸத்தில் நவமி திதி புநர்வஸு நக்ஷத்திரம் கூடின தினத்தில் ஐந்து க்ரஹங்கள் உச்சமாயிருந்தவளவில், கர்கட‌ லக்ந‌த்தில், குரு சந்திரனோடு கூடியிருந்தவளவில், கௌஸ‌ல்யாதேவி, ஸகல ஜகத்துக்கும் நாயகராய், ஸமஸ்த பிராணிகளுக்கும் வந்தநீயராய், ஸாமுத்ரிக சாஸ்திரத்திற் சொல்லிய ஸமஸ்தமான உத்தம புருஷலக்ஷணங்களோடு கூடினவராய், விஷ்ணுவினுடைய பேர்பாதி பாகத்தினா லுண்டான வராய், மஹாபாக்யவானாய், பித்ருக்களை நர‌கத்தில்நின்று முத்தரிப்பிக்குமவராய், தசரத மஹாராஜனுடைய மனோல்லாசத்தை வ்ருத்திபண்ணுபவரான ஸ்ரீ ராமபிரானைப் பெற்றனள்,
8. கம்ப-ரா. பால-கா. திரு அவதாரப்படலம் 104, 110."
"ஒரு பகலுலகெலா முதர‌த்துட் பொதிந்
த‌ரு மறைக் குணர்வரு மவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தன டிறங்கொள் கோசலை.”
'' மேடமாமதி திதி நவமி மீன் கழை
நீடுறு மாலை கற்கடக நீதிசேர்
ஓடைமா களிறனானுதயராசி கோள்
நாடினேகாதசர் நால் வருச்சரே.'' -
இந்த ஆதாரங்களினால், வைவஸ்வத மன்வந்தரத்தில் 28-வது சதுர்யுகமான த்ரேதாயுகத்தில் சித்திரைமாஸத்தில் சுக்லபக்ஷ நவமி. திதி, புனர்வசு நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் ஸ்ரீமந்நாராயணனே தசரத சக்கரவர்த்திக்குத்திருக்குமாரராக ஸ்ரீராமனென்னும் திரு நாமத்துடன் அவதாரம் செய்ததாக ஏற்படுகிறது.

ஸ்ரீமத் ராமாயண கரணகாலம்.

சர்வஜ்ஞரான ஸ்ரீராமபிரான் மகுடாபிஷேக மஹோத்ஸவம் கண்டருளிய பின்னர், கருமநெறி தவறாது இராஜ்ய பரிபாலனம் செய்தும் ஒழிந்த வேளைகளில் வைதேஹியுடன் கூடி உத்தியான வனத்திற்குச்சென்று நாடோறும் விநோதமாக பொழுதுபோக்கியும் வந்தனர். ஸ்ரீராமபிரான் பிரதிதினம் முற்பகலில் ராஜாங்க சம்மந்தமான சகல காரியங்களையும் நீதிமுறை தவறாது நிறைவேற்றி அதன் பின்னர் அந்தப்புரஞ் சென்று பிராட்டியுடன் அகமகிழ்ந்திருப்பார். ஜானகி ரகுநாயகர்களுக்கு, இவ்விதமாகவே
- ' தசவர்ஷஸஹஸ்ராணி கதாநி ஸுமஹாத்மனோ: |
(வா-ரா. உத்-கா, சரு. 42. சுலோ . 26.)
பதினாயிரமாண்டுகள் பெருமையாகச் சென் றன.
வா -ரா, உத்-கா. சரு. 42. சுலோ . 31, 32.
' அப்ரவீச்ச வராரோஹாம் ஸீதாம் ஸுரஸுதோபமாம் !
அபத்ய லாபோ வைதேஹி த்வய்யயம்.ஸமுபஸ்தித:
கிமிச்சஸி வராரோஹேகாம: கிம் க்ரியதாம் தவ /''
(இ-ள்) ஒருநாள் ஸ்ரீராமபிரான் ஜானகியை நோக்கி "ஹே! வைதேஹி! நீ கர்ப்பந்தரித்திருப்பது எனக்கு மிகவும் களிப்பைத் கருகின்றது. இப்பொழுது நீ யாது விரும்புகின்றனை? நீ யாது வேண்டினும் அதனை யான் நிறைவேற்றுவேன்'' எனக் கூறினார்.
அதற்குப் பிராட்டி , கங்கைக்கரையிலுள்ள மிகப்பரிசுத்தமான தபோவனங்களுக்குச் சென்று, அங்கு, மகரிஷிகளுடைய பாத மூலத்திற் சில நாள் பணிவிடை செய்து ஆனந்தமனுபவிக்க வேணுமென்ற ஆசையிருப்பதாகத் தெரிவித்தாள்.
'
அந்த சமயம் ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியை இராவண கிரஹத்திலிருந்து அழைத்து வந்ததைப்பற்றி சிலர் அபவாதம் சொல்வதாகக் கேட்டு, பிராட்டி கருதியிருந்த காரணத்தையே வியாஜமாகக் கொண்டு, அவளையழைத்துக் கொண்டு போய் கங்கா நதி தீரத்தில் வான்மீக முனிவராச்சிரமத்தருகே விட்டுவிடுமாறு , இளைய பெருமாளுக்கு நியமித்தருளினர்.
சீதாப்பிராட்டி தனியே புலம்பித் தவிப்பதை ரிஷிகுமாரர்களால் கேள்வியுற்ற வான்மீக முனிவர் உடனே அவ்விடம் சென்று, பிராட்டியைச் சமாதானப்படுத்தி தமது ஆச்சிரமத்திற்கு அழைத்துவந்து அங்குள்ள ரிஷிபத்னிகளிடம் ஒப்புவித்து அவளைக் கருத்துடனே காத்து வருமாறு கட்டளையிட்டனர்.
யமுனாதீரவாஸிகளான முனிவர்கள் முலமாக மதுவின் மகிமையையும், அவனது மகன் லவணாசுரனது வரலாற்றையும் கேட்டு ஸ்ரீராமபிரான், லவணாசுரனை வதைக்குமாறும் அவனது நகரத்திலேயேயிருந்து ராஜ்ய பரிபாலனஞ் செய்துவருமாறும் சத்ருக்கனருக்கு நியமித்தருளினர். லவணாசுரனுடன் போர்புரிவதற்காக அயோத்தியிலிருந்து புறப்பட்டு மூன்றாம் நாள், சத்ருக்னர், வான்மீகி ஆச்சிரமத்தில் தங்கினர்.


வா - ரா. உத் - கா. சரு. 66. சுலோ . 1.
''யாமேவ ராத்ரிம் சத்ருக்ன: பர்ணசாலாம் ஸமாவிசத்|
தாமேவ ராத்ரிம் ஸீதாபி ப்ரஸூதா தாரகத்வயம் '' :
(இ-ள்) சத்ருக்ன ஆழ்வார், என்றையத்தினம் இராத்திரி வான்மீக முனிவரது ஆச்சிரமத்திலே பர்ணசாலையில் படுத்திருந்தனரோ, அன்றைய தினம் இராத்திரி ஸீதாபிராட்டியார் இரண்டு குமாரர்களைப் பெற்றனர்.
இந்த ஆதாரங்களினால் ஸ்ரீ இராமபிரானுடைய பட்டாபிஷேகானந்தரம், பதினாயிரம் வர்ஷங்கள் கழிந்த பின்னரே, குசலவர் ஜநநம் என ஏற்படுகிறது.
வா - ரா. பால- கா. சரு. 4. சுலோ . 1, 2. .
''பராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகிர் பகவான் ரிஷி: |
சகார சரிதம் க்ருத்ஸ்னம் விசித்ர பதமாத்மவான் |
சதுர்விம்சத்ஸஹஸ்ராணி ச்லோகாநாமுக்தவான்ரிஷி: |
ததாஸர்க்கசதான் பஞ்ச ஷட்காண்டானி ததோத்தரம் || ''
(இ-ள்) ஸ்ரீராமபிரான் இராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டிருக்கும் காலத்தில், வான்மீக முனிவர் இருபத்திநாலாயிரம் சுலோகங்களும் ஐந்நூறு சருக்கங்களும், ஆறு காண்டங்களும், உத்ர காண்டமும் செய்தருளினார்.
'மானிஷாத'' என்று ஆரம்பிக்கும் சுலோகத்தினிடமாக வான்மீக முனிவர்க்குற்ற சந்தேகத்தை, (தமஸா நதிக்கரையில்) ப்ரஹ்மதேவர் வந்து நிவர்த்தி செய்து வரங்கள் அளித்து அந்தர்த் தானமான பின்பு.
வா - ரா. பால-கா. சரு. 2. சுலோ . 39.
“ தத: ஸசிஷ்யோ வால்மீகிர்முநிர் விஸ்மய மாயயௌ
தஸ்ய சிஷ்யாஸ்தத: ஸர்வே ஜகு: ஸ்லோகமிம்ம்புன :|
முஹர் முஹு: ப்ரீயமாணா: ப்ராஹூஸ்ச ப்ருசவிஸ்மிதா:
(இ-ள்) வான்மீக முனிவர், தம்முடைய சிஷ்யர்களுடனே கூட அதிக ஆச்சரியத்தையடைந்தார். அந்த சுலோகத்தை அவருடைய சிஷ்யர்களெல்லோரும் மிகுந்த பிரியத்துடனும், ஆச்சரியத்துட னும், அடிக்கடி ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டு பாடிக்கழித்தனர்.

மேலேகண்ட சுலோகத்தில் - சிஷ்யா:- என்று பகுவசனமாகக் கண்டிருப்பதற்கு, கோவிந்த ராஜீய வ்யாக்யானத்தில் தனது ஆச்சிரமத்திலுள்ள, குசலவர், பரத்துவாஜர் என்று வ்யாக்யானம் செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் குசலவர்கள், ஜனித்து தக்க வயது அடைந்த பின்னரே, இராமாயண கிரந்தம் செய்யப்பட்டதாக ஏற்படுகின்றது.
சத்ருக்ன ஆழ்வான், லவணாஸுரனை சம்ஹரித்து மதுராபுரியை ஸ்தாபித்தபின்
''ததோ த்வாதசமே வர்ஷே சத்ருக்னோ ராமபாலிதாம் |
அயோத்யாம் சக்ரமே கந்துமல்ப ப்ருத்ய பலாநுக: ''
(
வா - ரா. உத் - கா. சரு. 7. சுலோ . 1)
(இ-ள்) பன்னிரண்டாவது வருஷத்தில் சத்ருக்னாழ்வான் ஸ்ரீராகவனைச் சேவிக்கக்காதல் கொண்டு சொற்ப பரிவாரங்களுடன் அயோத்தியைக் குறித்துப்புறப்பட்டனர்.
வழியில் 7, 8 நாள் தங்கி வான்மீகாச்சிரமமடைந்து, அம் முனிவர் அளித்த அர்க்கிய பாத்தியாதி அதிதி பூஜைகளைப் பெற்று, அன்றிராத்திரி அவ்வாச்சிரமத்திலேயே சயனித்திருந்தனர்.
வா-ரா. உத்- கா. சரு. 71. சுலோ . 14, 15, 16.
''ஸபுக்தவாந் நாஸ்ரேஷ்டோ கீதமாதுர்ய முத்தமம் |
சுச்ராவ ராமசரிதம் தஸ்மின்காலே யதாக்ருதம்
தம்த்ரீலய ஸமாயுக்தம் த்ரிஸ்தான கரணாந்விதம் |
ஸமஸ்க்ருதம் லக்ஷணோபேதம் ஸமதால ஸமந்விதம் |
சுச்ராவ ராமசரிதம் தஸ்மின்காலே புராக்ருதம் |”
(இ-ள்) சத்ருக்னாழ்வான் வான்மீகாச்சிரமத்தில் விருந்தமுது செய்தவளவில், ஸமீபத்தில் அதிமதுரமான ஸங்கீதமொன்று கேட்டது. ஸ்ரீராம சரிதமானது ஸம்ஸ்க்ருத பாஷையில் இசையொத்த தாள லயங்களுடனே, யாழிலிட்டு, சுலக்ஷணமாக மறைவிலே பாடப்பட்டது. அதனைச் செவியுற்றவளவில், சத்ருக்னாழ்வானுக்கு முன் நடந்த ஸ்ரீராம சரித்திரம் மறுபடி தமது கண்ணெதிரில் நடப்பதுபோலத் தோன்றியது.
வான்மீக முளிவர் தாமுண்டுபண்ணிய இராமாயண மஹா காவியத்தைக் குசலவருக்கு உபதேசித்தருளினபோது, அவர்களுக்கு வயது பன்னிரண்டு என ஏற்படுகின்றது.

ஸ்ரீராமபிரான் அச்வமேத யாகஞ்செய்யத் தீர்மானித்து கோமதி நதி தீரத்தில் யாகசாலை நிருமித்து வருகிறவர்களுக்கு விடுதிகள் அமைத்து, ஸகல பதார்த்தங்களும் அங்கே சித்தப்படுத்தவும், வானரர், ராக்ஷஸர் முதலான யாவரையும் அவ்வேள்விக்கு வரவழைக்கும் படிக்கும் தம்பிமார்களுக்கு நியமித்தருளியும்,
வா-ரா. உத் - கா. சரு. 91. சுலோ . 24, 25.
''மம மாத்ருஸ்ததாஸர்வா : குமாராம்த: புராணிச |
காம்சநீம் மம பத்நீம்ச தீக்ஷாயாம்ஜ்ஞாம்ஸ்ச கர்மணி ||
அக்ரதோ பரத: க்ருத்வாகச்சாத்வக்ரே மஹாயசா: ''
(இ-ள்) 'நமது மாதாக்களையும், பரதன் முதலியோர்களுடைய அந்தப்புர ஸ்திரீகளையும், ஸீதைக்குப் பிரதியாக நிருமித்துவைத்திருக்கின்ற சுவர்ண ஸீதையையும் யாகஞ்செய்யும் முறைகளை நன்குணர்ந்த பிராம்மணர்களையும், முன்னிட்டுக்கொண்டு, பாதன் முன்னாலே செல்லக்கடவன் '' எனவும் நியமித்தருளினர்.
இதனால் ஸீதாப்பிராட்டி வான்மீகாச்சிரமத்திலிருக்கும் பொழுது யாகம் ஆரம்பிக்கப்பட்டதாக வாகின்றது.
வா - ரா. உத் - கா. சரு. 93. சுலோ . 1.
" வர்தமானே ததா பூதேயஜ்ஞேச பரமாத்புதே |
ஸசிஷ்ய ஆஜகாமாசு வால்மீகிர் பகவான் ரிஷி: || ''
(இ-ள்)* இவ்வாறு மகாவைபவத்துடனே நடக்கும் அற்புதமான அச்வமேத யாகத்துக்கு வான்மீக முனிவரும் தமது சீஷர்களுடனே எழுந்தருளினர்.''
வான்மீகமுனிவர் தாம் கற்பித்த இராமாயணத்தை, முனிவர்கள் வாஸஸ்தானங்களிலும், பிராம்மணர்கள் இறங்கியிருக்குமிடங்களிலும், ராஜமார்க்கங்களிலும், அச்வமேதயாகம் நடக்குமிடத்தில் ஸ்ரீராமபிரான் சன்னதியிலும், பாடிக்கொண்டு போகும்படி தமது சிஷ்யர்களான குசலவர்களுக்குக் கட்டளையிட்டனர். அவ்விருவரும் முனிவர் மொழிந்த வண்ணம், இராமாயணத்தை கானம் செய்து கொண்டு சென்றனர்கள்.
வா-ரா. உத்-கா. சரு. 94. சுலோ . 2. -
"தாம் ஸசுச்ராவகாகுத்ஸ்த: பூர்வாசார்ய விநிர்மிதாம் |
அபூர்வாம் பாட்யஜாதிம்ச கேயேன ஸமலம்க்ருதாம் |
ப்ரமாணைர் பகுபிர்பத்தாம் தந்த்ரீலய ஸமந்விதாம்|
பாலாப்யாம் ராகவ: ஸ்ருத்வா கௌதூஹலபரோபவத்."
(இ-ள்) " இரண்டு பாலகர்கள் வீணை மீட்டிக்கொண்டு ஒத்த குரலினராய் சுலக்ஷணமாக தம்மாசிரியர்கற்பித்த இராமாயணத்தை இன்பமாய்ப்பாடிக்கொண்டுவருவதை ஸ்ரீராகவன் திருச்செவி சார்த்தி இஃது அபூர்வமாயும், அற்புதமாயுமிருக்கின்றதே யென வியந்து களிப்படைந்தனர்.''
அனந்தர‌ம் அந்தக் காவியத்தின் வரலாற்றையும், அதை இயற்றியவர் வான்மீக முனிவரென்பதையும் அச்சிறுவர்கள் மூலமாக ஸ்ரீராகவன் தெரிந்துகொண்டனர்.
வா -ரா. உத்- கா. சரு. 95. சுலோ . 1.
"ராமோ பஹூன்யஹான்யேவ தத்கீதம் பர‌மம் சுபம் |
சுச்ராவமுனிபி: ஸார்த்தம் பார்த்திவை: ஸஹவானரை|''
(இ-ள்) ஸ்ரீராகவன் நாள்தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடைசூழச் சபையினடுவே முனிகுமாரர்களை வரவழைத்து மிகச்சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவிசார்த்திக் களிகூர்ந்தனர்.
இந்த ஆதாரங்களினால் ஸ்ரீராமபிரான் அயோத்யாபுரிக்கு ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டு, பதினாயிரம் வருஷங்கள் தருமநெறிதவறாது அரசாட்சி செய்துவந்தபின் சீதாப்பிராட்டி கர்ப்பமடைந்து வான்மீகமுனிவராச்சிரமத்தில் குசன், லவன் என்னும் இரண்டு குமாரர்களைப் பெற்று, அக்குமாரர்களுக்கு வயது பன்னிரண்டு நிரம்பிய பொழுது, வான்மீகமுனிவருக்கு நாரத மகரிஷியால் ஸ்ரீராமசரிதம் சங்க்ரஹமாக உபதேசிக்கப்பட்டு ப்ரஹ்மதேவரின் ஆக்ஞாப்ரகாரம் அம்முனிபுங்கவர் 24000 கிரந்தங்களடங்கிய ஸ்ரீ இராமாயணமென்னும் ஆதிகாவியத்தைச் செய்தருளி அதைத் தமது சீடர்களான குசலவர்களுக்கு உபதேசிக்க, அவர்களால் அந்த இராமாயணம் ஸ்ரீராமபிரானுடைய அஸ்வமேத மகாமண்டபத்தில் முனிவர், அரசர், வானரர் முதலியோர் சேர்ந்துள்ள சபையில் ஸ்ரீராமபிரான் சன்னதியில் தாளலயத்துக்கிணங்க கானம் செய்து அரங்கேற்றப்பட்டு சபையோர்களால் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டதாக நிச்சயிக்கப்படுகிறது.

முன்னுரை, அறிமுக‌ம் முடிவ‌டைந்தன‌. இனி நூல் துவ‌ங்குகின்ற‌து. 
தின‌ம் ஒரு த‌ர்மமாக‌ப் பார்ப்போம்













புதன், 3 அக்டோபர், 2018

இராமாயண தருமம்

2.

ஸ்ரீவால்மீகி ராமாயணம்

ஆரண்ய காண்டம் –– சருக்கம். 37. சுலோகம் 13

“ராமோ விக்ரஹவான் தர்ம: ஸாது: ஸத்ய பராக்ரம:'””

"ஸ்ரீராமன் உருவங்கொண்ட தருமம்போலும், நற்குணமுடையோனும், உண்மையான தோள்வலியுற்றவனுமாகின்றனன்" என இராவணனுக்கு, ராமத்வேஷியான மாரீசன் உரைத்த வசனம்.

யுத்த காண்டம் சரு.28. சுலோ.19

யஸ்மின் ந சலதே தர்மோ யோ தர்மம் நாதிவர்த்ததே| ஸ ஏஷ ராம:

எவரிடமிருந்து தருமம் சலிக்கவில்லையோ, எவர் தருமத்தைவிட்டு விலகவில்லையோ, அவரே இந்த இராமபிரான் என, இராவணனைப் பார்த்து சுகனுடைய வசனம்.

யுத்த கா. சரு.91. சுலோ. 69

தர்மாத்மா சத்ய சந்தஸ்ச ராமோ தாசர திர்யதி|
பௌருஷே சாப்ரதித்வந்த: ததைனம் ஜஹி ராவணிம்|||

"ஸ்ரீராமபிரான் தர்மஸ்வரூபி என்பதும், சொன்னசொற் தவறாதவர் என்பதும், இணையற்ற பராக்ரமம் உடையவர் என்பதும் உண்மையாயின், இந்த பாணம் இந்திரஜித்தை ஹதம் செய்யட்டும் " என சபதபூர்வமாயுரைத்த, இளைய பெருமாளுடைய வசனம்.

ஸ்ரீபாகவதம் - ஸ்கந்தம் 9 -- அத்யாயம் 10 -- சுலோகம் 55

"ஏக பத்நீவ்ரததரோ ராஜர்ஷி சரித: சுசி: |

ஸ்வதர்மம் க்ருஹமேதீயம் சிக்ஷயந்ஸ்வய மாசரந் ||'”

"இராமபிரான் ஏகபத்நீ வ்ரதத்துடன், சுத்தராக கிருஹஸ்த தர்மத்தைத் தாம் அனுஷ்டித்தார். ஜனங்களும் அதனைக் கண்டு அவரவர்கள் தர்மத்தை விடாமல் செய்தார்கள்.” என பரீக்ஷித்து மஹாராஜனை நோக்கி, சுகப்பிரம்ம ரிஷியின் வசனம்.

கம்ப ராமாயணம்

“தோன்றிய நல்லற நிறுத்தத் தோன்றினான்” (அயோத்தி நகர் நீங்கு. 163)

“நல்லற நிறுத்த நணுகித்,
தாமராவணை துறந்து தரை நின்றவரை” (ஆரணி.விராத.30)

இராமபிரான் உலகத்தில் தருமத்தை நிலைநிறுத்தவே அவதரித்திருப்பதாக, கவிக்கூற்று.

“சூரறுத்தவனுஞ் சுடர் நேமியு
மூரறுத்த வொருவனு மோம்பினும்
ஆரறத்தி னொடன்றி நின்றாரவர்
வேரறுப்பென் வெருவன் மினீரென்றான்.” (ஆரணி – அகத்தி 22)

வெம்புகண்டகர் விண்புக வேரறுத்
திம்பர் நல்லறஞ் செய்ய வெடுத்தவிற்
கொம்பு முண்டருங் கூற்ற முமுண்டுங்க
ளம்பு முண்டென்று சொல்லுநம் மாணையே (கிட்கிந்தா – கிட்கிந்தை 4)

உலகத்தில் துஷ்ட நிக்கிரகமும், தர்ம ஸம்ஸ்தாபனமும் செய்வதற்காக, தாம் அவதரித்திருப்பதாக, இராம பிரானுடைய வசனம்.

“பின்னையேது முதவுந்துணை பெறாளுரை பெறாண்
மின்னையே யிடைநுடங்கிட விரைந்து தொடர்வா
னன்னையே யனையவன் பினாவோர் கடமைவிட்
டென்னையே நுகர்தி யென்றன னெழுந்து விழுவான் (ஆரணி. விராத. 39)

இராம லட்சுமணர் உலகத்துக்கெல்லாம் தாயைப் போன்ற அன்பினையுடைய தருமசுவரூபிகள் என சீதாபிராட்டியின் வசனம்.

ஓயாத மலரயனே முதலாக வுளராகி
மாயாத வானவர்க்கு மற்றொழிந்த மன்னுயிர்க்கு
நீயாகின் முதற்றாதை நெறிமுறையா லீன்றெடுத்த
தாயாவார் யாவரே தருமத்தின் றனிமூர்த்தி”

பிரமதேவன் முதலான சகல தேவர்களுக்கும், உலகத்திலுள்ள உயிர்களுக்கும், இராமபிரான் முதல் தந்தையெனவும், தருமஸ்வரூபி எனவும், விராத ஸ்தோத்திரம்.

இருவர் மானிடர் தாபத ரேந்திய
வரிவில்வாட் கையர் மன்மதன் மேனியர்
தருமநீரர் தயரதன் காதலர்
செருவி னேரு நிருதரைத் தேடுவார்.

ஒன்று நோக் கலரும் வலியோங்கற
னின்று நோக்கி நிறுத்து நினைப்பினர்
வென்றி வேற்கை நிருதரை வேரறக்
கொன்று நீக்குது மென்றுணர் கொள்கையார். (ஆரணி. கா. 4,5)

இராம லக்ஷ்மணர்கள் தரும சிந்தை உடையவர்கள், சிறந்த தருமவழியிலே தாங்கள் நின்று ஆராய்ந்து அத்தருமத்தை உலகமெங்கும் நிலைபெறச் செய்யுங் கருத்துடையவர்கள் என கரனிடம் சூர்ப்பனகை வசனம்.

“சங்கு சக்கரக் குறியுள தடக்கை யிற்றாளி
லெங்கு மித்தனையிலக்கணம் யாவர்க்குமில்லை
செங்கண் விற்கரத்தி ராமனத்திரு நெடுமாலே
யிங்குதித்தன விண்டற நிறுத்துதற் கின்னும்”

கோதண்டபாணியான இராமன், தர்ம ஸம்ஸ்தாபனத்தின் பொருட்டு இங்கு திருவவதரித்த ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதாக சுக்ரீவ மஹாராஜனிடம் தெரிவித்த நவவ்யாகரண பண்டித ரான திருவடியின் வசனம்.

“உழைத்த வல்லிருவி னைக்கூறு காண்கலா
தழைத் தயருலகினுக் கறத்தினாறெலா
மிழைத்தவற் கியல்பல வியம்பி யென்செய்தாய்
பிழைத்தனை பாவியுன் பெண்மையா லென்றான்.”

பலபிறப்புகளில் தாம் செய்து சேர்த்த கொடிய கருமங்களை ஒழிக்கும் உபாயத்தைக் காணாமல் வருந்திக் கதறுகின்ற உலகத்தவர்கள் உய்யுமாறு அவதரித்துத் தர்ம மார்க்கங் களை எல்லாம் தான் அனுஷ்டித்துக் காட்டும் புருஷோத்தம னான இராமபிரான், என்பதாக, தாரையிடம் வாலியின் வசனம்.

“அறமன்னானுட னெம்பியன்பினோ
டுறவுண்ணா வுயிரொன்ற வோவினான்
பெறவொண்ணாத தொர் பெற்றி பெற்றவற்
கிறவென்னா மிதின்ப மியாவதோ. (கிட்கி. சம்பாதி 45)

தர்மஸ்வரூபியான இராமபிரான் திறத்தில் ஜடாயு உயிரைக் கொடுக்க நேர்ந்தது பெரும் பாக்கியமென்று வானரரிடம் சம்பாதி வசனம்.

இத்யாதி வசனங்கள் ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராம சரிதத்தினாலே, தரும ஸ்வரூபமும், தர்மானுஷ்டானமும் வர்ணிக்கப் பட்டிருக்கின்றன என்பதற்குப் போதிய சான்றாகும்.

(தொடர்வது இராமாவதார காலம்)

.


     

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இராமாயண தருமம்


IMG_0001ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள சிந்தாமணி கிராம கர்ணமாக இருந்தவர் ஸ்ரீ எஸ்.கே. ரங்கஸ்வாமி அய்யங்கார். (அதாவது இன்றைய VAO) . இவர் எழுதி 1934ல் வெளியான நூல் இராமாயண தருமம். இராமாயணத்திலே மிக ஆழங்கால்பட்டுத் தான் அனுபவித்தவற்றை இப்படி ஒரு அருமையான நூலாக்கியிருக்கிறார். இந்நூலை ஸ்ரீஹயக்ரீவ சேவக ஆசிரியர் மிகுந்த ஆசையுடன் தன் பத்திரிகையில் தொடராக வெளியிட ஆரம்பித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இப்போது பல மாதங்களாக அந்த இதழ் வெளிவராத சூழ்நிலையில் இங்கே தொடராக பதிவு செய்ய ஆரம்பிக்கிறேன்.
சில முன்னுரைகள் படங்களாக
IMG_0001IMG_0002IMG_0003IMG_0004IMG_0005IMG_0006IMG_0007IMG_0008IMG_0009IMG_0010IMG_0011

இராமாயண தருமம்.
ராமாயணம் என்ற சொல் வடமொழி.
ராமஸ்ய அயனம் எனப்பிரிந்து இராம சரிதமெனவும்,
ராம: அய்யதே அனேன இதி = ராமாயணம் எனப்பிரிந்து இதனால் இராமன் அடையப் படுகிறான் எனவும் பொருள் படும்.
இன்னும் ரமாய இதம் சரிதம் = ராமம், தஸ்யாயன மிதி, ராமாயணம் எனப்பிரித்து, சீதாப்பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்
மேன்மையான ஸீதாசரித்திரமாயும், மஹாகாவ்யமுமான ராமாயணத்தை என்பது இதை வலியுறுத்தும்.
தருமம் உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.
வேத: ஸ்ம்ருதி: ஸதாசார: ஸ்வஸ்யச ப்ரியமாத்மான:
ஏதத் சதுர்விதம் ப்ராஹு: ஸாக்ஷாத் தர்மஸ்ய லக்ஷணம் என தருமத்திற்கு நான்கு ப்ரமாணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அதாவது, ஒரு விஷயம், தருமமென நிச்சயிப்பதற்கு அது (1) வேதோக்தமாக இருக்கவேண்டும் அல்லது (2) ஸ்ம்ருதியிலாவது கூறப்பட்டிருக்க வேண்டும். அல்லது (3) அது ஸத்புருஷர்களால் அனுஷ்டிக்கப் பட்டதாக இருக்கவேண்டும்.  அல்லது (4) அது மனதிற்கு இனிப்பாகவும், ஆனந்தகரமாகவும் இருக்கவேண்டும்.
இந்த நான்கு ப்ரமாணங்களுக்கு ஸ்ரீராமாயணம் பொருத்தமாக இருக்கிறதோ என்னில்,
முதலாவது :-- வேதம்
வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன் (கம்பர்)
கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே
மறைகளுக் கிறுதியாவார்.       (கம்பர்)
என்றபடி, வேதத்தினால் அறியும்படியான பரமபுருஷன், ஸ்ரீராமனாக அவதரித்தபோது,
1. வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா
   அவரை அறிவிக்கிற வேதமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.
2. இதம்பவித்ரம் பாபக்னம், புண்ணியம் வேதைச்சசம்மிதம்
    இந்த ஸ்ரீராமசரிதமானது, பரிசுத்தம் செய்யத்தக்கதும், பாபங்களை நாசஞ்செய்ய வல்லதும், நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.
    இந்த இரண்டு ஆதாரங்களினால், முதலாவது பிரமாணமாகிய வேதத்திற்குப் பொருத்தமாகிறது.
இரண்டாவது:-- ஸ்ம்ருதி
தர்ம சாஸ்த்ர ரதாரூடா வேதகட்கதரா த்விஜா: |
க்ரீடார்த்தமபி யத் ப்ரூயு: ஸதர்ம: பரமஸ்ம்ருத:|| (போதாயனாச்சார்)


    வேதத்தை நன்கு அப்யசித்தவர்கள் ஸத்புருஷர்கள். அவர்களால் வேதார்த்தங்களைச் சுருக்கிச் சொல்லப் பட்டனவை களே ஸ்ம்ருதிகளாம்.
ஸ்ரீராமாயணம் (2வது சருக்கம்)
மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ|
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷிஸத்தம ||
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி||

    (இதன் பொருள் நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி “நம்முடைய சங்கல்பத்தினாலேயே இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக்கடவீர். நீர் செய்யுங் காவியத்தில் ஒரு சொல்லும் பொய்யாகாமலிருக்கும்.” என்றருளிச் செய்த பிரகாரம் வான்மீக முனிவரால் இராமாயணம் செய்யப் பட்டதினால், இதை ஒரு ஸ்ம்ருதியாகச் சொல்லத் தடையில்லை.

மூன்றாவது :-- ஸதாசாரம் = (ஸத்புருஷரால் அனுஷ்டிக்கப் பட்டது)

    பாலகாண்டம் முதலாவது சருக்கத்தில் 2 முதல் 4 சுலோகங்களால் வான்மீக முனிவர் நாரத மகரிஷியை நோக்கி, “சுவாமி! இவ்வுலகத்தில், இக்காலத்தில், சகல கல்யாண குணங்களும் சவுசீல்ய குணமும் மற்றும் அனேக குணங்களுடன் தருமத்தை நன்றாயறிந்த சத்புருஷனைக் கேட்டறிய அடியேன் விரும்புகிறேன். அடியேனுக்கு தேவரீர் அருளிச் செய்யவேண்டும்” என்று வினாவினபோது நாரதமகரிஷி மிகுந்த களிப்புடன் ‘ஓய் முனிவரே! நீர் கேட்ட குணங்களெல்லாம் பொருந்திய புருஷனைச் சொல்லுகிறேன் கேளும்”

இக்ஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோநாம ஜநை:ச்ருத:|
இக்ஷ்வாகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராமபிரான் என்பவர்தான் என விடையளித்திருக்கிறார். இதனால் ஸ்ரீராமபிரான் ஸத்புருஷன் என்றும் அவரால் அனுஷ்டிக்கப் பட்டவை ஸதாசாரம் என்றும் ஏற்படுவதால் மூன்றாவது ப்ரமாணமும் பொருத்தமாகிறது.
நான்காவது:—ஆத்ம ஸந்துஷ்டி
பாட்யே கேயேச மதுரம்
ஹலாதயத் ஸர்வகாத்ராணி மநாம்ஸி ஹ்ருதயாநிச | (ராமாயணம்)
    இந்த இராமாயணம் மனதிற்கும் இருதயத்திற்கும் மிக்க களிப்பாக இருக்கின்றது என இராமாயணம் 4-வது சருக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
    இதனால் நான்காவதான ப்ரமாணமும் பூர்த்தியாகின்றது.
இனி ஸ்ரீராமாயணத்தில் தருமங்கள் வருணிக்கப் பட்டிருக்கின்றன வென்பதற்குரிய ஆதாரங்களைக் கவனிப்போம்.  
(தொடரும்)







வெள்ளி, 7 செப்டம்பர், 2018

google-site-verification: googleba9fc2d874a4cc05.html

வியாழன், 31 மே, 2018

அன்பில் ஸ்ரீ கோபாலாசார்யார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்



2. உவர்ந்த வுளத்த னாயுல கமளந் தண்டமுற
 நிவர்ந்த நீண்முடி யனன்று நேர்ந்த நிசாரரைக்
 கவர்ந்த வெங்கணைக் காகுத் தன்கடி யார்பொழி
                                                                   லரங்கத் தம்மானரைச்
 சிவந்த வாடையின் மேற்சென்ற தாமென் சிந்தனையே.

உவந்த உள்ளத்தன் ஆய் – மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை உடையவனாய்க்கொண்டு; உலகம் அளந்து – மூவுலகங்களையும் அளந்து; அண்டம் உற – அண்டகடாஹத்தளவும் சென்று முட்டும்படி; நிவர்ந்த – உயர்த்தியை உடைய; நீள்முடியன் – பெரிய திருமுடியை உடையனாய்; அன்று – முற்காலத்தில்; நேர்ந்த – எதிர்ந்து வந்த; நிசாரரை – ராக்ஷஸர்களை; கவர்ந்த – உயிர்வாங்கின; வெம்கணை – கொடிய அம்புகளை உடைய; காகுத்தன் – இராமபிரானாய்; கடி ஆர் – மணம் மிக்க; பொழில் – சோலைகளை உடைய; அரங்கத்து – ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான; அம்மான் – எம்பிரானுடைய; அரை – குருவரையில் (சாத்திய); சிவந்த ஆடையின் மேல் – பீதாம்பரத்தின் மேல்; என் சிந்தனை – என்னுடைய நினைவானது; சென்றது ஆம் – பதிந்ததாம்.

உவந்த உள்ளத்தனாய் –
(1) ‘செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில்’ என்றும்,प्रणवाकारं रंगम् (ப்ரணவாகாரம் ரங்கம்)  என்றும் சொல்லுகிறபடி, முதல் மூன்று பாசுரங்களும் ப்ரணவாவயத்வாக்ஷரங்களோடு தொடங்குகின்றன.

2) பாதம் நீண்டுவந்ததற்குக் காரணம் உள்ள முவந்ததே என்கிறார். திருவடியின் ஸ்வபாவம் ‘ஓரெண்டானுமின்றியே வந்தியலுமாறு உண்டானை உலகேழும் ஓர் மூவடி கொண்டானை’ என்றபடி நாம் எண்ணாமலும் அனுக்ரஹிப்பதாம். திருவடியின் ஸ்பர்ஸத்தை எல்லாருடைய சிரஸ்ஸுக்கும் அளித்தது உலகு அளந்த திரிவிக்ரமர். ‘என் கண்ணினிடம் நீண்டு வந்தது பெரிதோ அந்த த்ரிவிக்ரமப் பெருமானுக்கு’ என்று திருவுல களந்தருளின வ்ருத்தாந்தத்தை நினைத்து ஈடுபடுகிறார். வேதம் டிண்டிமமாக அந்த யசஸ்ஸைப் பரப்பியதென்பர். வேதம் பாடி உத்கோஷிக்கும் அந்த யசஸ்ஸைத் தாமும் பாடுகிறார். ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி’ என்று கும்மியடித்துப் பிராட்டிமாரும் ஆசைப்பட்டுப் பாடும் யசஸ்ஸு.

3) ‘கண்ணுளே நிற்கும்’ என்ற ‘பொருமா நீள்படைத்’ திருவாய்மொழிப் பாசுரம் மனதிற்கு வந்தது. அதை முதல் பாசுரத்தில் பேசுகிறார். ‘திருமா நீள்கழலேழுலகும் தொழ ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே’ என்ற முன் பாசுரமும் சேர்ந்து இங்கே திருவுள்ளத்தி லோடுகிறது. मुदितान्तरात्मा (முதிதாந்தராத்மா) என்று தனியனிற் கூறிய இவர் உவப்பைப் பிள்ளைலோகம் ஜீயர் ‘உவந்த உள்ளத்தரானார்’ என்று இந்த சப்தங்களால் வர்ணித்தார். பெருமாள் உள்ள முவந்ததிலும் மேற்பட்ட ஹர்ஷமுண்டோ இவருக்கு? பெருமாள் உவப்பு இவர் நெஞ்சில் ப்ரதிபிம்பிதமாகும்.  प्रीतःप्रिणाति (ப்ரீத:ப்ரிணாதி)

உலகமளந்து

1)
இப்பொழுது பள்ளிகொண்ட பெருமாளே அன்று த்ரிவிக்ரமனாய் ஓங்கி உலகளந்தவன் என்கிறார். ‘அன்று’ என்பதை இங்கும் சேர்த்துக் கொள்ளவேணும். काले दूत्य दृततरगतिम् (காலேதூத்ய த்ருததரகதிம்) என்றதும், இன்று தூங்கும் பெருமாளும் காலம் வந்தால் தூத்யம் செய்யவும் ஓடுபவர் என்றதைக் காட்டிற்று. ‘வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராதே எல்லார் தலையிலு மொக்கத் திருவடிகளை வைத்தபடி’ என்று நாயனார். நீசனாகிய என்னிடம் திருவடி நீண்டது த்ரிவிக்ரம சுபாவம். த்ரிவிக்ரமர் தாளின் நீதி. வானாட்டு நீதிமட்டுமல்ல.

அண்டமுற நிவந்த நீண்முடியன்:--
(1) திருவடி நீண்டு பரவி உயர வோங்கி நிமிர்ந்தது. திருமுடியும் நிவந்து நீண்டு அண்டமுற ஓங்கிற்று. आपादचूडमनुभूय हरिं शयअनअम् (ஆபாதசூடமநுபூய ஹரிம் சயானம்) என்றபடி பள்ளிகொண்ட பெருமாளைத் திருவடி முதல் திருமுடி பர்யந்தம் நின்ற திருக்கோலமாக அனுபவிக்கிறார். (2) ‘நிவந்த --- பூவலர்ந்தாப்போலே’ என்று பிள்ளை. (3) ‘அண்டம் மோழையெழ’ என்பதைப் பிள்ளை உதாஹரித்தார்.

அன்று நேர்ந்த நிசாரரை:-- உடனே ராமாவதாரமாகப் பெருமாளை அனுபவிக்கிறார். ‘த்ரிவிக்ரமாவதாரத்தில் நிசாசரனாகிய மாவலியை வெங்கணையால் கொல்லவில்லை. ராமாவதாரத்தில்தான் அது உண்டு’ என்று வேற்றுமையைக் காட்ட ‘அன்று’ என்ற ராமாவதார காலத்தைப் பேசுகிறார். (2) நேர்ந்த – அவர்களாக வந்து எதிர்த்தார்கள். (3) அவர்களையும் காப்பாற்ற வேண்டுமென்று கூடியவரையில் ஸாமோபாயத்தை நாடினார். அவர்கள் இணங்கவில்லை.

               கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்:-- கணை வெங்கணை; அது பொல்லாதது. அவருள்ளம் உவந்ததே. அருள் நிரம்பியதே. ‘உவந்த உள்ளத்தனாய்’ என்பது காகுத்தனோடும் அந்வயிக்கும். ராவண கும்பகர்ணரை மாளச் செய்ததும் கருணயே. உள்ளத்தின் உவப்பே. சாபத்தால தீரவேண்டிய மூன்று ஜன்மங்களில் இரண்டு கழிவது அவர்களுக்கு ஹிதமே. ‘பொருமா நீள்படை ஆழி சங்கத்தொடு’ என்றபடி திருவாயுதங்களுக்கும் கருணையும் ராகமும் உண்டு. வெங்கணையும் ராகத்தால் அவர்களைக் கவர்ந்தது என்கிறார். ‘கவர்ந்தது’ என்னும் பதம் ராகத்தையும் கருணையையும் காட்டுகிறது.

               கடியார் பொழிலரங்கத்தம்மான்:-- (1) அரங்கத்தில் சோலைகளின் புஷ்பங்களைக் கந்தவஹ மென்னும் காற்று இவருக்கு என்றும் அநுபவிப்பித்தது. ‘கடி’ என்பது மணத்தைச் சொல்லுவதோடு, ‘’படிச்சோதியாடையோடும் பல்கலனாய் நின் பைம்பொற் கடிச்சோடி கலந்ததுவோ’ என்கிற முடிச்சோதி அனுபவத்தின் நினைவையும் காட்டும். (2) ‘அரைச்சிவந்த ஆடை’ என்று அரை என்னும் பதமிருந்தாலும்  ‘கடி’ என்ற சப்த மாத்ரத்தால் அரை ஆடையின் அனுபவத்தால் ‘முடிச்சோதி’யில் நம்மாழ்வாருடைய விசித்ரமான அனுபவத்தையும் நினைவையும் உட்கொள்ளும். (3) ‘திருவுலகளந்தருளின இடமே பிடித்து அடியொற்றி ராவணவதம் பண்ணித் தெற்குத் திருவாசலாலே புகுந்து சாய்ந்தருளினான். இன்னமும் வேர்ப்பு அடங்கவில்லை. திருச்சோலையில் பரிமளம் விடாய் ஒரு ஶிஶிரோபசாரமானபடி’ என்று பிள்ளை.

               அரைச் சிவந்த ஆடையின்மேல்:-- (1) ஆடையின் சிவப்பு இவரிடம் ராகத்தின் மிகுதியாலே வந்ததுபோலும. ஆடையத்தனை ராகத்தைக் காட்டுகையில் தன் சிந்தனை எப்படி அதன்மேல் செல்லாமலிருக்கு மென்கிறார். कृते च प्रतिकर्तव्यमेष धर्मस्सनातनः (க்ருதே ப்ரதிகர்த்தவ்யமேஷ தர்மஸ்ஸநாதன:) என்பர். ஸ்நேகத்திற்கு ஸ்நேகரூபமான ப்ரதிக்ருதி இல்லாமற் போகலாமோ? कृतग्ने नास्ति निष्कृतिः (க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி:) என்பரே. (2) तस्य यधा माहारजनं वास: (தஸ்ய யதா மாஹாரஜனம் வாச:) என்று நேதி நேதி ப்ரகரணத்தில் திவ்ய மங்கள விக்ரஹத்திலுள்ள பீதாம்பரத்தை ச்ருதி அனுபவித்தது. माहारजनं वास: (மாஹாரஜனம் வாச:) என்றதைச் ‘சிவந்த ஆடை’ என்று வர்ணிக்கிறார். இது पीतांबरतरःस्रग्नी साक्षान्मन्मथमन्मथः (பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷான் மன்மதமன்மத:) என்ற கோவலன் நினைவையும் காட்டும். காகுத்தனுக்குப் பின்பு கோவலன் அனுபவம். क्षौमाश्लिष्टं किमपि (க்ஷௌமாச்லிஷ்டம் கிமபி) என்று ஸோபானத்தில் பட்டு ஆடை ராகத்தோடு திருத்துடைகளை யணைந்ததும் வர்ணிக்கப்பட்டது. (3) ‘செய்ய கார்முகில் திருமேனிக்குப் பரபாகமான திருப்பீதாம்பரம்’ என்று பிள்ளை. ‘ஸர்வகந்து வஸ்து கண்வளர்ந்தருளுகையாலே கடியார் பொழிலாயிருக்குமிறே’ என்று நாயனார்.

               சென்றதாம் என் சிந்தனையே:-- (1) எனக்கு என் நெஞ்சினால் ஸ்பர்சிக்கவும் அச்சமே. ஆயினும் என் மனசு – என் சிந்தனை – என்னை யறியாமலே பாய்ந்து சென்றுவிட்டது. சென்றபிறகுதான் எனக்குத் தெரிகிறதென்பதை ‘சென்றதாம்’ என்பதால் காட்டுகிறார். (2) ‘என் சிந்தனை மட்டுமே சென்றது, நான் அணுகவில்லை’ என்று தன் அச்சத்தை (நைச்யத்தை) அனுசந்திக்கிறார். (3) இங்கும் ஒரு சந்தி ரஸத்தின் அனுபவம். சந்த்யாகாலம் அருளும் சந்த்யாராகச் சிவப்பும் கலந்ததாக இருக்கும். காரிருள் திருமேனியில் சிவந்த ஆடை பரவி இருப்பதும் ஒரு சந்த்யானுபவமாகும்.