செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

Yet another great day at Therazhundur Ashramam.

இன்று உலகெலாம் கொண்டாடும் திருவாடிப் பூர நன்னாள். ஆண்டாளின் திருவவதாரத் திருநாள். அதே நாளில் தேரழுந்தூர் ஆமருவியப்பன் தீர்த்தவாரி உத்ஸவம் கண்டருளிய திருநாளாயும் அமைந்தது. அது நமது ஆச்ரமத்திற்கு ஒரு ஆநந்தத் திருநாளாயும் அமைந்து சிறந்தது.

காலை திருவீதிப் புறப்பாடு கண்டருளி, ஆமருவியப்பன் ஆண்டாளுடன் தீர்த்தவாரி உத்ஸவம் கண்டருள கஜேந்திர புஷ்கரிணி எழுந்தருளினார். அவருக்கு அந்த கஜேந்திர புஷ்கரிணி கரையில் அமைந்திருக்கும் நம் ஆண்டவன் ஆச்ரம வாயிலில் நம் ஆச்ரம ப்ரதான ஆராதகர் ஸ்ரீ உ.வே. கிருஷ்ணமூர்த்தி ஸ்வாமி பூர்ண கும்ப மரியாதைகள் சமர்ப்பித்து வரவேற்றார்.

139

130

131

133

ஸ்ரீமத் ஆண்டவனுக்குப் பெருமாள் மரியாதைகள் செய்யப் பட்டன.

134

135

136

137

அதன்பின் ஆலயத்தார் ஆமருவியப்பனையும், ஆண்டாளையும் நம் ஆச்ரம முகப்பிலேயே எழுந்தருளப் பண்ணினர்.

152

ஸ்ரீமத் ஆண்டவனும் தன் கண் பனி சோர திவ்ய தம்பதிகளை அணு அணுவாய் ஸேவித்து மகிழ்ந்தாயிற்று.

140

141

திவ்ய தம்பதிகளின் திருமேனி லாவண்யங்களையும் எடுத்துச் சொல்லி கூட இருந்தோரையும் அந்த அழகிலே ஈடுபட வைத்தாயிற்று.

142

143144145

தீர்த்தவாரி காண்பதற்காக செல்வர் அங்கு எழுந்தருளினார்.

146

149

அதன் பின் பெருமாளுக்கும், செல்வருக்கும் திருவாராதனங்கள் நடந்து செல்வருக்குத் திருமஞ்சனங்கள் நடைபெற்று செல்வர் தீர்த்தவாரி கண்டருளினார்.

151152

ஆச்ரமம் சிறக்க வந்த தேரழுந்தூர் ஆண்டவன், மோக்ஷ சாம்ராஜ்யத்தில் இன்று மிக மிக மனம் மகிழும் வகையில் அவர் பெருமை போற்ற அமைத்த ஆச்ரமத்தில் பெருமாளும் தாயாரும் எழுந்தருளிய சந்தோஷம்!

ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம திருவாராதனத்தில் இருந்த உயர்ந்த , பெரிய பாஞ்சஜன்யத்தை ஆமருவியப்பன் செங்கமலவல்லித் தாயாருக்கு சமர்ப்பித்து உள்ளம் பூரித்தாயிற்று.

153

தீர்த்தவாரி காட்சிகள் மற்றும் திருமஞ்சன வீடியோக்களை அடுத்த பதிவில் இடுவேன்.

படங்களை ஆல்பமாகப் பார்த்து மகிழ

 

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

அழகியசிங்கர் அருளமுது 15

இன்று ரொம்ப சந்தோஷமான நாள். எங்களூர் ஸ்தல புராணத்தில் நாங்கள் சொல்வது உண்மையே  என்று ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவாக்காலே அறிந்த நாள். எங்கள் ஸ்ரீ ஆதி ஜெகன்னாதப் பெருமாளை வணங்கி அவர் அனுக்ரஹம் கிடைத்த பின்பே தசரதன் அயோத்தியில் புத்திர காமேஷ்டி யாகம் செய்து இராமனைப் பெற்றான் என்பது எங்கள் ஸ்தல புராணம். வழிவழியாகச் சொல்லி வருகிறோம். அதற்கான சான்றை இன்று ஸ்ரீமத் அழகியசிங்கர் வால்மீகி வாக்காலே சொன்னபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சி அளவு கடந்த ஒன்று. அதேபோல, இன்றைய அனுக்ரஹ பாஷணத்தைக் கவனித்துக் கேட்டால், எங்கள் ஊரைப் பற்றி, அதாவது சேதுக்கரை விசேஷத்தைப் பற்றி இதுவரை நாங்கள் யாருமே கேட்டிராத ஒரு அற்புதமான தகவலைச் சொல்லியிருப்பது தெரிய வரும். திருமங்கை மன்னன் எங்கள் திருத்தலத்தைப் பற்றிப் பாடியதை, பௌராணிகர்கள் வழியிலிருந்து வேறுபட்டு, ஆழ்வார் அருளிய சொற்களுக்கெல்லாம் வேதப் பிரமாணத்தை நிலைநிறுத்துகின்ற அந்த அற்புதமான அனுக்ரஹ பாஷணத்தை இங்கேயே கேட்க

தரவிறக்க

http://www.mediafire.com/?yi28i827c46bnua

இதுவரை கேட்காதவர்கள் 15 நாள் அனுக்ரஹ பாஷணங்கள் அனைத்தையும் தரவிறக்க

https://skydrive.live.com/#!/richupload.aspx/Azhakiasingar%20anugrahabhashanam?cid=4809c9eb88545e42&sc=documents

Natteri swamy’s teleupanyasam on Guru paramparai dated 1-8-2011

Sri Natteri swamy’s tele-upanyasam on Guru paramparai today the First August 2011 can be listened to online and be downloaded from

Get this widget | Track details | eSnips Social DNA

It may also be downloaded from
http://www.mediafire.com/file/7xrahzcauf8bf6i/guruparamparai%2001-08-2011.mp3

News from Therazhundur

Sri Jagannathachar, ashrama aradhakar, reports from Therazhundur:

On the day of Adi Amavasyai, accepting the request of the kainkaryaparals and disciples, Srimad Andavan, had a holy dip at the Kaveri sangamam at Poompukar near Therazhundur.
Immediately after morning Paduka Araadhanam, accompanied by Ashrama kainkaryaparaLs and disciples Srimad Andavan went to Poompuhar. En route, there was mangalasasanam at Partthanpalli Temple.
Due to a very heavy crowd, ( Sri E.S. Mukundan swamy of Hyderabad who accompanied Srimad Andavan on that day and who is now at Thiruppullani estimates the crowd around a Lakh) all the vehicles were stopped at a fairly long distance. But being a great Yathi, the Ashrama convoy was allowed to go further. Even then, due to the knee deep sand Srimad Andavan’s vehicle had also to be stopped nearly one KM before the seashore. But Srimad Andavan had a very brisk walk and to help HH, the sun also hid himself behind the clouds and the atmosphere was very pleasant. Even though it was a sudden decision, some how knowing about it, more than 100 srivaishnavaites from the surroundings gathered there determined not to miss the great bhagyam of having the holy dip along with the Acharyan. As soon as they reached the Kaveri – sea  sangamam.point after the sankalpam HH Srimad Andavan had a holy dip alongwith sishyas. Then they moved away by a few hundred yards towards Kaveri river, where tharpanam were done. And they returned to Therazhundur by 11AM. to have the maadhyannika Araadhanam in the ashramam.

Some photos are below

Srimad Andavan proceeding towards sangamam

PA010017

Performing Sankalpam

PA010024

And the samudra snaanam

PA010026

  PA010027

ஞாயிறு, 31 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது 14


குடகில் ஒரு சிறு ஊற்றாய்த் தோன்றி படிப்படியாய் விரிந்து பின்னர் அகண்ட காவிரியாய் ப்ரவாகமாய் மாறுவதைப்போல ஸ்ரீமத் அழகியசிங்கர் அருளும் அனுக்ரஹ பாஷணங்கள் முதலில் 20 நிமிடங்களாய் ஆரம்பித்து சிறிது சிறிதாக ஒரு மணி நேரம் வரை நேரம் போவதே தெரியாமல் அமுத வெள்ளமாய் அமைந்து வருகின்றன. நேற்று வரை நாம் அவஸ்யம் அறிந்து கடைப் பிடிக்க வேண்டிய தர்ம சாஸ்த்ரங்களை அருளிய அழகியசிங்கர் இன்று முதல் ஆழ்வார்கள் அருளிச் செயலில் திருப்புல்லாணி பற்றி திருமங்கையாழ்வார் அருளியவற்றை அனுக்ரஹிக்க ஆரம்பித்துள்ளார். அதன் அவதாரிகையாக இன்று அவர் அருளியது நாம் எல்லாரும் அறிந்து அனுபவித்து ,அனைவரையும் கேட்டுப் பயனுற வைக்க வேண்டியதாய் அமைந்தது.
      நம் எல்லாருக்கும் அருளிச் செயல்கள் வேதங்களின் சாரம் என்று தெரியும்தான். ஆனால் யாராவது அது எப்படி என்றால் நம்மில் பெரும்பாலோர் அடியேனைப் போலவே திருதிரு ஆகிவிடுவோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஸ்ரீமத் அழகியசிங்கரோ பூர்வாச்ரமத்தில் இரண்டையும் கற்றுத் தேர்ந்தவர். வார்த்தை வார்த்தையாகப் பொருளுணர்ந்து அனுபவித்து மகிழ்ந்தவர். அதனால் இன்று வேதமே பிரபந்தம் பிரபந்தமே வேதம் என்பதற்கு அளித்த நிரூபணங்கள் ஏராளம். அது மட்டுமல்ல, ஆழ்வார்கள் தோன்றி அருளிச் செயல்களை அருள்வார்கள், இராம சரித்திரம் நடக்கும் என்பதையெல்லாம் வேதம் முன்கூட்டியே சொல்லி விட்டது என்பதையெல்லாம் வீளங்க வைத்தார். ஸ்வாமி தேசிகன் அருளியதைப் போல, கன்றென நம்மை எண்ணி சொல்லமுதம் சொரிந்தார். வார்த்தை விடாமல் கேளுங்கள். முக்கியமாக வீட்டில் உள்ள எல்லாரையும், முக்கியமாக தங்கள் அறியாமையாலே திசை மாறி, சம்ப்ரதாயத்தின் ஏற்றம் உணராமல் இருக்கின்ற இளையவர்களைக் கேட்கச் செய்யுங்கள். ஒரு முறை கேட்டால் போதும் தன்னாலேயே ஸ்ரீவைஷ்ணவனாகப் பிறந்தமை குறித்து பெருமை தானாகவே எற்பட்டுவிடும் என்பது உறுதி.
இங்கேயே கேட்க,



தரவிறக்கிக் கேட்க, சேமிக்க,
http://www.mediafire.com/?bm3a61od5qa727a
All the files are available here.
https://skydrive.live.com/P.mvc#!/?cid=4809c9eb88545e42&sc=documents&uc=1&id=4809C9EB88545E42!922