3) அமலத்வமென்பதை ஆனந்தாத்யதிகரணத்தில்
நான்கொடு ஐந்தாவதாக ஸூத்ரகாரர் ஸூசித்திருப்பதுமன்றி, அக்ஷரத்யதிகரணத்தில்
அதை மறுபடியும் தனியாக வற்புறுத்துகிறார். அமலத்வம் என்கிற நிர்த்தோஷத்வம்
மிகவும் முக்யமென்பது ஸூத்ரகாரர் திருவுள்ளம். அது காரணம்பற்றி முதலிலேயே
“அமலன்” என்று அனுஸந்திப்பது.
4) ஆதியஞ்சோதியான பரவாஸுதேவ விக்ரஹமும், மற்ற
விபவ (அவதார) மூர்த்திகளும், அந்தர்யாமி மூர்த்திகளும், அர்ச்சா மூர்த்திகளும்
ஒன்றென்றே சொல்லலாம். ஆதியஞ்சோதி யிலிருந்து மற்றவை எல்லாம் உதித்து, முடிவில்
அதிலேயே லயிக்கும். பெருமாள் உலகத்திற்கு ஆதிகாரணமாவதுபோல், மற்ற திவ்ய
விக்ரஹங்களுக்குப் பரவிக்ரஹமான ஆதிமூர்த்தி காரணம். “ஆதி” என்று அதையும்
ஸூசிக்கிறார்.
ஆதிமறை யெனவோங்கு மரங்கத்
துள்ளே
யருளாருங் கடலைக்கண் டவன் நம் பாணன்
(ப்ரபந்தசாரம்)
யருளாருங் கடலைக்கண் டவன் நம் பாணன்
(ப்ரபந்தசாரம்)
என்பதையும் நினைக்கவேணும்.
5)
“அமலன்” என்பதால் “விஜ்ஞானம்” என்றும் ஏற்பட்டது. விஜ்ஞானமும் ஆதியுமான பரவாஸுதேவன்
ரூபங்களே மற்ற வ்யூஹ ரூபங்களும்
என்று சொல்லும் விஜ்ஞாநாதிபாவ ஸூத்ரத்தை “அமலன் ஆதி” என்று ஸூசித்து, பாஞ்சராத்ர
ப்ராமாண்யத்தை ஸூத்ரகாரர் ஸ்தாபித்ததை ஸூசிக்கிறார். அதைக்கொண்டு அர்ச்சாதிகளுக்கு
திவ்ய மங்கள விக்ரஹத் தன்மையை ஸ்தாபிக்க வேண்டும்.
6) निर्वाणमय
एवायमात्माज्ञानमयो अमल: (நிர்வாணமய ஏவாய மாத்மாஞானமயோ அமல:) என்றபடி
ஜீவ ஸ்வரூபமும் அமலம். ப்ரக்ருதி மலத்தைப் போக்கிவிட்டால், அமலமான
ஜீவாத்ம ஸ்வரூப அமலமான பரமாத்ம ஸ்வரூபத்திற் புகுந்து பிரியாக் கலவி
பெறுகிறது. நம்முடைய அமல ஸ்வரூபாதிகளையும் அனுஸந்தானம் செய்யவேண்டும்.
அமலனென்று அதன் நினைவும் சேரும். “ஆதி” மூல காரணப் பொருள். அத்தாவான ஸம்ஹரிக்கும்
பொருள். அமலத்வம் இருவருக்கும் ஒருவாறு கூடுவதாகச் சங்கித்தாலும் ஆதிகாரணத்வம்
பரனுக்கே யுள்ளது. “அமலன்” என்று மட்டும் சொன்னால், ஜீவனுக்கும் ஒரு
விதத்தில் அது பொருந்திவிடுமென்று சங்கை வரும். ஆதி காரணத்வம் ஈச்வர லக்ஷணம்.
“ஆதி” என்பதற்கு முற்பாடன் என்றும், “ஆதீயதே” – எல்லோராலும் பரிவுடன் போற்றப்
படும்படி ஸ்ப்ருஹணீயன் என்றும் பிள்ளை அருளிய ரஸம். பிரான் – ரக்ஷகன்
ஸ்திதி காரணத்வத்தைத் தனியே நிரூபிக்கிறார். ஸ்வாமித்வத்தையும் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக