கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த தேசிக ஸ்ரீஸூக்தி சம்ரக்ஷணீ
இதழில் எழுதியது.
1937ல்
ஸ்ரீவேதாந்த தேசிக ஸ்ரீஸூக்தி சம்ரக்ஷணீ
இதழில் எழுதியது.
தமிழாக்கம்
சென்னை திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கம்
வெளியீடு 11 (27-7-1941)
சென்னை திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கம்
வெளியீடு 11 (27-7-1941)
சுலோகம் 8
போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணயபாவநயா
க்ருணந்த: |
உச்சாவசைர் விரஹஸங்கமஜை ருதந்தை:
ச்ருங்காரயந்தி ஹ்ருதயம்
குரவஸ்த்வதீயா:|| (8)
ஆழ்வார்க ணுங்கோ னருளழகிற் பெண்மையவாய்
வாழ்வா ரகங்கனிந்து மால் பெருகி -- நாழோரா
மாலாகிக் கோதாயுன் வாக்குமது வுண்டு நின்மான்
மேலாத லென்னோ வியப்பு. (8)
பதவுரை
கோதே -- கோதாய்;
தவ -- உன்னுடைய; ப்ரியதமம்
-- அத்யந்த ப்ரியனான பர்த்தாவை; பவதீவ
-- உன்னைப்போலவே; போக்தும் -- அநுபவிப்பதற்காக; நிஜாம் -- தங்களுடைய
(சொந்தமான); பக்திம் -- பக்தியை;
ப்ரணயபாவநயா -- ப்ரணய மார்க்கமாக; (நாயகீபாவமாக); க்ருணந்த: -- பேசிக்கொண்டு;
த்வதீயா -- உன்னுடைய; குரவ:
-- பெற்றோர்கள்; உச்சாவசை: -- மிகவும் அதிக்ரமித்த; விரஹஸங்கமஜை: -- பிரிவு கூடல்களால் ஏற்படும்; உதந்தை: -- வ்ருத்தாத்தங்களால்; ஹ்ருதயம் -- தங்கள் மனதை; ச்ருங்காரயந்தி -- ச்ருங்கார பாவமுடையதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
கோதாதேவியே! உன் குருக்கள் (பெரியோர்கள், ஆழ்வார்கள், உன் பிதா விஷ்ணுசித்தர்) உன்னைப்போலவே உன் பிரியதமரான பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டு, தங்கள் பக்தியை ராகம், ஸ்நேஹம் என்னும் காமபாவத்தினால் பேசிக் கொண்டு, கீழும், மேலுமான பற்பல விரஹ ச்ருங்கார ஸம்ச்லேஷ ச்ருங்கார வ்ருத்தாத்தங்களால் தங்கள் மனதை ச்ருங்கார பாவத்தால் நிரப்புகிறார்கள்.
கோதாதேவியே! உன் குருக்கள் (பெரியோர்கள், ஆழ்வார்கள், உன் பிதா விஷ்ணுசித்தர்) உன்னைப்போலவே உன் பிரியதமரான பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டு, தங்கள் பக்தியை ராகம், ஸ்நேஹம் என்னும் காமபாவத்தினால் பேசிக் கொண்டு, கீழும், மேலுமான பற்பல விரஹ ச்ருங்கார ஸம்ச்லேஷ ச்ருங்கார வ்ருத்தாத்தங்களால் தங்கள் மனதை ச்ருங்கார பாவத்தால் நிரப்புகிறார்கள்.
அவதாரிகை
(1) வால்மீகி புத்தேறின தபஸ்வி. காமங்களெல்லாம் வற்றி உலர்ந்துபோன நெஞ்சுடைய விரக்தமுனி. அத்புதமான விப்ரலம்பக ச்ருங்கார, ஸம்ச்லேஷ ச்ருங்கார
ரஸங்களை எப்படி நெஞ்சில் வாங்கி ப்ரத்யக்ஷம்போல் வர்ணித்தார்?
(2) நீர் சுஷ்கசுஷ்கமான விரக்தராயிற்றே,
"தருணீகுணபம்" என்று பேசுகிறவராயிற்றே!
எனக்கும் என் நாயகனுக்கும் உள்ள ப்ரணய ரஸங்களை எப்படி வர்ணிப்பீர்?
(3) என் புத்திரரான ஆதிகவி வால்மீகியின் மதுரவாக்கைப்
புகழ்ந்தீர். என் பெரியோரான அபிநவ தசாவதாரமான ஆழ்வார்கள் வாக்கின்
இனிப்பெப்படி? என்னைப்பெற்ற என் தகப்பனார் வாக்கு எப்படி?
என் நாயகனுக்கும் எனக்குமுள்ள ப்ரணய ரஸத்தையும், எங்கள் திருக்கல்யாணத்தையும் வர்ணிக்கப் போகிறீரே! ஜாமாதாவான
என் நாயகனுடைய மாதுர்யம் எப்படி?
இதற்கெல்லாம் பதில்:-- வால்மீகி
நெஞ்சம் அத்யந்த விரக்தமும், சுஷ்கமுமானதுதான். அவரென்ன பண்ணுவார்? வர்ணிக்கப்படும் ரகுவரனிடத்தில் பக்தி
அவரைத் தம்பதிகளுக்குள்ள ச்ருங்கார பாவத்தை வர்ணிக்கச் செய்கிறது. "பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்" என்று தன்னைப்
பெண்ணுடையுடுத்தச் செய்யும் ரூபாதிகளில் ஸ்வாநுபவத்தாலே அவர் பேசுகிறார். நான் என்ன விரக்தனானாலென்ன? பரமாத்மாவான உன் நாயகனிடம்
ரக்தி (ரதி)யுடையவனே. சாஸ்த்ரீய சுத்த நிருபாதிக நிரதிசய ரஸமான உன் நாயகன் விஷயத்தில் விரக்தி கூடுமோ?
"அத்யர்த்தம் ப்ரிய", 'ப்ரியதம ஏவ வாணீயோ
பவதி' என்றபடி தனக்கு ப்ரியதமமாக அவனை பஜித்து, அவனுக்குப் பிரியதமமானால்தானே
ஆத்மா பிழைக்கலாம்! உன் பெரியோர்களான, மயர்வற
மதிநலமருளப் பெற்றவரும் பெண்ணுடையுடுத்திக் கொள்ளச்செய்யும் மாப்பிள்ளை யம்மா.
மற்ற ஆழ்வார்கள் போகட்டும். உன்னைப் பெற்ற ஆழ்வார்
பெரிய ஆழ்வாரானாரேயம்மா! ரூபவதியான பார்யை அநேக ஸபத்நர்கள்
(விரோதிகள்) ஏற்படுவதற்குக் காரணமாவாரென்பர்.
'கந்யா வரயதே ரூபம்'. ஸர்வாதிசாயியான லாவண்யத்தையுடைய
அரங்கனைத்தான் நீ தேடினாய். நீ ஈடுபடும் உன் நாயகன் அழகே புமான்களுடைய
த்ருஷ்டி சித்தங்களை அபஹரித்து உனக்கு ஸபத்னீக்களாக்குகிறது. உன் தகப்பனார்கூடத் தன் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட ஆசைப்பட்டுப் பெண்ணுக்கே
ஸபத்னீயானாரே. அதோடு நிற்காமல் "வந்து
மண்ணும் மணமும் கொண்மின்" என்று உலகத்தை முழுவதும் கூப்பிட்டு,
என் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்படுங்கள் என்று கூப்பிடுகிறாரே.
ஆண் பெண் விபாகமற உலகத்தாரெல்லோரையும் உனக்கு ஸபத்னீக்களாக வாருங்கள்
என்று அழைக்கிறாரே! யாரென்ன செய்வதம்மா! பெற்ற தகப்பனார் பெண்ணின் பதியிடம் ஆழ்வது ஓர் ஆச்சர்யமானதால் அவரைப் பெரிய
ஆழ்வாரென்பது. வெறும் ஆண்களாய் ஆழ்வார் ஆழ்வார். மாமனாராயிருந்தும் ஆழ்வார் பெரியாழ்வார். 13வது சுலோகம்
வரையில் கோதையின் பிறப்பு முதலிய ஸம்பந்தத்தால் அடையப்படும் பெருமைகளைப் பேசுகிறார்.
கோதையின் குடிப்பெருமை, அவளுக்கு ஜனகத்வாதி ஸம்பந்தங்களால்
அடையப்படும் பெருமையைப் பேசுகிறார். கன்யையின் பிறப்பகத்தின்
மஹிமைகள்.
போக்தும் -- பேரின்பத்துடன்
அநுபவிக்க. பெண்ணுக்குப் பதிஸம்யோகஸுலபமான வயது வந்ததைப் பார்த்து,
இந்தக் கற்பகக்கொடியை ஓர் கற்பகவ்ருக்ஷத்திலணைத்துவிட வேண்டுமே என்று
சிந்தார்ணவமக்னராய், அதன் கரைகாண அநுரூப வரனைத் தேடுவர்.
வரனைப் பார்க்கவே இவர் ச்ருங்கார சபளிதஹ்ருதயராய், ஸ்வயம்போகத்தில் ஆசையாகிய சிந்தார்ணவத்தில் ஆழ்ந்து மூழ்குகிறார். அந்த ராகக் கடலிற்குக் கரையையே காண்கிறாரில்லை. 'ந ஜாநே
போக்தாரம் கமிஹ' என்று காந்தர், காந்தைகளது
ரூபதாம்பத்யத்தைக் கோரி வரிக்கப்பட்ட ப்ரியவஸ்துவின் போகத்திலாழ்வார். உன் பெரியோரான ஆழ்வார்களும், உன் பிதாவும் ஜாமாதாவைக்
கண்டதும் தாங்களே போகத்தில் ஆழ்ந்தார்கள்.
தவ ப்ரியதமம் -- பெண்ணாகிய
உனக்கு வரன் தேடினாரோ? ஆணாகிய தமக்கு ஓர் பதி தேடினாரோ?
பெண்ணுக்கு ப்ரியதமராகப் போக்யராக ஆசைப்படவேண்டியிருக்க, தமக்கே ப்ரியதமராகவும் ஏகபோக்யமாயும் கொண்டார். நீ ச்ருங்கார
பாவங்களையும், பக்தி பாவங்களையும், அத்புதமாய்ப்
பாடினாய் என்றேன் முன் சுலோகத்தில். உன் தகப்பனாரே அப்படிப் பாடுகையில்
நீ பாடுவது அத்புதமா? "கோதே கிமத்புதம் இதம்"
பவதீவ -- உன்னைப்போல.
(அநுபவிக்க) இந்த ப்ரஹ்ம ஜாமாதா விஷயத்தில் 'ஜாமாத்ருபோக்யதாம் புத்ரீ வேத்தி நோ பிதா" என்ற
வைஷம்யமில்லை.
கோதே -- நீ ப்ரணயரஸப் பாசுரம்
கொடுப்பவள். உன்னைப் போலவே அவர்கள் ச்ருங்கார ரஸப் பாமாலை தொடுத்து
ஸமர்ப்பிக்கிறார்கள்.
பக்திம் நிஜாம் -- தங்கள் ஸ்வந்த
பக்தியை. இதில் எல்லாவற்றிற்கும் பரிஹாரம் ஸூசிதம். வாஸ்தவத்தில் அவர்கள் பாவம் ஸ்வரூபத்திற்குப் பிராப்தமும், அத்யந்தோசிதமுமான விச்வபதி விஷயமான பக்தியம்மா! அந்த
பக்தியே நிரதிசய ப்ரீதிரூபமாய் ஸ்நேஹரூபமாய் விட்டது. அடையவேண்டிய
அநுபவமான நித்தியவிபூதி போகவிபூதிதானே! இங்கு போகம் நித்யபோகத்திற்கு
ஸாதனம். வேறு கதியில்லையே, என்ன செய்வது?
விச்வத்திற்கே ஒரு பதிதானேயுள்ளது. 'ப்ரியதமம்'
என்பது பரஸ்பர ப்ரியதமத்வத்தைப் பேசும் ஸ்ரீபாஷ்யபாஷணத்தை ஸ்மரிப்பிக்கிறது.
அங்கும் வரணப்பேச்சே.
ப்ரணயபாவநயா -- பக்தி என்பது
மஹநீய விஷயத்தில் ப்ரீதி. அதுவே ஓர் சமயத்தில் ச்ருங்காரம் என்னும்
வ்ருத்தியாகப் பரிணமிக்கிறது. 'ஸ்நேஹோ மே பரம: பக்திஶஃச நியதா, பாவோ நாந்யத்ர பச்சதி' என்று பேசுவது உசிதம்தானே. ராகமும் முற்றிப் பிச்சேறக்கூடியதுதானே!
க்ருணந்தே --பேசுவது பக்திதான். ஆயினும் அதில் 'ஸதீவ ப்ரியபர்த்தாரம்' என்னும் ராகமும் கலக்கிறதம்மா!
உச்சாவசை: -- உதக்ச அவாக்ச
வடக்கும் தெற்குமாய். மேலும் கீழுமாய். வில்லிப்புத்தூரிலிருந்து மனத்தால் வடக்கே கோயிலுக்கு ஓடுகிறார். மனது திரும்பவும் ஊருக்கு உன்னிடம் ஓடிவருகிறது. "யாந்தீமிவ மநோரதை:" என்று வடக்கே ஓடுகிறார்.
விரஹஸங்கமஜை: -- விரஹத்தில்
தவிப்புகள். ஸம்ச்லேஷ மனோரதத்தோடு நிற்காமல் ஸம்ச்லேஷத்தையே அடைந்து
அதனால் சித்தித்த ஹர்ஷத்தைப் பாடுவது.
உதந்தை:-- வ்ருத்தாந்தங்களால்.
ஸுந்தரகாண்டத்திலுள்ள விரஹ வ்ருத்தாந்தத்திற்கு மேல் இவர் வ்ருத்தாந்தம்.
உதந்தை: -- அந்தமில்லாத. உத்கதோ அந்தோ யேப்ய: -- "உத்" என்பது ஸர்வ பாப்மோதிதரான அப்ராக்ருத திவ்ய மங்கள வீக்நஹமுடைய ஸூர்யமண்டலாந்தர்வர்த்தியான
பெருமாளுக்குத் திருநாமம். அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹமென்று
"உத்" என்னும் சப்தத்தாலும்,
அதில் 'அந்தத்தை நிச்சயத்தை' உடையவர் என்று 'அந்த' சப்தத்தாலும்
காட்டி, ப்ராக்ருத திருமேனியல்லாததால் அணைவதில் யாதொரு தோஷமுமில்லை
என்று பரிஹாரத்தை ஸூசித்தார்.
ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் -- தங்கள் ஹ்ருதயத்திலேயே ச்ருங்காரபாவமுள்ளதுபோல் செய்கிறார்கள். "பும்ஸ: ஸ்த்ரியாம் ஸ்த்ரியா: பும்ஸி
ஸம்போகம் ப்ரதி யா ஸ்ப்ருஹா| ஸ ச்ருங்கார இதி க்யாத:க்ரீதாரத்யாதிகாரக:" என்பது ச்ருங்காரத்திற்கு லக்ஷணம்.
ச்ருங்காரம் போன்ற பாவமுடைய பெரிய ஆழ்வாருக்கு அத்திருநாமம் ஏற்பட்டதற்குக்
காரணமும் இங்கே ஸூசிதம். மற்ற ஆழ்வார்கள் பெண்ணைக் கொடுத்தவர்களல்ல.
பெருமாளுக்குக் குரு முறைமையான தான், பெருமாளுக்கு
ச்வசுரராயிருந்தும், தன் அருமைப் பெண்ணுக்குப் பிதாவாயிருந்தும்
அவரும் நாயகீபாவத்தில் ஆழ்ந்தாரே என்று ஆழ்வதில் அவருக்கு மஹத்தரத்வம். பெருமாளுக்கு ஸேவிக்கத்தக்க குருவாயிருந்த ஆழ்வார் என்பதாலும் அத்திருநாமம்.
இந்த ச்லோகத்தில் முதல் உபபத்தியையும், 10வது ச்லோகத்தில்
இரண்டாமுபபத்தியையும் ஸாதிக்கிறார்.
'ராமஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்'
என்று ஸீதைப்பிராட்டியாரேசல். 'ரங்கஜாமாதரம் ப்ராப்ய'
அரங்கனென்னும் ஜாமாதாவை அடந்த ச்வசுரரே, புருஷவிக்ரஹமான
தன்னைப் பெண்ணாக நினைத்தாரே, அதனையே வலுவாக ஸமர்ப்பிக்க மனோரதம்.
'ஆத்மாதி, ஆத்மக்ரீட, ஆத்மமிதுன'
இதுவிஷயத்தை தேவநாயக பஞ்சாசத் வ்யாக்யானத்தில் விஸ்தரித்துள்ளது.
'ப்ரவ்ரஜ்யாதியுதா பரத்ர புருஷேபாதிர்வதீம் பிப்ருதீ பக்தி:ஸா' என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் பக்தியை ஸந்யாஸம் முதலிய
துறவி குணங்களோடு கூடியதாய பரபுருஷனிடத்தில் பதிவ்ரதா நிஷ்டையை உடையதாயும் வர்ணித்தார்.
அதிலுள்ள வேடிக்கைகளும் கவனிக்கத்தக்கன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக