புதன், 9 டிசம்பர், 2015

சங்கத்தமிழ் மாலை

சென்ற நூற்றாண்டில் மிகச் சிறப்பாக இயங்கி வந்த திருவல்லிக்கேணித்தமிழ்ச் சங்கத்தைப் பற்றி இங்கு பல முறை நான் குறிப்பிட்டிருக்கிறேன். அந்தச் சங்கம் வெளியிட்ட பல நூல்களையும் இங்கு நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 150க்கும் மேல் அந்தச் சங்கம் வெளியிட்ட நூல்களில் மிக அருமையானதும் அதன் நூறாவது வெளியீடுமான "சங்கத் தமிழ்மாலை" என்னும் நூல் ஒரு பொக்கிஷம். ஒரு ஆராய்ச்சி எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணம். இந்த நூல் ஆண்டாளின் திருப்பாவையை ஆய்வு செய்யும் நூலென்றாலும் அந்தப் பாவை வகை இலக்கியங்களை சங்க இலக்கியங்களிலிருந்து நமக்கு அறிமுகப் படுத்தும் ஒரு உன்னதமான நூல். ஆசிரியர் மேற்கோள் காட்டும் பல நம்மில் பலர் அனேகமாகக் கேட்டுக்கூட இராதவை. நூலின் ஆசிரியர், அந்த திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பந்தல்குடி ரெ. திருமலை அய்யங்கார் ஸ்வாமி. படிக்கப் படிக்க தித்திக்கும் அந்நூலினைத் தட்டச்சிட்டு இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று ஒவ்வொரு மார்கழியிலும் நினைப்பேன். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அது முடியாமல் போகும். இந்த வருடம் எப்படியாவது அதைப் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டுமென்று முடிவு செய்தேன். தட்டச்சிட ஆரம்பித்தால், மார்கழிக்குள் நிச்சயம் முடியாது என்பதால் அதை வருடி (ஸ்கான் என்றே தமிழில் சொல்லியிருக்கலாமோ!) இங்கு படங்களாகவே பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். முழுவதும் முடிந்த பிறகு முழுப் புத்தகமாக இணையத்தில் ஏற்றிடலாம் என்றிருக்கிறேன். இனி நூலின் முதல் சில பக்கங்கள். மார்கழி பிறக்க இன்னும் சில நாள்களே இருப்பதால் இப்போதே ஆரம்பித்திருக்கிறேன்.
000100020003000400050006000700080009 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக