ராமாநுஜ என்ற பதம் பெரிய முதலியார் எனப்படும் ஸ்ரீஆளவந்தாரைக் குறிக்கிறது. இவருடைய ஸ்ரீஸூக்திகளில் ஸ்ரீசதுஶ்லோகி, ஸ்ரீஸ்தோத்ர ரத்னம், ஸ்ரீகீதார்த்தஸங்க்ரஹம் இவற்றிற்கு விஸ்தாரமாக வ்யாக்யாநமிட்டும், “ஆகம ப்ரமாண்யம்”, “ஸம்வித்ஸித்தி”, “ஈசுவர ஸித்தி” “ஆத்ம ஸித்தி புருஷ நிர்ணயம்” இவற்றின் தாத்பர்யார்த்தாத்தங்களை “ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷை” முதலிய ஸ்ரீஸூக்திகளில் வெளியிட்டருளியுள்ளார். மேலும், “ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹ”த்தில் सास्त्र सारार्थ उज्यते --ஸாஸ்த்ர ஸாரார்த்த உஜ்யதே –(ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம்) என்பதற்கு இவ்விடத்தில் கீதார்த்தஸங்க்ரஹம் ஶாஸ்த்ர ஸாரார்த்தம். सर्वगुह्यतमं ஸர்வகுஹ்யதமம் (கீதை 18-64) என்று ஆரம்பித்து அர்ஜனனை ஸாவதாநமாய் இருக்கும்படி செய்து मन्मना भव मद्भक्त: மந்மநா பவ மத்பக்த: (கீதை 18—65) सर्वधर्मान् परित्यज्य ஸர்வதர்மாந் பரித்யஜ்ய (கீதை 18 – 66) என்று இரண்டு ஶ்லோகங்களால் சொல்லப்பட்டது. ஸாரார்த்தமாவது பக்தி யோகமென்று “கீதா பாஷ்ய”த்தில் சொல்லியிருப்பதோவெனில் அங்கப்ரபத்தி பரமாகச் சொல்லும் பக்ஷத்தில் ப்ரபத்தியைக் குறித்துப் பக்தி அங்கியாகையினாலே ப்ரதாநமாகையினால் என்றும் ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹப் பாட்டில் காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே பக்தி ப்ரபத்தி இரண்டும் ஶாஸ்த்ர ஸாரார்த்தம் என்ற பதத்தினால் சொல்லப்பட்டுள்ளது. प्रीत्यैव कारित: ப்ரீத்யைவ காரித: (கீதார்த்த ஸங். 31) ஶாஸ்த்ர விருத்தமாக கேவலம் தன்னுடைய இச்சையை பற்றி செய்யலாம் என்பதை ஶாஸ்த்ரம் வேண்டா என்றபடியன்று. இங்கு ஶாஸ்த்ரம் கொண்டே அறியவேண்டுகிற கைங்கர்யம் தன்னில் ஸ்வாமி ஸந்தோஷ ஜனகத்வமடியாக ஶேஷபூதனான தனக்குப் பிறக்கிற ப்ரீதியினுடைய ப்ரேரகத்வாதிஶயம் சொல்லுகையிலே இதற்குத் தாத்பர்யம் “ப்ரீத்யைவ” என்கிற அவதாரணத்தாலே ஸாதநத்வ புத்தியை வ்யவச்சேதித்தார் என்னுமிடம் உபாயதாம் பரித்யஜ்ய என்று விவரிக்கை யாலே வ்யக்தம். ஶாஸ்த்ரீய கைங்கர்யத்தில் ப்ரீதியினுடைய ப்ரேரகத்வாதிஶயம் விவக்ஷிதமானாலும் நிஜகர்மாதி பக்த்யந்தம் என்கிற இவற்றின் ஸ்வரூபத்துக்கு ஶாஸ்த்ரமே ப்ரமாணம் என்னும் இடம் நிஜகர்ம ஶப்தத்தாலே ஸூசிதமாயிற்று.
वपुरादिषु வபுராதிஷு (ஸ்தோத்ர ரத்னம்) என்ற ஶ்லோகத்தில் ஆத்ம ஸமர்ப்பணம் செய்து, मम नाथ மம நாத (ஸ்தோத்ர ரத்னம் 55) என்பதால் அதற்காக அநுஶயிக்கிறார். இதைத் தவறு என்று சிலர் கூறியதற்கு
ஶாஸ்த்ர சோதிதமாய்த் தாம் அநுஷ்டித்த ஸமர்ப்பணத்தை அஜ்ஞக்ருத்யமாக்கினபடியன்று. ஆக இரண்டு ஶ்லோகத்தாலும் யதாவஸ்தித ஸ்வரூபாதி விவேகமில்லையே யாகிலும் ‘ந மம’ என்று ஸ்வ ஸம்பந்தம் அறுக்கையே (ரஹஸ்யத்ரயஸாரம்) ‘अहमपि तवैवास्मि हि भर:’ அஹமபி தவைவாஸ்மி ஹி பர: (ஸ்தோத்ர ரத்னம்) என்னும்படி பர ஸமர்ப்பண ப்ரதாநமான ஶாஸ்த்ரார்த்தத்தில் ஸாரம் என்றருளி இவருடைய அநுஷ்டானமே ஶாஸ்த்ரீயமானது என்று ஸமர்ப்பித்து அருளியுள்ளார். இப்படியே प्रसीद मद्वृत्तमचिन्तयित्वा ப்ரஸீத மத்வ்ருத்தமசிந்தயித்வா (ஸ்தோத்ர ரத்னம்) என்பதற்கு இந்த ஸ்தோத்ரத்தில் ஆத்யந்தங்களில் பண்ணின ஆசார்ய புரஸ்காரம் இங்கு அருளிச் செய்கிற ப்ரபத்திக்கு அபேக்ஷிதமாயாதல் வைகல்ய பரிஹாரார்த்த மாயாதலாய் உபயுக்தமாய் வந்ததித்தனை (ரஹஸ்யத்ரய ஸாரம்) என்று அருளிச் செய்திருப்பதும், தம் ஆசார்யரான மணக்கால் நம்பிகளை ஸ்தோத்ரம் பண்ணாதே அவருக்கும் ப்ராசார்யரான ஸ்ரீமந்நாதமுனிகளைக் குறித்து ஸ்தோத்ரம் செய்துள்ளதற்கு காரணத்தை ஸ்ரீஸம்ப்ரதாய பரிஶுத்தியில் ஆளவந்தார் தாம் நாதமுனிகளை முன்னிட்டு ஸ்தோத்ரம் பண்ணித்தும், ஶரணம் புக்கதுவும், தம்முடைய ஆசார்யருக்கு இது ப்ரியதமம் என்றும், தமக்கு ஆசார்யவத்தை முதலான ஸகல ஸம்பத்துக்களும் நாதமுனி வம்சத்தில் பிறவியென்று தோற்றுகைக்காகவும், ஆசார்ய விஷயத்தில் போலே பரமாசார்ய விஷயத்திலும் க்ருதஜ்ஞதாதிகள் வேணுமென்கைக்காகவும் என்றறியப் படும் என்றருளிச் செய்துள்ளார்.
இப்படி ஸ்ரீகுருபரம்பராஸாரத்தில் குருஶிஷ்ய பரம்பரையை நன்றாக நிரூபித்துள்ளார்.
24. ராமாநுஜ என்கிற பதம் பெரிய நம்பிகளைக் குறிக்கிறது. “ஆளவந்தாருடைய நியோகத்தாலே ஸ்ரீபாஷ்யகாரரை அங்கீகரித்த பூர்ணரான பெரிய நம்பி இவரைத் தமக்கு ஸப்ரஹ்மசாரிகளான திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே அர்த்த ஶிக்ஷை பண்ணவும், திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழி கேட்கவும், ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் பக்கலிலே நல்வார்த்தை கேட்கவும், நியோகத்தலும் ஶிஷ்யபூதரை பஹுகமாகத் திருத்தவேண்டும் என்கிற அபிஸந்தியாலே உபபந்நம் (ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தி)
‘பெரிய நம்பி முதலான பரமாசார்யர்களும் தம்தம் ஸூத்ரங்களின்படியே யஜ்ஞாதிகள் பண்ணினார்கள் என்னுமிடம் ஸர்வருக்கும் ப்ரஸித்தம் என்று அருளிச் செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக