திங்கள், 11 ஆகஸ்ட், 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 12

30. ராமாநுஜ பதம் ஸ்ரீமந்நாதமுனிகளைக் குறிக்கிறது. இவர் பெருமையை நாதோபஜ்ஞம் ப்ரவ்ருத்தம்  (नाथोपज्ञं प्रवृत्तम्)(ஸ்ரீதத்வமுக்தா கலாபம்) ‘அகஸ்த்ய ஸேவிதமான தேஶத்திலே அநேக தேஶிகாபதேஶத்தாலே அவதரித்தருளினான் இவ்வாசார்யர்களில் ‘ ஈஶ்வர  முனிகள் பிள்ளை நாதமுனிகள். இவர் ந்யாயதத்துவம் என்கிற ஶாஸ்த்திரமும் யோக ரஹஸ்யமும் அருளிச் செய்தார். இவருக்கு நம்மாழ்வார் ஆசார்யரானார். தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே. (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)

நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம்|
யஸ்ய நைகாமிகம் தத்வம் ஹஸ்தாமலகதாம் கதம்||
नाथेन मुनिना तेन भवेयं नाथवानहम् |
यस्य नैगामिकं तत्त्वं हस्तामलकतां गतम् ||

                                                (ஸ்ரீயதிராஜ ஸப்ததி)

என்று அருளிச்செய்து ஸ்ரீந்யாய தத்வ வாக்யங்களை ந்யாய பரிஶுத்தி முதலியவற்றில் பல இடங்களில் உதாஹரித்தும் காண்பித்துள்ளார்.

31. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீ உய்யக்கொண்டாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபாவத்தைக் குறிப்பிடும்போது நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார் (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)

நமஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம்|
சுத்தசத்வமயம் சௌரேரவதாரமிவாபரம் ||
नम्स्याम्यरविन्दाक्षं नाथभावे व्यवस्थितम्|
शुद्धसत्त्वमयं शौरेरवतारमिवापरम्||
(யதிராஜ ஸப்ததி)

32. ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீமணக்கால் நம்பியைக் குறிக்கிறது. இவருடைய ப்ரபாவத்தை
அநுஜ்ஜிதக்ஷமாயோகமபுண்யஜநபாதகம்
அஸ்ப்ருஷ்டமதராகம் தம் ராமம் துர்யமுபாஸ்மஹே
अनुज्झितक्षमायोगमपुण्यजनबाधकम्
अस्पृष्टमदरागं तं रामं तुर्यमुपास्महे 
(ஸ்ரீயதிராஜ ஸப்ததி)

என்று பகவானுடைய அவதாரங்களான மூன்று ராமர்களுடன் ஸமமாக பாவித்து நான்காவது ராமனாய் அருளிச் செய்துள்ளார். மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு நெடுநாள் பச்சையிட்டு ஒரு விரகாலே ஆகாங்க்ஷை உண்டாக்கி உபதேஶித்தது பரமாசார்ய குலத்திற்கு தாம் ஒரு கிஞ்சித்காரம் பண்ணுகையிலும் ஆசார்ய நியோகத்தைக் கடுகத் தலைக்கட்டுகையிலும் உண்டான த்வரையாலும் சிரகால பரீக்ஷாதிகள் வேண்டாதபடி போதநந்து முஹு: க்ரமாத் (बोधनन्तु मुहु: क्रमात्) என்கிற யுக தர்மாநுஸாரத்தாலும் உபபந்நம் (ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தி) என்று இவர் ஸ்ரீஆளவந்தாரிடம் தாமே சென்று அவருக்கு வேதாந்த காலக்ஷேபம் சொல்லியது ஶாஸ்த்ரீயமானது என்று ஸ்தாபித்தருளியுள்ளார். ஸ்ரீதத்வடீகையில் 
ரக்ஷிதத்வம் து ராமார்யை: த்ர்ய்யந்தார்த ஹி ஸூசிதம் (रक्षितत्वं तु रामार्यै: त्र्य्यन्तार्थ हि सूचितम् ) என்று அருளிச் செய்வது இவருடைய ப்ரபாவத்தைக் கூறுகிறது என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக