சனி, 8 டிசம்பர், 2012

ரெடியா இருங்க!

கணிணியோ, மொபைலோ அதில் தட்டச்சிடுவது பலருக்கு ஒரு கஷ்டமான காரியமாகவே இருந்து வருகிறது. இந்திய மொழிகளில் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் தமிழ் என்றால், இன்னும் பலருக்கு ஒரே குழப்பம்தான். நேற்று குடுகுடுப்பைக்காரர் வந்து சொன்னார். எல்லாக் குழப்பமும் இன்னும் சில நாள்களில் போய்விடுமாம். 1,2,3 தெரிந்தால் மட்டும் போதுமாம். இந்திய மொழிகள் எதில் வேண்டுமானாலும், (கணிணியோ, மொபைலோ,) தட்டச்சிடலாமாம். சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். inscript keyboard என்று ஒன்று. அது பழகியிருந்தால் (அனேகமா ரொம்பப் பேர் பழகாதது) எந்த இந்திய மொழியிலும் சர்வ சாதாரணமாக தட்டச்சிடமுடியும். எல்லாவற்றுக்கும் விசைகள் ஒரே மாதிரி இருக்கும். அதேபோலவே வரப்போற புதிய முயற்சியிலும் 1 என்று அடித்தால் எல்லா இந்திய மொழிகளிலும் ஒரே எழுத்து வருகிற மாதிரி பண்ணியிருக்கிறார்களாம். சோதனைகளெல்லாம் முடிஞ்சு வெற்றியாம். காப்புரிமைக்காகக் காத்திருக்கிறார்களாம்! 2013 மார்ச்சுக்குள் வந்துவிடுமாம்.  செய்தியைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் !
     இப்போ நாம எல்லாரும் காலரைத் தூக்கி விட்டுக்கலாம்! (அதென்னங்க! பெருமிதமா இருந்தா காலரைத் தூக்கிவிட்டுக்கறது! ) இப்படி ஒரு அருமையான மென் பொருளைத் தயாரித்திருப்பது நம்ம தமிழ்நாட்டுக்காரர். தென்மாவட்டங்கள் ஒன்றில் இருக்கிறார். இவர் கம்ப்யூட்டர் துறையில் எந்தப் பட்டமும் வாங்காதவர். படித்ததோ வேறு பாடம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக