வெள்ளி, 25 ஏப்ரல், 2008

திருப்புல்லாணி பெருமாள் திருமஞ்சனம்

திருப்புல்லாணியில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் பங்குனி உத்ஸவத்தில் பெருமாள் திருமஞ்சனம் கண்டருளியதின் நிறைவுப் பகுதி இது. இதன் முற்பகுதி ஏற்கனவே இங்கு உள்ளது.


Video: Thiruppullani thirumanjanam Pt2

புதன், 23 ஏப்ரல், 2008

திருப்புல்லாணி பெருமாள் திருமஞ்சனம்

திருப்புல்லாணியில் பங்குனி 4ம்நாள் ஆண்டவன் ஆச்ரமத்தில் பெருமாள் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் கண்டருளினார். அதன் ஒரு பகுதி இங்கு வீடியோவாக

புதன், 2 ஏப்ரல், 2008

A Mobile Ring Tone

ஸ்வாமி தேசிகனடியார்களுக்காக ஒரு mobile ring tone பிடித்திருந்தால் உங்கள் மொபைலுக்கு இறக்கிக் கொள்ளவும். அல்லது உங்கள் மொபைலில் GPRS/Wap வசதி இருந்தால் http://audiko.net/55625.mp3 என்ற முகவரியிலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம்.










by audiko.net — ringtones.


வியாழன், 27 மார்ச், 2008

Adhi Jagannaatha PerumaaL

திருப்புல்லாணி பங்குனி உற்சவத்தில் 4ம் நாள் இரட்டை கருட சேவை. ஸ்ரீமத் ஆண்ட வன் ஆச்ரம மண்டகப்படி. வழக்கமாக கோவிலிலேயே நடக்கும். இந்த வருடம் முதல் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆச்ரமத்திற்கு பெருமாள் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளி இரவில் கருட வாகனப் புறப்பாடு வரை ஆச்ரமத்தில் நடக்க இராமனாதபுரம் சமஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. படங்கள் இங்கு் காணலாம்


வியாழன், 6 மார்ச், 2008

ஸ்ரீ தேசிக கீர்த்தனைகள்

கனகதாராஸ்தவம் அருளிச் செய்தது.

விருத்தம்

நலந்தர வேவெண்பரிமுகத்தால்வந்த
லாலாமுதஞ்சிந்தியிருந்ததெல்லாங்
கலந்தெடுத்துத்தேவிகள்கைகொடுத்துவைத்தா
கதிகொண்டேசிறுகுழந்தைவரதநாதன்
மலர்ந்தகையாலெடுத்துண்ணப்பின்புகேட்டு
மைந்தனிவன்செய்ததிதோவென்றுதானே
குலந்தழைக்குமென்பதற்கு வேறாய்ச்சொன்ன
கூறுதானடைந்ததுமவ்வாறுதானே.

தரு - இராகம் - சாவேரி - தாளம் - ஆதி

பல்லவி

சாமியெங்கள்கருணாநிதி - குருசாந்த - வேதாந்தநிதியிவர்தாமே.

அனுபல்லவி

பூமிபுகழுங்கச்சிப் பேரருளாளர்பாதப்
பூங்கமலம்பரவும் வேங்கடநாதகுரு (சா)

சரணங்கள்

அந்தநாள் பிரமசாரி யொருத்தன்வந்து
அங்கங்கேதனவான்க ளாரென்றெங்கும்விசாரித்
தெந்தன்கலியாணத்துக்கே யெவர்கள்சொன்னங்கள்வாரித்
தந்திடுவாரென்றானே தந்ததிவர்சொன்னமாரி (சா)

இதுதருணத்தினல்ல தனவானிவரென்று
இவர்திருமாளிகையைக் காட்டியேசிலர்சொல்ல
அதுநிசமாமென்றெண்ணி யவனுமிவர்பாற்செல்ல
மதுரமிகுந்தகவி மாரிபொழியவல்ல (சா)

பரிவாயனுக்கிரகித்த பாகவதர்கள்சொற்ற
படியேபெருமாள்கிருபை பண்ணுவாரென்றுமெத்த
பெரியபிராட்டியார்மேல் சீர்த்துதிய்ன்றுரைத்த
வரிசையதினாற்சொன்னம் வாரிவாரிக்கொடுத்த (சா)