முகவுரை
||ஸ்ரீ :||
முகவுரை
இந்த கிரந்தத்தின் கர்த்தாவான மஹாமஹோபாத்யாய ஸ்வாமியை அறியாதார் இல்லை. ஆஸேது ஹிமாசலம் உள்ள பண்டிதர்கள் இவருடைய அரும் பெருமையையும் அநிதர ஸாதாரணமான வைதுஷ்யத்தையும் அறிவர். அத்யாத்ம சாஸ்த்ர ஞானத்தில் இவரினும் பெரியாரில்லை. வயதில் மிக முதிர்வும் மிக்க தேக அசக்தியுமுள்ள இந்த ஸ்வாமியினுடைய அத்யந்த விலக்ஷணமான ஞானத்தை ஒரு அத்யாத்மதீபம்போல் இந்த கிரந்தமுகமாக உலகத்திற்கு சாச்வதமாய் பிரகாசித்துக் கொண்டு யாவர்க்கும் தெளிவான ஞானம் உண்டாகும்படிக்கும், ஸம்சய விபாயயங்கள் ஏற்படாமல் இருக்கும் படிக்கும் மிகத் தெளிவாக இந்தகிரந்தம் செய்தருளியிருப்பது லோகோபகாரம் ஆகும். ஸங்கல்ப ஸுர்யோதயத்தின் பத்தாவது அங்கத்தில் "வித்யாஸந்ததிக்கும் உலகத்தில் விச்சேதம் வாராதபடி செய்ய விஞ்ஞாபனம் செய்கிறேன். ச்ருதிகளின் பாக்யமான பகவானிடத்தில் ஸர்வதா மனதையுடைய இம்மஹான் பூமியில் எழுந்தருளி யிருக்கிற ஸமயத்திற்குள் தத்வம் முழுவதுமறிந்த இவரிடம் அறியவிரும்பும் விஷயங்களை எல்லாம் அவதானத்தோடுகேட்டு அறிந்து கொள்வீராக" என்று ஸாதித்திருக்கிறபடிக்கும் "பீஷ்மர் எழுந்தருளி யிருப்பதற்குள் மனதிலுள்ள ஸம்சயங்களை எல்லாம் கேட்டுத் தீர்த்துக் கொள்ளும்" என்று தர்மபுத்திரரைப் பார்த்து ஸர்வசம்சயங்களுக்கும், சேத்தாவான கீதாசார்யன் ஏவினபடிக்கும் இந்த விபூதியில் இந்த ஸ்வாமி எழுந்தருளியிருக்க நாம் பாக்யம் பெற்றிருக்கிற காலத்திலேயே இவருடைய ஞானங்கள் எல்லோருக்கும் பிரயோஜனமாகும்படி பிரகாசமாவது நம்
முடைய பாக்யமே.
உத்தரதேசத்தில் வித்யைக்குப் பெயர்போன காசி முதலிய மஹா நகரங்களில் வேதாந்த வாதங்கள் பிரபலமாக நேர்ந்த காலங்களில் அங்கே ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்த ஜகத் குருக்களான ஸ்ரீஉத்தராதிஸ்வாமிகளும், ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் ஸ்வாமியும் இவரை எழுந்தருளப்பண்ணி இவரைக் கொண்டு வாதங்கள் செய்வித்து அங்கேயுள்ள எல்லா வித்வான்களும் இவருடைய பாண்டித்யத்தை புகழ்ந்தது எல்லோருக்கும் பிரஸித்தம். ஈசாவாஸ்ய உபநிஷத்துக்கு வியாக்யானம் செய்கிறது என்கிற வியாஜத்தைக்கொண்டு
.எல்லா உபநிஷத்துக்களையும் அதிலும் முக்யமான சாந்தோக்யத்திலுள்ள ஸத்வித்யையையும் அபூர்வமாகவும் அத்புதமாகவும் அசும்பிதசரமாகவும் விசாரித்து இவர் ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். அது சீக்கிரத்தில் பிரசுரமாகும். ஆனால் அந்த கிரந்தம் வித்வான்கள் மட்டும் நன்றாய் அறியக்கூடியது. இந்த கிரந்தம் மிகத்தெளிவாக எல்லோரும் அறியும்படி தமிழில் எழுதியது. இதில் மூன்று மதங்களின் பிரமாணப்பிரமேயங்களை எளிய நடையில் தெளிவாய்க் காட்டியிருக்கிறது. ஸ்ரீபாஷ்யம் ஸ்ரீநிவாஸனை முன்னிட்டுக்கொண்டு அவதரித்ததுபோல இவரும் வட மாமலையின் உச்சியை மேகமயமாகச்செய்யும் கிருஷ்ணமேகத்தினிடம் சாதகபக்ஷியின் விருத்தத்தை அவலம்பித்து இந்தக் கிரந்தத்தை செய்தருளியிருக்கிறார். விசிஷ்டாத்வைத தரிசனத்திலுள்ள ஸம்பிரதாய பேதாம்சங்கள் ஒன்றையும் பாராட்டாமல் எல்லோருக்கும் பொதுவாக தரிசனம் விளக்கப்பட்டிருக்கின்றது. சுமார் 20 வருஷங்களுக்கு மேற்பட்ட காலமாக உடையவர் ஸம்பிரதாயங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் பேதங்களைப்பற்றி யாதொரு விவாதமும் கூடாதென்றும் எல்லோரும் கலந்து அநுபவிக்க வேண்டும் என்றும் இந்த ஸ்வாமி பல ஸ்தஸுகளில் உறுதியாக ஸாதித்திருக்கிறார். அந்த நீதியிலேயே இந்த கிரந்த செய்தருளப்பட்டது எல்லோருக்கும் ரஸ்யம்.
ஸ்ரீபாஷ்யபிரஸ்தானத்தில் இந்த ஸ்வாமி அநவரதமும் பரிச்ரமப் பட்டுக் கொண்டேயிருந்துவருவதால் இந்தக் கிரந்தத்தில் பல இடங்களில் ஸ்ரீபாஷ்யத்தின் பதங்களும் பாவங்களும் அப்படியே ஒத்திருப்பதைக் காணலாம். 51 வது பக்கத்தில் "கண்களுக்கெட்டாத அர்த்தங்களை ச்ருதி தானே சொல்லி நிஷேதிக்கின்றதென்று சொன்னதாக ஆகும். இது பைத்தியக்காரனுடைய வியாபாரம் போலாகும்", என்று ஸாதித்திருப்பது पुनस्तदेव नानुन्मत्तः प्रतिषेधति என்கிற "ப்ரக்ருதைதாவத்' ஸூத்திரத்தின் பாஷ்ய வாக்யமே ஆகும். 'அநந்தசப்தத்தின்' அர்த்தத்தை விளக்குகையில் வஸ்து பரிச்சேதம் இல்லை என்பதற்கு "தனக்கு மேற்பட்ட ஒரு வஸ்து இல்லாமல் இருக்கையே ஒழிய மற்றொரு வஸ்துவே யில்லை என்னும்படி இருக்கை அன்று" என்று 55-வது பக்கத்தில் ஸாதிக்கப்பட்டது. இரண்டு பிரகாரங்களாக வஸ்துவினால் அளவில்லாமை ஸித்தாந்தத்தில் உபபாதிக்கப் பட்டிருந்தாலும் ஸர்வவஸ்து ஸாமானாதி கரண்யம் பொருந்தும். யோக்யதை என்கிற பிரகாரம் ந்யாய ஸித்தாஞ்ஜன வியாக்யானத்தில் ஸாதித்தபடி புத்தியில் நிச்சங்கமாக ஆரூடமாகாததாலும் இத்தனை குணந்தானுடையவன் என்று வஸ்துவின் உயர்த்தியை அளவிட இயலாது என்கிற பக்ஷத்தில் மற்றொரு பக்ஷமும் அடங்கிவிடுவதாலும் முதல் பக்ஷமே உயர்ந்தது என்பதைத் திருவுள்ளம்பற்றி ஸாதித்தது என்று கொள்ளவேண்டும். இங்கே இவ்வளவு குணந்தான் உள்ளவன் என்று வரையறுக்க இயலாமை என்கிற பக்ஷமே அநேகமாய் ச்லாக்யம். ஸ்வரூபத்தினாலும் குணத்தாலும் விபூதியாலும் மற்ற எந்த ஆகாரத்தினாலும் வேறெந்த வஸ்துவைக்காட்டிலும் இளப்பமாய் இருப்பது வஸ்து பரிச்சேதம் என்று ந்யாய ஸித்தாஞ்ஜனத்தில் நிஷ்கர்ஷமாய் அருளிச்செய்யப்பட்டது. 'எல்லாப் பொருள்களிலும் உட்புகுந்து உயிராக இருந்து ஸத்தையைக் கொடுத்து ஸ்திதியையும் பிரவ்ருத்தியையும் மஹாகுணத்தால் தான் ஸர்வ வஸ்து ஸாமாநாதிகரண்யத்தை ஸாதிக்க வேண்டுமாகையால் குணங்களி னால் நிரதிசயமான ப்ரகர்ஷம் என்கிற பக்ஷம் அழகானது' என்று "ஜந்மாத் யதிகரண' ச்ருதப்ரகாசிகை. 'ஸர்வவஸ்து ஸமாநாதிகரணார்ஹத்வ மும் இதில் அந்தர்கதம். ஸர்வ சரீரகத்வம்தானே அது. அதுவும் நியமந, தாரண சேஷித்வங்களின் எல்லைதானே' என்று அங்கே அருளிச்செய்யப்பட்டது.
"ஸ்வப்நத்தில் கண்ட வஸ்து தூங்கியெழுந்தபின் கண்ட தொழிய ஒன்றுமில்லை என்றும் முதலிலுண்டான ஞானம் ப்ரமமாய் அதில் தோன்றிய வஸ்துவும் அஸத்யமாகின்றது' என்று இங்கே 46-வது பக்கத்தில் ஸாதிக்கப்பட்டது அப்யுபகமவாதமென்று கொள்ளலாம். ஸ்ரீபாஷ்யத்தில் ஜிக்ஞாஸாதிகரணத்தில் அஸத்யமானதிலிருந்து ஸத்யத்திற்கு உத்பத்தியை நிரஸநம் செய்யுமிடத்து, ஸ்வப்னத்தில் ஏற்படும் புத்திகளுக்கு அஸத்யத்வம் இல்லை. அங்கே பார்க்கப்படும் விஷயங்கள் தானே பொய்யாகும். அந்த விஷயங்களுக்குள் தானே இல்லை என்கிற வாதம் காணப்படுகிறது. ஏற்பட்ட அறிவுகள் ஏற்படவில்லை என்று வாதமில்லையே யென்று ஸாதித்தது அப்யுபகம வாதத்தால் என்று ச்ருத ப்ரகாசிகையில் ஸாதிக்கப்பட்டது. அப்யுபகமமாவது :- "பிறர் சொல்லுவதை யாம் வாஸ்தவத்தில் நம் மதத்தில் ஒப்புக்கொள்ளா விடினும் கக்ஷிக்காக பிறர்சொல்லுவதை ஒப்புக்கொண்டே சொல்லுவது”. वैधर्म्याच्च न स्वप्नोदिवत् என்கிற ஸுத்திரத்தில் 'ஸ்வாப்ந பதார்த்தங்கள் அஸத்யமென்று ஒப்புக்கொண்டு அப்யுபகமவாதமாக பேசப்படுகிறது “என்று ச்ருதப்ரகாசிகை யில் ஸாதிக்கப்பட்டது. காரண தோஷமும் பாதகப்ரத்யயமும் ஸ்வாப்ந பதார்த்தங்களுக்கு உள்ளதாகையால் அது பிராந்தியாகும் என்று அங்கே தீபத்திலும் ஸாரத்திலும் ஸ்ரீபாஷ்யத்திலும் அருளிச் செய்யப்பட்டது. ஸூத்திரத்திலுள்ள சகாரத்தினால் ஸ்வப்ந பதார்த்தங்களும் அஸத்யமல்ல என்று பின்னாலே ஸ்வப்நாதிகரணத்தில் காட்டப்போவதாக ஸூசிப்பதாக தீபத்தில் வ்யாக்யானம் செய்யப்பட்டது.
ஸ்வப்னாதிகரணத்தின் அதிகரணஸாராவளியில்
स्वप्नेर्थास्सन्तु सृष्टास्तदपि बहुविधा दुस्त्यजा भ्रान्तिरत्र
प्रध्वस्तानामिदानीन्तनवदनुभवात्स्थायितादिभ्रमाच्च ।
सत्यं श्रुत्यादिसिद्धे श्रुतिपरिहरणायोगतः सृष्टिमात्रं
स्वीकृत्यांशे तु बाधाद् भ्रममपिहि यथाजागरं न क्षिपामः ॥
என்கிற ச்லோகத்திலும் அதின் வியாக்யான சிந்தாமணியிலும் ஸ்வப்ந பதார்த்தங்கள் பிராந்தி ஸித்தங்கள் ஒழிய உண்மையல்ல என்னும் பூர்வபக்ஷம் ஸத்யம் என்று பாதி அங்கீகாரம் செய்யப்பட்டது. லோகாநுபவத்தினாலும் அவைகள் பொய் என்று தோன்றினாலும் ச்ருதியில் ‘ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கிறான்' என்கிற ஸ்ருஷ்டி சப்தத்தால் அறிவிக்கப்படும் ஏதோ ஒரு. விதமான அநிர்வாச்யமும் லோகவிஜாதீயமும் நினைக்க நினைக்க கேவலம் ஆச்சர்யமும் ஒரு அஸ்திரமுமான இருப்பைக் கொள்ள வேண்டும். ஆனால் அவைகள் இல்லை என்று பாதிக்கப்படுவதால் ஜாக்ரத்தசையில் பாதத்தால் பிராந்தி என்று கொள்வதுபோல இங்கேயும் பிராந்தித்வத்தை அங்கீகரிக்கவேண்டுமென்று சிந்தாமணி. 'ச்ருதி சொல்லுவதையும் ஸ்வப்நாதிகரண ஸூத்ரங்கள் சொல்லுவதையும் கொண்டுமட்டும் நாங்கள் அஸத்யமல்ல வென்று லோகப்ரதீதியையும் தள்ளிப் பேசுகிறோம்' என்று ச்ருத ப்ரகாசிகையில் காண்கிறோம். சததூஷணியில் 30-வது வாதத்தில் ஸ்வப்நத்தில் ஏற்படும் ப்ரமரூபமான ஞானம் ஸத்யமாகையாலும் அந்த ப்ராந்தி ஞானத்தினால் சுபாசுபமான பலங்கள் சித்தமாகையாலும் அதனால் அஸத்யத்திற்கு உத்பத்தியென்பது ஸித்திக்காது. ஸ்வப்ந பதார்த்தங்கள் ஈச்வரஸ்ருஷ்டம் என்கிற பக்ஷத்தில் அவைகள் மித்யை என்பது ஸித்திக்காதாகையாலும் என்றும் ஸ்வப்நாதிகளிலும் பதார்த்தங்களைப் பார்ப்பது என்பது உள்ளது தானே. விஷயங்கள் மட்டுந்தானேயில்லை என்று பாதகப்ரத்யயம் உண்டாகிறது. எந்த இடத்தில் ஸ்வப்நத்தில் ஒரு பொருள் அறியப்படுகிறதோ அந்தவிடத்தில் அது இருக்கிறது என்பதில்லையே யென்னில் அது உசிதமில்லை. அந்தக் காரணத்தினால் பிராமாண்யம் மட்டுமே நிவ்ருத்திக்கும், அறிவுக்கு விஷயமானது போகாது என்று ஸாதிக்கப்பட்டது. இந்தக் கிரந்தத்தின் 56- வது பக்கத்தில் புராணங்களில் சொல்லப்படும் ஸ்வப்ந திருஷ்டாந்தத்திற்கு ஸ்வப்நத்தில் காணப்படும் வஸ்துக்கள் போல அஸ்திரமென்பது தாத்பர்யம் என்று அஸ்திரத்வாம்சத்தை "மின்னின் நிலையில்" என்கிற பிரகாரத்தினால் காட்டப்பட்டது. வாசஸ்பதி மிச்ரரும் மித்யாத்வம் என்று அவர்கள் சொல்வது அநித்யத்வம் என்று ஓரிடத்தில் கூறியிருக்கிறார். அதை ஸ்ரீ ரங்கராமாநுஜ ஸ்வாமியும் எடுத்துக் காட்டியிருக்கிறார். அப்படிக்கொள்ளில் ஒரு முக்யமான பேதாம்சம் போய்விடும். இது 43-வது பக்கத்தில் ஸ்பஷ்டமாய் ஸாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கிரந்தத்தை ஸேவித்துக்கொள்வதால் இந்த மதங்களின் முக்யமான அம்சங்களை எல்லோரும் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
திருச்சினாப்பள்ளி, ஏ.வி.கோபாலாசாரி
12-6-34
.
