பார்த்தசாரதி பதம்புனை பாமாலை 2
இராவுறு கணப்போழ் தேனு மியல்விழி யுறங்கா னாகிச்சராசர கோடி யெல்லாந் தன்வயிற் றளகு போல
விராவுற வணைத்துக் காக்கும் விராட்டெனும் புருடன் யாவன்
பராவுறு மல்லிக் கேணிப் பார்த்தசா ரதியம் மானே.
சராசரம் – அசையும் பொருளும், அசையாப் பொருளும்: விராட்டு – பரப்பிரமம்: விரவுதல் – கலத்தல்: புருடன் – தலைவன்: பராவுதல் – துதித்தல், பரவுதல், வணங்கல்.
அல்லிக்கேணி ஐம்பத்து நான்கு
ஆழ்வார்கள் சிறப்பு
தான்பார்த்து உய்ந்தாழ்வார் தம்திருவல் லிக்கேணி
யான்பார்த்து நாம்யாண்டும் ஓங்கிடத் -- தேன்வார்த்த
தென்னமுதாம் பாசுரங்கள் செப்பாது வான்பார்க்கப்
பள்ளமதில் பாயுமோ நீர். .4.
தெருப்புகழும் தெம்மாங்கில் தேர்ந்திடுவார் நின்
திருப்புகழ் பாடுகுழாம் சேரார் -- அரும்பும்
கழலின் கருணையெண்ணிக் கண்கரியார் பெற்றார்விழலுக் கிறைக்குஞ்சால் மெய். .5.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக