குரு தக்ஷிணையும்
நித்திய கர்மானுஷ்டானமும்
யாருக்கு உபதேசம் கூடாது?
(3)
“சொல்லொக்குங்
கடியவேகச் சுடுசரங்
கரிய செம்மல்
அல்லொக்கும்
நிறத்தினாள்மேல் விடுதலும்
வயிரக்குன்றக்
கல்லொக்கும்
நெஞ்சிற்றங் காதப்புறங்கழன்று
கல்லாப்
புல்லர்க்கு
நல்லோர் சொன்ன பொருளெனப்
போயிற்றன்றே.”
“தாடகையின்பேரில்
பிரயோகித்த ராமபாணமானது
கல்லைப் போன்ற கடினமான
அவள் மார்பில் தைத்துத்
தங்கியிராமல்,
ஊடுருவிப்
பின்புறஞ்சென்று,
கல்வியறிவடையாத
மூடர்களுக்கு ஞானவான்கள்
உபதேசித்த தத்துவம்போலப்
போயிற்று.”
என்ற
கம்பராமாயணத்தாலும்
(கம்.
ரா.
பா.கா.
தாடகை
72)
அறிவிலாதவற்கறிவன
சொல்லுவாரவரால்
இறுதியெய்து
வாரென்னுமதின்று கண்டோம்.”
(கம்.
ரா.
உத்.
கா.
வரை
24)
என,
குபேரன்
தனது பரிஜனங்களின்
முன்னிலையில் கூறியிருப்பதாலும்
,
மூடர்களுக்கு
(அபக்குவருக்கு)
உபதேசம்
செய்யலாகாது
என்பது ஸூசிதம்.
குறிப்பு:--
ஸ்ரீராமபிரான்
கேட்காமலிருக்கும்பொழுது
விஶ்வாமித்திர முனிவர்
தாமாகவே முதலில் மந்திரம்
உபதேசித்தது உசிதமோவெனில்,
“தன்மக
னாசான் மகனே மன்மகன்
பொருள்நனி
கொடுப்போன் வழிபடுவோனே
உரைகோளாளற்கு
உரைப்பது நூலே"
(நன்னூல்)
என்றபடி,
ஸ்ரீராமபிரான்,
சக்கரவர்த்தித்
திருமகனாகவும்,
வழிபாடு
செய்பவனாகவும்,
சிறந்த
மேதாவியாகவும் இருந்ததினால்,
முனிவர்
உபதேசித்தது உசிதமேயாம்.
||| குருகுலவாசம்
“ஸம்யக்
வித்யாவ்ரத ஸ்தாந:
யதாவத்
ஸாங்கவேதவித்"
(வா.ரா.
அ.கா.
சரு
1
சு
20)
“ஸ்ரீராமபிரான்
குருகுலவாசஞ் செய்து
பிரஹ்மசாரி விரதத்தை
ஒழுங்காக அனுஷ்டித்து
ஸகலவேதங்களையும்
சாஸ்திரங்களையும் விதிப்
பிரகாரம் அத்யயனம்
செய்தும் விரதங்களை
ஒழுங்காக அனுஷ்டித்தும்
குருதக்ஷிணை கொடுத்து
ஸமாவர்த்தனம் செய்து
கொண்டவர்,
ஸகல
வேதார்த்தங்களின் தத்துவங்களை
நன்றாய் அறிந்தவர்.
“குரு
கார்யாணி ஸர்வாணி நியுஜ்ய
குஶிகாத்மஜெ"
(வா.ரா.
பா.கா.
சரு
22.
சு.23)
“விஶ்வாமித்திர
முனிவருக்கு ஸ்ரீராமபிரான்
குருஸுஶ்ருஷைகள் யாவற்றையும்
நான்றாய்ச் செய்தனர்"
இவைகளினால்
எல்லாரும்
குருகுலவாசஞ் செய்து
குருவுக்குப் பணிவிடைகள்
செய்து ஸகலவித்தைகளையும்
கற்றும் விரதங்களை
அனுஷ்டித்தும் பின்பு
குருதக்ஷிணை அளித்து குருவின்
அனுமதியின் பேரில் ஸமாவர்த்தனம்
செய்து கொள்ளவேண்டுமென்பது
ஸூசிதம்.
பிரமாணங்கள்:-
மிதிலாதிபதியான
ஜனகர் சுகப்ரஹ்ம ரிஷியை
நோக்கி,
“ஐயா!
பிராம்மணனாலே
ஜன்மம் தொடங்கி எது செய்யத்
தக்கதோ அதைக் கேளும்,
உபநயனஞ்
செய்யப்பட்டு வேதத்தில்
பற்றுத லுடையவனாகவனாக
இருக்கவேண்டும்.
பிராம்மணரே!
தவத்தோடும்,
குரு
சுஶ்ருஷையோடும்,
பிரம்மசரியத்தோடும்
தேவதைகளுடைய கடனும்,
ரிஷிகளுடைய
கடனும் தீர்த்தவனும்,
அஸூயையில்லாதவனும்,
நியமமுடையவனுமாயிருந்து
வேதங்களை அத்யயனஞ்செய்து
குருவுக்கு தக்ஷிணை கொடுத்து
விட்டு (அவருடைய)
அனுமதி
பெற்றுக் கொண்டு பிறகு
ஸமாவர்த்தனம் செய்யவேண்டும்.”
என
உபதேசித்தனர் (சாந்தி
பருவம் – மொழிபெயர்ப்பு)
“ஸர்வேஷாம்
உபநயந ப்ரப்ருத்யாசார்ய
குலேவாஸL|
ஸர்வேஷாமநூத்
ஸர்கோவித்யாயா:||”
(ஆபஸ்தம்பர்)
குறிப்பு:--
முற்காலத்தில்
துவிஜர்கள் தங்கள்
புத்திரர்களுக்கு உபநயனஞ்
செய்தவுடன்
அவர்களை குருவினிடம்
கல்வி கற்கும்படி
விட்டுவிடுவார்க ள்.
அரசர்கள்
குருமார்களுக்குப்
போஜனங்களுக்கு வேண்டிய
எல்லாப் பதார்த்தங்களையும்
கொடுத்து ஆதரித்து வந்ததினால்
அவர்கள் சீடர்களிடத்தில்
பொருளை எதிர்பார்க்கவில்லை.
பைக்ஷம்
சாஹாஹ ஶ்சரேத் என்றபடி
பிரஹ்மசாரிகள் அவசியம்
பிரதிதினம் பிக்ஷையெடுக்க
வேண்டுமென்பது விதியாகையால்
,
வித்தியார்த்திகள்
பிக்ஷான்னத்தைப் புஜித்துக்கொண்டு,
சிறிதும்
கவலையின்றி குருவின்
சுஶ்ருஷைகளைக் குரைவுதலின்றிச்
செய்து வித்தைகளை
அடைந்துவந்தார்கள்.
ஸதா
குருவின் சன்னிதானத்திலேயே
இருக்கவேண்டியிருந்ததினால்
வித்தியார்த்திகளுக்கு
உலக வியாபாரத்தில் மனதைச்
செலுத்தவாவது ஊர்வம்புகளைக்
கேட்கவாவது அவகாசம்
ஏற்படமாட்டாது.
குரு
பணிவிடைகளைச் செய்வதிலும்
வித்தைகளைக் கற்றுக்
கொள்வதிலுமே அவர்கள்
காலத்தைக் கழிப்பார்கள்.
இவ்வாறு
குரு ஸன்னிதியில் வஸிப்பதற்கு
குருகுலவாஸமென்று பெயர்.
வித்தைகள்
கற்று முடிந்தபின்,
குருவுக்கு
குரு தக்ஷிணை அளித்துவிட்டு,
அவருடைய
அனுமதியின் பேரில்,
ஸமாவர்த்தனம்
செய்துகொள்வார்கள்.
உதாரணம்
(1)
பலராமரும்
ஸ்ரீகிருஷ்ணரும் கர்காசாரியரால்
உபநயனஞ் செய்விக்கப்
பட்டார்கள்.
பின்,
“அதோ
குருகுலே வாஸமிச்சந்தாவுபஜந்மது:|
காஶ்யம்
ஸாந்தீபநிம் நாம ஹ்யவந்தீபுர
வாஸிநம்"||
யதோபஸாத்யதௌ
தாந்தௌ குரௌ வ்ருத்திமநிந்திதாம்
|
க்ராஹயந்தாவுபேதௌ
ஸ்ம பக்த்யா தேவமிவாத்ருதௌ"||
அஹோராத்ரைஶ்சது:ஷஷ்ட்யா
ஸம்யத்தௌ தாவதீ:கலா:|
குருதக்ஷிணயாசார்யம்
சந்தயாமாஸ துர்க்ருப||
(ஸ்ரீபாகவதம்
ஸ்க 10
அத்
45
சுலோ
31,32,36)
“அவர்கள்
காசிதேசத்தில் அவந்தியென்னும்
பட்டணத்தில் வஸிக்கும்
ஸாந்தீபனி என்பவரிடம்
சென்று,
வணங்கி,
அவரை
ஆசார்யனாக விதிப்படி
அடைந்து தேவனைப்போல் பாவித்து,
குரு
சுஶ்ருஷை செய்தனர்.
அவர்கள்
அறுபத்து நான்கு நாட்களில்
அறுபத்து நான்கு கலைகளையும்
அப்யஸித்தார்கள்.
பின்பு
அவர்கள் ஆசார்யனை நோக்கி
நாங்கள் தங்களுக்கு
குருதக்ஷிணையாக எதனைக்
கொடுக்க வேண்டுமென்று
கேட்டார்கள்.”
அதற்கு
குருவானவர்
“மடலாட்டு
வண்டுதுதை பூந்தொடை மாதுசொற்றாங்
குடலாட்ட
மெய்தித்தளர் பாம்பினதுச்சிமேனின்
றடலாட்டு
வந்தமழை வண்ணனை
நோக்கியன்னோன்
கடலாட்டின்மைந்தன்
கழிந்தான்றனைத் தம்மீனென்றான்"
(ஸ்ரீபாகவதம்
ஸ்கந்தம் 10)
என்றபடி
பிரபாஸ க்ஷேத்திரத்தில்
சமுத்திரத்தில் விழுந்து
மரணமடைந்து போன தமது
குழந்தையைத் திரும்பக்
கொண்டுவந்து கொடுக்கவேண்டு
மென்று சொன்னார்.
அவர்களும்
ஒப்புக் கொண்டுபோய் ஸம்யமனி
என்ற யமனுடைய பட்டணஞ்
சென்று யமனை அழைத்தனர்.
வெருவுற்ற
கூற்றம் விரைவொடெதிர்
வந்திறைஞ்சி
வரவுற்றதென்கொலென
வேத்தலும் வந்தவண்ணம்
தெரிவுற்றதாக்கிச்
சிறுவற்றரவொல்லைமீளா
குரவற்பணிந்து
குமரன்றனைக் கொள்கவென்றான்.
(ஸ்ரீபாகவதம்
கந்.10)
குருபுத்ரமிஹாநீதம்
நிஜகர்மநிபந்தநம்
ஆநயஸ்வ
மஹாராஜ மச்சாஸநபுரஸ்க்ருத:
ததேதி
தேதோபாநீதம் குருபுத்ரம்
யதாந்தமௌ
தத்வா
ஸ்வகுரவே பூயோ
வ்ருணீஷ்வேதி தமூசது:
(ஸ்ரீபாகவதம்
ஸ்க.10.அத்
45,
சுலோ.
45,46)
யமனும்
மிகுந்த பயத்துடனே வந்து
வணங்கி,
“அடியேனை
அழைத்த காரணம் என்ன?’
என்று
கேட்க,
தங்கள்
குருவின் புத்திரனைக்
கொண்டுவந்து கொடுக்கும்படி
கட்டளையிடவே யமனும் அப்படியே
செய்கிறேனென்று ஒப்புக்கொண்டு
குரு புத்திரனைக் கொடுக்க,
இராம
கிருஷ்ணர்கள் அப்புத்திரனை
அழைத்துக்கொண்டு குருவினிடம்
சென்உ ஸமர்ப்பித்து வேறு
என்ன செய்யவேண்டுமென்று
கேட்டார்கள்.
அதற்கு
குரு,
“ஸம்யக்ஸம்பாதிதோ
வத்ஸ பவத்ப்யாம் குருநிஷ்க்ரய:”
(ஸ்ரீபாகவதம்
ஸ்க.10,
அத்
45.
சுலோ.48)
“குழந்தைகளே!
உங்களால்
குருசுஶ்ரூஷை நன்றாகச் செய்யப்
பட்டது.
உங்களுக்குக்
கீர்த்தியும் மேன்மையுமுண்டாகட்டும்.
நீங்கள்
கிருஹத்திற்குப் போகலாம்"
என்று
அனுக்ரஹித்தார்.
இராம
கிருஷ்ணர்கள் ஆசார்யரிடம்
விடைபெற்றுத் தமதிருப்பிடம்
அடைந்தார்கள்.
“மாதவத்தோன்
புத்திரன்போய் மறிகடல்வாய்
மாண்டானை
ஓதுவித்த
தக்கணையா வுருவுருவே கொடுத்தான்"
என்ற
பெரியாழ்வார் திருமொழி இங்கு
நோக்கத் தக்கது,
இந்த
பாகவத இதிஹாஸமும்.
(2)
“மஹாமேதாவியான
சுகர் வேதங்களையும் வேதாங்கங்களையும்
அவற்றின் பாஷ்யங்களையும்
அறிந்தவராயிருந்தும்,
தருமத்தை
அனுஸரித்து ப்ரஹஸ்பதியை
உபாத்தியாயராக வரித்து அவரிடம்
உபநிஷத்துக்களோடும்
ஸூத்திரங்களோடும் கூடிய ஸகல
வேதங்களையும் தரும சாஸ்திரங்களையும்
முழுவதும் அத்யயனஞ் செய்துவிட்டுக்
குருவுக்கு தக்ஷிணை கொடுத்து,
ஸமாவர்த்தனமென்கிற
வித்தையின் முடிவைச் செய்து
கொண்டனர்"
என்ற
சாந்திபர்வமும்,
(3)
ஏகலைவனென்றொருகிராதன்
முனியைத்
தனியிறைஞ்சி
யிவனேவலின் வழா
னாகலையடைந்து
மிருபத்தியொடு நாடொறு
மருச்சுனனை
யொத்துவருவான்
மேகலைநெடுங்கடல்வளைந்த
தரணிக்கணொரு
வில்லியென
வின்மையுடையான்
மாகலைநிறைந்து
குருதக்கினை
வலக்கையில்
வல்விரல்
வழங்கியுளனால்.
என்றபடி
ஏகலைவன் என்னும் வேடன்
துரோணரைப்போலப் பதுமை
செய்துகொண்டு அதனிடத்தில்,
குருபக்தியுடன்கூடி
குருசுஶ்ரூஷை செய்து வில்வித்தை
அப்யஸித்துவந்து துரோணரின்
விருப்பப் பிரகாரம் அவருக்குத்
த்து வலக்கைக் கட்டைவிரலை
குருதக்ஷிணையாக அளித்தான்,
என்ற
பாரதமும்,
(4)
துரோணாசாரியார்
ஶிஷ்யர்களான கௌரவர்களையும்
பாண்டவர்களையும் நோக்கி,
“நீங்கள்
பாஞ்சால ராஜாவாகிய துருபதனை
யுத்தஞ் செய்து வென்று அவனைப்
பிடித்துக் கொண்டுவந்து
எனக்கும் குருதக்ஷிணையாக
அளிக்கக் கடவீர்கள்"
எனக்
கட்டளையிட்டனர்.
கௌரவர்கள்
ஞென்று துருபதனிடம் தோற்றுவந்தபிறகு,
தகப்படுஞ்
சராசனத் தனஞ்சயன் கைவாள்வெரீஇ
யகப்படுந்தராதிபன்றன்றறவில்லினாணினான்
மிகப்படுந்
தடங்கொடேர் மிசைப்பணித்து
விசை'யுட
னகப்படுஞ்
செயற்கைசெய்து குருவின்முன்னர்
நணுகினான்.
என்றபடி,
அர்ஜுனன்
துருபதனை வென்று,
அவனைப்
பிடித்துத் தேர்க்காலில்
கட்டி துரோணரிடம் கொண்டுவந்தான்,
என்ற
பாரதமும் நோக்கத் தக்கன.
கௌஸல்யா
ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா
ப்ரவர்ததே
உத்திஷ்ட
நரஶார்தூல கர்தவ்யம் தைவமாந்ஹிகம்
(வா.ரா.
பா-கா.
சரு.
23, சு
2,3,4)
“கௌஸல்யாதேவியின்
திருக்குமாரனே!
அருணோதயமாகின்
றது.
நித்திய
கர்மானுஷ்டானங்கள்
செய்யவேண்டுமாதலால் எழுந்திருக்கக்
கடவாய்.
“ என
விஶ்வாமித்திர முனிவர் இராம
லக்ஷ்மணர் களை திருப்பள்ளியுணர்த்தினர்.
“உத்திஷ்டேத்
ப்ரதமம் சாஸ்ய சரமம் சைவ
ஸம்விஶேத்"
என்றபடி,
ஆசார்யன்
நித்திரையினின்று எழுந்திருக்கு
முன்னமே சீடன் எழுந்திருக்க
வேண்டுமென்று சாஸ்திரமிருந்தாலும்,
ஒரு
சமயம் சிரமத்தினால் சீடன்
அயர்ந்து நித்திரைபோனால்
ஆசார்யன் அவனை எழுப்பி நித்திய
கர்மாநுஷ்டானங்கள் செய்யும்படி
ஏவவேண்டும் என்ற தருமம்
ஸூசிதம்.