சனி, 23 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது 6

 

23-7-2011 அன்று ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹா தேசிகன் அருளிய அனுக்ரஹ பாஷணம்.

இன்றைய அனுக்ரஹ பாஷணம் கேட்க

To download to your system

Media fire

http://www.mediafire.com/?cb9nicp5sxvpg1s

அனுக்ரஹ பாஷணம் அனைத்தையும் தரவிறக்கிக் கேட்க

skydrive

https://skydrive.live.com/?cid=4809c9eb88545e42&sc=documents&id=4809C9EB88545E42!922

வெள்ளி, 22 ஜூலை, 2011

ஆடி வெள்ளியில் ஆனந்தக் காட்சிகள்

திருப்புல்லாணியில்  இருந்தோருக்கு இன்று ஒரு ஆனந்தமான நாள். காலையிலே தாயாரும் பெருமாளும் குளிரக் குளிரத் திருமஞ்சனம் கண்டருளி இரவிலே பார்த்தவர்கள் எல்லாரும் பரவசம் அடையும் வண்ணம் ஊஞ்சலில் எழுந்தருளி மகிழ்வித்தனர்.

DSC02972

DSC02976

 

உள்ளே இருந்து ரஸி (க்ஷி)க்கின்ற தாயார்

DSC02977

அங்கு முடிந்து மடத்திற்கு வந்தால் அங்கும்  டோலை!  கண்கொள்ளாக் காட்சி!. அனுபவித்து அனுபவித்து அழகியசிங்கர்  செய்கின்ற கைங்கர்யங்கள், உபசாரங்கள் எல்லாம் அதைக் கண்டவர்களை மெய்மறக்க வைத்தன.

DSC02979

 

DSC02981

DSC02990

 

DSC02989

 

DSC02991

 

DSC02992

DSC02993

 

ஒரு அமெச்சூர்தனமான வீடியோ !

 

இன்று தனது அனுக்ரஹ பாஷணத்தில் 46ம் பட்டம் அழகியசிங்கர் இங்கு சாதுர்மாஸ்ய ஸங்கல்பம் மேற்கொள்வதற்கு ரசமான ஒரு விஷயம் சாதித்தார். அன்று தன்னை நாடி வந்து பூஜித்த இராமனை, அவன் சயனம் கொண்டிருக்கும் இங்கு வந்து அவனை ஆனந்தப்பட வைக்கவே ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹன் அழகியசிங்கர்களை இங்கு சங்கல்பம் மேற்கொள்ள வைத்திருக்கிறான் என்றார். இன்று ந்ருஸிம்ஹன் எழுந்தருளியிருந்த அழகு அதை உறுதிப் படுத்தியது.

அப்புறம், இன்று உள்ளூர் கேபிள் டி.வி. சானல்காரர்களின் ப்ரார்த்தனையை ஏற்று அவர்களுக்காக அனுக்ரஹ பாஷணம் அருளியபடியால், பெரும்பாலும் பொதுவாகவே அனுக்ரஹபாஷணம் அமைந்தது. சொல்ல நினைத்திருந்த தர்ம சாஸ்திர விஷயங்களை நாளை அருள்வதாக சாதித்தாயிற்று. ஆனாலும் இறுதியில், அடியேன் மூலமாக சிலர் கேட்டிருந்த ஐயங்களுக்கு அழகிய சிங்கர் அளித்த பதில் எல்லாருக்கும் பயனளிக்கும்.

சொல்ல மறந்ந்து விட்டேனே! தினமும் மாலையில் சின்ன அழகியசிங்கர் திருவீதி ப்ரதக்ஷிணமாக வந்து கோவிலில் இப்படி ஏகாந்தமாக எல்லா ஸந்நிதிகளிலும் ஸேவித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.

DSC02971

 

அனுக்ரஹ பாஷணம் கேட்க

 
பதிவிறக்கம் செய்து கொள்ள
 
 
அல்லது

 

எங்கள் தாயார் இன்று புதிதாக அணிந்து கொண்ட திருமாங்கல்யம்

இன்று ஆடி வெள்ளி. சமீப காலமாக எங்கள் தாயார் அனேகமாக மாதந்தோறும் ஏதேனும் புதிய ஆபரணங்கள் சாற்றிக் கொண்டு அவள் குழந்தைகளை மகிழ்விப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாள். அந்த வகையில் இன்று ஒரு புதிய திருமாங்கல்யத்தை உற்சவர்  கல்யாணவல்லித் தாயார் அணிந்து கொள்ளப் போகிறாள். இன்னும் சிறிது நேரத்தில் தன் நாதனுடன் திருமஞ்சனம் கண்டருளி விசேஷ வஸ்திரங்கள் அணிந்து வந்திருப்போரை ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைக்கப் போகிறாள். அணிந்து கொள்ளப் போகும் திருமாங்கல்யம் இங்கு காணலாம். உபயதாரர் தாயார் கைங்கர்யத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று ஏனோ மறுத்து விட்டார். “பத்மாசனித் தாயார் கைங்கர்ய”த்தில் ஆனந்தம் காணும் அவருக்கு இ”ராமனு”ம் எல்லா நலன்களும் அருள வேண்டும்.

DSC02970

 

Thirumangalyam samrppaNam to  our Thiruppullani Thayar on Adi veLLi the 22nd July 2011

 

திருமஞ்சனத்துக்குப் பிறகு சர்வ அலங்காரவல்லியாய் தன்னை விட்டுப் பிரியாத நாதனுடன் இங்கு மீண்டும் வருவாள். மாலையில் உல்லாசமாய் ஊஞ்சல் கண்டருள்வாள். இரவு அந்த அற்புதமான காட்சிகளைக் காணலாம்.

வியாழன், 21 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது 4

வாழ்க்கையில் ஒருவன் அறவே ஒதுக்க வேண்டியது என்ன? ஏதோ ஒரு விஷயத்தில் சந்தேகம் வந்தால் யாரிடம் தெளிவு பெறலாம்? ஒரு லிட்டர் பால் கொடுக்கும் பசுவிடம் பால் கறக்க 6 நிமிஷம் என்றால் 15 லிட்டர் கறக்கும் பசுவிடம் பால் கறக்க எவ்வளவு நேரம் ஆகும்?  கேட்டுத் தெளிவு பெற
இன்று சிலருக்கு மீடியாஃபயரில் பிரச்சினைகள் ஏற்பட்டதாக அறிகின்றேன். எனவே அனுக்ரஹபாஷணங்கள் முழுவதும் ஸ்கைட்ரைவிலும் இன்று முதல் இருக்கும்.
https://skydrive.live.com/#!/?cid=4809c9eb88545e42&sc=documents&id=4809C9EB88545E42!922


To Listen online



ஆழ்வார்கள் அருளியதை இப்படியல்லவோ அனுபவிக்க வேண்டும்!

DSC02963

  ஏற்கனவே பல முறை இங்கு அடியேன் எழுதியதை மீண்டும் சொல்வதில் சந்தோஷம்தான். எங்களூர் மிகச் சிறிய க்ராமம்தான். அதிக வசதிகளோ, சென்னை போன்ற நகர்களிலே உள்ள அளவுக்கு சம்ப்ரதாய ஞானம் நிறைந்தவர்களோ அல்லது சத்விஷயங்களை இளைய தலைமுறைக்குச் சொல்லிக் கொடுப்பாரோ இல்லாத சிறு பட்டிக்காடுதான். ஆனாலும் எங்களுக்கு இருக்கின்ற பெரிய பாக்யம் மற்ற பெரிய நகரங்களிலே வாழ்வோருக்கு உண்டா என்றால் இல்லை என்றுதான் அடியேன் சொல்வேன்.

மற்ற ஊர்களில் யதிகள் மற்றும் பெரியவர்களை நாம் தேடிச் சென்று ஸேவிக்க வேண்டும். அதற்கு நமக்கு அவகாசம் வேண்டும். அப்படியே போனாலும் யாரைத் தேடிப் போகிறோமோ அவர்களுக்கு நாம் போகும் நேரம் சௌகர்யப் படவேண்டும். இப்படிப் பல பிரச்சினைகள்.

     ஆனால் இங்கோ, எல்லாப் பாபங்களுக்கும் ப்ராயச்சித்தமாக, சக்கரவர்த்தித் திருமகன் திருவடிபட்ட ஸ்ரீ ஸேதுவை அனைத்து பூர்வாச்சார்யர்களும் ஏற்றுக் கொண்டதாலே, யதிகள், மகான்கள், மஹாமஹோபாத்தியாயர்கள், பல கலை வல்லவர்கள் என யாராவது ஒருவர் தினமும் இங்கு வராமலிருப்பதில்லை. ஊரோ உள்ளங்கை அளவு. அதனால் யார் வந்தாலும் உடன் தெரிந்து விடும். எனவே அவர்களை ஸேவிப்பது அடியோங்களுக்கு மிக எளிதாகக் கிடைத்த பாக்யம். அதிலும் யதிகள் வரும்போது இன்னும் விசேஷமாக பல நிகழ்வுகள் அடியோங்களுக்குக் கிடைக்கும். 2008ல் ஸ்ரீமத் ஆண்டவன் இங்கு முதன்முறையாக சாதுர்மாஸ்ய ஸங்கல்பம் அனுஷ்டித்த போதும் சரி, இப்போது ஸ்ரீ அஹோபில மட அழகியசிங்கர்கள் இங்கு ஸங்கல்பத்தை அனுஷ்டித்து வருகின்ற இப்போதும் சரி, தினமும் நாங்கள் பார்த்து அனுபவித்து வியந்து மகிழ்கின்ற, ஆச்சார்யனிடம் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று தங்கள் நடத்தையால் அடியோங்களுக்குப் புரிய வைக்கின்ற பலரைச் சந்திக்கின்ற நல்வாய்ப்புகளும் இங்கு அனேகம்.

ஆச்சார்யர்கள் எங்களைத் தேடிவந்து அனுக்ரஹிப்பதின் நோக்கம், இவர்களுக்கு வேறு மார்க்கமில்லை, நம்மை இவர்கள் அவர்களது அஞ்ஞானத்தாலே தேடிவந்து தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் பாவ மூட்டைகளைத் தொலைக்கப் போவதில்லை, எனவே நாமே சென்று அவர்களைக் கடைத்தேற்றுவோம் என்ற அளப்பரிய கருணையால் இருக்கலாம் என அடியேனுக்குத் தோன்றும்.

அப்படி இப்போது ஸ்ரீமத் அழகியசிங்கர் எழுந்தருளியிருக்கும்போது நேற்று இங்கு வந்தவர் திரு நம்பிராஜன் ஸ்வாமியும் அவரது தர்ம பத்தினி ஸ்ரீமதி ரமாவும். காலையில் மாலோலன் முன் மனமுருகிப் பாடிக் கொண்டிருந்தார். ஞானசூன்யமான அடியேனே நெக்குருகிப் போனேன். கண்டிப்பாய் மாலோலன் மிக மிக மகிழ்ந்திருப்பான். ஆஹா! விடலாமோ இவரை! மாமாவிடம் அனுமதி பெற்று அடியேனுக்கும் சில பாடல்களைப் பதிவு செய்து தர வேண்டும் என்று வேண்டினேன். ஏற்றுக் கொண்டாலும், மாலோலனுடனும், கோவிலில் பெருமாள், தாயார், இராமனுடனும் அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இரவு ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் இருந்தவர்களை வேண்டிக் கொள்ள அந்த அவசரத்திலும் ஒரு அரை மணி அவகாசம் ஒதுக்கி ரமா மாமி தேன்மாரியாய் இசை மழை பொழிந்தார். ஆழ்வார்கள் பாடலையே ப்ரதானமாகப் பாடினார். அதிலும் அடையாளப் பத்தை முழுமையாகப் பாடி உருக வைத்தார். [மாமி சொன்னது – இராமன் சந்நிதியில் அடையாளப் பத்து ஸேவிக்க ஆசை. ஆனால் அங்கு வேறு சிரமங்கள் இருந்ததால் ஏக்கமாகவே வந்தேன். அதனால் இங்கு அதை முழுமையாய்ப் பாடினேன். ] [உலகத்தார் எல்லாரும் கேட்கவேண்டும் என்பதற்காகவே இராமன் விட்டுக் கொடுத்தான் போல. ] கேட்கக் கேட்க ஸ்வாமி தேசிகன் ஸாதித்த “தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை” என்பதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. ஸ்ரீராமபாரதியின் சில பாடல்களை எப்போதாவது இணையத்தில் கேட்டு சந்தோஷப் பட்டிருக்கிறேன். ஆனால் இப்படித் தொடர்ந்து கேட்கும் வாய்ப்பு இன்று கிட்டியது. அவர்கள் போட்டோதான் மேலே இருக்கிறது.

அதிலும் கூடுதல் சந்தோஷம், அவர்கள் இருவரும் இரு வழியில் அடியேன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பது.  நானும் ஆபீஸ் போகிறேன் என்று போய்க்கொண்டிருந்தேனே, அந்த பிஎஸ் என் எல்லில், மாமா ,  Dy. Genereal Manager. ஆண்டவன் ஆச்ரமத்தில் அடியேன் மீது பிரியமுள்ள ஒரு சஹோதரி ஸ்ரீமதி வேதா. ஸ்ரீ நம்பிராஜன் அவருக்கு அண்ணா. ஆக அடியேனுக்கும் சஹோதரர் ஆக ஒரு குடும்பமானோம்.

இந்த ரமா மாமி மாதிரி நிறையப் பேர் ஆழ்வார்கள் அருளிச் செயலை எல்லாரும் அனுபவிக்கும் வகையிலே பாடிப் பரப்ப முன் வரவேண்டும். ஸ்ரீவைணவப் பெண்மணிகள் நிறையப் பேர் கச்சேரிகள் செய்கிறார்கள். தியாகைய்யரையும், புரந்தரதாஸரையும், தீக்ஷிதரையும் பாடப் பலருண்டு. ஆழ்வார்களைப் பாடத்  தாங்கள் மட்டுமே உண்டு என்று அவர்கள் நினைக்க வேண்டும். தனித் தமிழிசைச் சங்கம் கண்டது போல் ப்ரபந்தம் மட்டும் கச்சேரி என்று நிகழ்ச்சிகள் துவங்க வேண்டும்.

உங்களுடன் ஸ்ரீமதி ரமா மாமி பாடியதைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்,

ஸ்ரீ நம்பி ராஜன் மாமா,

க்ஷமித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு பெரிய பாடகர் என்பது இரவு லேட்டாகத் தான் தெரிந்தது. அடுத்த முறை வால்மீகி தெருவில் சந்திக்கும்போது அதை ஈடுகட்டிக் கொள்வேன்.

ரமா மாமியின் தேனிசை கேட்க

http://www.mediafire.com/?1m1yf5qyr5rsqgu