சனி, 19 நவம்பர், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 30

வினா 31.- அப்பொழுது யார்‌ ஸபைக்கு வந்தது? அங்கு அப்பொழுது என்ன நடந்தது?

விடை.- விதுரர்‌, வியாஸரையும்‌ காந்தாரியையும்‌ அங்கு கூட்டிக்கொண்டு வர, வியாஸர்‌ ஸஞ்சயரை நோக்கி, திருதிராஷ்டிரனுக்கு அவசியம்‌ சொல்ல வேண்டியவைகளைச்‌ சொல்லும்படி கட்டளையிட்டார்‌. உடனே ஸஞ்சயர்‌, கிருஷ்ண பகவானது ஸவரூபத்தை திருதிராஷ்டிரன்‌ அறியும்படி சொல்லி, “எங்கே ஸத்யம்‌ முதலிய நற்குணங்கள்‌ இருக்கின்றனவோ, அங்கே கிருஷ்ண பகவான்‌ இருப்பார்‌. அவர்‌ இருக்கும்‌ பக்கத்திற்கே ஜயம்‌ நிச்சயம்‌” என்று. சொல்லி முடித்தார்‌. இதன்‌ பின்பு ஸஞ்சயர்‌ பகவானது குணாதிசயங்கள்‌, நாம விசேஷங்களைப்பற்றி விஸ்தரித்தார்‌.

வினா 32.- இவ்வாறு பகவானது குனாதிசயங்களைக்‌ கேட்ட திருதிராஷ்டிரன்‌ என்ன செய்தான்‌? கடைசியில்‌ என்ன நடந்தது?

விடை... திருதிராஷ்டிரன்‌ துர்யோதனனை நோக்கிப்‌ பாண்டவர்களோடு ஸமாதானம்‌ செய்து கொண்டு பரம்பொருளாகிய கிருஷ்ணபகவானது கிருபைக்கு ஆளாகும்படி எவ்வளவோ மறுபடியும்‌ சொல்லிப்‌ பார்த்தான்‌. துர்யோதனன்‌, அப்பொழுதும்‌ பிடிவாதமாய்‌ ஸமாதானமாக இடங்கொடுப்பதில்லை என்று சொல்லிவிட்டான்‌. அப்பொழுது வெகு கோபத்தோடு காந்தாரி “பீமஸேனனால்‌ நீ அடிபட்டு விழும்போது, எங்கள்‌ புத்திமதியின்‌ சிறப்பு உனக்குத்‌ தெரியவரும்‌" என்று சொன்னாள்‌. உடனே அவரவர்கள்‌ தத்தம்‌ இருப்பிடம்‌ சென்றனர்‌.

வினா 33- இவ்வாறு ஹஸ்தினாபுரியில்‌ காரியங்கள்‌ நடந்து வருகையில்‌, பாண்டவர்கள்‌ உபப்லாவ்யத்தில்‌ என்ன செய்தார்கள்‌?

விடை... தர்மபுத்திரர்‌, கிருஷ்ணபகவானை நோக்கி, “ஸஞ்சயரோ திருதிராஷ்டிரனது எண்ணத்தை தமக்குத்‌ தெரிவித்து விட்டார்‌. நாம்‌ இப்பொழுது சண்டைக்குப்‌ போவதா? போனால்‌ எல்லோரும்‌ அநியாயமாய்‌ மாண்டு போக வேண்டிவருமே. சண்டையிடாதும்‌ இராஜ்யம்‌ கேட்காதுமிருந்தால்‌, நம்மைக்‌ கெளரவர்கள்‌ பரிஹாஸம்‌ செய்வார்களே. இதற்கு என்ன செய்வது” என்று கேட்டார்‌. அப்பொழுது கிருஷ்ணபகவான்‌ தாமே இந்த ஸமாதான விஷயத்தில்‌ கெளரவர்களிடம்‌ பாண்டவர்களுக்காகத்‌ தூது செல்வதாக ஒப்புக்கொண்டார்‌. அப்பொழுது "எங்களுக்கு நியாயவிரோதமாய்‌ ஐந்து கிராமங்கள்‌ கொடுப்பதாகக்‌ கெளரவர்கள்‌ சொன்னாலும்‌, அதை ஒப்புக்கொண்டு ஸமாதானம்‌ பண்ணிக்கொண்டு வேண்டும்‌" என்று தர்மபுத்திரர்‌ பகவானிடம்‌ சொன்னார்‌.

வினா 34.- பகவான்‌ தூதுசெல்வதைப்பற்றி மற்றைய பாண்டவர்களுக்கும்‌, இன்னும்‌ மற்றவர்களுக்கும்‌ என்னென்ன அபிப்பிராயம்‌?

விடை.- தர்மபுத்திரர்‌, அர்ஜுனன்‌, நகுலன்‌ ஆகிய இவர்களுக்கு கிருஷ்ணபகவான்‌ துர்யோதனனிடம்‌ போய்‌ எப்படியாவது ஸமாதானம்‌ செய்துகொண்டு வரவேண்டும்‌ என்பதும்‌, போரைத்‌ தடுத்துவரவேண்டும்‌ என்பதுமே. பீமனுக்கு மனதில்‌ சண்டை செய்ய வேண்டும்‌ என்ற ஆசை இருந்தபோதிலும்‌, வெளிப்படையாய்‌ அவன்‌ ஸமாதானத்தையே விரும்புவதாகச்‌ சொன்னான்‌. ஸஹாதேவன்‌ மாத்திரம்‌ அவசியம்‌ சண்டைக்கு வேண்டிய ஏற்பாடுகளைப்‌ பண்ணிக்கொண்டு பகவான்‌ திரும்பவேண்டும்‌ என்று அபிப்பிராயப்பட்டான்‌. ஸாத்யகி (பகவானது தம்பி)யும்‌, திரெளபதியும்‌ ஸஹாதேவன்‌ சொல்வது நியாயம்‌ என்று ஒப்புக்கொண்டார்கள்‌. அர்ஜுனன்‌ கடைசியாகப்‌ பகவானை நோக்கிப்‌ "பாண்டவர்களுக்கும்‌, கெளரவருக்கும்‌ எது ஹிதமோ அதைச்‌ செய்துவரவேண்டும்‌' என்று சொல்ல அவ்வாறே செய்து வருவதாகப்‌ பகவான்‌ ஒப்புக்கொண்டு புறப்பட்டார்‌.

வினா 35.- இவ்வாறு கிருஷ்ணபகவான்‌ புறப்பட்டுப்‌ போகையில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை... பகவான்‌ புறப்படும்பொழுது அநேக அபசகுனங்கள்‌ காணப்பட்டன. அனேக ரிஷீச்வரர்கள்‌ பகவான்‌ கண்ணில்பட, அவர்‌ “நீங்கள்‌ யாது காரணத்தால்‌ இங்கு வந்தீர்கள்‌” என, அவர்கள்‌ “பகவானாகிய தாங்கள்‌ இராஜஸபையில்‌ உட்கார்ந்து ஸமாதானத்திற்காகப்‌ பேசும்‌ அழகிய பேச்சுக்களை கேட்கவந்தோம்‌" என்று மறுமொழி கூறினார்‌.

வினா 36.- பகவான்‌ தூது வருகிறார்‌ என்று திருதிராஷ்டிரன்‌ முதலியவர்கள்‌ கேட்டதும்‌, இராஜ ஸபையில்‌ அவர்கள்‌ என்ன ஆலோசனை செய்தார்கள்‌?

விடை.- கிருஷ்ண பகவானுக்குத்‌ தகுந்த மரியாதை செய்து, அவரை வெகுமானப்‌ படுத்தவேண்டும்‌ என்றும்‌ திருதிராஷ்டிரன்‌ சொல்ல, அதை பீஷ்மர்‌ அங்கீகரித்தார்‌. விதுரர்‌, உடனே எழுந்து “பகவான்‌ பாண்டவ ஸகாயர்‌, அவருக்கு மரியாதை செய்து, அவரை நமக்கு அனுகூலராக்கவேண்டும்‌ என்ற மோசக்கருத்தோடு ஒரு மரியாதையும்‌ செய்யாது, மனதாரப்‌ பக்தியோடு செய்யவேண்டும்‌' என்று திருதிராஷ்டிரனுக்குப்‌ புத்திமதி கூறினார்‌. இதைக்கேட்ட துர்யோதனன்‌, 'விதுரர்‌ சொல்லியது உண்மை, நமக்கு விரோதியாய்‌ இருக்கும்‌ கிருஷ்ணனை நாம்‌ மரியாதை செய்யலாகாது. சண்டையைத்‌ தொடங்குவதிலேயே நாம்‌ கருத்துடையவராய்‌ இருக்கவேண்டும்‌' என்றான்‌. உடனே துர்யோதனனை நோக்கிப்‌ பீஷ்மர்‌ 'பகவான்‌ சிறந்தவர்‌. அவர்‌ உனது நன்மையையே எடுத்துக்‌ கூறுவார்‌. ஆகையால்‌ நீ அவர்‌ சொல்லுவதை சிரத்தையோடு கேட்டு, அதின்படி நடக்க முயலவேண்டும்‌' என்று புத்திமதி கூறினார்‌. துராத்மாவான துர்யோதனனுக்கு நல்ல புத்தி தோன்றாமல்‌, 'கிருஷ்ண பகவானை யான்‌ சிறைபிடிக்கப்‌ போகிறேன்‌. இது ஸித்தித்தால்‌ பாண்டவர்கள்‌ என்னை எதிர்த்து வரமாட்டார்கள்‌. நான்‌ ஸுகமாய்‌ அரசாளலாம்‌' என்று தனது கெட்ட எண்ணத்தை வெளியிட்டான்‌. இது தர்ம விரோதம்‌ என்று எவ்வளவோ திருதிராஷ்டிரன்‌ சொல்லிப்‌ பார்த்தும்‌ துர்யோதனன்‌ கேட்கவில்லை. இதைக்கண்டு பீஷ்மருக்குக்‌ கோபம்‌ வர 'இந்த மூர்க்கனோடு என்ன பேச்சு? என்று சொல்லி ஸபையைவிட்டுப்‌ போய்‌ விட்டார்‌.

வினா 37.- இங்கு இப்படியிருக்க பகவான்‌ வந்து யார்‌ வீட்டில்‌ தங்கினார்‌?

விடை.- பகவான்‌ ஹஸ்தினாபுரிக்கு வரும்பொழுது துர்யோதனனைத்‌ தவிர மற்றைய எல்லோரும்‌ அவரை எதிர்கொண்டு அழைக்கவந்தனர்‌. ஊரிலிருந்தவர்கள்‌ எல்லோரும்‌, கண்கொட்டாது பகவானது தூத அவஸரத்தை நோக்கி ஆநந்தித்தனர்‌. இப்படி ஸகலரையும்‌ ஸுகப்படுத்திக்கொண்டு, பகவான்‌ இராஜஸபை வர, அங்கு யாவரும்‌ எழுந்து மரியாதை செய்தனர்‌. திருதிராஷ்டிரன்‌ பகவானுக்கு உபசாராதிகள்‌ செய்தான்‌. இதைப்‌ பெற்றுக்கொண்டு பகவான்‌ விதுரர்‌ வீடு சென்றார்‌. தாம்‌ ஹஸ்தினாபுரியில்‌ இருந்த வரையில்‌, பகவான்‌ அங்கேயே தங்கியிருந்தார்‌.

வினா 38.- விதுரர்‌ வீட்டில்‌ இருந்துவிட்டு, பகவான்‌ யாரைப்‌ பார்க்கப்‌ போனார்‌? அங்கு என்ன நடந்தது?

விடை.- அன்று பிற்பகலில்‌ தமது அத்தையாகிய குந்தியைப்‌ பார்க்கப்‌ போனார்‌. கிருஷ்ணனைக்‌ கண்டதும்‌, குந்தி முதலில்‌ தன்‌ பிள்ளைகள்‌ பட்ட கஷ்டங்களை எண்ணிக்‌ கண்ணீர்‌ பெருக்கினாள்‌. பின்பு பிள்ளைகளின்‌ க்ஷேமஸமாசாரத்தை விசாரித்தாள்‌. கடைசியாய்‌, பீமனும்‌ அர்ஜுனனும்‌ இருக்கையில்‌, போர்க்களத்தி லிருந்து தமது இராஜ்யத்தை மீட்டுக்கொள்ளாது வீட்டுக்குத்‌ திரும்பக்கூடாது என்று பிள்ளைகளிடம்‌ தான்‌ சொன்னதாகச்‌ சொல்லும்படி பகவானிடம்‌ சொல்லி அனுப்பினாள்‌. பகவான்‌, பாண்டவர்களுக்குத்‌ தான்‌ கடைசியில்‌ ஜயம்‌ வரும்‌ என்று சொல்லிக்‌ குந்தியைத்‌ தேற்ற, குந்திக்கு அஞ்ஞானமும்‌ துக்கமும்‌ நீங்கப்‌ பகவானை மனதாரத்‌ துதித்தாள்‌.

வினா 39.- ஸாயங்காலம்‌ பகவான்‌ எங்கே போனார்‌? அங்கு என்ன நடந்தது?

விடை.- இதன்‌ பின்பு, பகவான்‌ துர்யோதனன்‌ ஸபைக்குச்‌ சென்றார்‌. அங்கு இவருக்கு மரியாதைகள்‌ ஒருவாறு நடக்க துர்யோதனன்‌, பகவானை சாப்பாட்டிற்கு அழைத்தான்‌. பகவான்‌ ஒத்துக்கொள்ளவில்லை. இதற்குத்‌ துர்யோதனன்‌ காரணம்‌ கேட்கப்‌, பகவான்‌, 'தூதர்கள்‌ தாங்கள்‌ வந்த காரியத்தைத்‌ தமக்கு அனுகூலமாய்‌ முடித்தால்‌ அல்லது, தாம்‌ வந்திருக்கும்‌ எஜமானன்‌ வீட்டில்‌ சாப்பிடுவதில்லை. ஆகையால்‌ என்‌ மனதை முதலில்‌ திருப்தி செய்துவிட்டுப்‌ பின்பு என்‌ வயிற்றைத்‌ திருப்திசெய்‌' என்றார்‌. இது துர்யோதனனுக்குத்‌ தகுந்த காரணமாகப்‌ படாதது கண்டு, பகவான்‌ தமது உண்மைக்‌ கருத்தைப்‌ பின்வருமாறு வெளியிட்டார்‌. அன்போடு இடாத அன்னத்தைப்‌ புஜிக்கலாகாது. அதை, ஒருவேளை கஷ்டகாலத்தில்‌ மாத்திரம்‌ புஜிக்கலாம்‌ என்பது சாஸ்திரவிதி. என்னிடம்‌ உனக்கு அன்பும்‌ இல்லை, நானும்‌ இப்பொழுது கஷ்ட ஸ்திதியிலும்‌ இல்லை. பாண்டவர்மேல்‌ உனக்குப்‌ பிறந்த நாள்‌ முதல்‌, ஏன்‌ இவ்வளவு அகாரணமான பொறாமை இருக்கவேண்டும்‌. பாண்டவர்கள்‌ மஹாதர்மாத்மாக்கள்‌. அவர்களைக்‌ குற்றங்கூற ஒருவராலும்‌ முடியாது. இக்குணம்‌ வாய்ந்த பாண்டவர்களை வெறுத்தவர்கள்‌ என்னையும்‌ வெறுத்தவர்கள்‌ தான்‌. தர்மாத்மாக்களைக்‌ கெடுக்க எண்ணுபவன்‌ மஹா பாபி. அவனுக்கு மேலான நிலை நிலைக்காது. நீ கொடுக்கும்‌ வஸ்துக்கள்‌ யாவும்‌ உனது குணங்களால்‌ அசுத்தமாயி ருக்கின்றன. இவ்வூரில்‌ எனக்குச்‌ சுத்தபோஜனம்‌ அளிக்க வல்லவன்‌ விதுரன்‌ ஒருவனே என்று சொல்லிவிட்டுப்‌ பகவான்‌ விதுரர்‌ வீடு சென்றார்.

வினா 40- விதுரர்‌ வீடு சென்று பகவான்‌ அன்று மிஞ்சிய பகலையும்‌, இரவையும்‌ எவ்வாறு கழித்தார்‌.

விடை.- விதுரர்‌ வீடு சென்று ஸாயங்காலம்‌ வந்து சேர்ந்ததும்‌, பகவானைத்‌ தரிசிக்கப்‌ பீஷ்மர்‌ முதலிய தர்மாத்மாக்கள்‌ அங்கு வந்து பகவானைத்‌ தமது திவ்ய மாளிகைகளில்‌ வந்து வஸிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்‌. பகவான்‌ அவர்கள்‌ செய்த மரியாதைகளை ஒத்துக்கொண்டு அவர்களைத்‌ தத்தம்‌ இருப்பிடம்‌ போகும்‌ படி அனுப்பி விட்டார்‌. அதன்பின்‌, விதுரர்‌ பக்தியோடு அளித்த போஜனத்தை வயிறார உண்டு, பகவான்‌ ஓரிடத்து வந்து உட்கார்ந்தார்‌. அப்பொழுது விதுரர்‌ 'துர்யோதனன்‌ ஸ்வபாவமாகவே துராத்மா, மேலும்‌ அவனுக்கு பீஷ்மர்‌, துரோணர்‌ முதலியவர்களது ஸகாயமிருக்கையில்‌, தன்னை ஒருவராலும்‌ ஜயிக்க முடியாது என்ற எண்ணமுண்டாயிருக்கிறது. அவனை அநேகம்‌ கொடியவர்கள்‌ சூழ்ந்திருக்கிறார்கள்‌. இப்படி முரட்டுத்தனமுள்ளவனிடம்‌ பேசத்‌ தாங்கள்‌ வருவானேன்‌. ஆனால்‌ தங்களைக்‌ கண்டு நான்‌ கிருதார்த்தனானேன்‌. தாங்கள்‌ வந்தது எனக்கு மாத்திரம்தான்‌ நன்மையாக முடியும்‌' என்று தன்‌ எண்ணத்தை வெளியிட்‌டார்‌. அதற்குப்‌ பகவான்‌, நீ சொல்லியது உண்மைதான்‌. அப்படி இருந்தபோதிலும்‌, நான்‌ ஸமாதான விஷயத்தில்‌ என்னால்‌ கூடியவரையிலும்‌ நயமாய்ச்‌ சொல்லிப்‌ பார்க்கிறேன்‌. இது நான்‌ அவசியம்‌ செய்யவேண்டியது தான்‌. இதற்குப்‌ பின்னும்‌, துர்யோதனன்‌ முரட்டுத்தனமா யிருப்பானாயின்‌, அவனை நாசம்‌ செய்யத்தக்க யுத்தத்தைத்‌ தொடங்குவேன்‌' என்று மறுமொழி கூறினார்‌. இவ்வாறு பேச்சிலேயே அன்றிரவு கழிந்தது.

வினா 41.- மறுநாட்‌ காலையில்‌ பகவான்‌ என்ன செய்தார்‌? அங்கு என்ன நடந்தது?

விடை.- பகவான்‌ எழுந்து, காலைக்‌ கடன்களை முடித்துக்‌ கொண்டு, திருதிராஷ்டிரனது ஸபைக்குப்‌ போய்ச்‌ சேர்ந்தார்‌. அங்கு யாவரும்‌ எழுந்து, பகவானுக்கு ஏற்பட்ட ஆஸனத்தில்‌ அவர்‌ உட்கார்ந்ததும்‌, எல்லோரும்‌ உட்கார்ந்தார்‌கள்‌. பகவானது வாக்சாதுர்யத்தைக்‌ கண்டு ஆனந்திக்க, நாரதரை முன்னிட்டுக்‌ கொண்டு அனேக ரிஷீசுவரர்கள், திருதிராஷ்டிரன்‌ ஸபைக்குவர, அவர்களையும்‌ தகுந்த ஆஸனங்களில்‌ பீஷ்மர்‌ முதலியோர்‌ உட்காருவித்தார்கள்‌. விதுரர்‌, பகவான்‌ பக்கத்தில்‌ உட்கார்ந்தார்‌. ஸபையானது மிக அழகாய்‌ விளங்கியது.

வினா 42.- பகவான்‌ துர்யோதனாதியரை நோக்கி என்ன சொன்னார்‌?

விடை.- பாண்டவர்களுக்கும்‌ கெளரவர்களுக்கும்‌ ஸமாதானம்‌ இருக்கவேண்டும்‌ என்றும்‌, சண்டை நேர்ந்தால்‌ இருதிறத்தாருக்கும்‌ மிகுந்த அபாயம்‌ வரும்‌ என்றும்‌, திருதிராஷ்டிரன்‌ நினைத்தால்‌ சண்டை வராமல்‌ தடுக்கலாம்‌ என்றும்‌, பாண்டவ கெளரவர்கள்‌ ஒற்றுமையாய்‌ இருந்தால்‌ அவர்களை ஒருவராலும்‌ ஜயிக்க முடியாதென்றும்‌, இருதிறத்தாருக்கும்‌ ஸுகமுண்டாகும்‌ என்றும்‌, அத்தருணத்தில்‌ திருதிராஷ்ரனுக்குப்‌ பாண்டவர்கள்‌ தகப்பனை சிறுவயதில்‌ இழந்தவர்கள்‌ என்ற எண்ணம்‌ வந்தால்‌, அன்பு உண்டாகும்‌ அதனால்‌ சண்டை தடைபடும்‌ என்றும்‌, வெகு விஸ்தாரமாக பகவான்‌ ஸமாதான விஷயத்தில்‌ பேசினார்‌. அதன்‌ பின்பு பாண்டவர்கள்‌, "நாம்‌ உமது கட்டளைப்படி எமது உறவினரோடு கஷ்டங்களை அனுபவித்தாய்‌ விட்டது. ஆகையால்‌ உங்கள்‌ வாக்குப்படி இப்பொழுது நீங்கள்‌ நடந்து எங்களை தர்ம மார்க்கத்தில்‌ நடக்கும்படிச்‌ செய்ய வேண்டும்‌. உம்மை நாம்‌ எங்கள்‌ தகப்பனாராகப்‌ பாவிக்கிறோம்‌' என்று திருதிராஷ்ரனுக்குச்‌ சொல்லிவிட்ட ஸமாசாரத்தைப்‌ பகவான்‌ ஸபையோர்‌ முன்னிலையில்‌ வெளியிட்டார்‌. தர்மபுத்திரர்‌ மஹாத்மா என்றும்‌, ஆகையால்‌ திருதிராஷ்டிரன்‌ தனது பிள்ளைகளை அடக்கி ஆண்டு ஸமாதானத்தையே செய்து கொள்ளவேண்டும்‌ என்றும்‌, தமது அபிப்பிராயத்‌தைப்‌ பகவான்‌ வெளியிட்டார்‌. இதைக்‌ கேட்டதும்‌ எல்லோரும்‌ இதற்கு விரோதமாய்‌ ஒன்றும்‌ சொல்ல முடியாமல்‌ மெளனமாய்‌ இருந்தனர்‌.

வினா 43.- இவ்வாறு பகவான்‌ சொல்லி முடித்ததும்‌, யார்‌ ஸபையில்‌ எழுந்திருந்து என்ன சொன்னார்கள்‌?

விடை.- ஸபையில்‌ மஹரிஷிகளோடு பரசுராமர்‌ எழுந்து டம்போத்பவராஜன்‌ உலகத்தை ஜயித்து, மேலும்‌ ஜயிக்க ஒருவருமில்லாததைக்‌ கண்டு பிராம்மணர்களிடம்‌ கேட்டு அடிக்கடி கஷ்டப்படுத்தினதையும்‌, அப்பொழுது அவர்கள்‌ நரநாராயண யோகிகள்‌ பதிரிகாசிரமத்திலிருக்கிறார்கள்‌, அவர்களைப்போய்‌ ஜயித்துவா என்று அனுப்பியதையும்‌, இந்த அரசன்‌ சென்று யோகிகளது தர்ப்பையில்‌ மந்திரித்து விடப்பட்ட அஸதிர வேகத்தைக்‌ தாங்கமுடியாது தத்தளித்ததையும்‌ எடுத்துச்‌ சொல்லி, அந்த நரநாராயணாளே கிருஷ்ணார்ஜுனாள்‌ என்றும்‌ சொன்னார்‌. இந்தக்‌ காரணத்தால்‌ பாண்டவர்களோடு கெளரவர்கள்‌ ஸமாதானம்‌ செய்துகொள்வதே நலம்‌ என்று பரசுராமர்‌ வற்புறுத்தினார்‌.

வினா 44... இதன்‌ பின்பு யார்‌ ஸபையில்‌ எழுந்து தமது அபிப்பிராயத்தை எவ்வாறு வெளியிட்டது?

விடை.- கண்வ மஹாரிஷி எவ்வளவு பலவானாயினும்‌, தேக பலம்‌, மனோபலத்தின்‌ முன்பும்‌, நியாயத்தின்‌ முன்பும்‌, நிற்கமாட்டாது. ஆகையால்‌ பாண்டவரோடு ஸமாதானம்‌ செய்தலே நலம்‌ என்று எடுத்துரைத்துக்‌ கருடன்‌ கர்வ பங்கப்பட்ட கதையைச்‌ சொன்னார்‌. இந்திரனது ஸாரதியான மாதலி தன்‌ பெண்ணுக்குத்‌ தகுந்த நாயகனை, நாரத ஸஹாயத்தால்‌ தேடி வருகையில்‌, நாகலோகத்தில்‌ ஒரு நாகனைக்கண்டு அவனுக்குத்‌ தன்‌ பெண்ணைக்‌ கொடுப்பதாக எண்ணியதையும்‌, அப்பொழுது அந்த நாகன்‌ கூடிய சீக்கிரத்தில்‌ கருடனால்‌ மாளப்போகிறதை அறிந்து, அவனை மாதலி தேவலோகம்‌ அழைத்துப்‌ போய்‌ விஷ்ணுவும்‌ இந்திரனும்‌ இருக்கையில்‌ அவர்களின்‌ அனுமதியின்‌ பேரில்‌ அமிருதம்‌ உண்பித்ததும்‌ இதை அறிந்த கருடன்‌ விஷ்ணுவிடம்‌ சென்று, தன்‌ பலத்தைப்பற்றிப்‌ பெருமை பேசுங்கால்‌, பகவான்‌ தமது கையை அதன்மேல்‌ வைக்க, அதைத்‌ தாங்கமுடியாது கருடன்‌ தத்தளித்து நின்றதையும்‌, விஸ்தாரமாகக்‌ கண்வர்‌ எடுத்துரைத்தார்‌.

வினா 45.- இதன்‌ பின்பு யார்‌ துர்யோதனனுக்கு இவ்விஷயத்தில்‌ புத்திமதி எவ்வாறு கூறியது?

விடை.- நாரதர்‌, நல்ல விஷயத்திலேயே முரட்டுத்தனம்‌ அதிகமாயிருந்தால்‌ கேடுவிளையும்‌ என்பதைக்‌ காலவரிஷி உபாக்கியானத்தால்‌ வெளியிட்டு, துர்யோதனனை நோக்கி அவன்‌ கெட்ட விஷயத்தில்‌ முரட்டுத்தனமாய்‌ இருந்தால்‌ அதிகக்கேடு உண்டாகும்‌ என்று பயமுறுத்தினார்‌.

வினா 46.- காலவ ரிஷி யார்‌? இவர்‌ எந்த நல்லவிஷயத்தில்‌ முரட்டுத்தனமாய்‌

இருந்தார்‌? என்ன கெடுதி இவருக்கு உண்டாயிற்று?

1 கருத்து:

  1. பெயரில்லா10:01 AM

    அருமை. நன்றி.
    கன்வ மஹரிஷி
    கண்வ மஹாரிஷி எது சரி

    பதிலளிநீக்கு