வியாழன், 8 செப்டம்பர், 2016

अभीतिस्तवः

அபீதிஸ்தவம் 


சுலோகம் 19

कयाधुसुत वायस द्विरदपुङ्गव द्रौपदी
विभीषण भुजङ्गम व्रजगणाम्बरीषादयः
भवत्यमाश्रिता भयविमुक्तिमापुर्यथा
लभेमहि तथा वयं सपदि रङ्गनाथ त्वया

கயாது⁴ஸுத வாயஸ த்³விரத³புங்க³வ த்³ரௌபதீ³
விபீ⁴ஷண பு⁴ஜங்க³ம வ்ரஜக³ணாம்ப³ரீஷாத³: |
ப⁴வத்யமாஶ்ரிதா ப⁴யவிமுக்திமாபுர்யதா²
லபே⁴மஹி ததா² வயம் ஸபதி³ ரங்க³நாத² த்வயா ||

அரக்கர்மகன் பிரகலாதன் அக்காகம் முதலையிடம்
அகப்பட்ட மதக்களிறு ஐமன்னர் அருந்துணைவி
அரக்கர்கோன் விபீடணன் ஆய்ச்சியர்கள் காளிங்கன்
அம்பரீசன் முதலானோர் உன்றனது இணையடியைச்
சரணடைந்து பயந்தன்னைத் தவிர்த்தவராய் ஆயினரே!
திருவரங்க நாயகனே! நாங்களுமே அவ்வாறே
விரைவாக உன்தன்னால் அச்சத்தின் பிடியிருந்து
விடுதலையை அடைந்திடவே வழிகாட்டி அருள்வாயே! 19.

ரங்கநாத -- ரங்கநாதனே; யதா -- எப்படி; கயாதுஸுத -- கயாதுதேவியின் புத்ரனான ப்ரஹ்லாதன்; வாயஸ -- (ஜயந்தன் என்னும்) காகம்; த்விரதபுங்கவ -- கஜேந்த்ரன், த்ரௌபதி, விபீஷணன்; புஜங்கம -- ஸுமுகன் என்னும் நாகம்; வ்ரஜகண --கோப ஜனங்கள்; அம்பரீஷாதய -- அம்பரீஷன் முதலியவர்கள்; பவத்பதஸ்மாஶ்ரிதா -- உம் திருவடிகளை நன்றாக ஆச்ரயித்து; பயவிமுக்திம் -- பயத்திலிருந்து விமோசனத்தை; ஆபு -- அடைந்தார்களோ; ததா -- அப்படியே; வயம் -- நாங்களும்; ஸபதி -- உடனே; த்வயா -- உம்மாலே; லபேமஹி -- (பய விமோசனத்தை) அடைவோமாக.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

பெருமாள் தன் அபயப்ரதான வ்ரதத்தை உத்கோஷித்ததைப் பேசினார். உத்கோஷணம் இருக்கட்டும். கோடிக்கணக்கான உம் அனுஷ்டானங்களை நீர் அனுஸரிக்க வேண்டாவோ என்கிறார்.
கயாதுஸுத -- முதலில் அஸுரசிசுவான ப்ரஹ்லாதாழ்வான். கயாது என்ற தாயின் பெயரையிட்டு அவரையே காயாதவர் என்பர். அவர் ஸாதுக்களில் தலைவர் வைஷ்ணவர்களுக்கு முதலானவர். பகவானுடைய அகடிதகடனாஶக்தியை வெளிப்படுத்துகிறது என்பதற்காக ந்ருஸிம்ஹாவதாரத்தை எடுக்கிறார். மஹாஸுரன் வீட்டுத்தூண்தான் வேண்டுமோ? இங்கோர் மண்டபத்தில் ஆயிரம் தூண்களில் ஒன்றும் நீர் அவதரிக்க உதவாததோ? அஸுரனின் சிறுவனுக்காகத்தான் அவதரிக்க வேண்டுமோ? தலை நரைத்த கிழவனானால் அடியேனுக்காக ஆகாதோ என்று திருவுள்ளம்.

வாயஸ -- ஜகன்மாதாவான பிராட்டியிடம் அபசாரப்பட்ட இந்த்ர புத்ரனான ஜயந்தன். இந்த்ரன் 'ஹவிர்புக்'; அவன் பிள்ளை 'பலிபுக்' (பலியைச் சாப்பிடும் காக) ரூபத்துடன் வந்தான். நீர் கிருபை செய்வதற்கு ஒரு வாயஸமாயே இருக்க வேண்டுமோ? (பரம) ஹம்ஸர்கள் இத்தனை பேர் கதறுகிறார்களே?

த்விரத புங்கவ -- கஜேந்த்ரன் ஒரு நீர்ப்புழுகல்ல, परमापदमापन्नः (பரமாபதம் ஆபந்ந:) என்று ஆர்த்தியின் காஷ்டையில் இருந்தவன். 'நீர் உண்டு; வேக ஸம்ரம்பத்திற்கு கருடனுண்டு; கூர் நேமியுண்டு; ரக்ஷிக்க நானுண்டு. அத்திகிரியரசே! நீர் எல்லா ஜந்துக்களுக்கும் பொதுவாயிருக்க, யானையென்றும் மனிதன் என்றும் பேதம் கூடுமோ?' என்று பேரருளாளனைக் கேட்டார். ब्राह्मणे गवि हस्तिनि ...... पण्डिताः समदर्शिनः (ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி .... பண்டிதா: ஸமதர்ஶிந:) என்று பாடவில்லையோ? 'விபஶ்சித்'தான நீர் பண்டிதராய், ப்ராஹ்மணனான உம் வேதாந்தாசிரியனையும் ஒரு பசுவையும் ஒரு யானையையும் ஸமமாகப் பார்க்கவேண்டாமோ? புங்கவ என்று ச்ரேஷ்டத்தைச் சொல்லும் பதம் மாடு ஜாதியையும் சொல்லுமாதலால் அதையும் எடுப்பதுபோல் அமைந்திருக்கிறது.

த்ரௌபல -- 'நிர்தீஜ்ஜர் ஸபை நடுவே லஜ்ஜையைத் துறந்து சரணாகதி சாஸ்த்ரத்தை மூதலிப்பித்துப் பெற்ற மஹாபாக்யவதி' என்று ஸ்ரீலோக தேசிகன் புகழ்ந்தார். ரங்கமத்யத்தில் எங்கள் உயிரான உம் திருமேனியின் நித்யஸேவையைத் தந்தருள வேணும்.

விபீஷண -- பாரதத்திற்கு த்ரௌபதியைப்போல ராமாயணத்திற்கு விபீஷணன்.

புஜங்கம -- காளியன் என்னும் ஸர்ப்பம், உம் திருவடி அவன் தலை மேலேயிருந்த ஸம்பந்தத்தினால் அவனுக்கும் உம் பத ஸமாஶ்ரயணம் உண்டு. அவன் பத்னிகள் சரணம் புகுந்தார்கள். 'ஸுமுகன்' என்னும் நாகம் என்றும் சொல்வார்கள். 'ஒருக்கால் பகவான் பெரிய திருவடிமேல் ஏறியருளி ஸஞ்சரிக்கும்போது பெரிய திருவடி பசியால் பூமியில் ஸஞ்சரித்த 'ஸுமுகன்' என்கிற ஸர்ப்பத்தைப் பக்ஷிக்கவர, ஸுமுகன் பயாக்ரந்தனாய் பெருமாளை சரணம் புக, அவர் வைந்தேயன் ஸர்ப்பத்தை புஜிக்கவொட்டாமல் மேலே இழுக்க, அதற்குள் ஸுமுகன் புற்றில் நுழைந்து விட்டான்' என்று பெரியார் வ்யாக்யானத்திலுள்ளது. 'புஜங்கம விஹங்கம' என்று மேலே 25வது சுலோகத்தில் பேசுகிறது வேறு. இந்த ஸுமுக வ்ருத்தாந்தத்தில் ஒருவாறு இரண்டும் இங்கு சேரும்.
வ்ரஜ கண -- கோகுல வாஸிகளான ஆண் பெண் அடங்கலும் व्रज जनार्त्तिहन् (வ்ரஜ ஜநார்த்திஹந்) என்று கோபிகா கீதைக்கு "வ்ரஜ ஜன" என்ற பாடம் பொருந்தும். அங்கு கோபர்கள் ஐந்து லக்ஷம்; இங்கு கோடிக்கணக்காக எல்லா ஜாதிகளான ஆண் பெண்கள் ப்ரார்த்திக்கின்றனர்.
அம்பரீஷ -- 'அம்பரீஷ சக்கரவர்த்தியினிடம் துர்வாஸ மஹரிஷி த்வாதசியன்று பிக்ஷைக்கு வருகிறோம் என்று சொல்லி ஸ்நானத்திற்குச் சென்று விளம்பித்து வர, பாரணாகாலம் கழிவதைக் கண்டு, ஜலபாரணம் பண்ணி அம்பரீஷன் துர்வாஸருக்காகக் காத்துக் கொண்டிருந்தான். துர்வாஸர் வந்து ஜலபாரணம் பண்ணின ராஜாவைப் பார்த்துக் கோபித்து அவரை ஸம்ஹரிக்கத் தொடங்க, ஸுதர்னாழ்வானும் பகவதாக்ஞையால் துர்வாஸஸ்ஸைத் துரத்தி ராஜாவின் காலிலே விழும்படி செய்து அவ்வரசனைக் கொண்டே ரக்ஷித்தார்.
பக்தனுக்கு வந்த பயம் எதிரியான மஹரிஷி பேரிலேயே திரும்பி, அவரை புவனத்ரயமும் ஓட வைத்தது. ரிஷி பகவானைச் சரணம்புக, 'நாபாக புத்ரனான அம்பரீஷனையே சரணமடையும்; நான் பக்த பாரதீனன். அஸ்வதந்த்ரன்போல இருக்கிறேன்' என்று நீர் அவரைத் திருப்பி விட்டீர். 'பக்த பராதீனன்' என்பதை எங்கள் ஆசை விஷயத்திலும் உண்மையாக்க வேண்டும்.
பய விமுக்திம் ஆபு -- ஸம்ஸார பயத்திலிருந்து விமோசனம் என்னும் மோக்ஷத்தை இப்போது ப்ரார்த்திக்கவில்லை. எங்கள் உயிரான உம்மைப் பற்றிய பயத்தின் நிச்சேஷ நிவ்ருத்தியையே கோருகிறோம். भयकृत् भयनाशनः பயக்ருத் பயநாஶன: என்கிறபடி பயத்தைச் செய்வித்த நீரே எங்கள் பயத்தைப் போக்க வேண்டும்.
ஸபதி -- உடனே பயம் நீங்கவேண்டும். त्रिटिर्युगायते त्वामपश्यतां (த்ருடி யுகாயதே த்வாம் அபஶ்யதம்) என்று கோபீஜனங்களின் விரஹதாகம். क्षणं युगशतमिव यासां येनविना अभवत् (க்ஷணம் யுக ஶதம் இவ யாஸாம் யேந விநா அபவத்) என்றார் சுகர். அப்படியே உம் விரஹம் எங்களுக்கு துஸ்ஸஹமாயிருக்கிறது.

ரங்கநாத ரங்கம் ஓரிடம் நாதன் ஓரிடமாயிருப்பது நீங்கி, ரங்கத்தின் நாதன் ரங்கத்திலேயே இருக்க வேண்டும் என்று அடுத்த சுலோகத்தில் ப்ரார்த்திப்பது இங்கே அழகாக வ்யஞ்ஜிக்கப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக