சனி, 10 செப்டம்பர், 2016

अभीतिस्तवः

அபீதிஸ்தவம்


அபீதிஸ்தவம்

சுலோகம்  20

भयं शमय रङ्गधामनि अनितराभिलाषस्पृशां
श्रियं बहुलय प्रभो श्रितविपक्षमुन.मूलय ।
स्वयं समुदितं वपुस्तव निशामयन्तः सदा
वयं त्रिदशनिर्वृतिं भुवि मुकुन्द  विन्देमहि ॥

ப⁴யம் ஶமய ரங்க³தா⁴மநி அநிதராபி⁴லாஷஸ்ப்ருஶாம் 
ஶ்ரியம் ப³ஹுளய ப்ரபோ⁴ ஶ்ரிதவிபக்ஷமுந்மூலய | 
ஸ்வயம் ஸமுதி³தம் வபுஸ்தவ நிஶாமயந்த: ஸதா³ 
வயம் த்ரித³ஶநிர்வ்ருதிம் பு⁴வி முகுந்த³ விந்தே³மஹி ||


ப்ரபோ -- ப்ரபுவே; ரங்கதாம்நி -- அரங்கமாநகரில்; அநிதரபிலாஷ  ஸ்புருஶாம் -- மற்றொன்றில் ஆசையைத் தொடாத பரமைகாந்திகளுடைய; பயம் -- பயத்தை; ஶமய – தீரும்படி செய்யவேணும்; ஶ்ரிதவிபக்ஷம் -- ஆச்ரிதருக்கு விரோதிகளை; உந்மூலய – வேரறுக்க வேண்டும்; (புவி) முகுந்த – இப்புவியிலுள்ளபோதே; முக்திச்சுவையை அளிப்பவரே; வயம் -- நாங்கள்; தவ – உம்முடைய; ஸ்வயம் ஸமுதிதம் -- ஸ்வயம் வ்யக்தமான; வபு  -- திருமேனியை;  (ரங்கதாம்நி -- அரங்கமாநகரிலேயே) ஸதா -- எப்பொழுதும்; நிஶாமயந்த – ஸாக்ஷாத்தாக அனுபவித்துக்கொண்டு; புவி -- பூலோகத்தில்; த்ரிதஶநிர்வ்ருதிம் -- நித்யஸூரிகளின் அனந்தத்தை ; விந்தேமஹி -- அடைவோமாக.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

நினையன்றி வேறெதையும் நாடாத அடியார்கள்
தம்நெஞ்சில் தோன்றியுள்ள தடையாகும் பேரச்சம்
தனையொழித்து நீயருள்வாய்! திருவரங்க நகரத்தில்
திருவைணவ செல்வத்தை செழிப்படையச் செய்தருள்வாய்!
உனைவணங்கும் அடியார்க்கு ஏற்பட்ட பகைதன்னை
வேரோடு களைந்தருள்வாய்! தானேயாய் உதித்ததுவாம்
உனதுருவை எப்பொழுதும் உடனிருந்து வணங்கியராய்
உயர்தேவர் இன்பத்தை உற்றிடுவோம் இங்கேயே! 20. 

அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார்

இதுதான் கோரிய பலம். மீமாம்ஸையின் இருபதாவது அத்தியாயத்தில் எல்லையற்ற மோக்ஷானந்தமான நித்ய ஸூரிகளின் ஆனந்தத்தைக் காட்டியுள்ளது. இவரும் இருபதாவது சுலோகத்தில் மோக்ஷச் சுவை போன்ற இச்சுவைக்கு அபாயமில்லாமல் நித்யாநுபவத்தை ப்ரார்த்திக்கிறார். இந்த பரஸமர்ப்பணமே இந்த அபீதி ஸ்தவத்தின் விஷயம். இதை 'இதி பரஸமர்ப்பித:’ என்று அடுத்த சுலோகத்தில் அநுவதிப்பதாலும் இது தெரிகிறது.
பயம் ஶமய – கீழ் ஒவ்வொரு சுலோகத்திலும் 'பயம்' ‘பீதி' என்று பயத்தையே ப்ரஸ்தாவித்தார். இதில் அந்த பயத்தின் சாந்தியைச் செய்யும் என்கிறார்.
அநிதர அபிலாஷ ஸ்ப்ருஶாம் -- மற்றொரு பொருளின் ஆசையைக்கூடத் தொடமாட்டார்கள்; வஸ்துவைத் தொடுவது எங்கே?
ஶ்ரியம் பஹுளய -- ‘ஸ்ரீரங்கஸ்ரீ பெருகவேண்டும்' என்றல்லவோ எங்கு வஸிப்பவர்களும் ஆசாஸிப்பது! ஸ்ரீசங்கரரும் ததநுஸாரிகளும்  इदं श्रीरङ्गम् (இதம் ஸ்ரீரங்கம்)  என்று தினமும் த்யானம் செய்கிறார்கள்.
ப்ரபோ -- இந்த ப்ரார்த்தனையை நிறைவேற்ற நீர் ஸமர்த்தரல்லவோ!
ஶ்ரித விபக்ஷம் உந்மூலய – न मे द्वेष्योऽस्ति  (ந மே த்வேஷ்யோ அஸ்தி) என்றபடி உமக்கு விபக்ஷமில்லாவிடினும், எங்கள் விபக்ஷத்தை இனிக் கிளம்பாதபடி வேருடன் பிடுங்கி எறியவேணும்.  (विपक्ष = hostile, inimical, adverse, contrary த்வேஷம்)
ஸ்வயம் ஸமுதிதம் வபு -- यत् यत् धिया त ऊरुगाय विबावयन्ति तत् तत् वपु प्रणयसे मदनुग्रहाय (யத் யத் தியா த உருகாய விபாவயந்தி தத் தத் வபு : ப்ரணயஸே  மதநுக்ரஹாய ) என்ற பாகவத வசனத்தையும், ‘தமர் உகந்த தெவ்வுருவம் தானாய்' என்பதையும், (इच्छागृहिताभिमतोरुदेहऔ) என்பதையும் இங்கு நினைக்கிறார். இதனால் பராசர சுகாதிகள் ஸம்ப்ரமாயமும் இதுவே என்று காட்டப்படுகிறது.
நிஶாமயந்த: ஸதா -- सदा पश्यन्ति सूरयः (ஸதா பஶ்யந்தி ஸூரய) என்பதுபோல அடியோங்களும் உம்மை அரங்கத்தில் ஸதா ஸேவித்து 'ஜிதம்தே', ‘பல்லாண்டு' என்று பாடிக் கொண்டிருக்க வேண்டும். ‘நிஸமயந்த' என்றால் கேட்பதைச் சொல்லும். “அரங்கத்தில் அரங்கன் எழுந்தருளியிருக்கிறார்" என்று கதை கேட்பது போறாது. “நிஶாமயந்த" என்றால் பார்ப்பது. நாங்கள் நேரில் பார்த்து ஸேவிக்கும்படி நீர் அநுக்ரஹிக்க வேண்டும்.  
த்ரிதஶ நிர்வ்ருதிம் -- (இந்த்ரலோகத்தியதான அச்சுவையை) பரமபத சுவையை
புவிமுகுந்த – இங்கேயே எல்லையற்ற வைகுண்ட ஸுகத்தைக் கொடுக்குமவர்.
விந்தே மஹி -- அடைவோமாக.  இதை ஆத்மநே பதமாகப் பிரயோகித்திருப்பதால், பெருமாளுக்கு  இதனால் வரும் ப்ரயோஜனத்தில் விருப்பமில்லாவிட்டாலும் அவர் அடியார்களின் ப்ரயோஜனத்தைக் கருதி அவர் செய்யவேண்டும் என்பது ஸூசிப்பிக்கப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக