வியாழன், 12 நவம்பர், 2009

திருவருட்சதகமாலை

||ஸ்ரீ:||

தயா சதகம்.

ப்ரபத்யே தம் கிரிம்ப்ராய: ஸ்ரீநிவாஸ நுகம்பயா
  இக்ஷு ஸாரஸ்ரவந்த்யேவ யந்மூர்த்யா சர்க்கராயிதம்  .1.

திருக்களி யுரப்ப னிறைக்களி யுருக்கப்
  பெருக்கென வரப்பெறு கருப்பிர தவெள்ளம்
  சருக்கரை யிறுக்கென சிறப்பினி லுருக்கொள்
  திருக்கிரி யெனத் தெரி கிரிப்புக லடைந்தேன்.     .1.

[ அலர்மேல் மங்கை உறைமார்பனுடைய தயையே கருப்பஞ்சாறாகப்பெருகி ஆறாக வோடிச் சருக்கரைக் கட்டியாய் கனமாய் உறைந்து உருக்கொண்டு நிற்பது போலுள்ள திருவேங்கடம் என்னும் மாமலையை அடியேன் பல கால் சரணம் அடைகிறேன்]

விகாஹே தீர்த்த பகுளாம் சீதலாம் குருஸந்ததிம்
  ஸ்ரீநிவாஸ தயாம்போதே: பரீவாஹ பரம்பராம்.  .2.

வளத்திரு  மலர்மகள் வலத்துறை யுமார்வன்
  உளத்திரு வருட்கட லுகத்தலி லுகுக்கும்
  வளத்தெழு பெருக்கென வரப்பெறு முறைத்தண்
  ணளித்திரு குருப்பர வணித்துறை குளித்தேன்.      .2.

[ திருமாமகள் வலத்துறையு மார்வனான அண்ணலின் அருளாகிய ஒரு பெரிய ஏரியிலிருந்து ஓடி வரும் பெருக்குகளான குளிர்ந்த குரு பரம்பரையில் உள்ள அநேக துறைகளில் இறங்கி நீராட்டம் செய்கிறேன்.]

க்ருதிந: கமலாவாஸ காருண்யை காந்திநோபஜே
  தத்தேயத் ஸூக்தி ரூபேணத் ரிவேதி ஸர்வயோக்யதாம்.    .3.

திருப்பர னடிக்கவி யெனத்தமை விடுத்தாங்
  கொருப்படு திடத்தொரு கடைப்பிடி நடைக்கண்
  உருப்பெறு மறைத்தலை தலைத்தலை யுயக்கொள்
  உரித்தருள் தமிழ்க்கட வுளர்க்கெனை யளித்தேன்.    .3.

[ஸ்ரீநிவாஸனுடைய தயையொன்றையே தஞ்சமாகப் பற்றியவரும், தங்கள் செய்ய தமிழ் மாலைகளாகிய பிரபந்தங்கள் மூலமாய் வேதங்கள் அனைத்தையும் அனைவருக்கும் யோக்யமாகும்படி செய்வித்த தமிழ்க் கடவுளருமான ஆழ்வார்களை இடைவிடாமல் பிரியமாகத் தொழுகிறேன்.]

பராசரமுகாந் வந்தே பகீரதநயே ஸ்திதாந்
  கமலாகாந்த காருண்ய கங்காப்லாவித மத்விதாந்    .4.

உயர்த்தரு ளரிப்பத துனிப்புன னனைத்தே
  அயர்த்திடு மெமைப்பர னடித்திரு வுணர்த்தும்
  சயத்திரு பகீரத னயத்துறு தவத்தோர்
  முயற்றிரு பராசரர் முதல்வர்வ ழிபட்டேன்.           .4.

[பகீரதன் கடுந்தவம் புரிந்து கங்கையை அவனிக்குக் கொண்டு வந்ததுபோல் கமலாகாந்தனுடைய கருணை என்கிற பரிசுத்தமான கங்கா ப்ரவாஹத்தைக் கொணர்ந்து நம் போன்றவரை அதில் அவகாஹிக்கும்படி செய்வித்த மாசில் மனந்தெளி முனிவரான பராசரர் முதலிய மஹர்ஷிகளை வழிபடுகிறோம்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக