வெள்ளி, 23 மே, 2014

ராமாநுஜ தயா பாத்ரம் வ்யாக்யானம்

          6. ராமா என்பது பூமிப்பிராட்டியையும் குறிக்கிறது. அவளுடைய பெருமையை ஸ்ரீபூமிஸ்துதியிலும், ஸ்ரீரஹஸ்யஶிகாமணியிலும் விஶேஷித்து அருளிச் செய்துள்ளபடியால் அவளுடைய தயைக்குப் பாத்திரமானார் என்றபடி.
          ஸ்ரீபூமிப்பிராட்டியை ஜகத்துக்கு ஈஶாநா என்று ஶ்ருதி சொல்லுகையாலே சேதனாசேதன ரூபமான ஜகத்திற்காட்டில் இவளுடைய உத்கர்ஷம் ப்ரஸித்தம். ஸர்வம் ஸஹையான இவளுக்கு ஸர்வேஶ்வரனைக்காட்டிலும் , பெரியபிராட்டியைக் காட்டிலும் க்ஷமாதிகுண பூயஸ்தை உண்டாயிருந்தது. இப்படியானால் இவளுக்குத் தங்களைக் காட்டில் ஏற்றத்தை ஸூரிகளே தாங்களே அறிவார்கள் இத்தை ஸ்ரீபூமிப்பிராட்டி ஸ்வாபாவிக ஸார்வஜ்ஞ்யத்தாலே அறிந்திருக்கச் செய்தேயும் ப்ரஜா ஹிதார்த்தமாக மாதா கேட்க, ஸர்வபூத ஸுஹ்ருத்தான பிதா அருளிச் செய்த வார்த்தை என்று ப்ரஸித்தமாக வேண்டுமென்று திருவுள்ளம்பற்றி (ஸ்ரீரஹஸ்ய சிகாமணி) என்று கூறப்பட்டுள்ளது.
      7. ராமா என்பது நீளாப்பிராட்டியையும் குறிப்பிடுகிறது. இவளுடைய ப்ரபாவத்தை திருமகள், மண்மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்க (ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்) என்றும்,
     निशामयतु मां नीळा यद्भोगपटलौर्ध्रुवम्|
       भावितं श्रीनिवासस्य भक्तदोषेष्वदर्शनम् ||
நிஶாமயது மாம் நீளா யத்போகபடலௌர்த்ருவம்
பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்யபக்ததோஷேஷ்வதர்ஶனம்   
                                                                             (தயா ஶதகம் 8)
                                                                                
     இவளுடைய க்ருபை பகவான் பெரிய பிராட்டியார் பூமிப்பிராட்டியார் இவர்களுடைய க்ருபையைக் காட்டிலும் அதிகமானது என்றும் நிரூபித்திருக்கிறபடியால் இவளுடைய தயைக்குப் பாத்திரமானார் என்றபடி. அதாவது பகவானுடைய ஸ்வபாவம்.
     தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்கு மேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர்போலும் (பெரியாழ்வார் திருமொழி) என்றும் சொல்லப்பட்டது.
      பெரியபிராட்டியாருடைய ஸ்வபாவம் அவதார தசைகளில் पापानां वा शुभानां वा (பாபாநாம் வா ஶுபாநாம் வா) (ஸ்ரீமத் ராமாயணம்) என்று பேசப் பட்டுள்ளது.
    க்ஷமையே உருவம் கொண்ட ஸ்ரீபூமிப் பிராட்டியின் பெருமை
वन्दे वृषगिरीशस्य महिषीं विश्वधारिणीम्|
तत्कृपाप्रतिघातानां क्षमया वारणं यया ||
வந்தே வ்ருஷகிரிஶஸ்ய மஹிஷீம் விஶ்வதாரிணீம்|
தத்க்ருபாப்ரதிகாதாநாம் க்ஷமயா வாரணம் யயா||
                                                        (தயா ஶதகம் 7)
      இவைகளை ஆராய்ந்து பார்த்தால் பக்தர்கள் பாபம் செய்தால் அதை நன்மை செய்ததாக நினைத்துக் கொள்வானாம் எம்பெருமான். ஆனால் பெரிய பிராட்டியோ பக்தன் பாபம் செய்தானா புண்ணியம் செய்தானா என்று நினைப்பதே அனாவஶ்யம். எப்படியிருந்தாலும் அவன் நம்மால் காப்பாற்றப்பட வேண்டியவன் என்பாளாம். பூமிப் பிராட்டியோ எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு விடுகிறார்கள். இப்படி இவர்கள் மூவரும் பக்தனிடம் பாபம் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். ஆனால் நீளாப்பிராட்டியோ தன்னுடைய பாமாலைகளினாலும் பூமாலைகளினாலும் பகவானை மயக்கி தனக்கு அடிமையாக்கிக் கொண்டு பக்தர்களின் தோஷத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறாள். இதையே ஸ்ரீஸஹஸ்ரநாமத்தில்  அவிஜ்ஞாதா என்று சொல்லப் பட்டுள்ளது. மேலும் ஸ்ரீகோதாஸ்துதி முதலியவைகளில் இவளுடைய பெருமைகளையும் இவளுடைய ஸம்பந்தத்தால் இவளுடைய திருத்தகப்பனார் மஹத்தரர் என்ற பட்டம் பெற்றார் என்று அநுபவிக்கப் படுகிறது.
     8. ராம என்பது பரமபதத்திலிருக்கும் எம்பெருமானைக் குறித்தும் அநுஜ என்பது லோகரக்ஷணார்த்தமாக செய்தருளிய விபவாவதாரங்களைப் பொதுவில் குறிக்கிறதாகப்படுகிறது.
      இவ்வவதாரங்களெல்லாம் ஸத்யங்களென்றும் இவற்றில் ஈஸ்வரனுக்கு ஜ்ஞாநாதி ஸங்கோசமில்லை என்றும், இவ்விக்ரஹங்கள் ஶுத்த ஸத்வமயங்கள் என்றும், இவற்றிற்கு ஈஶ்வரேச்சா மாத்ரமே காரணம் என்றும், தர்ம ரக்ஷணம் பண்ண வேண்டும். காலமே காலம் என்றும் ஸாது பரித்ராணாதிகளே ப்ரயோஜனங்கள் என்றும், இவ்வர்த்தம் தெளிந்து அநுஸந்திப்பார்க்கு ஏக ஜந்மத்திலே ஸ்வாதிகாராநுகுண ஸமீஹித உபாய பூர்த்தியாலே ஜந்மாந்தரம் அநுபவியாதே முக்தராகலாம். (ஸ்ரீமத்ரஹஸ்யதத்வத்ரயம்) என்று அவதார ரஹஸ்யார்த்தங்களையெல்லாம் பரக்க நிரூபித்தருளியபடியினாலும் இந்த அவதார தசைகளில் பக்தர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவும் அஸுர ஸ்வபாவமுடையவர்களை மோஹிப்பதற்காகவும் சுகதுக்காதிகளைப் பாவித்ததெல்லாம் கேவலம் அபிநயம் மாத்திரம் என்று அருளிச் செய்திருப்பதினாலும் அவர்களின் தயைக்குப் பாத்திரமானார்.
 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக