செவ்வாய், 3 ஜனவரி, 2012
திங்கள், 2 ஜனவரி, 2012
Guru Paramparai Vaibhavam dated 02-01-2012
ஸ்ரீ உபநிஷத் பாஷ்யகாரருக்குப் பின் ஸ்ரீ நேசிக தர்சநத்தை வளர்த்த ஆசார்ய பரம்பரையில் ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி, ஸ்ரீ வீரராகவாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீ ரங்கபதி நேசிகர், ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி ஆகியோரைப் பற்றி மிக அழகாக ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் இன்றைய (02-01-2012) உபந்யாஸத்தில் விரித்துரைப்பதை ஆன்லைனில் கேட்க
வழக்கம்போல் Media fireலிருந்து டவுண்லோட் செய்ய
http://www.mediafire.com/?imyj6q0dr99cgjh
To download from Esnips
http://www.esnips.com/displayimage.php?pid=33154718
லேபிள்கள்:
நாட்டேரி
ஞாயிறு, 1 ஜனவரி, 2012
ஆண்டாள்
அடியேனுக்கு வெகு சமீபத்தில் அறிமுகமானவரே என்றாலும் அடியேன் மீது அபார ப்ரியம் கொண்டு திருப்புல்லாணி ஸ்ரீ தேசிக கைங்கர்யங்களிலும் மிகுந்த உதவிகள் செய்து வருபவர் ஸ்ரீ தேவநாதன் ஸ்வாமி. ஒரு சிறந்த நிறுவனத்தின் மிக முக்கியமான பொறுப்பிலிருந்தாலும் எப்படியாவது ஸம்ப்ரதாயத்துக்காக நாளின் சில மணிகளை ஒதுக்கி அவ்வப்போது அடியேனிடமும், இணையத்திலும் பல ஸம்ப்ரதாய விஷயங்களைப் பகிர்ந்து கொள்பவர். ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவடி. இன்று வாடிக்கையான சம்பிரதாயமான வாழ்த்தாக இல்லாமல் ஒரு புத்தாண்டுப் பரிசாக அடியேனுக்கு அனுப்பி வைத்த ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இனி அவர் அனுப்பி வைத்தது:
வராஹ அவதாரத்தின்போது பூமியை உத்தாரணம் பண்ணிக் கொண்டு வருகிறான் பரமாத்மா. 'உத்ரிதாமிவராஹேணா’ என்று உபநிஷத் கொண்டாடுகிறது. இவ்வாறு பூமியை உத்தாரணம் பண்ணிக்கொண்டு வரும்போது பூமாதா அழுகிறாள்.
யாராவது கிணற்றில் விழுந்து விட்டால் தூக்கிவிட்டவனைக் கொண்டாட வேண்டும். தன் பிராணன் பிழைத்தது என்று சந்தோஷப்பட வேண்டும். ஆனால், பூமாதாவோ அழுகிறாள். வராஹ மூர்த்தி, ''உன்னைத்தான் நான் காப்பாற்றி விட்டேனே? உன் சிரமத்தைத் தீர்த்து விட்டேனே? ஏன் அழுகிறாய்?'' என்று கேட்கிறார்.
அதற்கு பூமாதா சொல்கிறாள்.
ஸ்ரீப்ருத்யுவாச -
அஹம் சிஷ்யாச தாஸீச
பார்யாச த்வயி மாதவ
மத் க்ருதே ஸர்வ பூதாநாம்
லகூபாயம் வத ப்ரபோ
''உன் சிஷ்யை, பார்யை நான். நான் கூக்குரலிட்டு அழைத்தபோது வந்து என்னைக் காப்பாற்றிவிட்டாய். என்னை மாதிரி என் மேலே பல கோடி சராசரங்கள் அவஸ்தைப்படுகிறார்கள். அவர்கள் அழைத்தால் நீ வருவாயா?'' என்று பூமாதா கேட்கிறாள்; 'ஸ¨கரமான மூர்த்தியே, நீ சொல்லு’ என்கிறாள். ஸ¨கரம் என்றால் பன்றி. ஸ¨கரம் என்றால் எளிதில் செய்யக் கூடிய என்றும் ஒரு அர்த்தம்.
'உலகில் உயர்ந்த கர்மா யக்ஞம்’ என்கிறது வேதம். ஆனாலும், அதில் பல சிரமங்கள் உண்டு. அதனால் சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை எனக்காகச் சொல்லு, என, ஜகன் மாதாவான பூமாதா பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். 'கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார். ஆதியில் பூமாதா பகவானைப் பார்த்து எளிதில் செய்யக்கூடிய உபாயத்தைச் சொல்ல வேண்டும் என்று கேட்கிறாள். அப்போது பகவான் 3 விஷயங்கள் சொல்கிறார். பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும். தஸ்மை ப்ரசுரார்ப்பணம் என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும். ப்ரபதன சுலபன் அவன் - ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும். இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார்!
ஆத்ம சமர்ப்பணம் என்பதை முதுமையில் பண்ண வேண்டும் என்றில்லை. 'கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்’ என்கிறார் நம்மாழ்வார் (திவ்ய ப்ரபந்தம் 2886, திருவாய்மொழி 2.10.1). நாடித்துடிப்பு ஒழுங்காக இருக்கும் போதே, புத்தி பிரகாசமாக இருக்கும்போதே, மனது சஞ்சலப்படாத நேரத்திலேயே, இளமையிலேயே செய்ய வேண்டும். 'அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒரு நாளும் கைவிட மாட்டேன்’ என்கிறார் பரமாத்மா.
பூமாதாவுக்கு ரொம்ப சந்தோஷம். மூன்று விஷயங்களையும் முடிச்சு போட்டு வைத்துக்கொண்டாள். எல்லா அவதாரங்களும் வரிசையாக நடந்தது. கிருஷ்ணாவதாரம் முடிந்து வைகுண்டத்தில் பகவான் நித்யசூரிகள் புடை சூழ உள்ளான். ஸதஸ் நடக்கிறது அங்கே. அங்கிருந்தபடி, பகவான் பூலோகத்தைப் பார்க்கிறான். பூலோகத்தில் பல அக்கிரமங்கள் நடக்கின்றன. 'பகவத் கீதையைச் சொன்னோமே! ஆனாலும் ஒன்றும் பிரயோஜனமின்றி போய்விட்டதே!’ என வருந்துகிறான். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூவரும் பகவானைச் சுற்றி அமர்ந்திருக்க... மகாலட்சுமியிடம்... ''நான் கீதையைச் சொன்னது பிரயோஜனப்படவில்லை. என் வாக்கு சரியில்லை போலும்! அதனால் நீ அவதரித்து, கீதார்த்தத்தை பூலோகத்தில் சொல்லி உலகைத் திருத்த வேண்டும்'' என்கிறான்.
மகாலட்சுமிக்கு வந்ததே கோபம். ''ராமாவதாரத்தில், கிருஷ்ணாவ தாரத்தில் உங்களுடன் வந்தேன். அப்போதே பல சிரமங்கள். இப்போது தனியாகப் போகச் சொல்கிறீர்களே! இது சரியா?'' என்று கேட்டு, மறுத்தாள். ஆனால், பூமாதா உடனே ஏற்றுக்கொண்டுவிட்டாள்.
''நீங்கள் என்னைப் போகச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்'' என்று முந்தானையிலே போட்ட முடிச்சோடு சொல்கிறாளாம்! எப்போது போட்ட முடிச்சு அது..? வராஹ அவதாரத்திலே, வராஹ மூர்த்தியின் மூக்கின் மேலே உட்கார்ந்திருந்தபோது, தான் கேட்ட மோட்சத்துக்கான வழிக்கு, பகவான் சொன்ன மூன்று விஷயங்களுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.
அவன் திருவடியிலே புஷ்பத்தை இட்டு அர்ச்சிக்க வேண்டும்; அவன் திருநாமத்தை உரக்கச் சொல்ல வேண்டும்; அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும் என 3 கட்டளைகளுக்காகப் போட்ட மூன்று முடிச்சுகள்.
''இப்போதே நீங்கள் போகச் சொன்னாலும் சித்தமாயிருக் கிறேன்'', என்றாள் பூமாதேவி. ''எங்கே போவாய்? யாரிடம் பிறப்பாய்?'' என்றார் பகவான். ''உங்களுடைய அனுக்ரஹம் உதவும்'' என்று புறப்பட்டாள் தேவி. ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்தில், ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் அவதரித்தாள், கோதா எனும் திருநாமத்துடன்! கோதா என்பதற்கு பல அர்த்தங்கள். அதில் முக்கியமானவை இரண்டு.
காம் ததாதி இதி கோதா
காம் தததே இதி கோதா
காம் என்றால் நல்ல வாக்கு. அவள் நல்ல வாக்கைக் கொடுப்பவள். அவளைத் தியானித்தால், அவளின் திவ்ய மங்கல விக்கிரகத்தை தியானித்தால் நல்ல வாக்கைக் கொடுப்பாள்.
''வாக் வை சரஸ்வதி சரஸ்வதி வை வாக் சரஸ்வதி’ என்கிறது வேதம். வாக்கு என்றால் சரஸ்வதி. அமங்கலமான வார்த்தை களைப் பேசக்கூடாது. அம்ருத வாக்கைக் கொடுக்கிறாள் கோதா. அவளும் நல்ல வாக்கை உடையவள். உத்தமமான வாக்கு உடையவள் ஆகவே, நல்ல வாக்கை நமக்கும் கொடுக்கிறாள். அப்படிப்பட்ட கோதா, திருமாலை கட்ட இரு மாலை கட்டினாள். ஒரு மாலை பாமாலை; மற்றொன்று பூமாலை. பாமாலையைப் பாடி சமர்ப்பித்தாள். பூமாலையைச் சூடி அவன் திருவடியில் சமர்ப்பித்தாள். அதனால் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆனாள்.
ஆண்டாளை 'பிஞ்சாய் பழுத்தாளை ஆண்டாளை’ என்கிறார் வரவரமுனிகள். சின்னப் பெண்ணான ஆண்டாளுக்கு பகவானை கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று ஆசை. அதை எப்படித் தெரிவிப்பது என்று தெரியவில்லை.
திருமாலை (எம்பெருமானை) தன்னிடத்தில் ஈடுபடச் செய்ய திருமாலைகளை (பூமாலைகளை) தூதாக அனுப்பினாள். ''என் ஆசையை எம்பெருமானிடத்தில் தெரிவித்து, அவன் அனுக்ரஹத்தைப் பெற்றுத் தா’ என்று ஆண்டாள் பிரார்த்தனை செய்த அழகே அழகு! பகவானையும் ஆண்டாள்; நம்மையும் ஆள்கிறாள் என்பதால் ஆண்டாள் என்ற திருநாமம்.
வராஹ அவதாரமே இல்லை என்றால் ஆண்டாள் அவதாரம் இல்லை. அதனால் ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். அதனால்தான் நம்மாழ்வார் 'ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே’ (திவ்ய ப்ரபந்தம் 2576 திருவிருத்தம் 99) என்கிறார். 'அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய்’ (மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்னமாலை) தோன்றியவள் ஆண்டாள். ஆழ்வார் கோஷ்டிக்கே கல்பலதிகையாக (கொடியாக) இருப்பதாலேயே இவள் அவதாரம் உயர்ந்தது.
சரி... வராஹ மூர்த்தியிடம் பூமாதா கேட்டதை ஆண்டாள் வெளியிட்டாளா?
திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் 'அவன் பெயர் பாடு’ என வலியுறுத்துகிறது. 2-வது பத்து பாசுரங்கள் 'அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்கிறது. 3-வது பத்து பாசுரங்கள் 'அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்கிறது. வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் வெளியிட்டாள் ஆண்டாள்.
திருப்பாவை என்பது தமிழ்ப் பாசுரம் மட்டுமல்ல. இது ஒரு மஹா யக்ஞம். திருப்பாவை என்ற யக்ஞத்தால் எல்லோரும் கட்டப்பட்டுள்ளோம். இது ஒரு வைஷ்ணவாத்மகமான வேத விகிதமான யக்ஞம். நாராயணனிடத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கச் சிறந்தது யக்ஞம்!
அதில், ஹவிஸை நெய்யினால் சுத்தி பண்ணி அக்னியில் சேர்க்கிறோம். ஆண்டாளும், திருப்பாவை எனும் யக்ஞத்தில், தன் உடல், பொருள், ஆவி என்கிற ஹவிஸை ஆச்சார்ய அனுக்ரஹம் (பெரியாழ்வாரின் அனுக்ரஹம்) என்ற நெய் தடவி, எம்பெருமான் வடபத்ரசாயியின் திருவடியில் சமர்ப்பிக்கிறாள்.
நாமும், நம்மை இறைப்பாதத்தில் சமர்ப்பிப்போம். மார்கழியில் திருப்பாவை பாடி, திருவருளைப் பெறுவோம்.
லேபிள்கள்:
படித்தேன்
சனி, 31 டிசம்பர், 2011
ஆரணமும் அருளிச் செயலும்
அன்று தூப்புல் ஸ்வாமி தேசிக அவதார விசேஷத்தினால் பெரும்புகழ் அடைந்தது என்றால் இன்று அவர் புகழைப் பரக்கப் பாடி, பல்வகையால் அவர் ஸ்ரீஸூக்திகளைப் பாரெங்கும் உள்ளோர் உய்யும் வண்ணம் ப்ரவசநங்கள் செய்து தேசிகனல்லால் வேறோர் தெய்வமில்லை என்று வாழ்கின்ற வேதமோதுமுத்தமர்களால் தூப்புல் புகழ் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அப்படி ஸ்வாமி தேசிகன் திருவடித் தொண்டே தலையாய பேறு என்று வாழ்வோர் பலருள்ளும் ஸ்ரீ உ.வே. சடகோப தாதாசாரியார் ஸ்வாமி அடிக்கடி இணையத்தின் வழியாயும் பல அற்புதமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு நம் எல்லாரையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். ஆசார்ய அனுக்ரஹத்தால் இந்த நிர்மூடன் மீதும் அவருக்கு அளவற்ற ப்ரீதி, அதனால் அடிக்கடி பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். அப்படி நேற்று அடியேனுக்கு அனுப்பிய ஒரு கட்டுரையை இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆரணமும் அருளிச்செயலும்.
தாஸஸ்ய விஞ்ஞாபநம்.
,
தேவர்கள் யாகத்தில் எதை செய்தார்களோ அதையே அஸுரர்களும் செய்தார்கள் என்ற பொருளில்
வேதத்தில் தேவா வை யத்யஞ்ஞேகுர்வத, ததஸுரா அகுர்வத என அநேக இடங்களில் ஓதப்படுகிறது.
இதுபோல் யதேவாத்வர்யுஃ கரோதி, தத்ப்ரதிப்ஸ்தாதா கரோதி, ,
.யாகத்தில் அத்வர்யு என்கிற ரித்விக்கு செய்வதை ப்ரதிப்ஸதாதா எனகிற ரித்விக்கும்
செய்கிறார்,அத்வர்யுகணத்தில் அத்வர்யு பெரியவர் ஆவார், ப்ரதிப்ரஸ்தாதா சிறியவர் ஆவார்.பெரியவர் செய்வதையே
சிறியவரும் செய்வதை லோகத்திலும் காணலாம் என்பதை வேதம் கூறுகிறது, தஸ்மாத் யத் ச்ரேயான் கரோதி தத் பாபீயான்கரோதி,
இதையே யத்யதாசரதி ச்ரேஷ்டஃ தத்ததேவேதரோ ஜனஃ, ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததனுவர்ததே,
லோகத்தில் உயர்ந்தவன் எதை அனுஷ்டிக்கிரானோ,அதை ப்ரமாணமாக கொண்டு மற்றவர்களும் அதை பின்பற்றுகிறார்கள் என
ஸ்ம்ருதியில் கீதாசார்யன் குறிப்பிடுகிறார்..
,இதையே சற்று வேறுவிதமாக பூர்வாசார்யர்கள் ஸாதித்த விஷயத்துக்கு விரோதமில்லாமல் பின்புள்ளவர்கள் விஷயத்தை ஸாதிக்கவேணும் என
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாமதனைப்பேசாதே.
தம்நெஞ்சில் தோன்றியதே சொல்லி இது சுத்த உபதேசவரவார்தை என்பர் மூர்கராவார் என ஸ்ரீரம்யஜாமாத்ருமுனி-ஸ்ரீமணவா ளமுனி ஸாதித்தார்.
முன்பு கூறிய க்ரமத்தில் ஸ்வாமி தேசிகன் செய்ததை ஸ்ரீமணவாளமுனியும் செய்ததாக அமைந்தவிதத்தை நாம் சிறிது அனுபவிப்போம்
ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில்
ஆழ்வார்கள் அவதரித்த நாள் ஊர் திங்கள் அடைவுதிருநாமங்கள் அவர்தாம் செய்த
வாழ்வான திருமொழிகள் அவற்றுள் பாட்டின் வகையான தொகையிலக்கம் மற்றுமெல்லாம்.
வீழ்வாக மேதினிமேல் விளங்கநாளும் விரித்துரைக்கும் கருத்துடனே ,,,,,, என ஆழ்வார்கள் அவதரித்த
மாதம் நக்ஷத்ரம் திவ்யதேசம் மற்றும் அவர்கள் செய்த பாசுரத்தின் தொகை முதலியவற்றை ஒரு பாட்டில் குறிப்பிட்டு
ஆழ்வார்களை வரிசை படுத்தி அனுக்ரஹித்தார், பிறகு 15,16 பாட்டுகளில் பாசுரங்களை கூட்டி கணக்கிட்டு நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே என ஸாதித்து பிறகு வையகமெண் பொய்கைபூதம் பேயாழ்வார் என முன்பு ஸாதித்தக்ரமத்தில் வரிசையாக ஸாதிக்கிறார்.இங்கு எம்பெருமானார் ஆழ்வாரில்லை,ஆயினும் அவர் விஷயமாக இராமானுசநூற்றந்தாதி உள்ளபடியால் அதையும் சேர்த்தே 4000 பாசுரம் என கணக்கிடுவதால் அவருக்கும் பாசுரத்தை சேர்த்துள்ளார்,ஸ்ரீமதுரகவியாழ் வார் நம்மாழ்வார் விஷயமாக கண்ணினும் சிறுத்தாம்பு ப்ரபந்த்தை அனுக்ரஹித்தாலும் அதுவும் ப்ரபந்தத்தில் சேர்ந்ததாலும்,அவரையும் மற்றும் ஆண்டாளையும் சேர்த்து ஆறிருவரோடொருவர் அவர்தாம் செய்த,துய்யதமிழ்மாலை இருபத்துநான்கின் பாட்டின் தொகை என ஸாதித்தார்.மற்றுமுள்ள ஆசார்யர்களை இங்கு குறிப்பிடவில்லை.ஸம்ப்ரதாய வரலாறையும் குறிப்பிடவில்லை.
இனி ஸ்ரீமணவாளமுனி ஸாதித்த உபதேசரத்நமாலையை அனுபவிப்போம்,
ஸ்வாமி தேசிகன் பரமபதஸோபானக்ரந்தத்தில்
1,யதிவரனார் மடப்பள்ளி வந்தமணம் எங்கள் வார்தையுள்மன்னியதே என எம்பெருமானாரின் சிஷ்யரான மடப்பள்ளி ஆச்சான் வழியாக கிடைத்த ரஹஸ்யார்தங்கள் கிடாம்பி அப்பிள்ளார் அநுக்ரஹித்த க்ரமத்தில் தன் ஸ்ரீஸூக்தியில் அமைந்ததை ஸாதிப்பதாக அனுக்ரஹித்த க்ரமத்தில் ஸ்ரீமணவாளமுனி தமது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளையின் அனுக்ரஹத்தால் வந்த உபதேசத்தை பேசுவதாக ப்ரதிஞ்ஞை செய்கிறார்.ஸ்வாமி தேசிகன் பெற்றது ரஹஸ்யார்தம்,ஸ்ரீமணவாளமுனி பெற்றது ஸம்ப்ரதாயவரலாறு.,
2.ஸ்வாமி தேசிகன் அதிகாரஸங்க்ரஹத்தில் 52 வது பாட்டில் கோதற்றமனம் பெற்றார் கொள்வார் நம்மைஎன்றும் கூனுளநெஞ்சுகளால் குற்றமென்னு இகழ்ந்திடினும் என ஸாதித்தக்ரமத்தில் மற்றோர்கள் மாச்சர்யத்தால் இகழில்வந்ததெந்னெஞ்சே என ஸ்ரீமணவாளமுனி குறிப்பிடுகிறார்..
3.ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் வையகமெண் பொய்கைபூதம் பேயாழ்வார் மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுரகவி, பொய்யில் புகழ் கோழியர்கோன் விட்டுசித்தன் பூங்கோதை தொண்டரடிப்பொடி பாணாழ்வார், ஐயனருள் கலியன்என ஸாதித்தபடி,
பொய்கையார் பூதத்தார் பேயார்,புகழ்மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர்கோன்,துய்யபட்டநாதனன்பர்தாள்தூளி நற்பாணன் நன்கலியன்என ஸாதித்தார்.
4.ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் மேதினிமேல் விளங்கநாளும் விரித்துரைக்கும் கருத்துடனே என ஸாதித்தபடி
ஆழ்வார்கள் இந்தவுலகிலிருள் நீங்க வந்துதித்த மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர் தாமறிய ஈதென்று சொல்லுவோம் யாமென்றார்.ஆக இங்கு ப்ரதிஞ்ஞை செய்தது மாதமும் நாளும் மாத்ரமாகும் அவதரித்த ஊரை சொல்லவில்லை என்பது விசேஷம்..
பிறகு பொய்கை பூதம் பேய் என மூவரும் அவினாபூதர்களாதலால் ஆகலாம் மூவரையும் ஒரே பாட்டில் ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் என குறிப்பிடுவது,அடுத்து வரவேண்டியது பொய்கையார் பூதத்தார் பேயார்,புகழ்மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர்கோன் கணக்கில் மழிசைப்பிரான் , ஆயினும் முன்பு சொன்னக்ரமத்தை மாற்றி மாதகணக்கில் ஐப்பசிக்கு அடுத்ததான கார்திகை மார்கழி தை மாசி வைகாசி ஆனி என அம்மாதங்களில் அவதரித்த மங்கையர்கோன், பாணர் , தொண்டரடிப்பொடியாழ்வார்,மழிசைப்பிரான்,குலசேகரன்,சடகோ பர், பெரியாழ்வார்,வரையில் ஸாதித்து மீண்டும்
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள்,மதுரகவியாழ்வார் எதிராசராமிவர்கள், வாழ்வாக வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும் இந்தவுலகோர்க்குரைப்போம் யாம். என குறிப்பிடுகிறார்.இங்கு ஓர் ஸமசயம் பிறக்கும்,முன்பு சொன்ன க்ரமம் வேறு தற்சமயம் கூறுவது வேறு,இது முகத்தில் வேறுவிதமாக ஊர்த்வபுண்ட்ரம் தரித்து மற்ற அங்கங்களில் வேறுவிதமாக தரிப்பது போல் உள்ளது.மேலும் ஆழ்வார்களில் மதுரகவியும் உண்டு எனில் முன்பே ப்ரதிஞ்ஞை செய்தபடியால் இங்கு மீண்டும் அவரை தனியே குறிப்பிடுவதும் முன்பு கூறிய கோஷ்டியில் இவரை சேர்க்காததும் ஏன் என. பதிலை ஓரான் வழியாக உபதேசம் பெற்ற ஸம்ப்ரதாயமறிந்தவர்கள் கூறுவர்.
5.ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் எண்ணின் முதலாழ்வார்கள் என 15,16 பாட்டுகளில் ஆழ்வார்கள் அனுக்ரஹித்த பாசுரங்களை கூட்டி கணக்கிடுவதை போல் ஆழ்வார்கள் அவதரித்த ஊர்களை 30 முதல் 33 வரையில் 4 பாட்டுகளில் குறிப்பிடுகிறார்.
எண்ணரும் சீர்ப்பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர் வண்மைமிகு கச்சிமல்லைமாமயிலை,மண்ணியினீர்தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்.,ஓங்குமுறையூர் பாணனூர்,30,
தொண்டரடிப்பொடியாழ்வார் தோன்றியவூர் தொல்புகழ்சேர் மண்டங்குடியென்பர் மண்ணுலகில்,எண்டிசையுமேத்தும் குலசேகரனூரெனவுரைப்பர் வாய்த்த திருவஞ்சிக்களம்,31.
மன்னுதிருமழிசை மாடத்திருக்குருகூர், மின்னுபுகழ் வில்லிபுத்தூர் மேதினியில்,நன்னெரியோர் எய்ந்த பக்திசாரர் எழில் மாறன் பட்டர்பிரான்.வாய்ந்துதித்தவூர் கள்வகை.32.
சீராரும் வில்லிபுத்தூர் செல்வத்திருக்கோளூர்,ஏரார் பெரும்பூதூரென்னுமிவை, பாரில் மதியாருமாண்டாள் மதுரகவியாழ்வார்,எதிராசர் தோன்றியவூரிங்கு,33,
இங்கு ஓர் ஸமசயம் பிறக்கும்,இங்கு ஆழ்வார்களின் அவதாரஸ்தலங்களை கூறுவதாக ப்ரதிஞ்ஞை இல்லை.மேலும் வெண்பாவானபடியால் அவரவர்கள் பாட்டில் ஊரையும் சேர்க்கமுடியாது என தனியாக கூட்டினாரோ என,பதிலை ஸம்ப்ரதாயமறிந்தவர்கள் கூறுவர்.
6.ஸ்வாமி தேசிகன் அதிகாரஸங்க்ரஹத்தில்
என்னுயிர் தந்தளித்தவரை சரணம் புக்கு என தனது ஆசார்யர்முதலாக ஸாதித்த க்ரமத்தில்
தெருளுற்றவாழ்வார்கள் சீர்மையரிவாரார்,அருளிச்செயலை யறிவாரார். அருள் பெற்றநாதமுநிமுதலாம் நந்தேசிகரையல்லால்
பேதைமநமே யுண்டோ பேசு என நாதமுனி முதலாக தேசிகன் என ப்ரஸித்திபெற்ற நம் ஸ்வாமிதேசிகன் பர்யந்தமாக ஸாதிக்கிறார்.
ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும்,தாழ்வாக நினைப்பவர்கள்தாம். நரகில் வீழ்வார்களென்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீயவர்பால்.சென்றணுகக்கூசித்தி ரி. என ஸாதிப்பதால் ஆழ்வார்களைப்போல் அநேகம் ப்ரபந்தத்தை அனுக்ரஹித்த ஸ்வாமி தேசிகனை தாழ்வாக நினைப்பவரிடம் செல்லவேண்டாமென்றும் உபதேசித்தபடி.
ஸத்யமிப்படியிருக்க சிலர் ஸ்வாமிதேசிகனுக்கு முன்பாக இருந்த ஆசார்யர்கள் ஸ்வயம் த்ராவிடப்ரபந்தத்தை ஸாதிக்கவில்லை ,ஸ்வாமிதான் தமிழ்ப்ரபந்தத்தை முதன்முதலாக ஸாதித்தார்,ஸ்வாமி தேசிகன் ஸ்ரீஸூக்தியை copy அடித்து ரம்யஜாமாத்ருமுனி-ஸ்ரீமணவாளமுனி ஸாதித்தார் என்றும் .ஸ்வாமிதேசிகன் வாழித்திருநாமத்தை copy அடித்து மற்ற வாழித்திருநாமம் வந்தது என குற்றம் கூறுவது தவறாம்,ஏற்றத்தாழ்வை மத்யஸ்தர்கள் அறிவார்கள்.
திங்கள், 26 டிசம்பர், 2011
Natteri swamy’s Guru Paramparai vaibhavam dated 25-12-2011 Upanishath Bhashyakarar swami
ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் இன்றைய (25-12-2011) “குரு பரம்பரை வைபவம்” உபந்யாஸத்தில், உபநிஷத் பாஷ்யகாரர் என்று ப்ரஸித்தி பெற்ற வேலாமூர் ஸ்ரீரங்கராமாநுஜமுனியின் திவ்ய சரித்திரத்தை விரிவாக எடுத்துரைக்கிறார்.
To listen to online68 Guru paramparai Vaibhavam (25-12-2011) by pamaran
To download from Mediafire
http://www.mediafire.com/?i8by620gigx61oh
லேபிள்கள்:
நாட்டேரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)