திங்கள், 18 மார்ச், 2013

Saranagati Deepika tele-upanyasam dated 18-03-2013

सत्ता स्थिति प्रयतनप्रमुखैरुपात्तम्

स्वार्थं सदैव भवता स्वयमेव विश्वम् ।

दीप प्रकाश तदिह त्वदवाप्तये त्वां

अव्याजसिद्धमनपायमुपायमाहुः

ஸத்தா ஸ்தி²தி ப்ரயதநப்ரமுகை²ருபாத்தம்

ஸ்வார்த²ம் ஸதை³வ ப⁴வதா ஸ்வயமேவ விஶ்வம் |

தீ³ப ப்ரகாஶ ததி³ஹ த்வத³வாப்தயே த்வாம் 

அவ்யாஜஸித்³த⁴மநபாயமுபாயமாஹு:

is today’s topic for Natteri swaamy’s Saranagati Deepikai” tele-upanyasam

It can be downloaded from

http://www.mediafire.com/?g09et2j6ljmhd77

To directly listen the upanyasam

 

திங்கள், 11 மார்ச், 2013

Saranagati Deepikai tele upanyasam dated 11-03-2013

दीपावभास दयया विधिपूर्वमेतत्

विश्वं विधाय निगमानपि दत्तवन्तम्।

शिष्यायिताः शरणयन्ति मुमुक्षवस्त्वाम्

आद्यं गुरुं गुरुपरंपरयाऽधिगम्यम् ॥९॥

தீபாவபாஸ தயயா விதிபூர்வமேதத்

விஶ்வம் விதாய நிகமாநபி தத்தவந்தம்.

ஶிஷ்யாயிதா: ஶரணயந்தி முமுக்ஷவஸ்த்வாம்

ஆத்யம் குரும் குருபரம்பரயாsதிகம்யம் ..  .9.

என்ற சரணாகதி தீபிகையின்  ஒன்பதாவது ச்லோகத்தை நாட்டேரி ஸ்வாமி இந்த வாரம் விவரிக்கிறார். நகலிறக்க

http://www.mediafire.com/?fms2erdr07m7a7a

நேரடியாகக் கேட்டு மகிழ

 

sri Vishnu pathadhi kesantha sthothram part 5

The next part of “Sri Vishnu pathadhi kesantha sthothram” commentary by Sri Anbil Gopalacharyar swamy (covering upto sloka 21) is now available at
http://www.mediafire.com/view/?s33q1mqn032x35u
 

Those who need the previous portion may download it from

http://www.mediafire.com/view/?e6wvhruh059b36k

 Today’s upload may also be read here itself

05 Vishnu Pathadhi by api_11797_rajamragu

புதன், 6 மார்ச், 2013

श्रीरङ्गश्री

திங்கள், 4 மார்ச், 2013

தோத்திரப் பத்து

ஸ்ரீ:

தோத்திரப்பத்து

காரானை கூவுங் கரியானை யுண்டு கடந்துமிழ்ந்த
பாரானை வஞ்சம் பரியானை மாயையிற் பட்டவராற்
றேரானை யார்க்குந் தெரியானைச் சீதச் செழுந்துளவத்
தாரானை மோகந் தரியானைப் பாடுதுந் தாழ்வறவே. .1.

வணத்தானைப் பூவை வணத்தானைச் சோதி மலிதருகங்
கணத்தானை யன்பர் கணத்தானைப் பச்சையங் கன்னித்துழாய்
மணத்தானைச் சீதை மணத்தானை மாதவர் வாழ்த்திடுசட்
குணத்தானை மாநிர்க் குணத்தானைப் பாடுதுங் கோளறவே. .2.

பரத்தானைப் பொன்னம் பரத்தானைச் சங்கம் பரிதியவிர்
கரத்தானை யெட்டக் கரத்தானை வேதக் கருத்திலெழுந்
தரத்தானை யெண்ணந் தரத்தானை ராவணன் றன்னையடுஞ்
சரத்தானைச் சம்வற் சரத்தானைப் பாடுதுந் தாழ்வறவே. .3.

நாதனை வெண்சங்க நாதனை யாரு நவிலருமைம்
பூதனைப் பூவிற்சம் பூதனைப் போற்றிப் புகழ்பவர்தம்
வேதனை தீர்த்தருள் வேதனை வீமற் கிளையவன்றேர்ச்
சூதனை வஞ்சற்குச் சூதனைப் பாடுதுந் துன்பறவே. .4.

கலையானை வெண்சங் கலையானைக் கொற்றக் கவிகையெனு
மலையானை யார்க்கு மலையானை நந்தன் வளர்த்திடும
தலையானை விண்ணந் தலையானை வண்ணஞ் சலதரத்தின்
றொலையானை யென்றுந் தொலையானைப் பாடுதுந் துன்பறவே..5.

கதியானை மோக்கக் கதியானைப் பாவக் கருத்தினரை
மதியானைக் காத்த மதியானை யன்பரை மாயையிடை
விதியானை வஞ்ச விதியானை வாரை வெறுத்துலகு
பதியானைக் கோவற் பதியானைப் பாடுதும் பண்புறவே. .6.

கட்டானைக் கட்டினைக் கட்டானை யீசன் கமலனிவர்க்
கெட்டானை யக்கர மெட்டானை நான்மறை யின்னதெனச்
சுட்டானை யூரறச் சுட்டானை வாழ்கெனச் சொல்லியுள
நட்டானைக் கற்பக நட்டானைப் பாடுது நாடொறுமே. .7.

திடத்தானைக் கம்பத் திடத்தானைப் பத்துச் சிரனெனுங்க
படத்தானை யாவி படத்தானை யேவும் பரமனைவெங்
கடத்தானை நீலக் கடத்தானை யேத்திலர்க் கானகர
வடத்தானைப் பள்ளி வடத்தானைப் பாடுதும் வாழ்வுறவே. .8.

தலத்தானை வற்சத் தலத்தானை மன்னு மணியணிப்பொற்
கலத்தானை யொண்பிங் கலத்தானை யானைக் கணிப்பருங்கூர்
அலத்தானை யன்ப ரலத்தானை யாம லருள்தங்கோ
குலத்தானைக் கோது குலத்தானைப் பாடுதுங் கோளறவே. .9.

பாண்டவர் தூதன்மெய் மாண்டவர் நாதன் பதமலரான்
மூண்டவன் பாம்பினிற் றாண்டவ மாடிய மூர்த்திமுனாட்
காண்டவ நீறெழ நீண்டவம் பேவிய கார்முகிலெம்
ஆண்டவன் மெய்யன்பு பூண்டவன் வாழ்க வனுதினமே. .10.

இது
கம்பம் அநுமந்தன்பட்டி
மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்கார்
இயற்றி அருளியது.

சென்னை
அம்பத்தூர் அறநெறி அரங்க
வெளியீடு 17
15-05-1957