வியாழன், 21 ஜூலை, 2011

பௌத்தனும் ப்ரச்சன்ன பௌத்தனும்

இங்கு வருகை தரும் வெகு சிலரிலுள்ளும் பலர் யாஹூ வைணவ குழுமங்களில் உறுப்பினர்களாக இல்லை  எனவே அக்குழுமங்களில் கிடைக்கின்ற பல அற்புதமான விஷயங்கள் அவர்களைச் சென்று அடைவதில்லை. இன்று வந்திருக்கும் "பௌத்தனும் ப்ரச்சன்ன பௌத்தனும்" என்பது அப்படி ஒன்று. காஞ்சிபுரம் ஸ்ரீ சடகோப தாத்தாசாரியார் ஒப்பிலியப்பன் குழுமத்திற்கு எழுதியது. அதை இங்கே படித்து அனுபவிக்கலாம்.
Sent: Wednesday, July 20, 2011 1:07 AM
Subject: பௌத்தனும் ப்ரச்சன்னபௌத்தனும்
 
        பௌத்தனும் ப்ரச்சன்னபௌத்தனும்
ஸ்ரீஸ்வாமி தேசிகன் அத்வைதிகளுக்கு பச்யதோஹரன்- பார்த்திருக்கும் ஸமயத்தில் திருடுகிறவன் ச்ருதிமுகஸுகதன் - ம்ருதூபக்ரமக்ரம க்ரூர நிஷ்டன் ஆரம்பத்தில் ம்ருதுவாய் ச்ருதியை ஸ்வீகரிப்பதுபோல் காண்பித்து முடிவில்  க்ரூரமாய் நிற்பவன் என ஏனைய பிருதங்களை -விசேஷணங்களை  ப்ரயோகித்துள்ளார், இந்த க்ரமத்தில்  ப்ரயோகித்த  மற்றுமொரு விசேஷணமாகும் ப்ரச்சன்ன பௌத்தன்- பௌத்தன் என்பதை மறைப்பவன் ப்ரச்சன்ன பௌத்தவிஜயே பரிதோ யதத்வம்  என,.காரணத்தை நாம் சிறிது ஆராயலாம்,
 நையாயிக ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர் என பெருமையாக போற்றப்படுபவர் உதயனாசார்யர் ஆவார், ஸ்வாமி தேசிகனுக்கும் அவரிடம் மிகுந்த பஹுமானம் உண்டு, ஆனபடியாலேயே மடப்பள்ளி ஆசானான  ஸ்ரீப்ரணதார்த்திஹராசார்யரை குறிபப்பிடும் ஸமயத்தில் வேதாந்தோதயனர் என்கிறார். உதயனாசார்யர்  குஸுமாஞ்சலி எனும் க்ரந்தத்தில் விலக்ஷணமான  ஈச்வரன் உண்டு என ஸாதிக்கிறார், ஆயினும் பௌத்தர்கள் ஈச்வரன் உண்டு என்பதில்  பாதகமாக ப்ரமாணங்கள் உள்ளன என்கிறார்கள். ஈச்வரன் இருப்பின் மற்றவர்களை போல காணத்தகுந்தவனாவான், காணப்படுவதில்லை ஆதலால் அவன் இல்லை, காணாமல் போனாலும் அவன் உண்டு என கூறினால்  லோகத்தில்  முயல் கொம்பும் உண்டு என ஸ்வீகரிக்கவேணும்,காணப்படாத முயல் கொம்பு இல்லையேல்  காணப்படாத ஈச்வரனும் இல்லை என  வாதித்து  ஈச்வரோ நாஸ்தி ஈச்வரஃ ஜகத்கர்த்வாபாவவான் -ஈச்வரன் இல்லை என்றும்  அவன் ஜகத்தின் காரணமுமல்ல என  வாதித்தார்கள்.
லோகத்தில் கார்யத்தை செய்யும் கர்தாவானவன் ஏதாவது ஒரு பலனை உத்தேசித்தே கார்யத்தை செய்வான்,நையாயிகன் கூறும் ஈச்வரன் அவாப்தஸமஸ்தகாமன்- எல்லா ஆசைகளையும் அடைந்தவன், அவனுக்கு கார்யம் செய்வதால் ப்ரயோஜநம் ஒன்றுமில்லை, கர்த்ருத்வம் உள்ள இடத்தில் எல்லாம்,ப்ரயோஜனத்தில் ஆசை என்பதுமிருக்கும், ஆதலால் ப்ரயோஜனாபிஸந்தி  என்பது வ்யாபகமாகும்,- அதிக இடத்தில் உள்ளது, வ்யாபகமில்லாத இடத்தில்  வ்யாப்யமும் இராது, தீயானது புகையை விட  அதிக இடத்தில் உள்ளது, ஆதலால் அது வ்யாபகம், அது இல்லாத இடத்தில்  புகையிராது, இதையே லோகத்திலும் நெருப்பு இல்லாமல் புகையாது என்பர்கள்.ஆக வ்யாபகமான வஸ்து இராத இடத்தில் வ்யாப்யமான வஸ்துவும் இராது, ஈச்வரனிடத்தில்  வ்யாபகமான ப்ரயோஜனாபிஸந்தி இல்லாததால்  வ்யாப்யமான கர்த்ருத்வமும் இல்லை , ஆக ஈச்வரன் இல்லை, ஈச்வரனிடத்தில் கர்த்ருத்வம் இல்லை, அதடியாக ஈச்வரன் ஜகத் கர்தா என அனுமான ப்ரமாணம் கொண்டு ஈச்வரன் உள்ளதாக ஸாதி்க்கமுடியாது என  பௌத்தர்களின் வாதமாகும்,
இவர்களின் வாதம் சரியில்லை, அனுமான ப்ரமாணம் கொண்டு ஸாதிக்கவேணுமாகில் ஒரு ஆச்ரயம் பக்ஷம் வேணும், பிறகு ஸாத்யம் வேணும், ஹேது வேணும், ஒரு மலையின் ஸமீபத்தில் செல்பவன் அங்கு புகையை கண்டு  காணாததான தீயை அனுமிக்கிறான்,புகையானது  மலையில்  உள்ளதால் மலை தீயுடன் கூடியது, என, இங்கு மலையானது ஆச்ரயம், ஆச்ரயமில்லாமல் ஸாத்யத்தை ஸாதிக்கமுடியாது, ஆச்ரயமில்லையேல்  அங்கு கூறின ஹேது ஆச்ரயாஸித்தி என்கிற தோஷத்துடன் கூடியதாகும்,ஆகாச தாமரை நறுமணத்துடன் கூடியது  என ஸாதிக்கமுடியாது, ஆகாயதாமரை என்கிற ஆச்ரயமே ப்ரஸித்தமல்ல, அதுபோல் ஈச்வரன்  என்கிற  ஆச்ரயம் இல்லாமல் அவனிடத்தில்  கர்த்ருத்வம் இல்லை என ஸாதிக்கமுடியாது, ஆதலால் ஈச்வரனிடத்தில் கர்த்ருத்வம் இல்லை என்பதான ஈச்வரன் கர்த்ருத்வமில்லாதவன் என்கிற அனுமானம் ப்ரமாணமாகாது.
ஈச்வரன்  இல்லை  என்பதான அனுமானமும் சரியில்லை. லோகத்தில்   ப்ரஸித்தமாக உள்ள வஸ்துவையே இல்லை என்றும்  நிஷேதிக்கமுடியும், எந்த வஸ்து நிஷேதிக்கப்படுகிறதோ அது ப்ரதியோகி என்பதால்  ப்ரதியோகி இல்லையேல்  அதின் அபாவமும்- நிஷேதமும் வராது, ஆதலால் ஈச்வரன் இல்லை என்றால்  ஈச்வரன் ப்ரதியோகியாகும், அது  இல்லையேல் அதின் நிஷேதமும் வராதபடியால் ஈச்வரன்  இல்லை என ஸாதிக்கமுடியாது,இங்கு ஒரு கேள்வி எழும் ப்ரதியோகி இல்லையேல்  அதின் அபாவமும்- நிஷேதமும் வராது என்றால் சசச்ருங்கம் நாஸ்தி முயல்  கொம்பு இல்லை என்கிறவிடத்தில் ப்ரதியோகி முயல் கொம்பு ப்ரஸித்தமில்லை,ஆயினும் அதின் நிஷேதம் எப்படி கூறப்படுகிறது என, முயல்  கொம்பு இல்லை என்கிறவிடத்தில் முயலின் கொம்பு இல்லை என்று பொருள் கூறாமல்
 சசே ச்ருங்கம் நாஸ்தி முயலிடத்தில்  கொம்பு இல்லை என்றே பொருள் கூறவேணும்,

ஈச்வரன் ஸத்யமாக இல்லாவிடினும் பொய்யானஞானத்தில்  விஷயமாகிற ஈச்வரனை ஆச்ரயமாக்கி அவனிடத்தில் கர்த்ருத்வமில்லை என  ஸாதிக்கலாம், ஆதலால் முன்பு கூறின  ஆச்ரயமில்லை என்பதான தோஷமில்லை என்பதும் சரியில்லை,ப்ரமாணம் கொண்டு ஸித்திக்காத வஸ்து ஆச்ரயமாகாது.ஈச்வரன் பொய்யானஞானத்தில்  விஷயமானபடியால்
ப்ரமாணம் கொண்டு ஸித்திக்காத வஸ்துவாகும், அது ஆச்ரயமாகாது,
இங்கு பௌத்தர்கள் கூறுவது, நையாயிகனால் ப்ரமாணமாக கூறப்பட்ட வேதத்தில் குறிப்பிட்ட ஈச்வரனை  ஆச்ரயமாக்கி- பக்ஷமாக்கி  அவனிடத்தில்
கர்த்ருத்வமில்லை என்பதாக  ஸாதிக்கலாம் என. இங்கு உதயனாசார்யர் கூறும் ஸமாதானமாகும்,
 ஆகமாதேஃ ப்ரமாணத்வே பாதநாநிஷேதனம்.
 ஆபாஸத்வே து ஸைவ ஸ்யாத்  ஆச்ரயாஸித்திருத்ததா.
 வேதத்தை ப்ரமாணமாக கொண்டு  அதில்  கூறப்படுவதால்  ஈச்வரன் ஸித்தமானால்  அதில்  கூறப்பட்ட கர்த்ருத்வமும் ஈச்வரனுக்கு ஸித்திக்கும்,
கர்த்ருத்வமும்-கர்த்ருத்வம் இல்லை என்பது இல்லை  எனகூறுவதால் பௌத்தன் ப்ரயோகித்த அனுமானம்  பாதிதமாகும், ஆதலால்  அந்த
அனுமானம்  மூலம் ஈச்வரனிடத்தில் கர்த்ருத்வத்தை நிஷேதிக்கமுடியாது, வேதத்தை ப்ரமாணமாக கொள்ளாவிட்டால்  ஈச்வரன் ஸித்திக்கமாட்டார், ஆச்ரயமும் ஸித்திக்காது, அதடியாக முன்பு கூறின  ஆச்ரயாஸித்தி தோஷத்தை பரிஹரிக்கமுடியாது என,
இந்த க்ரமத்தில் ப்ரச்சந்ந பௌத்தர்களான அத்வைதிகள் வேதத்தை ப்ரமாணமாக கொண்டு  அதில்  கூறப்பட்ட ஈச்வரனைஸ்வீகரித்தால் அதே வேதத்தில்  கூறப்பட்ட ஸகுணத்வத்தையும்- கல்யாணகுணத்தோடு  கூடியதாகும் என்பதையும்  ப்ரமாணமாக  ஸ்வீகரிக்கவேணும். அதை நிஷேதித்து ப்ரஹ்ம நிர்குணம் என்று மட்டும் கூறமுடியாது, கல்யாணகுணத்தோடு  கூடியதாக கூறும் வேதம் ப்ரமாணமில்லை எனில்  ஈச்வரன் உண்டு என்று கூறும்  வேதமும் ப்ரமாணமாகாது,அதடியாக ஈச்வரனும் ஸித்திக்காது,ஸித்திக்காத ப்ரஹ்மத்தை  நிர்குணம் என்று ஸாதித்தால் ஆச்ரயாஸித்தி என்கிற தோஷம் வரும்,பௌத்தர்கள் வேதம் முழுவதும் ப்ரமாணமில்லை  என்கிறார்கள், அத்வைதிகள் ப்ரஹ்மம் ஸகுணம்
என்று கூறும் வேதம் ப்ரமாணமில்லை என்கிறார்கள், சிறிதுவேதபாகத்தை
 ப்ரமாணமாக ஸ்வீகரித்து தாங்கள் பௌத்தர்கள் என்பதை மறைத்துக்கொள்கிறார்கள் ஆதலால் ப்ரச்ச்ந்ந பௌத்தர்களாகிறார்கள்  எனலாம்,
ஆனபடியாலேயே ஸ்வாமிதேசிகன்
பரமதபங்கத்தில்
 வேதங்கள்  மௌலி விளங்க வ்யாசன் உறைத்த நன்னூல்
பாதங்களான  பதினாறில் ஈசன்படி மறைத்து
பேதங்கள் இல்லையென்றோர் ப்ரமப்பிச்சு இயம்புகின்ற
போதம் கழிந்தவனை புத்தர்மாட்டுடன் பூட்டுவமே
 என பரிஹஸித்தார் போலும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக