வியாழன், 12 நவம்பர், 2009

திருவருட்சதகமாலை

||ஸ்ரீ:||

தயா சதகம்.

ப்ரபத்யே தம் கிரிம்ப்ராய: ஸ்ரீநிவாஸ நுகம்பயா
  இக்ஷு ஸாரஸ்ரவந்த்யேவ யந்மூர்த்யா சர்க்கராயிதம்  .1.

திருக்களி யுரப்ப னிறைக்களி யுருக்கப்
  பெருக்கென வரப்பெறு கருப்பிர தவெள்ளம்
  சருக்கரை யிறுக்கென சிறப்பினி லுருக்கொள்
  திருக்கிரி யெனத் தெரி கிரிப்புக லடைந்தேன்.     .1.

[ அலர்மேல் மங்கை உறைமார்பனுடைய தயையே கருப்பஞ்சாறாகப்பெருகி ஆறாக வோடிச் சருக்கரைக் கட்டியாய் கனமாய் உறைந்து உருக்கொண்டு நிற்பது போலுள்ள திருவேங்கடம் என்னும் மாமலையை அடியேன் பல கால் சரணம் அடைகிறேன்]

விகாஹே தீர்த்த பகுளாம் சீதலாம் குருஸந்ததிம்
  ஸ்ரீநிவாஸ தயாம்போதே: பரீவாஹ பரம்பராம்.  .2.

வளத்திரு  மலர்மகள் வலத்துறை யுமார்வன்
  உளத்திரு வருட்கட லுகத்தலி லுகுக்கும்
  வளத்தெழு பெருக்கென வரப்பெறு முறைத்தண்
  ணளித்திரு குருப்பர வணித்துறை குளித்தேன்.      .2.

[ திருமாமகள் வலத்துறையு மார்வனான அண்ணலின் அருளாகிய ஒரு பெரிய ஏரியிலிருந்து ஓடி வரும் பெருக்குகளான குளிர்ந்த குரு பரம்பரையில் உள்ள அநேக துறைகளில் இறங்கி நீராட்டம் செய்கிறேன்.]

க்ருதிந: கமலாவாஸ காருண்யை காந்திநோபஜே
  தத்தேயத் ஸூக்தி ரூபேணத் ரிவேதி ஸர்வயோக்யதாம்.    .3.

திருப்பர னடிக்கவி யெனத்தமை விடுத்தாங்
  கொருப்படு திடத்தொரு கடைப்பிடி நடைக்கண்
  உருப்பெறு மறைத்தலை தலைத்தலை யுயக்கொள்
  உரித்தருள் தமிழ்க்கட வுளர்க்கெனை யளித்தேன்.    .3.

[ஸ்ரீநிவாஸனுடைய தயையொன்றையே தஞ்சமாகப் பற்றியவரும், தங்கள் செய்ய தமிழ் மாலைகளாகிய பிரபந்தங்கள் மூலமாய் வேதங்கள் அனைத்தையும் அனைவருக்கும் யோக்யமாகும்படி செய்வித்த தமிழ்க் கடவுளருமான ஆழ்வார்களை இடைவிடாமல் பிரியமாகத் தொழுகிறேன்.]

பராசரமுகாந் வந்தே பகீரதநயே ஸ்திதாந்
  கமலாகாந்த காருண்ய கங்காப்லாவித மத்விதாந்    .4.

உயர்த்தரு ளரிப்பத துனிப்புன னனைத்தே
  அயர்த்திடு மெமைப்பர னடித்திரு வுணர்த்தும்
  சயத்திரு பகீரத னயத்துறு தவத்தோர்
  முயற்றிரு பராசரர் முதல்வர்வ ழிபட்டேன்.           .4.

[பகீரதன் கடுந்தவம் புரிந்து கங்கையை அவனிக்குக் கொண்டு வந்ததுபோல் கமலாகாந்தனுடைய கருணை என்கிற பரிசுத்தமான கங்கா ப்ரவாஹத்தைக் கொணர்ந்து நம் போன்றவரை அதில் அவகாஹிக்கும்படி செய்வித்த மாசில் மனந்தெளி முனிவரான பராசரர் முதலிய மஹர்ஷிகளை வழிபடுகிறோம்]

புதன், 11 நவம்பர், 2009

திருவருட்சதகமாலை

திருவருண்மாலை" அரங்கேற்றுவிழாவில் இச்சங்க மஹா வித்துவான் பண்டித சிந்தாமணி கோபாலாசாரியார் "சிறப்புப் பாயிர"மாகப் பாடித் தந்த எட்டுப் பாக்கள் பின்வருமாறு:---
பாற்க டற்றிரு மருவு மார்பினன் பார்பு கழ்திரு வேங்கட
மாற்சீர் பேரருட் சதகம் செய்தனன் வாழ்தென் பாண்டிசீர் கேசவன்
நாற்க வித்தமிழ்ப் புலவன் பண்ணினில் ஞால மேழுமே வாழவே
போற்றி யின்றதை யரங்க மேற்றுசீர் புண்ணி யத்தின மாதலின்.  .1.

அச்சி றப்பினை யடியே னாவினா லாழ்ந்து தேர்ந்துநூல் செப்புவன்
கச்சி தூப்புலார் குருவாம் தேசிகன் கால்பி டித்தவ னருளினால்
மெச்சு சங்கமா வவையோர் போற்றதன் மேன்மை தன்னையே விளங்கவே
நச்ச ராவின துயர்சி ரந்தனி னன்ன டம்பயி லருளினை.    .2.

துய்ய செந்தமிழ்த் துறைக ளுக்கெலாம் தூய பேரிலக் கியமதாய்
பொய்யில் பாடலிற் புனித தோத்திரம் பொற்ற மிழ்தனில் சுவைமிக
செய்ய சொன்னயம் பொருண யம்தொனிச் சீர்ந யந்தெழுத் தளவுகள்
மெய்ய மோனையோ டெதுகைச் சீருடன் மேல்வி சித்திர மிளிர்வதாய்  .3.

செய்யுள் சீர்பல வுயர்வா யோங்கிட சீரார் பத்தியாங் கடலென
வெய்ய கல்லுமே வுருகும் வண்ணமே மேனி லாவிய நடைதனில்
உய்யப் பாடியே யுலகுக் கீந்தனன் ஓங்கு முத்தமிழ்க் கடலெனும்
துய்ய தேசிகன் சடகோ பன்மனம் துங்கச் சீருட னுகக்கவே     .4.

நன்னூற் சீரினை யுயர்பா லென்கெனோ நால்வே தப்பொரு ளென்கெனோ
முன்னோர் நீதிநூற் சமய மென்கெனோ முன்வே தத்திசை யென்கெனோ
சொன்ன வர்வினை கெடுக்குஞ் சீருறு தூய்மா நன்மருந் தென்கெனோ
பின்னி டுஞ்சுரர் நுகரும் பாற்கடல் பேர்நற் சீரமு தென்பனால்.      .5.

ஆழ்வார் சீரடி யவர்க்குக் கூறியவாழி யானருட் சீரினை
வாழ்வா மென்றுகே சவன்றான் காட்டிபார் வாழ வேயதை முதலென
தாழ்வி லாதுயர் திருமால் தாளிணை தன்னில் சீர்சர ணடைந்துபின்
சூழ்கொ டும்வினை யறுத்து வாழ்மினோ துன்பம் போமிதி லென்றனன்.  .6.

தேசி கன்வட மொழியிற் செய்தயா சீரார் நற்சத கத்தினை
மாசி னற்றமி ழியற்றுங் காரணம் மன்னு மானிடர் வேண்டவே
கேசி யாமசு ரனைமுன் வெல்லுயர் கேச வன்னதை யும்பரார்க்
காசில் சீர்வகை யருளி னானதை யன்பி லின்றவ னுதவினான்    .7.

சித்திர பானு சிறந்ததுலா வோணத்தில்
பத்திரசப் பவ்வமெனப் பார்புகழ --- அத்தனுயர்
வேங்கடமால் திருவருணூல் மேன்மையாய் கேசவன்றான்
ஓங்கரங் கேற்றினா னுவந்து.             .8.

    இத்தகைய சீரும் சிறப்பும் எய்தி ஓங்கி விளங்கும் "தயாசதகம்" தமிழில் சுலோகம், "திருவருண்மாலை"ப்படி பாட்டு, பொழிப்புரை, இவற்றினோடு "திருவருட் சதகமாலை" என்ற திருநாமத்துடன் இச்சங்க வெளியீடாகப் பிரசுரிக்கலாயிற்று.
    இச்சீரிய மாலை வெளியீட்டிற்குப் பூரணவுதவி புரிந்த வள்ளலாரைப்பற்றிச் சற்றுக்கூறுவேன் இங்கு.
தென்றமிழ் நாட்டினைக் குறித்துக் கல்வியிற் பெரிய கம்ப நாடர்
அத்திருத்தகு நாட்டினை யண்டர்நா
  டொத்திருக்கு மென்றாலுரை யொக்குமோ
  எத்திறத்தினு மேழுலகும் புகழ்
  முத்துமுத்த மிழுந்தந் துமுற்றமோ
               --- (
கிட்கிந்தா, ஆறுசெல்படலம் 53)

எனப் புகழ்கிறார்.”பூழியர்கோன் தென்னாடுமுத்துடைத்து”
பாண்டிநாட்டுச் சிறப்பு
நல்லம்பர் நல்ல குடியுடைச் சித்தன்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியுடைத்து – நல்லரவப்
பாட்டு டைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்
(பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, நச்சினார்க்கினியருரை)

சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்
சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனும்
சங்கப் புலவருந் தழைத்தினி திருந்த(து)
மங்கலப் பாண்டி வளநா டென்ப.
    (நன்னூல், சங்கர நமச்சிவாயப் புலவர் விருத்தி)
என்ற அறிஞர் பாடலால் நன்கு அறியலாம்.

வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
  பண்பிற் றலைப்பிரிதல் இன்று.
        -- (பொருட்பால், ஒழிபியல், குடிமை 5)
என்னும் திருக்குறளுரையில் ஆசிரியர் பரிமேலழகியார், “ பழங்குடி” என்பதற்குத் “தொன்று தொட்டு வருகின்ற குடியின்கட் பிறந்தார்” என்று உரை கூறித் “தொன்று தொட்டு வருதல் – சேர சோழ பாண்டிய ரென்றாற் போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்” என விளக்கியுள்ளார். இதனாலும், வான்மீகி பகவான் ஸ்ரீராமாயணத்து,சுக்ரீவன் வானர சேனையை நாடவிட்ட தருணத்துப் பாண்டியர் செல்வச் சிறப்பையும் அவரது கபாடபுரத்தையும், எடுத்தோதுதலாலும் பாண்டியரின் பழமை நன்குணரலாம்.

  சரணாகதி தர்மம் விளைந்த பெருநிலமாகவும், கருணாகரப் பெருமாள் ஸர்வ ஜீவர்க்கும் அபயப் பிரதானம் அருளிய திருப்பதியாகவும் தருப்ப சயனனாய்த் திருக்கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் திருப்புல்லாணியும், “கோவையின் றமிழ் பாடுவார் தொழுந்தேவதேவன் திருக்கோட்டியூர்” என்று சிறப்பித்தருளப் பெற்றதும், ஸ்ரீவைஷ்ணவ பரமாசாரியராகிய ஸ்ரீபெரும்பூதூர் வள்ளலின் ஆசாரியர்களுள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பிக்கும், “அல்வழக் கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமான துங்கன்” என்று கொண்டாடப் பெற்ற செல்வ நம்பிக்கும், அவதாரத் தலமான திருக்கோட்டியூரும், பொன்னும், முத்தும், இட்டுச் செய்த ஆபரணம் போலே சூடிக் கொடுத்த நாச்சியாரும், சீரணிந்த பாண்டியன்றன் நெஞ்சு தன்னில் துயக்கறமால் பரத்துவத்தைத் திறமாய்ச் செப்பி வாரணமேல் மதுரை வலம் வரவே வானின் மால் கருட வாகனனாய்த் தோன்றத் திருப்பல்லாண்டு பாடி வாழ்த்திய பெரியாழ்வாரும், அவதரித்த தலமாயும், வட பெருங்கோயிலுடையான் நித்ய வாஸம் செய்யும் ஸ்ரீவில்லிபுத்தூரும், மாலுகந்தவாசிரியரான நம்மாழ்வார் அவதரிக்குமேற்றம் பெற்ற திருக்குருகூர்ப்புரியும், திருவாத வூரடிகளால் “பத்த ரெல்லாம் பார்மேற் சிவபுரம் போற் கொண்டாடு முத்தரகோச மங்கையூர்'” என்று போற்றிய திருவுத்தரகோச மங்கைத் தலத்தையும், அன்பர்க்கே யவதரிக்கு மாய னிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு துன்பற்ற மதுர கவியாரைப் பெறும் பேறும் பெற்ற திருக்கோளூர் முதலான ஈரொன்பது திருமால் திருப்பதிகளையும் தன்னுட் கொண்டதும், அபிநவ கவிநாதனாகிய கம்ப நாட்டடிகள் வந்து துதிக்கின்ற நாடாயும் விளங்கி வருவது தென்பாண்டி நன்னாடு.
அமிசசந்தேசம் என்னும் அரிய அழகிய தம் நூலில் திருவேங்கடநாதன் எனும் கவிவாதி சிங்கத் தேவன் பின்வருமாறு கூறுகிறார்.
தவத்தினால் விளங்கும் திருவாலவாயுடையரான பரமசிவனிடத் தினின்றும் தெய்வப் படைகளை யடைந்த பாண்டிய தேசத் தரசர்களுடைய பிரபாவத்தினால் தாங்கள் சிறையிலிருந்ததை நினைத்து பயமடைந்த மேகங்கள் காலத்தில் வருஷிப்பதால் நிறைந்த பயிர்களையுடையதும், குபேர பட்டணத்தைக் காட்டிலும் அதிகமான செல்வச் சிறப்புடையதும், யாகம், தானம், தவம் முதலிய புண்ணியங்களுக்கிருப்பிடமான பட்டணங்களினாலும், கிராமங்களாலும் அலங்கரிக்கப் பெற்றது பாண்டிய தேசம். பவழக்காடுகளுடன் கூடிய அந்நாட்டு எல்லையிலுள்ள ஆழி காட்டுத் தீயினாற் சூழ்ந்த காடு போலவும், ஸந்த்யா ராகத்தோடு கூடிய ஆகாசம் போலவும், சிந்தூரத்துடன் கூடிய யானை போலவும், பீதாம்பரத்தினால் ஸேவிக்கப்பட்ட நாராயணன் போலவும், மின்னலோடு கூடிய மேகம் போலவும், ஒரு சரீரத்துடன் கூடிய ஆண் பெண் உருவமான மிதுநம் போலவும் தோன்றும். பாண்டிய தேசத்துப் பெண்கள் முத்துக்களின் சூர்ணங்களினால் விளங்குகிற திலகத்தையுடையவர்களாகக் காணப் பெறுவர்
    இவ்வித பழம்பெருமை நிறைந்துள்ள பாண்டி நன்னாட்டின்கண் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் அக்கிரஹாரம் பிள்ளையார்குளம். இந்நல்லூரில் அந்தணச்சிரேட்டரும், வைணவகுல திலகரும், பரோபகாரியும், எமது மறை புகழும் பாரத்வாஜ கோத்திரத்துதித்தவரும், பந்து பரிபாலனத்திற் சிறந்தவரும் ஆகிய  பி.ஆர். நாராயணய்யங்கார் ஸ்வாமி எல்லா நற்குணங்களும் கல்வியும் நிறையப் பெற்றவரும்  கற்பினுக்கணியாய்த் திகழ்ந்தவருமாகிய சுந்தரி அம்மையாருடன் இல்லறமாகிய நல்லறத்தை நன்கு நடத்தி வந்தார். அருமறையுச்சியுள் ஆதரித்தோதும் அரும்பிரமம் திருமகளோடு வருந்திருமால் என்று மறைமுடித் தேசிகனார் அருளிச் செய்தபடி பொன்னருளோடும் அப்பூமகளோடும் புகழ நிற்கும் சிங்கவேள் மாலோலன் மாணடி தொழுதேத்தும் மாசில் மனந்தெளி முனிவராயும், முக்கோற்பகவரில் முதல்வராயுமுள்ள நம் ஸ்ரீ அழகிய சிங்கரின் திருவடிகளை வாழ்த்தும் நல்லன்பர்கட்கு நற் பூஷணமாய் விளங்கிய நன்மையோனே இத்திரு நாராயணய்யங்கார் என்ற சீரியர். இவரது திறமையைக் கண்டு உவந்த உள்ளத்தனான அனந்த பத்மநாபன் தனதேயான திருவிதாங்கூர் ஸம்ஸ்தானத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் இவரை அமர்த்தி அந்த ஸேவையைப் பெற்றுத் திருவுள்ளம்  பூரிப்பவனானான். இத்தம்பதிகளின் நற்குண நற்செய்கைகள் அளவிட முடியா. இவர் தம் அருமருந்தன்ன நற் புதல்வர் ஸ்ரீமான் என். கிருஷ்ணய்யங்கார்  மாடமாமயிலைத் திருவல்லிக்கேணியைத் தன்னுட் கொண்ட சென்னை மாநகரில் மவுண்ட் ரோட் ஜெனரல் பாட்டர்ஸ் ரோட்டின் கணுள்ள அஸோஸியேட்டட் ட்ரேட்ஸ்ஸின் உரிமையாளராவர். இவர் உழைப்பால் உயர்ந்த உத்தமராகி, தன்னைப் போல் சீரிய நற்குண நிலயமாய் நிற்கும் ஸௌபாக்கியவதி ஜானகி அம்மாளை வாழ்க்கைத் துணையாகக் கொண்டவராய் அனைவரும் நன்கு கொண்டாடும் செம்மலாய் விளங்கி வருகிறார். இவரது வேங்கடேச பக்தி நிகரற்றது. இவர் இச்சீரிய சங்கத்துப் பேரபிமானிகளுள் ஒருவர். இம்மாண்பர் கருவிலேயே திருவுடையராய்த் திகழ்கின்றார் என்பது இத் "திருவருட் சதக மாலை" வெளிவர பூரண உதவி புரிந்தமையாலே என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் அனைத்துலகும் அறிந்து அனுபவித்தற்குரியது.
    தனக்குவமையில்லாத இச்சீரிய நற்பணியாற்றித் திகழும் இந்நன்னெஞ்சரும் இவரது உற்றார் உறவினரனைவரும் ஸ்ரீ அழகிய சிங்கரின் பூரணவருள் பெற்று இன்புறுவாராக. "திருவருட்சதகமாலை"யை உலகம் பெற்று உய்யுமாறு உதவிய கிருஷ்ண ஜானகிச் செல்வி மாலோல திருவேங்கடத்தான் முதலாய திவ்ய தேசத் தெம்பெருமான்களுடைய பரிபூர்ணவநுக்ரஹத்தால் அதிவிரைவில் உலகுய்யத் திருவயிறு வாய்த்து நன் மக்களைப் பெற்று மகிழ்வாராக.
    "மதியருண் மகிழ்ம ணங்கொண் மங்கலச் சங்க நாதம்
       பதியெனும் பரமர் தூப்புற் புனிதனா மொருவ னூதும்
       கதியினீ ருதவு நீரின் கதகநற் சதக முன்னூல்
       ததியர்செந் தமிழி சைக்கண் கேசவன் தெரியத் தந்தான்."
    " வேய்ங்குழ லோசை யென்கோ விடைமணிக் குரலி தென்கோ
       தீங்கவி நிரத மென்கோ திப்பியர்க் கமுத மென்கோ
      வேங்கட விமல னூட்டும் யாழ்நரம் பின்ப மென்கோ
      ஓங்களி யமல னீந்த வொளியருட் சதக நூலே."


பொங்கும் மங்கலம்
எங்கும் தங்குக.



ஸ்ரீரங்க விலாசம்,                            ப.ரெ. திருமலை அய்யங்கார்
   அம்பத்தூர்.                                                 காரியதரிசி
  27-1-1952


……….(நூலின் முன்னுரை, முகவுரைகள் இன்றுடன் முடிந்தன, நாளை முதல் நூலிலிருந்து தினமும் நான்கு பாடல்களாக இங்கு இடுவேன்.)

செவ்வாய், 10 நவம்பர், 2009

Paduka Sahasram intro

Padukaraj or Sovereignty of service

The glory of Paduka raj (Servant's raj), according to the author, excels even the glory of Ramaraj (God's raj); (31) for it is the raj of Hls devoted Servant, and it is in that raj that service reigns supreme. It is the very raj of the sovereignty of service. Rama only "acts" in service; (32) Paduka “lives" in service. Rama's “servlce' is a “life-like" acting, and the life whose likeness He acts is Hls Paduka's. Hence the real sovereignty of service in Padukaraj. That is the excellence of Paduka.the servant. That excellence, in the words of Vaimiki, is the excellence of the effectuation of "universal happiness" (sarvaloka yogakshema). The rule of Paduka is the rule of service. "Unite and serve' is the rule of that service. Padukas is a union and in that union it rules in service and serves in rule Rule and serve or serve and rule is no paradox or repugnancy. It is a basic truth. Belng basic truth it is'a mystery; It is that truth - the truth of the true oneness of the ruler and servant. that has to be understood, it is its implications that have to be explored and it is its applications that have to be made “ Thou livest as servant, and rulest as king: who can 'comprehend this. Thy transcendent mystery!" is the profound utterance delivered from the peak of poetic genius by the universal poet-Kambar (33). It is with those profound words that the poet made Garuda (Veda) wake up Rama to His sovereign glory. When Rama was crowned. says that preeminent poet, each one in the universe felt that he was crowned himself (34) Thst was how Rama delighted and elevated them all to the regal nobility of serving citizenship in an equality of sovereign fellowship with Himself That is the truth about the true, the good and the beautiful raj and it is to that truth that we have to awaken. That Is good raj and that raj is Paduka raj, That raj is good polity, and that rule is good politics. Is that so? Can that be so true or so good as that? It is a question which calls for an answer, and that answer has therefore to be attempted, however inadequately, in this note

(31): Puduka 108, 153,159, 167, 176, 180 , 304, 236.
        858.899 et pasrim.
  (32): Paduka 176, 234,  240. 
  (33): Nagapasappadalam 255.
  (34): Thirumudiyattuppadalam 40.  

    

திருவருட்சதகமாலை

|| ஸ்ரீ;||

முகவுரை.

நின்னருளாங் கதியன்றி மற்றொன் றில்லேன்
     நெடுங்காலம் பிழைசெய்த நிலைகழிந்தேன்
உன்னருளுக் கினிதான நிலை யுகந்தேன்
    உன்சரணே சரணென்னுந் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்றநிலை யெமக்குத் தீர்த்து
    வானவர்தம் வாழ்ச்சிதர வரித்தே னுன்னை
இன்னருளா லினியெமக் கோர் பரமேற்றாமல்
   என்திருமா லடைக்கலங்கொ ளென்னை நீயே.
                         (தேசிகமாலை, அமிருதா சுவாதினி 31)

திருமகளோடொருகாலும் பிரியா நாதனான திருநாரணன் திண் கழலே சேதுவெனச் சேர்தலே சிற்றுயிர்க்குற்ற நற்றுணை. திருமாலால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள், சரணாகதி வைபவத்தை நன்குணர்ந்து, அதைத் தாங்கள் அநுஷ்டித்துப், பகவானை அநுபவித்தவாறே பேசியதாற்றான்,

மாசின் மனந்தெளிமுனிவர் வகுத்ததெல்லாம்
        மாலுகந்த வாசிரியர் வார்த்தைக் கொவ்வா
வாசியறிந்திவை யுரைத்தோம் வையத்துள்ளீர்
       வைப்பாக விலைகொண்டு மகிழ்மினீரே.
                      (அமிருதசுவாதினி 27)
என்றும்,
மங்கையர்கோ னென்றிவர்கள் மகிழ்ந்துபாடும்
செய்யதமிழ் மாலைகள் நாம் தெளியவோதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே.
                --- (அதிகாரச் சுருக்கு 1)

என்றும் தூப்புல் வள்ளலாரான நம் வேதாந்த குரு வெகு அழுத்தமாக அறுதியிட்டுள்ளார்.

   உலகம் வாழவேண்டுமென்ற உத்தம நோக்கத்துடன் சீரார் தூப்புற்றிருவேங்கடநாதன், பிராகிருதம், ஸம்ஸ்கிருதம், தமிழ் முதலிய பாஷைகளில் பாலர் முதல் கற்றுக் கடைத்தேறும் வண்ணம், அநேக கிரந்தங்கள் அருளிச் செய்துள்ளனர்.இம்மறைமுடித்தேசிகனார் வடசொற்கலைக்கெல்லை தேர்ந்தவராகலின், வடமொழி வல்லார் சந்தமிகு தமிழ்த் திறனை அறிந்துய்தற் பொருட்டு, இத்துறைகள் தாங்கி நிற்கும் தோத்திரங்களை வடமொழியில் யாத்துள்ளார். அவற்றைத் தமிழ் மக்கள் உணர்ந்து இன்புறுவதற்காகத் தமிழ்ப் பாக்களிற் பாடித் தருமாறு வேண்டியதற்கிணங்கி, ‘கோபால விம்சதி’; “ஸ்ரீஸ்துதி”; “ஸ்ரீபகவத் த்யாந ஸோபாநம்” என்ற இம்மூன்று தோத்திர நூல்களையும் [தோத்திரமாலை (திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்க வெளியீடு 7)யிலுள்ளன] முன்னரே தமிழ் செய்து தந்த இத்திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத் தலைவரும், அட்வொகேட்டும், இச்சங்க வெளியீடான “வகுளமாலை”ப் பத்திராசிரியருமாகிய ஸ்ரீமான் ஆர். கேசவய்யங்காரவர்கள் ஆங்கு வேண்டிக் கொண்டதற்கேற்ப தற்போது, “தயாசதகம்”  எனும் தூப்புற்குலமணியின் தோத்திரத்தை செய்ய தமிழ்ப் பாக்களாகப் பாடி நற்றமிழுலகம் நலனுறுமாறு செய்த சீர்மைக்கு அவர்கட்கு எமது நன்றி என்றும் உரியதாகுக. அந்நூலே “திருவருண்மாலை” என்ற திருநாமத்துடன் இச்சங்க வெளியீடாக பிரசுரிக்கலாயிற்று. விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்தவாரியனென்றியம்ப நின்ற அருடருமாரண தேசிகனே திருவருட்டத்துவத்தைச் செப்ப வல்லவர்.

தன்பெறும் பொலிவு சால்வே தாந்ததே சிகப தத்தில்
  நன்பிமா வேங்க டக்கோ ணிறுத்தியே மதலை யென்னை
  அன்பெனும் நிறைந ரம்பின் தந்தியென் றிசைத்துத் தானே
  இன்பருட் சதக மீதொன் றின்கவி பாடி னானே.   (104)

என்பதை நன்கு நோக்குக. பேசுபய வேதாந்த தேசிகபதத்தில் பிறரெவரும் யாமறிந்தமட்டில் நிறுத்தப்பெறவில்லை என்பதோர் பேருண்மை. தமிழ்ப் பேரறிஞரும் இதனை நன்கு அறிவர்.

    “பதிகம் பதிகமதாக விசைத்தனனே” என்றார் திருவழுந்தூர் வள்ளல். “அருள் கொண்டாடும் அடியவர்” என்ற ஸ்ரீ மதுர கவிகளின் திருவாக்கை முற்றும் மெய்ப்பிக்கவே வேங்கட வெற்பென விளங்கும் வேத வெற்பனனின் திருவருளை விளக்குமுகத்தான் நம் வேங்கடநாதன் “தயாசதகம்” பாடினர் என்ப. இவரது அவா இத்துடன் நில்லாது ஆழ்வார் விஷயமாகத் திரும்புகையில் ஸ்ரீபாதுக மாமறையாயிரமாக விரிந்தது. அருண்மிகு சடகோபன் அகாரவாச்யன் விஷயமாக ஆயிரம் பாசுரம் பாடினான். சடகோபத் தொண்டன் என்றேதான் அழைக்கப் பெறவேண்டுமென்ற பேரவாவுடைய தூப்புற்கோன் மகிழ்மாறன் விஷயமாக ஆயிரம் கவி யாத்தனர். ஈண்டும் நூலிற் காட்டிய துறைகளெல்லாந் தண்டமிழ்த் துறைகளே. இப்பெரிய நூலும் விரைவில் தமிழில் வெளிவரும். அதிலும் ஆங்குள்ள சித்திரக் கவிகளனைத்தும் “சித்திரமாலை”யாக வருவதை நற்றமிழர் நன்கேற்று நலம்பெறுவாராக.

   மேற்கூறிய “தயாசதகம்'” , '”ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்” இவற்றின் விரிவுரை பின்னர் வெளியாகும். செந்தமிழபிவிருத்திக்காக முயன்று வரும் ஸ்ரீமான் கேசவய்யங்காரவர்கட்குத் திருவேங்கடமுடையான் ஸர்வ மங்களத்தையும் நல்குவானாக. தமிழ்த் தலைவரான பேயாழ்வார் திருவவதாரத் திருப்பதியான திருமயிலையில் திருவேங்கடமுடையானும், நம்மாழ்வாரால் நகர்காட்டு துறையில் அமைக்கப் பெற்றுள்ள அம்பூந்தேனிளஞ் சோலை யெனுந் தூப்புல் மாநகரிற் பேரருளாளனும், திருவுள்ளம் உகக்குமாறு செந்தமிழ் தூப்புல் திருவேங்கடமுடையான் அருளிய ஸ்ரீதேசிக ஸ்ரீபாதுகா ஸஹஸ்ர மஹோத்ஸவங்களைச் சிறப்பாக நடத்தி வைத்த சீரோங்கு வள்ளலாரான ஸ்ரீ தேசிக தர்சந ரத்ந தீபம் ஸ்ரீமான் வி.வி. ஸ்ரீநிவாஸய்யங்காரவர்கள் அத்திருமயிலையிலேயே இத்திருவருண்மாலைத் திருவரங்கேற்று விழாவைத் திவ்யதம்பதிகள் திருவுள்ளமுகக்குமாறு நடத்தி வைத்தது இம்மாலைக்கோர்தனிச்சிறப்பு.அத்தேசிக பக்தசிகாமணிக்குத் திருவேங்கடமுடையான் திருவருள் மேன்மேலும் சுரப்பானாக. இம்மாலைக்குச் சிறப்புப் பாயிரம் பாடித்        தந்த  ஸ்ரீ பண்டித சிந்தாமணி கோபாலாசாரியார் அவர்கட்கும் நன்றி பாராட்டுகின்றனம். வாழ்க சந்தமிகு தமிழ். வாழ்க தூப்புல் வள்ளல். பொலிக திருவருள்.

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.

வேங்கடமால் திருவருளை வேதாந்த தேசிகனார்
  ஓங்கு புகழ்மொழியா லோதியநூற் – பாங்குதெரி
  இன்பந் திகழ்தமிழி னின்னிசையிற் கேசவனே
  அன்பர்க் களித்தான் கவி.

ஸ்ரீரங்கவிலாசம்                             ப.ரெ.திருமலை அய்யங்கார்
திருவல்லிக்கேணி                                      காரியதரிசி.
  14-11-‘42.

திங்கள், 9 நவம்பர், 2009

Sri Paduka Sahasram – intro by Sri Kesava Iyengar

         Few visitors who log on to this blog regularly may remember that adiyen was posting the introduction to Paduka Sahasram by Sri Kesava Iyengar  here. Due to some reasons or other adiyen suspended posting the same.  Now that “Thirupaadukamaalai” is completed , adiyen resume the intro from where adiyen stopped it. To recollect you can either click on the “Paduka sahasram” label on the right hand side panel here or go to http://thiruppul.blogspot.com/2009/01/sri-paduka-sahasram-intro.html  to directly read the last posting in January 2009.  Now to Sri R. Kesava Iyengar’s

PADUKASAHASRA

OR

THE SOVEREIGNTY OF SERVICE

 

Service to God's” foot" is perennial food of Paduka.

.   Not only does the 'foot' ‘redeem’ and affiliate but becomes itself the perennial food of the redeemed soul (Paduka). The "eater" (atta) in justice becomes the "food" (anna) in mercy. "I am the eater of the food" is the sacred chorus of Paduka as sung by the author in Nadapaddhati. (29^) The whole of Nadapaddhati is resonant with that joy-- the one joy of eternal service to ~ the 'foot' of God. It is the experience in all percipience and glory of the supremacy and sovereignty of service to God. The Veda has declared that God's primacy and ultimacy inheres in God's "foot" to emphasise the supremacy and sovereignty of service to God as the summum bonum of souls. It is in that "foot" that God integrates redeemed souls in their eternal service to that “Foot” (30).

God’s Foot Crown of Paduka—Paduka Crown of universe
Rama raj and Padukaraj

Service to the 'foot' of God in fellowship with the servants of God is the very crown of human fulfillment. Paduka is that crown and it is the crown of the universe. If Paduka is the crown of universe the universe God's Foot is the crown of Paduka. The universe is one God-raj. It is true raj, good raj, and beautiful raj. It is the ray of universal oneness which ensures the happiness of the entire universe. It is the Ramaraj of Valmiki. It is the Padukaraj of the present author.

clip_image001

(28) :~Dayasataka 64, 79, 90, 91, 98.

(29): Paduka 386: Cf. Paramapadasopana 9. for the “Universal service" of the liberated, and for the supremacy of that servi

(30): Sathakopa Tiruviruttam 46. Tiruvaimoli 3. 7. 7 3, 9. 8; 4. 9. 9; 8. 8. 11; 10. 4.4 ~

__________________________________________________________________________________________________________________________________

.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

வாழவுல கேழுமொரு வேதமுடி வள்ளல்

||ஸ்ரீ:||
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
முகவுரை
வாழவுல கேழுமொரு வேதமுடி வள்ளல்
யாழினிசை விள்ளமுத வெள்ளமென நல்கும்
ஆழியொடு சங்கமில காதிபர னங்க
ளேழுமலை யண்ண லரு யோதியெழு வாமே.
                                                    தயாசதகம் (அருணூறு) என்ற இப்பனுவல் வேதாந்த தேசிகரால் ஸ்ரீநிவாஸப் பரம்பொருளாகிய திருவேங்கடமுடையான் திருவருள் விஷயமாய் வடமொழியில் அருளிச்செய்யப்பட்டது. இது வணக்கப் பதிகம், முதன்மைப் பதிகம், கற்புப்பதிகம், அடைவுப்பதிகம், உதவிப்பதிகம், சீலப்பதிகம், வீற்றுப்பதிகம், ஆற்றற்பதிகம், தோற்றப்பதிகம், பேற்றுப்பதிகம் என முறையே முக்கியப்பொருள் பொதியச் செய்ந்நன்றி விண்ணப்பப்பா, நூற்பயன் கூறும்பா, திருநாமப்பா, முதலிய மேலெண் பாக்களுடன் கணக்கால் நூற்றெட்டுத் திருவிருத்தங்கள் அமைந்துள்ள சந்தமிகும் பதிகம் பதிகமதாகிய பேரருள் சதகமாகும். முதற் பதிகம் அநுஷ்டுப்,இரண்டாம் பதிகம் ஆர்யை, மூன்றாம் பதிகம் ஔபச் சந்தஸிகம்,நான்காம் பதிகம் மாலிநீ, ஐந்தாம் பதிகம் மந்தாக்ராந்தை, ஆறாம் பதிகம் நர்த்தடகம், ஏழாம் பதிகம் சிகரிணீ, எட்டாம் பதிகம் ஹரிணீ, ஒன்பதாம் பதிகம் ப்ருத்வீ, பத்தாம் பதிகம் ஸிம் ஹோந்நதை என்னும் விருத்தங்களிலும் , மேலெண் பாக்கள் ஸிம் ஹோந்நதை, மாலிநீ, சார்த்தூல விக்ரீடிதம் என்னும் விருத்தங்களிலும் யாக்கப் பெற்று, ஓசை யுயர்த்துப் பொருள் பொதிந்து கவி நலந்திகழும் திருவருணூறிதாகும். ஊன்றிப் பரவி யொக்க நடக்கும் கவியினழகு ஒப்பற்ற தென்பது மிகையாகாது. சிகரிணீ, ஹரிணீ என்னும் விருத்தங்களில் மாக்கவிஞர்கள் பலரும், வருந்தியே நடந்துள்ளார்கள். கிந்ந : கிந்நச்சிக ரிஷு கதம் நியஸ்கந்தாஸி என்றும் சகித ஹரிணீ ப்ரேக்ஷணா என்றும் அக்குறிப்பை ஒருவாறு சுட்டியுள்ளார்கள். இத்திருச் சதகத்து அவை சீர்மல்கும் பெற்றி நோக்கியே களிகூரற் பாலது. ஆர்வத்தருளும் பொருளின் பொதிவுக் கேற்பக்கூறும் சொல்லும் கருடகதிபோல் வட்டமிட்டுச் சூழ்ந்தெழுமாறே ஒலிநயமும் ஒளிமிளிர்வும் ஒன்றிப் பொலியும் சீர்த்தி புலவர்க்குக் கண்கூடேயாம்.சேகாநுப் ராஸத்து நர்த்தடகம் பேரெழில்காட்டும் திருவிருத்தமொன்றை இங்கு எடுத்துக் காட்டுவாம்.
ம்ருது ஹ்ருதயேதயே ம்ருதித காமஹிதே மஹிதே
த்ருதவிபுதே புதேஷுவித் தாத்மதுரே மதுரே
வ்ருஷகிரி ஸார்வபௌவ் மதயி தேமயிதே மஹதீம்
புவகநிதே நிதேஹி பவமூல ஹராம் லஹரீம்.
சொற்றிருவும் பொருட்டிருவும் ஒக்கப் பொலியும் திருமறையே ‘தயாசதகம்.’
      அருளின்வடிவளேதருமவரும்பயனாகியதிருமகள்என்பாள்.அவள்தனிக்கேள்வனே
ஸ்ரீநிவாஸன். மறை புகல் என்னும் மறைமுடித் தருமமும் அதன் அரும்பயனும் அனைவர்க் கும் அம்மையப்பராகிய அத்திப்பிய தம்பதியாரே ஆவர். திருக்கலந்த மார்பனே அருள் கலந்த  ஆளரி. அருண்மை திருமாட்சி. ஆண்மை அரிமாட்சி. ஒப்புயர்வற்ற ஆண்மையும் ஒப்புயர்வற்ற அருண்மையும் பதிபத்தினியராய் எண்பெருக்கந் நலத்திணை பிரியா  தொன்றி  நின்ற உயர் நிலையே பரத்துவ நிலை. அந்நிலை ஸர்வ சரீரப் பொருள் ஒன்றுக்கே உறும். ஆதலின் ஸர்வ சரீரப் பொருள் என்றதே பரம்பொருள். தனதுடம்பாகிய உலகத்துக்குத் தானே ஓருயிராய் விளங்கும் பெற்றியதே அஃதாம். அதன் உடம்பென்றே அவரப் பொருள்யாவும் பொருளாகும். அஃதே அவற்றின் தன்மை. ஆதலின் உலகனைத்தையும் உடம்பென ஆண்டு காக்கும் இயல்புடைய தத்துவமே பரதத்துவமாகும். அதன் ஆணை காத்து அதனடிக் கீழமர்ந்து புகுந்து காப்புப் பெறும் தத்துவமே அவரதத்துவமாகும். காக்கும் இறையின் குணங்கட்கு இறைமை சான்ற திருக்குணமே அருட்குணமாம். அத்தகைப் பேரருள் பொதிந்து விளங்கும் இயல்வினனாகிய பெருந்தகையாளனே திருப்பரன் என்றதே இப்பேராசிரியர் இச்சதகத்துத் தேறியதோர் திண்ணம். இதை 53, 61, 68, 69 முதலிய திருவிருத்தங்களை நோக்கிக் கண்டு  கொள்க. ஸர்வசரீரியாகிய இறைப் பொருட்கே அருள் என்றது இறைக்குணமாக கூறும். ஸர்வ சரீரியிடத்தே அருள் என்ற திருக்குணம் அளவு கடந்தும் வாசியற்றும் பொதிந்து விளங்கும்.  அத்திருக்குணங் கொண்டே ஸர்வ சரீரியாகிய திருப்பரன் தன் சரீரமாகிய உயிரனைத்தையும் தன்கண் ஒன்றச் செய்து தன்னையே யொக்கச் சமன் செய்விக்கும் தனிப் பெரு வள்ளலாய்த் திகழ்வான். அபயமளிக்கும் வள்ளலே அண்ணல். அவனே பரன். பரன் அபயமளித்துக் காப்பான். அவரன் சரணம் புகுந்து காப்புப் பெறுவான். அத்தகைப் பேரருளாளனே திருப்பரன். அவனே காரணனாகும் நாரணனென்பான். அவன் நின்று விளங்கும் மலையும் நாரண மலையாம். வேங்கடமலை, வேதமலை, சேடமலை, அஞ்சனமலை, திருமலை, சிங்கமலை, ஏழுமலை, விடபமலை, நெடியோன்மலை, அண்ணல்மலை முதலிய  திருநாமங்கள்  அந்நாரண மலைக்குள்ளன. திருவரியே மலையப்பன் விஷ்ணு : பர்வதா நாமதிபதி : கிரிஷ்டா: யஸ்யோருஷு த்ரிஷு விக்ரமணேஷு என்று மறை தானே அறையா நின்றது. பரத்துவம் விளங்கும் மலையாதலின் திருமலையொன்றே நாரணமலை, வேதமலை என்னப்படும். வாக்கியத்தை நோக்க நாரணமலையென்றும், வாசகத்தை நோக்க வேதமலையென்றும் ஓதப் பெறும். ஆதலின் மலை என்ற சொல் திருவேங்கடத்தையும் , மலையப்பன் என்ற சொல் திருவேங்கடமுடையானையும் உணர்த்தா நின்றன. பிரணவமே வாசகம். நெடியோனே வாச்சியன். அவனே ஸ்ரீநிவாஸன். அஃதோர்ந்துணர்க.
    இறுக்கமே ஆண்மை. உருக்கமே அருண்மை. ஆண்மையிறைமை இறுக்கமாகும். அஃதே கோன்மை. ஸத்யா ததிக்ராந்தம் ஹநிஷ்யாமி ஸபாந்தவம். (மெய்ந்நெறி கடந்தாரைக் கிளையுடன் களைந்திடுவேன்.) என்று இறுகுமதே அஃதாம். பெண்மை யிறைமை இரக்கமாகும். அஃதே அருண்மை கார்யம் கருண மார்யேண நகச்சிந் நாபராத்யதி. (வழுப்பாடில்லார் எவருமிலர். இரங்கி அருள் செய்தலே ஆரியரின் கடமைப்பாடாகும்) என்று உருகுமதே அஃதாம். இறைமைக்கே இறுக்கமும், உருக்கமும் உற்றனவாகும். இரண்டும் அளவு கடந்து முழுதொன்ற நின்ற மறைப் பொருளே இறைப்பொருள். ஆண்மைத் தலைமைப் பொருள் அரி. அவனே புருடோத்தம நம்பி. பெண்மைத் தலைமைப் பொருள் திரு. அவளே நாரியுத்தமை, நங்கை. நம்பியும் நங்கையும் எக்காலும் எந்நிலையிலும் பிரியகில்லார். பிரித்து நிலையில்லை. அத்தகைய பிரியா நிலையே இறைநிலை. ஒன்றையொன்று அவாவித் தழுவிக் கொண்டே நிற்கும். திரு நங்கையைக் கொம்பென நோக்கும் நம்பியே குரிசில். அரி நம்பியைக் குரிசிலென நோக்கும் திரு நங்கையே கொம்பு. கொம்பும் (அருண்மையும்) குரிசிலும் (ஆண்மையும்) ஒன்றிப் பம்பிய பெருமாட்சியே மறைமுடி. நல்லன்பர்க் கருளும் திருக்காட்சி. இச்சதகத்து 84ம் திருவிருத்தத்தை நோக்குக. அவ்விருமையின் ஒருமையென்னும் திருமணமொன்று நோற்றுப் புரிவித்த வித்தகனே விசுவாமித்திரன் (உலகுக்கன்பன்) என்பான். அவ்விருமையின் ஒருமையே ஒருமையாகும். “கோலமலர்ப் பாவைக் கன்பாகிய வென்னன்பேயோ” என்றதே அது. அவ்வொருமையே விசிட்ட வொருமை. முரண்பாடு அறும் ஒருமை அஃதொன்றே. அஃதே பேரன்பினொருமை. அந்தணரந்திய ரெல்லையினின்ற அனைத்துலகத்தையும் வாசியின்றி நலம்பெற வாழ்விக்கும் ஒருமை அஃதேயாம். “ஸ்ரீநிவாஸன்” என்பது அவ்வொன்றின் திருநாமம். அஃதே பரம்பொருள். அப்பொருள் சுரக்கும் திருவே அருள். ஸ்ரீநிவாஸன் திருவருளின் நீர்மையைக் கலக்கமறத் தெளிவித் தருளிய பேராசிரியரே வேதாந்த தேசிகர்.அவ்வொருமையும் அந்நீர்மையும் ஒக்கத்தெளிக்கும் கதகமே இத்தயாசதகமாகும். வேறுபாடுகள் மிகுந்துள்ள அவ்வுலகம் முரண்பாடற்றுப் பேரன்பு நெறியாகும் மறைபுகனெறிக்கண் திருப்பரனடிக் கீழமர்ந்து புகுந்து அடியாராகி அவ்வடியாரெனும் உறவில் ஒக்கக் கலந்து துறவின்கண் தொண்டு பூண்டு இருமையும் வழுவாது நல் வாழ்வுற்று மகிழுமாறு மறைமுடித் தேசிகனார் இத் திரு வருட்சதகத்தைப் பணித்துள்ளார். திருவருளின் பணியென்றே இதை ஒருவாறு தமிழ் செய்துள்ளோம். முதநூலின் கருத்தையும் குறிப்பையும் விரித்து விளக்கும் முறையில் இது செய்யப் பெற்றுள்ளது. திருவேங்கடமுடையான் உகந்தருள்வானாக். திருவருள் பொலிக ! திருவருட்சதகம் பொலிக !
ஆழிமா மாதுடன்
வாழுமா வேங்கடத்
தாழியா னாரருள்
வாழியாழ் வார்களே.
                         கேசவய்யங்கார்.